சோழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 டிசம்பர் 2017

சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல்!




சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரித்த பின்னர், 'கோவிந்தசாமி சிவசுப்ரமணியன்' என்ற இவரது பெயரும் மாறிப்போனது. ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். கோவில் நகரமான கும்பகோணத்தை சீரமைத்த சிற்பியாக, அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
எல்லா நாட்களிலும் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி, ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, "கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்" என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
"மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி" என்ற ஆனந்த விகடனும் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.
மேக்கிரிமங்கலத்தில் முளைத்த விருட்சமே! சோழநாட்டு அரசியலின் ஆணி வேரே! அரசியல் ஆளுமையால் ஒருங்கிணைந்த தஞ்சையை ஆண்டவரே! அகமுடையார்களின் பெருமைமிகு அடையாளமாக மாறிப்போன, சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல் இன்று. (திசம்பர் 02, 2016)
(நன்றி: கோமல் அன்பரசன்)

27 நவம்பர் 2017

ராஜராஜன் அகமுடையாரா?!

Pandi Pandi: அண்ணா, ராஜராஜசோழர் அகமுடையார் வழிதோன்றலா? கள்ளர் வழிதோன்றலா?


இரா.ச. இமலாதித்தன்: சோழர்கள் ஆண்ட பகுதிகளிலெல்லாம் உடையார் பட்டமும், தேவர் பட்டமும் கொண்ட ஒரே இனக்குழு அகமுடையாராக மட்டுமே இருக்கின்றனர். ராஜசோழனின் மெய்கீர்த்தியில் கூட, ”உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றே பெயர் வருகிறது. அப்படியெனில் ராஜராஜசோழர் யாராக இருக்க முடியும்?

30 மார்ச் 2016

மூவேந்தர்களின் எல்லை தெய்வம்!






திருச்சிராப்பள்ளி - உறையூரை தலைநகராக ஆண்ட சோழர்களின் குல தெய்வமும், பண்டைய சேர - சோழ - பாண்டியர்களின் எல்லை காவல் தெய்வமுமாகிய 'செல்லாண்டி அம்மன்' தரிசனத்தோடு இன்றைய நாள் கடந்தது.

06 மார்ச் 2016



கி.பி. 910ம் ஆண்டு சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து, கோட்டையாண்ட அரசியான செம்பியன்மாதேவியார், 'பெரிய பிராட்டி' என்றும் அழைக்கப்பட்டார். இவரின் கணவர் தான் கண்டாரதித்தன்.
மிக முக்கியமாக ஆதித்த கரிகாலன், ராஜராஜசோழன், குந்தவை நாச்சியார் உள்ளிட்ட தனது பெயர குழந்தைகளை சிறுவயது முதலே வளர்த்தெடுத்து, தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டச்சொல்லி அறிவுறுத்தி, மேலும் அனைத்து சிவன் கோவில்களையும் கற்றளியாக மாற்றச்சொல்லி தன் பெயரனுக்கு ஆன்மீக - அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் வாழ்ந்து ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

இவர் கட்டிய சிவன் கோவில் இன்றளவும் நாகை மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - செம்பியன் மகாதேவி என்ற அவரது பெயரிலேயே அமைக்கப்பட்ட ஊரில் பெரியகோவில் அமையப்பெற்றுள்ளது. அங்கே இவருக்கு தனிச்சிலையும் உண்டு. இவர் பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர நாளில், ஊர்மக்கள் சீர்வரிசை எடுக்கும் பெருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

செம்பியன்மாதேவியார் பிறந்த அதே கேட்டை நட்சத்திரத்தில் தான் அடியேனும் பிறந்தேன் என்பதிலும், அவரது கணவர் பெயரின் பின்பாதி தான் என் பெயரும் என்பதிலும், அவரது பெயர் கொண்ட 'செம்பியன்மகாதேவி' என்ற ஊருக்கு அருகிலேயே தான் நானும் படித்து வளர்ந்தேன் என்பதிலும் கூட எனக்கு பெருமையே.

- இரா.ச.இமலாதித்தன்

05 மார்ச் 2016

கல்லணை கட்டிய இரும்பிடர்த்தலையன்!





'இரும்புத்தலை அகமுடையார்' வழித்தோன்றலான 'கரிகால சோழன்', ஆயிரம் அண்டுகளுக்கு முன் 'சோறுடைத்த சோழநாட்டு' விவசாய
பெருங்குடிகளின் நீர்மேலாண்மைக்காக உருவாக்கிய 'கல்லணை'யில் இன்றைய பொழுது கழிந்தது!

‪#‎இரும்புத்தலைஅகமுடையார்‬
‪#‎முற்காலசோழர்‬

10 செப்டம்பர் 2015

சோழர் யார்?

குறும்பர்(காடவர்+பல்லவர்)களை சோழமன்னன் இரண்டாம் கரிகாலன் போர் செய்து நாட்டை விட்டு துரத்தினானென இந்த பாடல் சொல்கிறது. அப்படியெனில் சோழர் யார்?