இந்திய கிரிக்கெட் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய கிரிக்கெட் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்ச் 2015

உலக கோப்பை துளிகள்!

-001-

உலக கோப்பைல இந்திய அணி தோற்று போனது கூட கஷ்டமா இல்ல. அதை மத ரீதியாக தங்களின் வெற்றின்னு நினைக்கிற, பாஸ்போர்ட்ல இந்தியன்னு சொல்லிக்கிட்டு வெளிநாட்டுல ஒட்டகம் மேய்ச்சிக்கிட்டு இருக்கிறதுங்கள நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.


-002-

தோனி ஆஸ்திரேலியாவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, ஒருபய கூட தோனியை மறந்தும் புகழ்ந்துட கூடாதுன்னு, நம்ம கோஹ்லி முத்தரப்பு தொடர் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே மூனு விசயத்தை முடிவு பண்ணி வச்சிருந்தாப்ள. அதுல ரெண்டாவதா தோனி கதையும் ஓகே ஆய்டுச்சு. அல்ரெடி அனுஷ்கா ஷர்மாவும் ஓகே. இப்போ மிச்சம் இருக்கிறது, மூனாவதா கேப்டன் பதவி மட்டும் தான். அதுவும் ஐபிஎல் முடிஞ்ச உடனே அறிவிப்பு வந்துடும். ஓர் அமாவாசை, இனி நாகராஜ சோழனாகிறான்! வாழ்த்துகள்டே... "என்னுடைய சாதனைகளை இன்னொரு இந்தியனே முறியடிக்க ஆசைப்படுறேன்"னு சொன்ன நம்ம சச்சினின் வாக்கை காப்பாற்றக்கூடிய தகுதியுள்ள கோஹ்லி, இனியாவது பிசிசிஐ டீமுக்காக ஆடுவாப்ள நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! 

-003-

ஒரேவொரு ரன் அடிக்க பதிமூனு பாலை வேஸ்ட் ஆக்கினதை விட, அந்த ஒரு ரன் அடிக்கிற லட்சணத்த பார்க்கிறதுக்காக இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கே பறந்து போன அனுஷ்கா ஷர்மாவை நெனைச்சு தான் துக்கப்படுறேன், துயரப்படுறேன், வெட்கப்படுறேன், வேதனைப்படுறேன், இன்னும் என்னன்னமோ படுறேன்.

-004-

முதலமைச்சர் பதவியை இழந்த பிறகும், 'மக்கள் முதல்வர்'ன்னு வெட்கமில்லாமல் போட்டு கொள்வதை போல, இனி இந்திய கிரிக்கெட் அணியும், 'மக்கள் உலக கோப்பை சாம்பியன்'னு வெட்கமே இல்லாமல் போட்டு கொண்டாலும் தப்பில்லைன்னு தான் தோணுது.

27 பிப்ரவரி 2014

இந்திய கிரிக்கெட் அணி பலமா? பலவீனமா?

கோலி, ரஹானே அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.
- தி ஹிந்து

வின்னர் விராத்: இந்தியாவிடம் வீழ்ந்தது வங்கதேசம்.
- தினமலர்

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா விராட் கோலி அபார சதம்.
-தினத்தந்தி

வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி தேடித்தந்தார் கோஹ்லி.
- தினகரன்

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஃபேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருக்க போகிறது இந்திய கிரிக்கெட் அணி? சச்சின், கங்குலி, சேவாக், தோனி, கம்பீர் யென்ற வரிசையில் இப்போது கோஹ்லியை பிடிச்சிக்கிட்டு தொங்குறதுக்கு வெட்கமாவே இருக்காதா? உருப்படியான ஒரு பவுலரை உருவாக்க வக்கிலாமல் போய்விட்டதா இங்கே? நேற்றைய வங்கதேசதுக்கு எதிரான போட்டியில், வருண் ஆரோன், முகமது சமி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேக பந்துவீச்சாளர்களின் செயல்பாடு படுமோசம். இந்தமாதிரியான ஒன்றுக்கும் உதவாத பந்துவீச்சை கொண்ட அணியை வைத்துக்கொண்டு இந்திய அளவிலான ரஞ்சி ட்ராபியை கூட வாங்க முடியாது என்ற நிலையில் இண்டர்நேசனல் போட்டிகளில் பங்கேற்று என்ன ஜொலிக்க போகிறார்கள்? இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பையையும் இந்தியா கை நழுவ விட்டால், அதற்கு ஃபேஸ் பவுலிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும் என்பது என் அனுமானம். மேலும், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் ஃபெளக்சர்ன்னு ஒருத்தர் இருக்காரே, அவர் என்ன பண்றாருன்னு எப்போது பிசிசிஐ கேட்குதோ? அதுவரையிலும் இந்திய கிரிக்கெட் அணி சரிவை நோக்கியே செல்லும் என்பதே எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்