அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
23 நவம்பர் 2017
25 ஆகஸ்ட் 2017
விவேகம் - சிறு பார்வை!
இல்லுமினாட்டி போன்ற ரகசிய அமைப்புகளை பற்றியும், அப்படிபட்ட அமைப்புகளின் கொடூர நோக்கங்களையும், அவர்களால் திட்டமிடப்பட்டு திணிக்கப்படும் போர்வெறியையும், அவர்களின் வணிகத்திற்காக உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகளையும், நவீன கடவுளாகி போன பணம் மற்றும் தங்கம் என்ற உச்சபட்ச வணிகப்பொருள் பற்றியும், செய்தி ஊடகத்தை பயன்படுத்தி அரசாளும் அவர்களது தந்திரத்தையும் வெளிப்படையாக சொல்லிருக்கும் எம் சோழ மண்ணின் மைந்தனும் - எம் உறவினருமான இயக்குனர் சிவாவின் துணிச்சல்மிகு கதைக்களத்திற்கு முதற்வாழ்த்துகள்! சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஆண்டு கொண்டிருக்கும் நிஜ ஆண்டைகளான இந்த ஆளும் வர்க்கத்தின் கோர முகத்தை வெளிக்காட்டும் கதையையே தன் படத்தின் கதைக்கருவாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் தல அஜித்குமாருக்கு, தளபதி விஜய் ரசிகனாகவாழ்த்துகள்!
விவேகத்தில் பல இடங்களில் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும் (எண்ணம் போல் வாழ்க்கை) எண்ணங்களின் வலிமையை பற்றிய ரகசியத்தை உடைத்திருக்கும் இயக்குனர் சிவாவின் விவேகம் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்த இவ்வுலகின் எதிரிகளான சீக்ரெட் சொசைட்டிகளை, நேர்மறையான எண்ணங்கள் மூலம் நிச்சயமாக வெல்ல முடியுமென்ற சீக்ரெட்டை சொல்லிருக்கும் திரைக்கதையின் இந்த யுக்தியே ஒருவித விவேகம் தான். இது உலகத்தரமான சினிமாவாயென தெரியாது; ஆனால் உலகத்தையே ஆளும் உண்மையான எதிரிகளை தோலுரிக்கும் சினிமா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளி, திரையரங்கில் படத்தை பார்த்து மகிழுங்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
மாற்றுக்கருத்துகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் கூட எளிதாக கடக்க தெரியாதவர்களெல்லாம் கடைசி வரை இவ்வாழ்வின் காலடியில் தான் விழுந்து கிடக்க வேண்டும். ப்ளூ சட்டை மட்டுமல்ல; ஆடையென்ற குறிப்பிட்ட எந்தவொரு அடையாளமுமற்ற எத்தனையோ விமர்சகர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்; அவர்களையெல்லாம் கடந்து செல்லாமல், இங்கே பயணிக்கவே முடியாது. இதை 'தளபதி' விஜய் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது வட்டம்'; ஏற்ற இறக்கத்தை உணர்ந்து வேகமாக சுழன்று கொண்டிருக்க பழகுங்கள். அதுவே 'தல' அஜித் பாணியில் சொன்னால் 'வாழ்க்கை என்பது நேர்கோடு'; மேடு பள்ளங்களை கண்டு கொண்டு வேகமாக நகர பழகுங்கள்.
விவேகமும் முக்கியம்.
- இரா.ச. இமலாதித்தன்
கொசுறு:
சீக்ரெட் சொசைட்டிகளை பற்றி 'அறந்தாங்கி அகமுடையார்' வகையறாவை சேர்ந்த சிறுத்தை சிவா விவேகம் படத்தில் சொல்லிருக்கும் ரகசியத்தை, ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து வைத்திருந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் விவேகமுடன் கூடிய வீரம் போற்றதக்கது. அதனாலேயே உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத கொடூரம் மாமன்னர் மருதுபாண்டியர்களின் மரணத்தில் நடந்தது. அவர்களுடைய குடிவழி ஆண் வாரிசுகளிலுள்ள பச்சிளம்குழந்தைகளை கூட விடாமல் கொன்றொழித்து, அந்த ரகசியங்களை தற்காத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி என்னும் அரசக்கூலிப்படை.
#Illuminati #Marudhu #Sivagangai #Agamudayar

18 நவம்பர் 2015
அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!
ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித்
நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம்
கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

06 ஆகஸ்ட் 2015
அஜித் - சிம்பு - விஜய்
அஜித்தின் ரசிகராகவே சிம்பு இருக்கட்டுமே. அதனால் சிம்புவை தவிர வேற யாருக்கும் நஷ்டமும், லாபமும் கிடைத்துவிட போவதில்லை. மூன்று வருடம் இழுபறியாக இருந்த வாலு படம் வெளிவருவதற்கு விஜய் உதவியது மனிதபிமான அடிப்படையில் சக நடிகனாக இருப்பதால் மட்டும் தானென நினைக்கிறேன். இதையே மையபடுத்தி அஜித்-விஜயைகலாய்ப்பதும், சிம்புவிடம் இதைப்பற்றி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு தர்மசங்கடம் படுத்துவதும் என இணையத்தில் சுற்றித்திரியும் மனம்பிறழ்ந்த வெறியர்களால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை. இவய்ங்க இங்க தான் தலடா, தளபதிடான்னு கத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் கோடிகணக்கில் சம்பாரிச்சுக்கிட்டு சந்தோசமா இருக்காய்ங்க. அந்த நடிகர்களை அவர்களது தொழிலை செய்ய விட்டுவிட்டு, இவிய்ங்க தன்னொட வயித்து பொழப்பை பார்தாலாவது, பெத்தவங்களுக்கு புரோஜனமாபோகும்!
10 மார்ச் 2015
27 ஜூலை 2012
விமர்சனம் என்பது யாதெனில்...
இணையத்தில் சமூக வலைதளங்களில் எல்லா வயதினரும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. ஒருவரை விமர்சிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம், கார்ட்டூன் போன்ற இவர்களே கணினியின் மென்பொருள் உதவியோடு உருவாக்கும் ஒளிப்படங்களே.
இங்கே விமர்சிக்கபடுவபர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் பெரும்பாலும், காங்கிரஸ்காரர்களே. தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களில் யாரும் விதிவிலக்கு அல்ல. பாரபட்சமில்லாமல் அனைவருமே பந்தாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
அனைவருமே விமர்சிக்க படுகிறார்கள் என்பது ஒரே ஆறுதலென்றாலும், உடலியலியல் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான விமர்சனங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கின்றன. குறிப்பாக, நாராயணசுவாமியை உடலியல் தோற்றத்தை வைத்து மிக கேவலமாக விமர்சிக்கும் யாருமே, மன்மதன் அல்ல. கண்ணாடியில் முகத்தை பார்த்து தங்களுக்கு தாங்களாகவே 'இதுக்கு மேலேயுமா அழகு வேணும்?' யென்று முணுமுணுத்துக்கொண்டு, கணினி தொழிநுட்ப உதவியுடன் தங்களை மிக அழகாக செதுக்கி கொள்கிறார்கள். அவர்களைப்போல போலியான அழகை வெளிக்காட்டிக்கொள்ள தெரியாத நாராயணசுவாமி போன்றவர்கள், அவர்களுக்கு விலங்கின் தோற்றமாகத்தான் தெரியும். விஞ்ஞான அறிவியலின் கூற்றுபடி, விமர்சிக்கும் அனைவரும் அதே விலங்கினத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள் போல.
ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க காராணமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் இல்லாதொழிக்க வேண்டியது நம் கடமைதான்; ஆனால், தன்னுடைய தலைமைக்கு உண்மையான விசுவாசியாய் இருக்கிற ஒரு சக தமிழனை, மற்றொரு தமிழனே இழிவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான வண்ணத்தையும், உருவத்தையும் யாரும் பிறப்பதற்கு முன்பாக தீர்மானித்து உயிராய் உருவெடுக்க வில்லை. அது ஒருவகையில் இயற்கையான ஒரு நிகழ்வு.
உடலியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்யும் நீங்களும், ஒருநாள் இழமையான/ அழகான உங்களது உடலை இழக்கத்தான் போகிறீர்கள். முதுமையான காலத்தில், நீங்கள் விமர்சித்த அதே விலங்கினத்தின் தோற்றம் உங்கள் மீதும் ஏற்படக்கூடும்.
உங்களுக்கு ஒருவரை பிடிக்காத போது, அதை விமர்சனம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமான முறையில் தாக்குவது, உங்களது கீழ்த்தரமான புத்தியையே அது காட்டும்.
சமீப காலமாக, இந்த கணினியின் துணையோடு, குறிப்பிட்ட ஒருசில நடிகர்களை அவர்களின் முகத்தோற்றத்தையும், உடலியல் கூறுகளையும் மிகவும் அருவருக்க தகுந்த வகையில் சித்தரித்து அதை ஒளிப்படமாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது குரூர புத்தியை வெளிக்காட்டி வருகிறார்கள் ரசிகர் என்ற முகமூடியில். பதிலுக்கு, இன்னொரு நடிகரின் ரசிகர் பட்டாளங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த, வேறொரு ஒழிப்படத்தை உருவாக்கி தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் குழுமம் அதை ஆதரிப்போது போன்றே தெரிகிறது. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா தான் இப்போதைக்கு இவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற கீழ்த்தரமான, முகம் சுழிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யார் தட்டிக்கேட்பது யென்ற போட்டியில், யாருமே கண்டுகொள்வதில்லை. மாறாக அதை ஆதரிப்பது போல அமைதி காப்பதும் ஒருவகையில் ஆபத்தில்தான் முடிய போகிறது என்பது மட்டுமே நிதர்சனம். ஆனால், அதை யாருமே புரிந்து கொண்டது போல தெரியவில்லை. 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' யென்று நானும் மற்றவர்களை போலவே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருகிறேன்.
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)