இனக்குழுவின் மூத்தோருக்கு வீர வணக்கம்!


மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.


மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் முதலாமாண்டு நினைவேந்தல்.
மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.


வீர வணக்கம்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment