08 மார்ச் 2017

தமிழர் கடலில் செத்து மடியும் மீனவ சமூகம்!





இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெளத்த-சிங்கள இனவெறியில் ஊறிப்போன ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு, ஆசையை துறக்க சொல்லி அன்பை போதித்த புத்தரின் வாக்கு இன்னும் கேட்கவே இல்லை போல. பாவம் புத்தர்; அவர் பெயரில் நடக்கும் அவலங்களை அறியாமல், கண்களை மூடி புன்னகைத்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை தனிநாடாக தமிழ் பொறுக்கிகள் ஆளும் நாளில், மீனவன் தான் கடற்புலிகள் என்பதை அரசியல் பொறுக்கிகளும் உணரும் ஒருநாள் நிச்சயம் வரும். தான் யாருக்கு பிறந்தேனென சொல்வதில் கூட குழப்பத்தில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி மீதெல்லாம் கொஞ்சம் கூட மரியாதையோ, பரிதாபமோ இப்போதெல்லாம் வருவதேயில்லை. "எதிரியை தோற்கடிக்க வேண்டுமே தவிர, சாகடிப்பது வெற்றியல்ல!" என்ற எண்ணமும் கூட சு.சுவாமி விசயத்தில் சுக்குநூறாக உடைந்து போகிறது. அவர் இறந்தால் அந்நாளை கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். மண்டல் கமிஷனை செயல்படுத்திய வி.பி.சிங் என்ற பிராமணரில்லாதவரின் இறப்பை வரவேற்ற இன வெறியர் சோ.ராமசாமி, "ஒரு மனிதரின் இறப்பு குறித்து நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. ஆனால் இவருடைய இறப்பு நாட்டின் நலனுக்கு மிகவும் நல்லது" என துக்ளக்கில் எழுதினார். அதுபோலவே, ஓர் இனமே மகிழ்ச்சியடைய சு.சுவாமி சீக்கிரமாவே இறந்து தொலையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக