05 செப்டம்பர் 2020

சித்த மருத்துவத்தை புறக்கணிக்கும் அரசு!

Ayurveda, 
Yoga and Naturopathy,
Unani,
Siddha,
Homeopathy. 

மேலுள்ள இந்த ஐந்து மருத்துவமுறைகளுடைய முதலெழுத்துகளின் கூட்டே AYUSH என்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், சித்த மருத்துவத்தை வட ஹிந்தியர்கள் ஏற்பதில்லை. சித்தர்கள் கண்டறிந்த மருத்துவமுறைகளை பெரும்பாலும் தமிழிலேயே ஆவணப்படுத்தி இருப்பதால் கூட, சித்தர் மருத்துவமே மட ஹிந்தியர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். நீதிமன்றமே சொன்னது போலவே, AYUSH என்பதிலுள்ள S என்ற எழுத்தை நீக்கிவிட்டு, AYUH அமைச்சகமாக்கி விடலாம். 

AYUSH அமைச்சக கலந்துரையாடல் நிகழ்வில், ஹிந்தி தெரியாதவர்கள் வெளியேறலாமென சொல்லும் உயர் பதவிகளிலிருக்கும் மட ஹிந்தியர்களுக்கு ஹிந்தியை தவிர வேறொரு மொழியும் சரளமாக பேசத் தெரிவதில்லை. ஆங்கிலத்தை கூட ஹிந்தி போலவே பேசும் இயல்புடையவர்களுக்கு தமிழர் உட்பட தென்னகத்தாரை கண்டாலே தாழ்வுமனப்பான்மையால் தவிக்கின்றனர். அந்த தாழ்வான உளவியல் சிக்கலை, தங்களது அதிகாரத்தை கொண்டு, தமிழர்களை பழி தீர்த்து கொள்கின்றனர்.

பேஸ்புக் உள்பட அனைத்து சமூக இணைய தளங்களிலும், ஆளும் பாஜக அரசாங்கத்தின் அழுத்தத்தால் ஹிந்தியையே ஹிந்தியாவின் ஒற்றை மொழி போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்நாட்டின் பிரதமரான மோடி, மேடைக்கு மேடை தமிழிலக்கியங்களின் பாடல்களை சொல்லி பேசுவதால் மட்டுமே தமிழுக்கு பெருமை சேரப்போவதில்லை. சொல்வதொன்று செய்வது வேறொன்று என்பது போல, மீண்டும் மீண்டும் இந்நாட்டிலுள்ள பல தேசிய இனங்களின் மொழிகளை அழித்தொழித்து, ஹிந்தியை திணிக்கும் அணுகுமுறை கேவலமாக இருக்கிறது.

ஒரு மொழி உயிர்ப்போடு இருக்கும் வரையில் தான், அந்த மொழி பேசும் இனமும் வரலாற்றிலும் இருக்கும். தமிழர் என்ற இனமும், முன்பு போலவே இனிவரும் காலத்திலும் தனித்த அடையாளத்தோடு தாக்குப்பிடிக்க வேண்டுமெனில், தமிழ் மொழியும் உயிர்ப்போடு இருக்க வேண்டும். ஹிந்தியால் தமிழை அழிக்க முடியாது. ஆனால், ஹிந்தி பேசும் வட ஹிந்தியர்களால் தமிழ் ஒடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அதிகாரம் முழுக்க அவர்களிடமே இருக்கிறது.

ஹிந்தியா முழுக்க செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையென எதையுமே மாநில மொழிகளில் கூட சொல்ல முடியாதென சொல்லும் திமிர்த்தனமும், ஒருசில மாநிலங்களை தவிர வேறாருக்கும் ஹிந்தி தெரியாத போதும், ரயில்வே நிலையம், ஊர்ப்பெயர்ப்பலகைகள் உள்பட எல்லாவற்றிலும் ஹிந்தியை திணிக்கும் போக்குகள் கூட ஓர் எடுத்துக்காட்டு தான்.

எங்கள் தாய் தகப்பனின் இனிசியலை போடவிடாமல், எவனோ ஓர் ஆண்மையற்றவனை அப்பனாக்க முயற்சி செய்வதில் என்றைக்கும் பலன் கிடைக்க போவதில்லை. ஹிந்தியை படிப்பதோ, படிக்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம். அதை பற்றி இங்கே பேசவே இல்லை. ஹிந்தி திணிப்பையே சுட்டிக்காட்டிருக்கிறேன். ஹிந்தியல்ல, ஆங்கிலமே உலக மொழி. என்னளவில், உலகளாவிய உச்சம் தொட, தாய்மொழி தமிழைத் தவிர ஆங்கிலம் போதும் என்பது என் நிலைப்பாடு. தேவையில்லாமல் ஹிந்திக்கு முட்டு கொடுத்து நேர விரயமாக்க வேண்டாம்.

- இரா.ச. இமலாதித்தன்
22 ஆகஸ்ட் 2020

#ஹிந்தி #AYUSH #தமிழ் #சித்தமருத்துவம் #தமிழர் #ஹிந்தியா