உளவியல் கொலைக்கு உள்ளான தமிழன்!

சேலத்திலுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற (ஜெ.என்.யூ) தமிழ் மாணவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலேயே தூக்கிட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். மூன்று முறை முயற்சித்து, நுழைவுத்தேர்வு மூலமாக ஆய்வு மாணவனாக சென்றவரின் உடலே இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எத்தனை கொடுமையான விசயம். எளிய குடும்பத்தில் பிறந்த போதும் இத்தனை துன்பங்களையெல்லாம் கடந்து டெல்லி சென்றது, இளம் வயதிலேயே இறப்பதற்காகவா?யென அவரை சார்ந்தோரும், அவரை போன்றோரும் கொதித்தெழுவது இயல்பு தான்.
இன்னும் சொல்லப்போனால் பட்டியல் சாதியை சேர்ந்தவரென்பதால் தானே, முத்துக்கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கிறார்; அதற்கான எதிர்வினையாகத்தான் சாலமனின் செருப்பும் இருந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட இச்செயலை கண்டிக்கும் யாருமே, இறந்த முத்துக்கிருஷ்ணனின் உயிரை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இணையதள ஆதரவாளர்களான இவர்களெல்லாம் தாங்கள் தான் ஹிந்தியாவையே ஆட்சி செய்வது போல, என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி பார்த்தால், மேல் வகுப்பென அறியப்படும் அந்த சிறுபான்மை சாதியவாதிகளின் உளவியல் தாக்குதலால் கொல்லப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் உயிரை விட, சாலமனால் வீசப்பட்ட ஒற்றை செருப்பு ஒரு விசயமே அல்ல.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment