எண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 டிசம்பர் 2017

இரகசியமென்று எதுவுமில்லை!

Image may contain: plant

அ - உ - ஐ - கண் - அகரம் - உகரம் - தமிழ் - உயிர் - உடல் - 12 - 18 - 2+8 - 10 - சூரியன் - சந்திரன் - வாலை - வாசி - சிவ - சிவசக்தி - முக்கோணம் - 1+2 - 3 - 5 - ஐங்கோணம் - 5+3 - 8 - எண்கோணம் - எண் - எண்ணம் - 6 - அறுகோணம் - ஆறு - வழி - மார்க்கம்... இப்படியாக பல தொடர் முடிச்சுகள் ரகசியமாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் குருவருளின் துணையோடும் நாமே தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்றவர்களின் அரைகுறையான அனுமானங்களை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது; வரவும் கூடாது. பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இப்பிரபஞ்ச ரகசியமே தானாய் உங்கள் கண்களுக்கு தென்படும்.


இல்லுமினாட்டி என்றால் என்ன அர்த்தம்? இல்லுமினாட்டி என்பவர்கள் யார்? இல்லுமினாட்டி என்பது ஓர் இனக்குழுவா அல்லது ஒரு பெருங்கூட்டத்தினரா அல்லது ஒருசில குடும்பங்களா? அவர்கள் எங்கிருக்கின்றனர்? அவர்களின் நோக்கம் என்ன? வணிகத்தை கட்டுபடுத்துபவர்களா அல்லது மக்கள்தொகையை கட்டுப்படுத்துபவர்களா அல்லது அரசாள துடிப்பவர்களா? யார் அவர்கள் என்பதை பற்றிய தெளிவேயில்லாமல் கண்டதையெல்லாம் பரபரப்பாக சொல்லி, குழப்பி விட்டு சுயஇன்பம் தேடுபவர்களிடம் இதற்கான தெளிவான பதில்கள் இருக்குமா? என்று தம்பி ஒருவர் நேற்று என்னிடம் கேட்டார்; சிரித்து கொண்டே அவரிடமிருந்து விடைபெற்றேன்.

03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

12 ஜூன் 2016

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது போல, நம்முள்ளுள்ள உள்ளொளியும் கடவுள் தான்; அந்த கடவுளே சிற்றம்பலம். இதை புரிந்தாலே பரம்பொருள் ரகசியம் எளிதாக நம் சிற்றறிவுக்கு அம்பலமாகி விடும். அதன் பின்னால், அந்த அருட்பெரும் ஜோதியோடு உறவாடி, நாமே கடவுளாகலாம்.

தாய்மொழியில், தமிழ்மொழியால் உரையாட தெரியாதவன் கடவுளாகவே இருக்க முடியாது; அவனை கடவுளென சொல்ல தகுதியுமில்லை; அவன் கடவுளாக இருக்க வாய்ப்புமில்லை. எனவே, சிற்றம்பலமும் - பேரம்பலமும் உறவாடும் போது, அங்கே அரபியோ, ஹீப்ருவோ, சமகிருதமோ எதுவும் தேவையில்லை. ஏனெனில் கடவுளுக்கென மொழியுமில்லை; கடவுளை தொடர்பு கொள்ள மொழியும் தேவையில்லை. "அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு" என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, பொருளோடு அருளையும் சேர்த்து பேரம்பலத்தானோடு சரணாகதியடைந்து, நீங்களும் கடவுளோடு கடவுளாக ஐக்கியமாகுங்கள். இறைத்தூதர் என்ற யாரையும் கடவுளாக்கி கடைசி வரையில் கடைக்கோடியிலேயே காலம் தள்ளாதீர்கள்.

- இரா.ச. இமலாதித்தன்