30 ஏப்ரல் 2019

நாங்கள் அகமுடையாராகவே இருக்கிறோம்!



யார் கள்ளர்? யார் மறவர்? என்ற பாடங்களையெல்லாம் நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. அகமுடையாருக்கான வரலாற்றை மீட்டெடுப்பது; அதை ஆவணப்படுத்துவது; மக்கள் தொகை அடிப்படையிலான அகமுடையாருக்கான பிரதிநிதித்துவ அரசியலை உருவாக்குவது. தேவர், சேர்வை, முதலியார், பிள்ளை, உடையார், நாயகர் போன்ற பல்வேறு பட்டங்களால் சிதறிக்கிடக்கும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பது; இப்படியாக எங்களுக்கான பாதையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

ஆனால், தலா மூன்று மாவட்டங்களில் வாழும் கள்ளரும், மறவரும் தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழும் அகமுடையார்கள் யாரென்று இணையமெங்கும் பாடமெடுத்து கொண்டிருக்கின்றனர். உங்கள் அடையாளத்தோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். இந்த பட்டமுள்ளவர்களே அகமுடையாரென்றும், இந்த பகுதியிலுள்ளவர்களே அகமுடையாரென்றும் புலம்பிக்கொண்டிருக்காமல், உங்களுக்கான அடையாளத்தை வெளியுலகுக்கு தயக்கமில்லாமல் சொல்லப் பழகுங்கள். எல்லா இடங்களிலும் அகமுடையார்களை இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என்று போலியாக கட்டமைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த கள்ளர், மறவரின் எண்ணிக்கையை சேர்த்தாலும் அகமுடையார்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல. அது தனித்த பேரினக்குழு. அந்த பேரினக்குழுக்குள், ராஜகுலம், ராஜவாசல், ராஜபோஜ, கோட்டைப்பற்று, இரும்புத்தலை, கீழ்மன்று, மேல்மன்று, ஐவளிநாடு, பதினோறுநாடு, பில்லூர்நாடு, நாட்டுமங்கலம், புண்ணியரசுநாடு, கலியன், சானி, தொழுவ என பல உட்பிரிவுகள் உண்டு. அகமுடையார் எப்போதுமே தனித்து இயங்கக்கூடிய ஆண்வழி சமூகம். எங்களை மற்ற சாதிகள் நட்பு அடிப்படையில் பார்க்கலாமே ஒழிய, உறவு அடிப்படையில் பார்க்க கூடாது. அகமுடையார்களான நாங்கள், மாவலி வேந்தன் வழி வந்த வாணர் குலம். அகம்படவன், அகம்படி என்றும் எங்களுக்கு தனித்த பல அடையாளங்கள் உண்டு. எனவே, எங்களை மற்ற சாதியினர் உரிமை கோரும் கீழ்த்தரமான போக்கை கைவிடுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

24 ஏப்ரல் 2019

வாணாதிராயரின் தஞ்சாக்கூர் திருவிழா!





வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே,


நம் முப்பாட்டரான தஞ்சை வாணன் ஆண்ட பூமியான வாணாதிராய மதுரைக்கு உட்பட்ட தஞ்சாக்கூரில் உள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு பெருவிழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வாணர் - வாணன்,
தஞ்சாவூர் - தஞ்சாக்கூர்,
காவிரி - காவேரி,
மானாமதுரை - வாணாதிராயமதுரை

இப்படி நிறைய ஒப்பீடுகள் உண்டு. இந்த தஞ்சாக்கூரில் முழுக்க முழுக்க வாண ஆதி அரசரான தஞ்சைவாணனின் வாரிசுகளான அகமுடையார்களே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

10.05.2019 சித்திரை 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு விழாவில் அகமுடையார் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.


- இரா.ச. இமலாதித்தன்


(பட உதவி: எஸ்.பி.எஸ்.குமார்)