கருணாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஏப்ரல் 2017

வைகையாற்று அரசியல்!


வைகை அணையில் நீர் ஆவியாகமால் இருப்பதற்காக தெர்மகோல்களை 10 லட்சம் ரூபாய்க்கு செலவழித்ததாக சொல்லிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ”அடுத்தவன் ஆட்டோவின் கண்ணாடியை திருப்பினால், என்னோட ஆட்டோ எப்படி ஓடும்?” என்ற கருணாஸின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த காமெடியன் கருணாஸ் கூட கூவத்தூரிலும் சரி, அடுத்து தன் சொந்த அமைப்பை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் பூண்டோடு நீக்கியதிலும் சரி, இடைவிடாமல் சினிமாவை போலவே அரசியலிலும் காமெடிதான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை தான் எம்.எல்.ஏ.க்களாக உருவாக்கிருக்கிறார் என்பது, ஜெயலலிதாவின் நிர்வாக திறனுக்கும், ஆளுமைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

10 லட்சம் ரூபாய்க்கு தெர்மகோல் வாங்கியதாக சொல்லிவிட்டு, பத்து பதினைந்து தெர்மகோல்களை ஆற்றில் மிதக்கவிட்டு ஒட்டுமொத்த வைகை நதியின் நீர் ஆவியாவதை தடுத்துவிட்டதாக பேட்டிக்கொடுத்த சில நிமிடங்களேயே அவையெல்லாம் காற்றில் பறந்து கரையை கடந்துவிட்டன. இந்தமாதிரியான யோசனைகளை எந்த மங்குனிகள் சொல்கிறர்களென தெரியவில்லை. அவ்வளவு விலையுர்ந்ததா இந்த தெர்மகோல்கள் என்றும் புரியவில்லை. இல்லாத ஊருக்கு சாலை போட்டதாக கணக்கில் காட்டிய அரசியல் வாதிகளும், மாயவரத்திலிருந்து மயிலாடுதுறை வரைக்கும் சாலை போட்டதாக, இருக்கின்ற ஓர் ஊருக்கு இருபெயர்களை வைத்தே போலி கணக்கு காட்டும் கோமாளிகளும், இருபது குடும்பமேயுள்ள ஒரு கிராமத்திற்கு ஐந்தாறு மயானக்கூடங்களை கட்டி அரசாங்க பணத்தில் தின்று கொழுப்படுத்தவர்கள் நிறைந்த மக்களாட்சி நாடு இது.

வெப்பம் அதிகமாவது எதனால்? அதை தடுக்க என்ன வழியென்று யோசிக்காமல், இப்படி சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? மரங்களை அதிகமாக வளர்க்க புதிய திட்டங்களை உருவாக்கி, விழிப்புணர்வை பொதுமக்களிடையே விதைக்கலாம். கோலா/பெப்சி போன்ற அந்நிய குளிர்பான தொழிற்சாலைகளுக்கு வைகை ஆற்றில் ஆழ்துளையிட்டு நீர் எடுப்பதை தடுக்க சட்டமியற்றலாம். டெல்டா  உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த காவிரித்தாயின் ஆற்று வழித்தடங்களிலெல்லாம் நூற்றுகணக்கான லாரிகளை கொண்டு மணல்களை சுரண்டும் மாஃபியாக்களை கைது செய்யலாம். ஆற்றின் இருமருங்கிலும் சோலார் சிஸ்டம் அமைத்து, இந்த கடுமையான வெப்பத்தை சூரிய ஆற்றலாகவும், அதை மின் சக்தியாகவும் சேமிக்கலாம். இதுமாதிரி எத்தனையோ உருப்படியான விசயங்கள் செய்ய வேண்டிய நேரத்தில், இப்படி முட்டாள்தனமாக செயல்படுவதை விட, ஓர் ஆணியையும் பிடுங்காமல் இருக்கலாம். ஏனெனில் நீங்க புடுங்கிறது எல்லாமே தேவையில்லாதது தான்!

- இரா.ச. இமலாதித்தன்

28 மார்ச் 2017

அரசியலுக்கு லாயக்கற்ற கருணாஸ்!




ஏற்கனவே, 'இரட்டை இலை' சின்னத்தில் நிற்பதற்காகவே, தன்னை அரசியலில் அடையாளப்படுத்திய அமைப்பின் பெயரான 'முக்குலத்தோர் புலிப்படை' என்பதையே வெறும் 'புளிப்படை'யாக மாற்றி சமத்துவ காவலனாக இரட்டை வேடம் போட்ட போதே உடனிருந்தவர்களின் ஆதரவும் குறைந்து போனது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், முக்குலத்தோர் என்பதே போலியான ஒரு கூட்டமைப்பு; அந்த வார்த்தையால் கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோர் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள்; இந்த எதார்த்த கள நிலவரங்களையெல்லாம் அகமுடையாரான கருணாஸ் கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. அதற்கடுத்து, கூவத்தூரில் கூத்தடித்த கோமாளிகளின் தேவைகளுக்காக கண்டதையெல்லாம் 'சேவை' செய்த போதே கொஞ்சம் நஞ்சமிருந்த மானமரியாதையும் போச்சு.

இனிமேல் அந்த லெட்டர்பேடு அமைப்பில் தலைவராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே கருணாஸை, தமிழ்நாடு தேவர் பேரவையினர் கடுமையாக போரட்டம் நடத்தி எதிர்த்த போது, அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவரென்பதால் எவ்விடத்திலும் விட்டுகொடுக்காமல் ஆதரவளித்த எங்களை போன்றவர்களையும், கூவத்தூர் கூத்துகளால் கேவலப்படுத்திய கருணாஸை இம்முறை எதிர்க்கிறோம். உணர்வை தூண்டும் வெறும் பேச்சை மட்டுமே முதலீடாக வைத்து சமூக அரசியலில் நீடித்திருக்க முடியாதென்பதை கருணாஸ் இனியாவது உணரட்டும். சுயசாதிக்கென்று இருக்கும் விவேகத்தோடும், அகமுடையார் என்ற உண்மையான அடையாளத்தோடும், விஷால் போன்ற அந்நியரின் துணையுமின்றி தமிழ்தேசிய அரசியலில் புது அவதாரமெடுக்க வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

27 ஏப்ரல் 2016

இந்த வார அரசியல்!

வைகோ மாதிரி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டாலே, பொய்யான மாயையை இந்த தேர்தலுக்கு பிறகும் கொஞ்ச காலம் சிலர் தக்க வைத்து கொள்ள முடியும்!

#

ஓரிரு நாட்களில் அதிமுகவில் மேலும் சில வேட்பாளர் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது.

#

கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் வாசற்கதவு திறக்கப்படுமாயென காத்திருந்த கதையெல்லாம் இன்றைக்கு மறந்து போய் விடுமா என்ன? தேர்தல் முடிந்த பின்னால் ஓட்டுகளின் எண்ணிக்கை சொல்லிவிடும், சிலரது பல(வீன)த்தை!

காத்திருக்கிறேன்...

#

ஒருவேளை திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றால், 'எங்கள் ஓட்டுகளால் தான் அவர் வெற்றி பெற்றார். எங்களிடம் கை கால்களில் விழுந்து கெஞ்சியதால் ஓட்டு போட்டோம்'ன்னு சொல்வாய்ங்க. மாறாக, கருணாஸ் தோற்றுவிட்டால், 'எங்களுக்கு சீட் கொடுக்காத தொகுதியில் அகமுடையானை ஜெயிக்க வைத்துவிடுவோமா?!'ன்னும் சொல்வாய்ங்க.
போலியான சாதி அமைப்புகளின் உண்மை தன்மையை, நிச்சயமாக கருணாஸ் இந்த தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார்.

15 ஏப்ரல் 2016

கருணாஸூக்கு ஒரு புரிதல் வரலாம்!

இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான கருணாஸுக்கு சில உண்மைகள் புரியவரும்!

01. முக்குலத்தோர் என்ற பெயரில் அகமுடையார் ஏமாற்றப்படுவது.

02. அகமுடையார்களை முக்குலத்தோர் என்று சொல்லும் மற்ற இரு குலத்தோரே, அரசியலில் வீழ்த்துவது.

03. முக்குலத்தோர் என்ற கட்டமைப்பே, கள்ளர் - மறவர் நலனக்கானது.
துரோகத்தின் வெளிப்பாட்டை கருணாஸ் அகமுடையார் புரிந்து கொள்ள இந்த தேர்தல் தான் ஒரு கருவி.

- இரா.ச. இமலாதித்தன்

05 ஏப்ரல் 2016

கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!



முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவர் கருணாஸ் அவர்களை தேவரே இல்லையென மற்ற முக்குலத்தோர் அமைப்புகளெல்லாம் அவர் அகமுடையார் என்ற ஒற்றை காரணத்தால் பொய் பரப்புரை செய்தார்கள். இன்றைய நிலையில் தெருவுக்கு தெரு முக்குலத்தோர் கட்சிகள் நாளுக்கொன்றாக உருவாகிகொண்டே தான் இருக்கிறது. அதை தவிர அ.இ.பா.பி., மூ.மு.க., அ.இ.மூ.மு.க., அ.இ.மு.பா., ப.தே.க., என பல அமைப்புகள் எப்படியும் ஆளுக்கொரு சீட் ஜெயலலிதாவிடம் கிடைக்குமென வருட கணக்கில் நம்பிக்கொண்டிருக்க, அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்த கருணாஸ், திருவாடானை தொகுதியை தனதாக்கி கொண்டுள்ளார்.

கருணாஸ் வெற்றி பெறுகிறாரோ, தோல்வியடைகிறாரோ, அதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்யவே தேவையில்லை. ஆனால், இத்தனை வருடங்களாக ’வேலுநாச்சியாரின் மறுபிறப்பே’யென ஜெயலலிதாவிற்கு துதிபாடி அம்மா அம்மாவென ஒரு தொகுதியாவது கிடைக்குமென ஆசை ஆசையாய் இருந்த அக்டோபர் மாத தலைவர்களின் கனவில் கல்லெறிந்து, தான் யாரென நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.
இப்போது கூட கருணாசை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கான காரணம் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் என்பதாலும், சிறந்த பேச்சாளர் என்பதாலும் தான். அதன் பிறகுதான் கருணாசின் சாதிய பின்புலம்.

சென்றமுறை நடிகர் சங்க தலைவராக இருந்த, சரத்குமாரின் இடத்தை தான் கருணாஸ் சமன் செய்ய போகிறார். கருணாஸ் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவரது சாதி மக்களுக்கு பெரியளவிலான எந்த பயனும் இருக்கபோவதில்லை என்றாலும் கூட, இத்தனை வருடங்களாக மல்லுக்கட்டி அதிமுகவிற்கு முட்டு கொடுத்து கொண்டிருந்த முக்குலத்தோர் தலைவர்களின் இடத்தை தனதாக்கி கொண்ட கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

25 பிப்ரவரி 2016

தடம் புரளும் நடிகர் கருணாஸ் அகமுடையார்!


கடந்த 21-02-2016 அன்று மதுரை, காந்தி மியூசிய அரங்கில் நடிகர் கருணாஸ் அகமுடையாரின் பிறந்தநாள் விழா, ”முக்குலத்தோர் முகவரி” என்ற இதழ் வெளியீட்டு விழா, சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும்விழா முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்றது.
நடிகர் கருணாஸ் அகமுடையார், முக்குலத்தோரே இல்லை என்று சொல்லி அவர் வீட்டு முன்பாக “தமிழ்நாடு தேவர்பேரவை” என்ற அமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு சிலர் கைதாகிய பழைய சம்பவங்களை நடிகர் கருணாஸ் அகமுடையார் மறந்துவிட்டதாக இந்த விழாவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், முகநூலிலும் இந்த சர்ச்சை கள்ளர் – மறவர்களால் எழுப்பப்பட்டு, அவருடைய சாதிச்சான்றிதழை அவர் சார்ந்த அகமுடையார் சமுதாய உறவுகளான எங்களை போன்றவர்களால் வெளியிடப்பட்டு, இவருக்காக மல்லுக்கு நின்ற வரலாறையும் நடிகர் கருணாஸ் அகமுடையார் வெகு எளிதாக மறந்துவிட்டதாகவும் தெரிகிறது.

விழாவை பார்வையாளர் முதல் வரிசையிலிருந்து இயக்கிக்கொண்டிருந்த எவரும் நடிகர் கருணாஸ் அகமுடையாரை, “முக்குலத்தோரே இல்லை” என்ற பிரச்சனை வந்தபோது வாய்மூடி மௌனம் காத்தவர்கள் மட்டுமல்ல; ”அவர் அகமுடையார் என்றாலும் கூட இன்னொரு சாதியில் கல்யாணம் பண்ணியவர் தானே” என்று நடிகர் கருணாஸ் அகமுடையாரை இளக்காரம் பேசியவர்களும் தான். மேலும், கருணாஸ் அகமுடையார் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆலோசனை சொன்னவர்களின் வழிகாட்டுதலில் தான் அந்த விழா நடந்தேறியது.

இதெல்லாம் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?
நடிகர் கருணாஸ் அகமுடையார் சாதனையாளர் விருது வாங்கியவர்களில் ஒருவர், ”நடிகர் கருணாஸ் பின்னால் முக்குலமும் அணிவகுத்து வரவேண்டும் என்றும், கருணாஸ் மற்ற தலைவர்களைப்போல் போய்விடமாட்டார், நிற்பார்” என்று பேசியதை தன் பேச்சில் குறிப்பிட்டு பெருமை பேசிய கருணாஸ் அகமுடையாருக்கு, அந்த விருதுபெற்றவர் முக்குலத்தோர் அமைப்புக்கள் அத்தனையிலும் மாறி மாறி, தாவித்தாவி சலுகை அனுபவித்து விட்டு, இருந்த அமைப்பின் தலைமையை புறம்பேசித் திரிபவர் என்பதும் நடிகர் கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா? அவர் தான், மாமன்னர் மருதுபாண்டியரை இழிவுபடுத்தி தொடர்ச்சியாக சாதியக்கூட்டங்களில் பேசிவருபவர் என்பதும் கருணாஸ் அகமுடையாருக்கு தெரியுமா?என்று கூட தெரியவில்லை.

முக்குலத்தோரில் கள்ளர் - மறவர் என தனியாக அமைப்பு நடத்தி வருபவர்களுக்கு கூட அவ்விழாவில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அகமுடையார் என அமைப்பு நடத்திய யாருக்கும் எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை. ஒப்புக்காக, முக்குலத்தோர் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் அகமுடையார்களில் இருவருக்கு பெயரளவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் மாமன்னர் மருதுபாண்டியர் பெயரிலோ, அகமுடையார் என்ற பெயரிலோ தனி அமைப்பாக நடத்திவரும் எந்தவொரு அமைப்பினைச் சேர்ந்தவர்களும் விருது வழங்கும் இப்பட்டியலில் இல்லை என்பது திட்டமிட்ட ஒதுக்கல் என்பது கருணாஸ் அகமுடையாருக்குத் தெரியுமா?

மொத்தத்தில் நடிகர் கருணாஸ் அகமுடையார் தன்னை சாதியத்தலைவனாக அடையாளப்படுத்தி முக்குலத்தோர் அரங்கில் பவனிவர பின்புலமாயிருந்த அகமுடையார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அந்த விழா இருந்தது என்பதை இப்போதைக்கு அவர் உணர வாய்ப்பில்லை.
இப்படி தொடர்ச்ச்சியாக நடிகர் கருணாஸ் அகமுடையார் அவர்கள், ஒட்டுமொத்த அகமுடையார்களை புறக்கணித்தாலும் கூட, எந்தவொரு பிரச்சனையோ, அரசியல் சறுக்கல்களோ இக்கட்டான சூழல்களோ அவருக்கு ஏற்படும்போதெல்லாம் அகமுடையாராகிய நாங்கள் அவருக்கு தோள் கொடுப்போம். இதை அவர் இன்று மறந்திருக்கலாம்; ஒருவேளை அப்படியொரு சூழல் உருவாகும் போது, அவருக்காக செயலாற்றி நினைவூட்டுவோம் அகமுடையாராக! என்னதான் எங்களை புறக்கணித்தாலும், நடிகர் கருணாஸ் அகமுடையாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

18 அக்டோபர் 2015

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு...

கமல் - ரஜினிக்கு மாற்றாக தெளிவாக, "நடிகர் சங்கம்ன்னு இருந்தாலே போதும்!"ன்னு சொன்ன கவுண்டமணியும், "தன்னை யாரோ அடிச்சிட்டாங்க!"ன்னு 'கோ' பட அஜ்மல் மாதிரி மீடியாவுக்கு முன்பாக நடித்த விஷாலுக்கு மாற்றாக, "எந்த அசம்பாவிதமும் நடக்கல"ன்னு நேர்மையாக சொன்ன அதே அணியின் கருணாஸூம், திரையின் முன்பு காமெடியன்களாக தோன்றினாலும், திரைக்கு வெளியே பண்பட்ட பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

'தேவர் மகன்' நாசர், 'சண்டக்கோழி' விஷால், 'பருத்தி வீரன்' கார்த்தி, 'பசும்பொன்' பொன் வண்ணன் என திரையில் தேவர்களாக நடித்தவர்களோடு, கருணாஸ் யென்ற தேவரும் பஞ்ச பாண்டவர்கள் அணி சார்பாக வெற்றி!