பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 ஏப்ரல் 2017

கருப்பு இம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்!



நிறத்தால் கருப்பானவன் என்பதில் எனக்கு பெருமையே. இம்மண்ணின் பூர்வகுடிகளின் இயல்பான நிறமே கருப்பு தான். அதனால் பிறப்பால் இம்மண்ணின் மைந்தனென அடையாளப்படுவதும் கூட இந்த கருப்பு தான். ஆரியர்கள் போன்ற அந்நியர்கள் தான் கருப்பில்லாத நிறத்தில் மனம் முழுக்க கருத்த எண்ணங்களோடு எம்மண்ணை சூழ்ச்சியால் ஆக்கிரமித்தனர். அரப்பா நாகரீகத்தை அழித்தொழித்த வரலாற்று பெருமையை தன்னகத்தே கொண்டவர்களின் வழிவந்த தருண்விஜய் போன்றோர்கள், எம்மைப்போன்ற கருப்பர்களோடு சகித்துக்கொண்டு எம் மண்ணில் ஏன் வாழ/ஆள வேண்டும்? கைபர் போலான் கணவாய் வழியே கால்நடையாக நாடோடியாய் கடந்து வந்தது போலவே, இப்போதும் மீண்டும் தங்களது சொந்த பகுதிக்கே கிளம்பிச்செல்லலாமே?

ராமனும், கண்ணனும் என்ன நிறமென்பதை சகிப்புத்தன்மையுடைய வந்தேறிகள் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். கலப்பில்லாத நிறம் கருப்பு என்பதையும் இனிமேலாவது அந்த அந்நியர்கள் உணர வேண்டும். "இன்றைய ஹிந்தியா முழுமைக்குமுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இம்மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி தமிழர்கள் தான்!" என்பதை 'வந்தேறி' பற்றிய கேள்விக்கு, நிறத்தால் சிவப்பாய் இருந்த பீமராவ் அம்பேத்கர் அன்றைக்கே இவ்வுண்மையை ஊரறிய சொல்லிருப்பதே தமிழர்களின் பாரம்பரியத்திற்கான சாட்சி. வந்தேறிகளே எங்களையும், எம் மண்ணையும், எம் பண்பாட்டையும், எம் ஆன்மீகத்தையும், சுரண்டியது போதும்; எங்களைப்போன்ற கருப்பர்களை விட்டு வெளியே கிளம்புங்கள்!

சிவப்பாய் இருக்கும் இவர்கள் செய்யும் கூத்துகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்கின்ற தமிழக பாஜக தலைமையாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தற்பொழுது தலைமையாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இல்லாத சகிப்புத்தன்மையா தருண் விஜய்க்கு இருக்கிறது? வேண்டுமென்றால், சிவப்பாய் இருக்கின்ற சு.சுவாமியையோ, ஹெச்.ராஜாவையோ இங்கே தலைமையாக்குங்கள் பார்ப்போம். 'கருப்பு' தான் இம்மண்ணின் அடையாளம். அதை நாளைவொருநாள் தமிழக தலைமை பதவிக்கான சரியான தலைவராக (ஒருவர்) வரும்போது 'கருப்பை' பற்றி தருண் விஜய் புரிந்து கொள்வார்.

16 மார்ச் 2017

உளவியல் கொலைக்கு உள்ளான தமிழன்!

சேலத்திலுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற (ஜெ.என்.யூ) தமிழ் மாணவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலேயே தூக்கிட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். மூன்று முறை முயற்சித்து, நுழைவுத்தேர்வு மூலமாக ஆய்வு மாணவனாக சென்றவரின் உடலே இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எத்தனை கொடுமையான விசயம். எளிய குடும்பத்தில் பிறந்த போதும் இத்தனை துன்பங்களையெல்லாம் கடந்து டெல்லி சென்றது, இளம் வயதிலேயே இறப்பதற்காகவா?யென அவரை சார்ந்தோரும், அவரை போன்றோரும் கொதித்தெழுவது இயல்பு தான்.
இன்னும் சொல்லப்போனால் பட்டியல் சாதியை சேர்ந்தவரென்பதால் தானே, முத்துக்கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கிறார்; அதற்கான எதிர்வினையாகத்தான் சாலமனின் செருப்பும் இருந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட இச்செயலை கண்டிக்கும் யாருமே, இறந்த முத்துக்கிருஷ்ணனின் உயிரை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இணையதள ஆதரவாளர்களான இவர்களெல்லாம் தாங்கள் தான் ஹிந்தியாவையே ஆட்சி செய்வது போல, என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி பார்த்தால், மேல் வகுப்பென அறியப்படும் அந்த சிறுபான்மை சாதியவாதிகளின் உளவியல் தாக்குதலால் கொல்லப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் உயிரை விட, சாலமனால் வீசப்பட்ட ஒற்றை செருப்பு ஒரு விசயமே அல்ல.

12 டிசம்பர் 2016

தமிழ்நாட்டு அரசியலில் டெல்டாவின் ஆதிக்கம்!

கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.

முதலில் தஞ்சாவூர்...

தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.

அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.

மூன்றாவதாக இடம் யாருக்கு?

அடுத்து தற்போதைய அரசியல் கட்சிகளின் வலிமை, அவர்களின் ஓட்டு சதவீதம், எத்தனையாவது இடம் என்ற நம்பர்களை பற்றியெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக - திமுக - பாஜக என்ற நிலை வந்துவிட்டது. மேலும், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக பாஜக தன்னை பிரகடனப்படுத்த தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, தவறாம முடிவுகளால் வைகோவுடன் கூட்டணி வைத்து தங்களது சின்னத்தையே இழந்து தடுமாறி நிற்கிறது.

எதிர்கட்சியாக திமுக இல்லாத போது எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் செய்ய தவறிய அரசியலை, பாமக சரியாக செய்த போதும், தற்போதைய சூழலில் கடந்த கால சாதி முத்திரையை அன்புமணி ராமதாஸ் தலையெடுத்த பின்னால் ஓரளவுக்கு மறைய தொடங்கிருக்கிறது. அதன் நீட்சியாக 2021 தேர்தலில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும். ஆனால் இப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தென்னிந்திய அரசியலில் முழுமையாக களமிறங்க காத்துக்கொண்டே இருந்தது. கர்நாடகாவை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் தமிழகத்திலும் பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அரசியல் செண்டிமெண்ட்டில், 'So Called' முக்குலத்தோரும் - தஞ்சாவூரும்...

ஆட்சியமைக்கும் திராணியுள்ள திராவிட கட்சிகளில், திமுகவின் தலைமையானது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. அதுபோலவே, அதிமுகவின் தலைமையானது 'So Called' முக்குலத்தோர் + ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. தேசிய கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மாறி வந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்திருக்கின்றனர். காரணம் 'So Called' முக்குலத்தோர் கோட்டாவில் அவர் மறவர். இந்த கணக்கீட்டின் படி பார்த்தால், மூன்றாவது கட்சியாக பரிமாணம் பெற்றுள்ள பாஜக, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பாஜகவின் தலைமையை 'So Called' முக்குலத்தோருக்கு வழங்கலாம். அதுவே சரியான காய் நகர்த்தலாக இருக்க முடியும்.

இப்படியானதொரு தகுதியுள்ளவராக 'So Called' முக்குலத்தோராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரராகவும் உள்ள திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாஜகவின் தலைமை பொறுப்பை கொடுக்கலாம். மத்திய இணையச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவராகவும், மாநில செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய கட்சி பதவியில் இருந்த கருப்பு முருகானந்தம் அவர்களை, பாஜகவின் மாநில தலைவராக்கினால் தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

12 செப்டம்பர் 2014

இன்றைய தமிழ்நாட்டின் நிலை?!

ஊரெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து இலக்கு வைத்து விற்பனை செய்து தமிழனை போதைக்கு அடிமையானவனாகவும், எல்லாவற்றையும் ’விலையில்லா’ என்று சொல்லி தமிழனை இலவசத்திற்காக ஏங்கும் பிச்சைக்காரனாகவும் ஆக்கிவிட்டு, பொருளாதார உற்பத்தி குறித்த மத்திய புள்ளி விவரயியல் பட்டியலில், 03.39 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அது ஆட்சியாளர்களின் ஆளுமைத்திறனைத்தான் வெளி காட்டுகின்றது. ”போலியான விளம்பரங்களால், உண்மையான வெற்றியை பெற்றுவிட முடியாது!” என்பதற்கான எளிய உதாரணம்தான் இது. பீகார் கூட 10.23 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழன் விழித்து கொள்ளாத வரை தமிழனுக்கு தான் வெட்கக்கேடு.

இது ஒரு புறம் இருக்க,


வேட்பாளரை பயத்தால் மிரட்டி, பலம் கொண்டு கடத்தி, பணத்தால் வாபஸ் பெற செய்து அன் அப்போஸ்டாக வெற்றி பெறுவது ஒரு வழி. இல்லையென்றால், வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது மற்றொரு வழி. இது இரண்டுமே முடியாத பட்சத்தில், வெற்றி பெற்ற மாற்றுக்கட்சி வேட்பாளரை பணம்/பதவி ஆசை காட்டி தன் பக்கம் இழுத்து ஒட்டுமொத்த வெற்றியையும் தன்வசமாக்குவது கடைசி வழி. இது தான் தற்போதைய அதிமுக ஃபார்முலா!

பலமான எதிர்கட்சியாக உருவெடுக்க தமிழக பா.ஜ.க.விற்கு தகுதி இருப்பது போல தெரியவில்லை. உட்கட்சி பூசலால் தனக்கு தானே அழிவை தேடிக்கொண்டு, மீண்டுமொரு சத்தியமூர்த்தி பவனாக தான் கமலாலயமும் மாறும் போல.சரியான - நம்பிக்கையான - வீரமான - உணர்வான - விசுவாசமான ஒரு வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்க முடியாத வக்கற்ற நிலையையில் தமிழக பா.ஜ.க இருக்கிறதென்றால், அதன் வருங்காலமும் கடந்தகால காங்கிரஸ் போலத்தான் முடியும்.

இந்த இழவுக்காக தான் தமிழக வாக்களர்கள், ’அதிமுக வேண்டாம்னா திமுக! திமுக வேண்டாம்ன்னா அதிமுக!’ன்னு ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுறாங்க போல.


- இரா.ச.இமலாதித்தன்

15 ஏப்ரல் 2014

மதவெறி தீவிரவாதம்!

இசுலாமியர்கள் பெரும்பான்மையாகை இருக்கும் ஊருக்குள் வாக்கு சேகரிக்க போனாலே தீவிரவாதிகள் போல கொலைவெறி தாக்குதல் நடத்தும் இசுலாமிய அமைப்புகள், மதவெறி பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள். நேற்று மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்திய இசுலாமிய அமைப்புகள் மீது வழக்கு பதியவே தமிழ்நாடு காவல்துறை மறுக்கின்றது; நேற்று முன்தினம்தான் செல்வி ஜெயலலிதா பாஜகவை விமர்சித்து மேடையில் பேசினார். அதனை தொடர்ந்துதான் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது. அப்படியானால் இந்த தாக்குதலுக்கு ஆளுங்கட்சியின் தலையீடும் இருக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



ஏற்கனவே திரு கருணாநிதி தனது மேடை பேச்சுகளில் இசுலாமிய வாக்குகளை குறிவைத்தே பேசி வருகிறார் என்பது நாடறிந்த விசயம். இப்போது செல்வி ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஜவ்ஹீத் அமைப்பின் வெளியேற்றத்தால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றார். இதை தெளிவாக அறிந்துள்ள இசுலாமிய அமைப்புகள் திரு கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட இம்மாதிரியான கொலைவெறி தாக்குதல்களை அச்சமின்றி தொடர்வாகளென தோன்றுகிறது. சிறுபான்மையினர் என்ற ஒற்றை சொல்லை வைத்தே கேவலமானதொரு அரசியலை நிகழ்த்திவரும் கேடுக்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வெளிப்படையாகவே தெரிகின்றது.

தேசிய கட்சியின் வேட்பாளரையே மதவெறியால் தீவிரவாத தாக்குதலை நடத்தும் இசுலாமிய அமைப்புகள் இன்றைக்கும் சிறுபான்மையினர் தான் என்பதனை மனதில் கொண்டால் நலம். இப்படிப்பட்ட தாக்குதலை சக குடிமகனாக வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒருவேளை இதே பாணியில் பெரும்பான்மை சமூகத்தினர் களமிறங்கினால், சொந்த நாட்டிற்குள்ளாகவே இசுலாமிய மத வெறியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என புறக்கணிக்கப்படுவார்கள் என்பதுதான் எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்.