தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜனவரி 2018

ஆங்கில புத்தாண்டு 2018!

முப்பது ஆண்டுகள் பிழைப்பிற்காக இங்கே வாழ்ந்தவனெல்லாம் 'பச்சை தமிழன்' என்றால், முந்நூறு ஆண்டுகள் ஆள்வதற்காக இங்கே வாழ்ந்தவனும் 'ப்ரோ ஹிந்தியன்' தானே? அப்போ அவனோட புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியை கொண்டாட மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? முதலாவது சரியென்றால், இரண்டாவதும் சரி தானே? உலகத்தாருக்கு உண்மையான புத்தாண்டெனில் பூமியின் நகர்வான அது 'வடவோட்டம் - தென்னோட்டம்' தான். அப்படியெல்லாம் கணக்கீடு செய்து யாருமிங்கே கொண்டாடவில்லை; ஏனெனில் நாளும் தேதியும் நாமளாக வைத்து கொண்டதுதான்; கொண்டாடக்கூடிய எல்லாவற்றையும் ரிஷிமூலமெல்லாம் பார்க்காமல் மகிழ்வோடு கொண்டாடுங்கள். வாழ்க்கைல ஷந்தோஷம்தாங்க முக்யம்; ஜெய்ஹிந்த்!

ஆங்கில புத்தாண்டை எதிர்ப்பவர்களெல்லாம், ஏன் புதுக்காலண்டர் வாங்க துடியாய் துடிக்கிறீர்கள்? மாத சம்பளம் போன்ற பொருளாதார வருமானம் முதல் அனைத்து கணக்கு வழக்குகளும் ஆங்கிலத்தேதியோடு தான் பின்னிக்கிடக்கிறது என்பதை உணருங்கள். இங்குள்ளவர்களில், உங்களுடைய பிறந்த தேதி எதுவென கேட்டால், 99.9% பேர் ஆங்கிலத்தேதியை தான் சொல்கிறார்கள்; அதோடு அவர்களின் பிறந்த வருடம் எதுமென கேட்டால், 100% பேர் இதே ஆங்கில ஆண்டை மட்டும் தான் சொல்கிறார்கள். இப்படியான எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மதம் சார்ந்தே எல்லாவற்றையும் பார்க்கும் அணுகுமுறையை இந்த ஆண்டாவது மாற்ற முயலுங்கள்.

Image may contain: 3 people, people smiling, text


ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டாமென இங்குள்ள எல்லாருக்கும் பாடமெடுக்கும் பாஜகவினர், நரேந்திர மோடிக்கும் பாடமெடுப்பார்களென நம்புகிறோம்.

09 ஆகஸ்ட் 2017

ஆளப்போறான் தமிழன்!



"ஆளப்போறான் தமிழன்"
எழுத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் பிழையே இல்லை! இனி இம்மண்ணை தமிழன் ஆள்வான்.
சீமானுக்கு நன்றி.

24 ஏப்ரல் 2016

சூறையாடப்படும் தமிழ்!




அன்று, யாழ் நூலகத்தை 'சிங்களவன்' தீயிட்டி சூறையாடினான். இங்கு, திருக்குறள் மன்ற நூலகத்தை 'திராவிடன்' சூறையாடுகிறான்.
'நாம் தமிழர்' என உணராத வரை, நாம் இனவழிப்பு செய்யப்பட்டு கொண்டே இருப்போம்...

26 ஜனவரி 2016

குடியரசு - குடிக்க வைக்கும் அரசு!

குடிமகன்களையெல்லாம் டாஸ்மாக் வாசலில் காத்திருக்க வைத்து, போதைக்கு அடிமையாக்கிய குடியரசு நாடு இதுவென பெருமை கொண்டு வாழ்த்தி கொள்ளலாம்.

மூன்று மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான உள்ளரசியலை உணர வக்கற்ற சமூகம் தான், குடியரசு நாளுக்கு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆரிய வந்தேறிகளின் குடிகள் ஆளும் ஹிந்திய அரசில், மும்முடியரசுகளை யெல்லாம் இழந்த தமிழனுக்கு ஏது குடியரசு?! வா வழக்கம் போல அடித்து கொள்வோம்...

இனிய குடியரசுநாள் வாழ்த்துகள்!

25 நவம்பர் 2015

ரஹ்மானென்ற தமிழன்!



2009ம் ஆண்டு உலக ஊடகங்களே உற்று நோக்கிய ஆஸ்கார் மேடையில், 'எல்லா புகழும் இறைவனுக்கே!' என தாய்த்தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானை, அன்றைய வட இந்திய ஊடகங்கள் மொழிரீதியாக மென்மையாக சாடின. இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியனாக வாங்கி இந்தியாவிற்கு கெளரவம் சேர்த்த போதும், தென்னிந்தியனாகவும், தமிழனாகவும் தான் ரஹ்மான் வடக்கத்திய ஊடகங்களுக்கு தென்பட்டார். இப்போதும் கூட அவர் சொன்ன கருத்தை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க மற்றுமொரு காரணம் தமிழன் என்பதால் கூட இருக்கலாம்.

அமீர்கானின் பின்புல வரலாறு எதுவும் தெரியாது. அந்த வரலாறை தேடவும் விரும்பவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின், தந்தையும் தாயும் தமிழர்கள் என்பதும், ரஹ்மானின் அப்பாவான இசையமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் தமிழ் இனக்குழுவான முதலியார் பட்டமுள்ள அகமுடையார் தான் என்பதும், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பதும் தான் எனக்கு தெரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனின் கடந்தகால பின்புல வரலாறு.

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ரஹ்மானின் இசைக்கு பரம ரசிகன் என்பது மட்டுமல்ல; மேலும் இளையராஜாவை விட ரஹ்மானின் தனிப்பட்ட குணநல பண்புகளுக்கும், தன்னடக்கத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில், ஊடகங்கள் என்ன சொன்னாலும், சக தமிழ் பேரினத்தவனாக, மதம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மானை ஆதரிக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

15 நவம்பர் 2015

பாரீஸ் முதல் கடலூர் வரை!

நாம் எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும்? எதைப்பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்? எதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை கூட ஊடகங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான், 'சப்போர்ட் பாரீஸ்' என்ற தற்காலிக ப்ரோஃபைல் மாற்றம்.

முள்ளிவாய்க்காலில் பல லட்சம் உயிர்கள் கொலை செய்யபட்ட போது, அது அடுத்த நாட்டு பிரச்சனை. ஆனால், பாரீஸ் மட்டும் பக்கத்து வீட்டு பிரச்சனை. டெல்லி கற்பழிப்புக்காகவும், ஆந்திர வெள்ளத்திற்காகவும் நிதியுதவி - போராட்டம். ஆனால், தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளோ, கடலூர் மழை வெள்ளத்தால் வீடிழந்த மக்களோ, இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களோ, வேற்றுகிர வாசிகளாக போய் விடுகின்றனர், புரட்சி பேசும் போராளிகளுக்கு.
த்தூ...

25 மார்ச் 2015

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

தமிழக பட்ஜெட்டும் டாஸ்மாக் தமிழனும்!

நட்ட இடத்திலேயே வருடாவருடம் மரக்கன்றுகளை நடும் சமூக ஆர்வலர்கள் போல, வீழ்ச்சியடைந்த பொருளாதரத்திற்கு நடுவே பட்ஜெட் என்ற பெயரில் வருடாவருடம் அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன ஆளும் அரசியல்வாதிகளால். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 500 ரூபாய் போதும் இந்த இளிச்சவாய வாக்களனுக்கு. எவன் குடி கெட்டால் இவனுக்கு என்ன? சாயுங்காலமானால் மூச்சு முட்ட குடிக்க டாஸ்மாக் வாசலில் தவமிருக்க தான் நேரம் சரியா இருக்கே தவிர, மற்ற சிந்தனையே இவனுக்கு வருவதில்லை. அப்படியொரு சிந்தனையை மழுங்கடிப்பதற்காகவே, டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஊரு திறந்து வச்சுருக்கு ஆளும் அரசாங்கம். இந்த சாராயக்கடை வருமானத்தை நம்பித்தானே அரசாங்க பட்ஜெட்டே வருடாவருடம் போடுறாங்க. இவங்க பட்ஜெட்டோ, திட்டமோ எதை போட்டாலும், அது அப்பாவி மக்களின் சோற்றின் மீதுதான் மண்ணை அள்ளி போடுவதாக இருக்கிறது; இதுதான் எதார்த்தம். இங்க பணக்காரன் பணக்காரனாகவே வளருறான். ஏழை பரம ஏழையாகவே தேயுறான். ஆனால், இந்த நடுதரவர்க்கம் தான் நாசமா போய்கிட்டு இருக்கு.

23 மார்ச் 2015

தமிழனின் அனுதாபம்!



தமிழன் எப்போதுமே, தமக்கு ஆதரவானவர்களையோ, பிடித்தவர்களையோ, அறிவாளிகளையோ, சாதனையாளர்களையோ இதுபோல யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் கொடுக்காமல், அவர்களை பற்றி வாயை கூட திறக்காமல், இறந்த பின்னால் வானளவு புகழ்வான் என்பதற்கு இன்றைக்கு மீண்டும் ஓர் உதாரணம்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையென்ற போற்றுதலுக்குமுரிய லீ குவான் யூ இன்று மரணத்தை தழுவினார் என்பது தான்.