ஜல்லிக்கட்டு தடை... அதை உடை!

அரசியல்வாதிகளை நம்பி பலனில்லை; நம் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் பீட்டா போன்ற இல்லுமினாட்டி கும்பலின் எச்சில் பணத்தை நக்கி பிழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி இனி எந்தவித பலனுமில்லை. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கன்னடன் மதித்தானா? கன்னடனும் ஹிந்தியாவில் தானே குடிமகனாக இருக்கிறான்? ஆதித்தமிழிடமிருந்து மொழிவாரியாக பிரிந்து போன அவனுக்கே சட்டத்தை மதிக்க தோன்றவில்லை? நமக்கென்ன தயக்கம்?

தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் 'திராவிடன்' என சொல்லி தமிழனிடம் அரசியல் செய்யும் எந்த திராவிட அமைப்பாவது இதுபற்றி உணர்வோடு வாயை திறந்ததா? திராவிடம் என்பதன் அர்த்தமே தென்னக பிராமணருக்கான அடையாளச்சொல் மட்டுமே. ஆனால் சம்பந்தமேயின்றி தமிழனும் திராவிடனாக்கப்பட்டான், இல்லுமினாட்டி ஏஜென்ட்டான ஈ.வெ.ரா.வால்...

குமரிலபட்டர் உருவாக்கிய திராவிடம் என்ற இச்சொல்லை, ஒப்பிலக்கணம் என்ற நூலால் ஆங்கிலப்படுத்திய ஆய்வாளர் கால்வெல்டினால் தமிழன் திராவிடனாக்கப்பட்டு விட்டான். இந்த திராவிடம் என்ற வகைபடுத்தப்பட்ட மொழிக்குடும்பத்திற்கு விதை மட்டுமே தமிழனுடையது. ஆனால் தமிழன், என்றைக்குமே திராவிடன் இல்லை. அப்படி பார்த்தால், வட திராவிட மொழியென வகைபடுத்தப்பட்ட பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாண மக்கள் பேசும் 'பிராகுயி' என்பது கூட தமிழ்மொழியின் விழுதுகளே.

பாகிஸ்தான் - குஜராத்துக்கு இடைப்பட்ட ஹரப்பா - மொகஞ்சதாரோவிலேயே ஏறுதழுவலுக்கான சான்றுகள் உண்டு. அங்கே கூட 'காளிபாங்கன்' என்ற பண்டைய துறைமுகம் உண்டு. பாங்கன் / பங்கன் - என்ற இந்த இரண்டும் தமிழ்சொற்களே. பாங்கன் என்றால் தோழன்; பங்கன் என்றால் உடைமையுடையவன் என்று பொருள். பாகிஸ்தான் பலுசிஸ்தான் ஹரப்பா மொகஞ்சதாரோ என சம்பந்தமே இல்லாமல் சொல்வது போல் தோன்றினாலும், எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு உண்டு.

உலகின் பழைமையான எல்லா நாகரீகமும் அழித்தொழிக்கப்பட்டது. அவற்றுள் இடம்பெயர்ந்து உயிர் பிழைத்து மீண்டும் இழந்தவற்றை மீட்டெடுத்து வாழும் ஓர் ஆதிநாகரிகம் தமிழருடையது. ஆனால், அந்த ஆதி நாகரிகத்தின் மீட்சியான பாரம்பரிய கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீது தடை விதித்து இறக்குமதி செய்யப்பட்ட சட்டம் மூலம் அழித்தொழிக்கிறது இல்லுமினாட்டி கும்பல். கடந்த கால வரலாற்றின் மூலம் ஒன்றுதான் இங்கே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எல்லா நாகரிகமும் அழித்தொழித்தது யாரோ ஒரு படையெடுப்பு கும்பலால் தான்... இப்போதும் கூட, மிச்சமிருக்கும் தமிழ் என்ற ஆதி நாகரிகத்தை அழித்தொழிக்க நவீன படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லுமினாட்டிகள் என்பதை புரிந்து நம் பாரம்பரியத்தை அழியவிடாமல் மீட்போம்.

ஜல்லிக்கட்டு தடையை உடைப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்
கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் அண்டை நாட்டு பயங்கரவாதிகளின் கோபத்தை, கோடி கணக்கில் கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகளின் அறசீற்றத்தால் உணர முடிகிறது. பொதுவாக கேட்கிறேன்; வாழ்நாளில் எந்தவொரு நிலையிலும், யாரும் கூட்டமாக வரிசையில் நின்றதே இல்லையா என்ன? தனக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்க சொந்த காசை செலவழித்து தியேட்டர் வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்று, 30ரூ டிக்கெட்டை 300ரூபாய்க்கு வாங்கியவர்களும் இங்கே உண்டு.

தன் மகன்/மகள்களின் அட்மிசன்களுக்காக பள்ளி/கல்லூரி வாசலில் தவம் போல காத்துக்கிடந்து, லட்ச கணக்கில் லஞ்சம் கொடுத்து கருப்பு பணத்திற்கு அடிகோலிட்டவர்களும் இங்கே உண்டு. இண்டர்நெட்/கால் அனைத்தும் இலவசம் என்று சொன்ன உடன் ஜியோ சிம் வாங்க, கால் கடுக்க ஒவ்வொரு செல்போன் கடை வாசல்களிலும் இரவுபகலாக காத்திருந்து, செக்யூரிட்டிகளிடம் கெஞ்சி கூத்தாடியவர்கள் இங்கே உண்டு. ரேஷன் கடையில் மாதமொரு முறை இலவச அரிசி வாங்கவோ, மானிய விலையில் மண்ணெணய், சக்கரை, பருப்பு வாங்கவோ பெரிய வரிசையில் நிற்பவர்கள் இங்கே உண்டு.சொந்த பணத்தை டெபாசிச் செய்ய கூட மணி கணக்கில் வரிசையில் நிற்க வைக்கும் எத்தனையோ வங்கிக்கிளைகள் இங்கே இருக்கின்றது. அப்போதெல்லாம் மக்கள் படும் அவதி பற்றி, கோபம் வரவில்லை இந்த அரசியல்வாதிகளுக்கு.

இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பொங்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் பினாமியே இல்லையென்று சொல்ல முடியுமா? இதுவரையிலும் வரி ஏய்ப்பு செய்ததே இல்லையென்று சொல்ல அவர்களுக்கு அருகதை இருக்கிறதா? ஊரை ஏமாற்றி மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்து அரசுக்கு சேர வேண்டிய வரியையும் ஆடிட்டிங் மூலமாக ஏமாற்றி கருப்பு பணமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளே பெரும்பான்மையாக இருக்கின்றனர். எவனும் மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வரவில்லை. புகழ்/ பதவி/ பணம்/ பாதுகாப்பு போன்ற தன் சுயநலத்திற்காக தான் அரசியல்வாதியாய் அவதாரம் எடுக்கின்றனர் என்பது தெளிவு.

எனவே, மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர் என ஆடு நனைவதற்காக ஓநாய் அழுகின்ற கதை போல, நீலிக்கண்ணீரை ஏன் வீணாய் விடவேண்டும்? முதலில் போய் வரியை ஒழுங்காக செலுத்தி, பதுக்கி வைத்திருக்கும் பினாமி சொத்துகளை வெள்ளையாக்க முயற்சி செய்யுங்கள். மக்களின் கஷ்டம் இன்றைக்கு தான் புதிதாக உங்களுக்கு தெரிகிறதா? காலம் முழுக்க காத்து கிடந்தே வாழ பழகிவிட்டோம். எங்கள் வலியை நாங்கள் தாங்கி கொள்கிறோம். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, உங்கள் அரசியலை எங்கள் முதுகில் ஏற்றாதீர்கள்.

பாதிக்கப்படும் வணிகர்கள்:

மனசாட்சியுள்ள ஒரு சிறு/குறு வணிகர், தன்னுடைய வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை வாங்கிக்கொண்டு வியாபாரம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 4,000க்கு குறையாமல் பழைய ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடும். அவரிடம் கைகளில் இருப்பது பத்து விரல்களுக்கு பதில் பனிரெண்டு விரல்கள் இருப்பதாக கணக்கில் கொண்டால் கூட, எத்தனை நாட்களுக்கு அவரது விரல்களுக்கு வங்கி ஊழியர்கள் மை வைப்பார்கள்?

சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா என்ன? இப்படி முட்டாள்தனமான யோசனைகளை கொடுத்து, இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் அரசிற்கு மேலுமோர் அவப்பெயரை வாங்கி தருவது யார்? இன்னும் ஒரு வாரத்திற்கு ஊடகங்கள் இந்த பணப்பிரச்சினை பற்றி விவாதங்களோ, நேரடி பேட்டியோ, ப்ளாஷ் நியூஸ் என எதையாவது சொல்லி மக்களை பதற்றப்படுத்தி பயமுறுத்தாமல் இருந்தாலே போதும். பாதி பிரளயம் முடிவுக்கு வந்துவிடும்.

எதார்த்தம்:

அம்மாவா? ஐநூறு - ஆயிரமா? என கேட்கவே தேவையேயில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக அப்பல்லோ வாசலை கோவிலாக மாற்றி மண்சோறு / ஹோமம் என காவடி எடுத்த கும்பலெல்லாம், அப்பல்லோவை அநாதையாக விட்டுவிட்டு இரு நாட்களாக பேங்க் வாசலில் நிற்கிறது. இதுதான் எதார்த்தம். யாரும் அடிமைகள் அல்ல; எல்லோரும் காரிய கிறுக்கர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

இனி SC/ST பட்டியலில் முக்குலத்தோர்களா?
தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சீர்மரபினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் (DNC+MBC) 20 சதவீத ஒதுக்கீட்டில் பலன் பெற்று வருகிறார்கள். அதாவது முக்குலத்தோர் என்று கூறிக்கொண்டே கள்ளர், மறவர்கள் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டிலும் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விரிவான பார்வையை இங்கே பகிர்கிறோம்.

'சீர்மரபினர் கள்ளர்கள்' பிற கள்ளர்களுக்காகக்கூட இட ஒதுக்கீடு கேட்டு இதுவரை போராடவில்லை. அதுபோலவே 'சீர்மரபினர் மறவர்களும்' பிற மறவர்களுக்காக இட ஒதுக்கீடு கேட்டு, தங்களின் சலுகையை விரிவுபடுத்தி பிற உறவுகளுக்கும் கிடைத்திட போராடியதில்லை. மேலும் 'சோ கால்டு - முக்குலத்தோர்' என்ற வகையில் அகமுடையார்களுக்காக சலுகை பெற்றுவரும் எவரும் இது சம்பந்தமாக குரல் கொடுத்ததில்லை. பிறகு எப்படி 'சோ கால்டு - முக்குலம்' ஓரணியில் இருக்கும்? இருக்க முடியும்? இப்போது சீர்மரபினர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு ஒரு சதவீத ஒதுக்கீடுதான் உள்ளது. மேலும் பட்டியல் சாதிகளான ஆதி திராவிடர் என்று அடையாளப்படுகின்ற பள்ளர், பறையர், சக்கிலியர் எனப்படுவோருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது. மொத்தமாக உள்ள இந்த 19 சதவீத ஒதுக்கீட்டில் தான், சீர்மரபினரும் சேர முயற்சிக்கிறார்கள்.

சீர்மரபினர் பட்டியலில் யாரையும் சேர்க்கவோ எடுக்கவோ அரசுகளுக்கு அதிகாரமில்லை. இப்போது வன்னியர்களுடன் (எம்.பி.சி. + டி.என்.சி) இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் சீர்மரபினர் பட்டியலில் உள்ள கள்ளர், மறவர்கள் இனி தலித் எனப்படும் பள்ளர், பறையர், சக்கிலியருடன் இட ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருந்துவரும் இடஒதுக்கீட்டில் முக்குலத்தோர் எல்லாரும் ஒரே இனமாக ஏற்கப்படவில்லை. 1995ல் தமிழக அரசால் போடப்பட்ட "தேவர்" அரசாணை நடைமுறைக்கு வரவே இல்லை. ஒட்டுமொத்த அகமுடையார்களும், பெரும்பான்மையான கள்ளர்களும், சில பகுதி மறவர்களும் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் தங்களுடன் பிற முக்குலத்தோர் இருக்க, சலுகை பெற்றுவரும் பிற முக்குல பிரிவினர் விரும்பாததால் இன்னும் முக்குலம் என்பதில் நம்பிக்கையற்று இளைஞர் சமுதாயம் தனித்தனிப்பிரிவாய் பிளவு படத்தொடங்கிவிட்டதை மருது பாணடியர்கள், பசும்பொன் தேவர், இராசராச சோழன் விழாக்களில் காணமுடிகிறது. இதன் அரசியல் பின்னணி புரியாத முக்குல அமைப்புக்களின் தலைமைகள், தலையாரி வீட்டில் தஞ்சமடையும் பழமொழியை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இனி முக்குலத்தோர் எனும் சொல் அவமானப்படுத்தப்படுவதும் கேவலமாக பார்க்கப்படுவதும் நடக்கும் என நம்பலாம்.