இந்த வார அரசியல்!

வைகோ மாதிரி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டாலே, பொய்யான மாயையை இந்த தேர்தலுக்கு பிறகும் கொஞ்ச காலம் சிலர் தக்க வைத்து கொள்ள முடியும்!

#

ஓரிரு நாட்களில் அதிமுகவில் மேலும் சில வேட்பாளர் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது.

#

கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் வாசற்கதவு திறக்கப்படுமாயென காத்திருந்த கதையெல்லாம் இன்றைக்கு மறந்து போய் விடுமா என்ன? தேர்தல் முடிந்த பின்னால் ஓட்டுகளின் எண்ணிக்கை சொல்லிவிடும், சிலரது பல(வீன)த்தை!

காத்திருக்கிறேன்...

#

ஒருவேளை திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றால், 'எங்கள் ஓட்டுகளால் தான் அவர் வெற்றி பெற்றார். எங்களிடம் கை கால்களில் விழுந்து கெஞ்சியதால் ஓட்டு போட்டோம்'ன்னு சொல்வாய்ங்க. மாறாக, கருணாஸ் தோற்றுவிட்டால், 'எங்களுக்கு சீட் கொடுக்காத தொகுதியில் அகமுடையானை ஜெயிக்க வைத்துவிடுவோமா?!'ன்னும் சொல்வாய்ங்க.
போலியான சாதி அமைப்புகளின் உண்மை தன்மையை, நிச்சயமாக கருணாஸ் இந்த தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார்.

மரு.சேதுராமனுக்கு சில கேள்விகள்!

மாமன்னர் மருதுபாண்டியர் பிறந்த நரிக்குடி முக்குளத்திற்கு என்ன செய்தார், முக்குலத்தின் காவலரான சேதுராமன் அகமுடையார்?! குறைந்த பட்சம் மணிமண்டபம் கட்டலாமே? ஏன் தயக்கம்? வறண்ட சிவகங்கை என்பதாலா?!

சென்னையில் மருதுபாண்டியர் சிலை வைக்க நடவடிக்கை எடுப்பாரா, அகமுடையாராக பிறந்த சேதுராமன்?

சிவகங்கையில் சிலை வைக்கவோ, காளையார்கோவில் நினைவிடத்தை புணரமைக்கவோ முடியாத சேதுராமன், தானொரு அகமுடையார் என இப்போது சொல்லிக்கொள்வது ஏன்?

அகமுடையார் வேட்பாளர் பட்டியல் 2016

234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அகமுடையார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்ற போதிலும், வேட்பாளராக களமிறங்குவோரில் 90% பேருக்கு நிச்சய வெற்றி கிடைக்குமென்பதே நேரடி கள நிலவரம். அகமுடையார்கள் 60 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் ஏறத்தாழ 40 தொகுதிகளில் மட்டுமே அகமுடையார் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆட்சியமைக்கும் வல்லமையுள்ள திமுக - அதிமுக என்ற இரு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களில் 10% கூட அகமுடையார் இல்லை என்பது தான் குறிப்பிடதக்க விசயம்.

அதிமுக கூட்டணி:- (08 / 234)

அதிமுக:

01. திருவண்ணாமலை - பெருமாள்நகர் கே.ராஜன்
02. கலசபாக்கம் - வி.பன்னீர்செல்வம்
03. போளூர் - சி.எம்.முருகன்
04. காட்பாடி - எஸ்.ஆர்.கே.அப்பு
05. கும்பகோணம் - ரத்னா
06. திருச்சுழி - கே.தினேஷ்பாபு
07. வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியம்

புலிப்படை:

01. திருவாடனை - சேது.கருணாஸ்

-----------

திமுக கூட்டணி:- (15 / 234)

திமுக:

01. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
02. திருக்கோவிலூர் - பொன்முடி
03. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
04. வேலூர் - ப.கார்த்திகேயன்
05. போளூர் - கே.வி.சேகரன்
06. பேராவூரணி - என்.அசோக்குமார்
07. கும்பகோணம் - க.அன்பழகன்
08. திருவள்ளூர் - வி.ஜி. ராஜேந்திரன்
09. சேப்பாக்கம் - ஜெ.அன்பழகன்
10. தி.நகர் - என்.வி.என்.கனிமொழி

காங்கிரஸ்:

01. கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்
02. சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்
03. வேதாரண்யம் - பி.வி.ராஜேந்திரன்
04. நன்னிலம் - எஸ்.எம்.பி.துரைவேலன்
05. மயிலாப்பூர் - கராத்தே தியாகராஜன்

-----------

மாற்றம் - முன்னேற்றம் - ஜெயலலிதா!ஒரே மேடையில் வேட்பாளர்கள்...

சூறையாடப்படும் தமிழ்!
அன்று, யாழ் நூலகத்தை 'சிங்களவன்' தீயிட்டி சூறையாடினான். இங்கு, திருக்குறள் மன்ற நூலகத்தை 'திராவிடன்' சூறையாடுகிறான்.
'நாம் தமிழர்' என உணராத வரை, நாம் இனவழிப்பு செய்யப்பட்டு கொண்டே இருப்போம்...

மற்றுமொரு புரட்சித்தலைவி!மற்றுமொரு புரட்சித்தலைவி, திருச்சியில் உருவாகி விட்டார்!
நடிகைகள் நாடாள்வதில் தவறில்லை; வருங்கால முதலமைச்சர் செல்வி. நமிதா அம்மையாருக்கு வாழ்த்துகள்!

கோவில்களுக்கு பின்னுள்ள அரசியல்!-01-

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் 'சடாயு குண்டம்' என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இது தவிர, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரையின் முனையின் 'ராமர் பாதம்' என்ற உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும், அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
திருமறைக்காடு என்ற எங்கள் ஊரையெல்லாம் இந்த வடக்கத்திய மேப்பில் காணவில்லையே?! இதுல எது உண்மை? எது பொய்?

-02-

முகாலயர்களின் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சிவன் கோவில்களை ஆக்கிரமித்து தான் மசூதிகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ, அதற்கு நிகரான மற்றுமோர் உண்மை என்னவெனில், முகலாயர் காலத்திற்கு முன்பாக வே கணக்கிலடங்கா சமண கோவில்களை ஆக்கிரமித்து தான் பல சிவன் கோவில்களும் கட்டியெழுப்பப்பட்டன என்பது தான்!

- இரா.ச.இமலாதித்தன்

இது செம்ம ட்விஸ்ட்டா இருக்கே!
அமைப்பின் பெயரில் முக்குலதோரும் இல்லை; புலிப்படை என்பது சாதிய அமைப்பும் இல்லை.

இந்திர விழா! - 2016

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி'

- திருக்குறள்

வேளாண்மை இருபெரும் பிரிவுகளாகவே பன்னெடுங்காலமாய் மருத நிலத்தில் இருந்து வந்தது. ஒன்று உழுவித்த வேளாளர், மற்றொன்று உழுதுண்ட வேளாளர். ஆதி நிலமான குறிஞ்சியிலிருந்து முல்லையும், முல்லையிலிருந்து ஒரே காலக்கட்டத்தில் ஒருபுறம் நெய்தலும், மறுபுறம் மருதமும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னாலே தான் மனிதனின் வளர்ச்சியே உருவெடுத்தது. அப்படிப்பட்ட பெருந்திணைகளில் ஒன்றான மருதத்தின் கடவுளாக போற்றக்கூடிய இந்திரனை, உழுவித்த வேளாளர்களான அகமுடையார் போன்ற சமூகத்தினரும் போற்றி வணங்கி இருந்திருக்க கூடும். ஏனெனில் '...கணத்ததோர் அகமுடையார், மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினரே!' - பழங்நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் இந்த மொழியாடலில் கூட கணம் என்பது காவலையும், வேள் என்ற பதத்தையும் தான் குறிப்பதாக இலக்கிய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த வேள், கணம் என்ற ஆய்வே அகமுடையார்களின் வேளாண் - காவல் போன்ற துறைகளை பற்றி மிக நீண்ட வரலாற்றை மீட்க உதவுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவு திருநாளில் சோழாநாடான (எங்கள் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார் என்ற) காவிரிபூம்பட்டிணத்தில், 'இந்திர விழா' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அது பலகாலம் விடுபட்டு, இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
ஏழாம் ஆண்டாக இம்முறை பூம்புகார் - சாயவனம் பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திர விழாவில், அடியேனும் இன்று கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டோடு, கோவிலெங்குமுள்ள இறையுருவ சிலைகளுக்கெல்லாம் அகல் விளக்கேற்றி சிவன் - முருகனுக்கு அர்ச்சனையும் செய்து, இந்திரனையும் வழிபட்டு வந்த இந்நாள் எனக்கு மற்றுமொரு சிறப்பான நாளாகவே அமைந்தது. விவசாயம் சார்ந்த குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்தேன் என்ற பெருமையையே, இதுபோன்ற பெருவிழாக்களே எனக்கு உணர்த்துகிறது.

உழுதுண்ட - உழுவித்த வெள்ளாளர்களான அனைத்து விவசாய பெருங்குடியினருக்கும், 'இனிய இந்திர விழா பெருநாள் வாழ்த்துகள்!'

- இரா.ச. இமலாதித்தன்

ஜெயலலிதா பார்வையில் தமிழர்கள்!சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்து கொண்டிருந்த போது, "போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள்" என கூறிய ஜெயலலிதாவிடம், உங்கள் தேர்தல் பரப்புரையை பார்க்க வந்த நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் இறந்துள்ளனரே?! என கேள்வி கேட்பதே வீண் வேலை தான். ஒருவேளை இதையே விமர்சனமாக சொல்லி கேள்வி கேட்டாலும் பதில் இப்படியாகத்தான் இருக்கும்.

"வெயிலின் தாக்கத்தால் அண்டை மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; ஆனால் நான் தலைமை வகிக்க என் தலைமையிலான ஆட்சியில் இதுவரை நான்கு பேர்தான் இறந்துள்ளனர். எனவே, இந்த பொற்கால ஆட்சி தொடர, நான் ஹெலிகாப்டரில் பறந்து வந்து, உங்கள் சகோதரியாய் மேடையில் பத்துக்கும் மேற்பட்ட ஏசிக்களின் உதவியுடன் தனியாளாய் அமர்ந்திருந்து, உங்களையெல்லாம் கொளுத்தும் வெயிலில் அமர வைத்தாலும், உயிரிழப்பு குறைவாகத்தான் இருக்குமென ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஏனெனில் நான் சொன்னதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன் என்பதை நீங்கள் சென்னை வெள்ளத்தின் போதே நன்றாகவே அறிந்திருப்பீர்கள்."

தெறி!அகமுடையார்களான, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அட்லி உள்ளிட்ட இம்மூவேந்தர்களின் கூட்டணியில் உருவான 'தெறி' படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே படம் பிடித்து போனது. ஒவ்வொரு முறையும் துப்பாக்கி போலவே எல்லா படங்களையும் விஜயால் தர முடியாது; அப்படி அவர் அது மாதிரியான படங்களை தொடர்ச்சியாக தந்தால், விஜய் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறாரென இணையதள நக்கீரன்கள் குற்றம் சுமத்துவார்கள். பொதுவாக விஜய் படத்தின் டீசர் வந்தாலே, அதையே திரைவிமர்சனம் போல பல்வேறு மீம்ஸ் உருவாக்கி தரம் தாழ்ந்து விமர்சித்து சுகம் காணும் கூட்டம் அதிகமாகி வரும் இச்சூழலில், சேகுவேரா படம் பதித்த டீசர்ட்டை அணிந்து கொள்வது போலவே விஜயை கிண்டல் செய்வதும் கூட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

விஜய் - அஜித் என்ற ஒப்பீட்டுளவில், தெறியை வீரம் படத்தோடு ஒப்பிட்டால், என் பார்வையில் தெறி நூறு மடங்கு வீரத்தை விட சிறப்பாக தான் இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர தகுதியுள்ள நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த திரை இலக்கணத்தின் படியே தெறி படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்களுக்கான இந்த படத்தில், காமெடி - செண்டிமெண்ட் - ஃபைட் - டான்ஸ் - லவ் என அனைத்து மசாலாக்களையும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் அட்லி. மேலும் வசனம் - ஒளிப்பதிவு - எடிட்டிங் - பின்னணி இசையென படத்திற்கு முக்கியமான எல்லா துறையிலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஒரு டீமை கை வசம் வைத்துள்ள இயக்குனர் அட்லி பாரட்டுக்குரியவர்.

தெறியில் 'மருதமலை' வடிவேலுக்கான இடத்தை மொட்டை ராஜேந்திரன் திறம்பட நடித்து வைகைபுயலின் இடத்தை சமன் செய்திருக்கிறார். ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும் போதே, இது ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பா - மகள், கணவன் - மனைவி, அம்மா - மகன் என பல உறவுகளை விஜயே வெவ்வேறு பரிமாணங்களில் பளிச்சென வெளிப்படுத்தி, படம் நெடுகிலும் தெறிக்க விட்டிருக்கிறார். வழக்கமாக, ஃபைட் - காமெடி - பஞ்ச்களுக்கு மட்டுமே கைத்தட்டல் வருமென நினைத்திருந்தாலும், இவை அல்லாத பல சீன்களுக்கும் கண்ணீருடன் கூடிய கைத்தட்டல்களும் திரையரங்கத்தை திணறடித்தன.

இங்கே இணையத்தில் எவ்வளவு வன்மத்தோடு விமர்சனம் வைத்தாலும், ஒரு படத்தை வெற்றியடைய வைக்கும் வல்லமையுள்ள தாய்க்குலங்களும், குழந்தை பட்டாளங்களும், தெறியை மிகப்பெரிய வெற்றி பெற வைப்பார்களென நம்புகிறேன்!

குறிப்பாக, குறுகிய காலத்தில் ஐம்பதாவது படத்தை தொட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட தெறிக்கு பின்புலமாக இருந்த மூவரோடு, பக்கபலமாக இருந்து தெறிக்க விட்டிருக்கும் இளைய தளபதி விஜய்க்கும் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார்!

சேர்வை பட்டம் 8 சாதிகளுக்கு உண்டு; பிள்ளை பட்டம் 80 சாதிகளுக்கு மேல் உண்டு; தேவர் பட்டம் 3 சாதிகளுக்கு உண்டு; முதலியார் பட்டம் 2 சாதிகளுக்கு உண்டு; இந்த அத்தனை பட்டங்களும் அகமுடையாருக்கு உண்டு. இந்த அடிப்படை வரலாற்று அறிவே துளியும் இல்லாமல், 'யாரெல்லாம் அகமுடையார்?' என வரையறுக்கும் சிலருக்கு பதில் அளிக்காமலே விலகி விடலாமென தோன்றுகிறது. ஆனால் பதில் நம்மிடம் இல்லையென அவர்கள் நினைத்து விட கூடாதென்பதாலும், அவர்களின் கருத்து தான் சரியென தவறாக புரிந்து கொண்டுவிட கூடாதென்பதாலும் தான் சில இடங்களில் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

முழுமையான வரலாறே தெரியாமல் அகமுடையார் யார் என சொல்ல யாருக்குமே அறுகதை இல்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களது சுய தேவைக்காகவும் சாதியை வரையறை செய்யும் சிலரால் தான், ஒட்டுமொத்த வரலாறும் பாழாகிறது. அகமுடையாருக்கு பட்டங்கள் பலவாகினும், சாதி ஒன்றுதான். அடியேன், தேவர் பட்டமுள்ள அகமுடையார் சாதியை சேர்ந்தவன் என்பதையும், தேவர் என்று ஒரு சாதியே இல்லை என்பதையும், சிலருக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

- இரா.ச. இமலாதித்தன்

கருணாஸூக்கு ஒரு புரிதல் வரலாம்!

இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான கருணாஸுக்கு சில உண்மைகள் புரியவரும்!

01. முக்குலத்தோர் என்ற பெயரில் அகமுடையார் ஏமாற்றப்படுவது.

02. அகமுடையார்களை முக்குலத்தோர் என்று சொல்லும் மற்ற இரு குலத்தோரே, அரசியலில் வீழ்த்துவது.

03. முக்குலத்தோர் என்ற கட்டமைப்பே, கள்ளர் - மறவர் நலனக்கானது.
துரோகத்தின் வெளிப்பாட்டை கருணாஸ் அகமுடையார் புரிந்து கொள்ள இந்த தேர்தல் தான் ஒரு கருவி.

- இரா.ச. இமலாதித்தன்

காவிரித்தாயின் கோரத்தாண்டவம்!


'காவிரித்தாய்க்கு பாராட்டு விழா' எடுத்த பொறம்போக்குகளின் நிலங்களில் ஹெலிபேடு அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலங்களை கூட ஆக்கிரமித்து தார் சாலையையும், சுற்று வட்டாரத்திலெல்லாம் கான்கிரீட்டையும் போட்டுக்கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா சுற்றுப்பயணம் சென்ற இடங்களில் விவசாய நிலங்களை ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து அழித்ததை எந்த பசுமை தீர்ப்பாயமும் கண்டு கொள்ளாது. ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை காண வந்த இடத்தில் நடைபெற்ற பல உயிரிழப்புக்காக எந்த மனித உரிமை ஆணையமும் வாயை திறக்காது. இதுதான் ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு அடித்தளமாகவும் அமைகிறது.

காவிரியின் மைந்தனாக ஒருங்கிணைந்த தஞ்சையான நாகையில் ஒரு விவசாய பெருங்குடியில் பிறந்த என்னைப்போன்ற பலருக்கு, ஹெலிபேடுக்காக ஏக்கர் கணக்கில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து அம்மண்ணின் அடிப்படை வளத்தையே அழித்தொழித்த ஜெயலலிதா, என்றைக்குமே அந்நியராகத்தான் தெரிவார். ஒருபோதும் காவிரித்தாயாக தெரிய மாட்டார். காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்; அந்த காலமும் நிச்சயம் வரும்.

- இரா.ச. இமலாதித்தன்

புத்தாண்டு வாழ்த்துகள்!தமிழ் கடவுளான சேயோன் என்ற முருகனை, சுப்ரமண்யனாக்கினார்கள் என்பதாலும்; தமிழ் கடவுளான மாயோன் பெருமாளை, பாலாஜி ஆக்கினார்கள் என்பதாலும்; அவர்களை வணங்குவதே தவறென சொல்வதை ஏற்கும் மனநிலை எனக்கில்லை. உருமாற்றம் பெற்ற பெயர் எதுவாகினும் ஆதியை பாதியில் விட மனமில்லை.

'மன்மதனை' மனமகிழ்வோடு வழியனுப்பி, 'துர்முகி'யை இன்முகத்தோடு வரவேற்கும் இனிய நாளான சித்திரை முதல்நாளான, தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!


அம்பேத்கர் ஜெயந்தி!சாதிய - அரசியல் - சமூக காரணங்கள் பல பின்புலமாக இருந்தாலும் கூட, பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இந்தியாவெங்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே தலைவரின் சிலையாக அம்பேத்கார் இருக்கிறாரென்பதை உணர்கையிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடியும். எந்த அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்க முடியாத பெருந்தலைவராக சமகாலத்திலும் விளங்கி வரும், 'அம்பேத்கர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

அரசியலில் அகமுடையார் துரோக வரலாறு!இந்த சுவரொட்டியில் நட்சத்திர குறியீட்டுக்குள் இருக்கும் அந்த ஆறு ⁠⁠⁠எழுத்துகளுக்கு பின்னாலுள்ள அகமுடையார் துரோக வரலாறு தெரியுமா?!

”ரா - மூ - ரா - ம - வே - த“

இந்த ஆறு எழுத்துகளும் ஒவ்வொருவரின் பெயரின் முதலெழுத்துக்கள். அந்த ஆறு பேரும் தான் மதுரையின் மாவட்ட செயலாளர்கள். அகமுடையார்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, அகமுடையார்களால் அடைக்கலமும் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னாட்களில் ஒட்டுமொத்த அகமுடையார் சமுதாயத்தையே அரசியலில் ஓரங்கட்டிய நன்றி மறந்தவர்களின் முதலெழுத்து.

01.

’ரா’ - செல்லூர் ராஜூ - (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பழக்கடை பாண்டி (அகமுடையார்).

02.

’மூ’ - மூர்த்தி (கள்ளர் - அம்பலம்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- தா.கிருட்டிணன் & டி.ஆர்.பாலு (அகமுடையார்).

03.

’ரா’ - ராசன் செல்லப்பா (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- வக்கில் சுந்தரபாண்டியன் (முதல் அதிமுக மதுரை மா.செ.) அகமுடையார்.

04.

’ம’ - மணிமாறன் (சேடப்பட்டி முத்தையா மகன் - மறவர்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் (அகமுடையார்).

05.

’வே’ - வேலுச்சாமி (மறவர்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பொன்.முத்துராமலிங்கம் (அகமுடையார்).

06.

’த’ - தளபதி (நாயுடு) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பொன்.முத்துராமலிங்கம் (அகமுடையார்).
-

இந்த ஆறுபேரும் தான் தற்போது மாவட்டச் செயலாளர்கள் என்பதும், அதிலும் ஒருவர் அமைச்சர் என்பதும் குறிப்பிடதக்க விசயம். அகமுடையார்களின் தயவினால் சுகபோகமாய் பதவில் இருக்கும் இந்த ஆறுபேரும், அரசியலில் தங்களை வளர்த்தெடுத்த அகமுடையார்களை ஓரங்கட்டி வைத்துள்ளனர் என்பது தான் துரோகத்தின் உச்சம். மேலும், எண்ணிக்கையில் அகமுடையார் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அகமுடையாருக்கென ஒரு சிறு பதவி கூட கிடைத்துவிட கூடாதென்பதில் மிகவும் தெளிவாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் புரியாத அகமுடையார்களோ, அம்மாவென்றும், கலைஞரென்றும் மாற்றானை தலைமை பதவியில் வைத்து அரசியலில் ஏமாற்றுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

”அகமுடையார் ஓட்டு அந்நியருக்கு இல்லை!” என்ற நிலையை அகமுடையார்கள் எடுக்கும் வரையிலும், அரசியல் அதிகாரத்தில் அகமுடையார் ஏமாற்றப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

இனியாவது அகமுடையார் பேரினம் சிந்திக்குமா?!

- இரா.ச.இமலாதித்தன்

மாமன்னர்களின் சிலை சேதம்!

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்தவர்கள், நிச்சயமாக முக்குலத்தோருக்கு எதிரான மாற்று சாதிக்காரர்கள் இல்லை. அது முக்குலத்தோர் என அரசியல் செய்யும் ஈனபுத்தி கொண்ட துரோகிகளால் தான் மருதுபாண்டியர்களின் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவே உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளது.

அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பை விட்டு வெளியேறுவதால், அது முக்குலத்தோர் என அரசியல் செய்பவர்களுக்கு பெருத்த அடியாக இருப்பதால் தான் இம்மாதிரியான கேவலமானதொரு செயலில் இவர்கள் இறங்கிருக்கிறார்கள்.
என்னமாதிரியான கீழ்த்தரமான செயல்களில் இறங்கினாலும், முக்குலத்தோர் என அரசியல் செய்யும் துரோகிகளினால் அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது; இதன் மூலம், மென்மேலும் அகமுடையார்களின் ஒற்றுமை பலமடையத்தான் செய்யும் என்பதை இனி துரோகிகள் புரிந்து கொள்வார்கள்.


 இந்திய போராட்டத்தின் விடிவெள்ளியாக, உலகிலேயே முதன்முறையாக வெள்ளையனுக்கு எதிராக திருச்சி - திருவரங்கத்தில் 'ஜம்புதீவு' போர் பிரகடனத்தை வெளியிட்டு, 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பை அன்றைக்கே உருவாக்கிய மாமன்னர் மருது பாண்டியர்களை, வெறும் சமுதாய தலைவர்கள் என திரித்து பிரசுரித்த 'தமிழ் முரசு' பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கண்டன போஸ்டர்!மருதுபாண்டியர் சிலைகளை சேதப்படுத்திய இழிபிறவிகளை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், 'அகமுடையார்களை பிரிக்கிறானுங்க'ன்னு புலம்பும் போதே இவர்கள் நோக்கம் எதுவென பலருக்கும் புரிந்திருக்கும்.


மருதுபாண்டியரின் சிலையை உடைத்து விட்டு, அந்த பழியை பட்டியல்சாதி மக்கள் மீது போடலாமென நினைத்த தப்பு கணக்கு பலிக்கவில்லை!


மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்த, முக்குலத்து துரோகிகளை கைது செய்!


மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலையை உடைத்த கள்வர்களை கைது செய்!
இதை விட வெளிப்படையாக கண்டிக்க முடியாது. இனியும் அந்த கள்வர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் முக்குலத்தோர் என சொல்லிக்கொண்டு இருந்தீர்களேயானால் துரோகத்தால் அகமுடையார்கள் வீழ்த்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. துரோகிகளின் கூட்டமைப்பான முக்குலதோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பில் இருந்து வெளியேறி, அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!
வாக்காளரும் - முதல்வர் வேட்பாளரும்!எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைக்கும் ஜெயலலிதாவோ, குளிரூட்டப்பட்ட காற்றோடு மேடையில் அமர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். ஆனால், முதல்வர் பதவியை தர காத்திருக்கும் தொண்டர்களோ கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் புறக்கணிக்கப்படும் அகமுடையார் சமூகம்!

கள்ளர் கட்சியான அதிமுகவில் அகமுடையாருக்கான அங்கீகாரமில்லை. முக்குலத்தோர் என்ற போர்வையில், பெரும்பான்மை சமூகமான அகமுடையார்களை புறக்கணிக்கும் அதிமுகவின் தலைமை, இனி அகமுடையார்களின் வாக்குகளும் தேவையில்லையென அறிவிக்க தயாரா?
அகமுடையார் வாக்கு அந்நியருக்கும் இல்லை! அதிமுகவுக்கும் இல்லை!


தமிழகத்திலேயே அதிக கிளைகளை கொண்ட அமைப்பாக விளங்கிய "தேவர் பேரவை"யின் நிறுவனர், மரு. வி.இராமகிருஷ்ணதேவர் பிறப்பெடுத்த அந்த அகமுடையார் இனத்தை தேர்தலில் ஒதுக்கியதற்கு வேற யார் காரணமாக இருக்க முடியும்? சசிகலாவை தவிர!

படிப்படியாக மதுவிலக்கு?!
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்! - ஜெயலலிதா

இந்த 'கோவன்'ன்னு ஒரு நாட்டுப்புற பாடகரை 'டாஸ்மாக்' பற்றி பாட்டு எழுதி பாடினதுக்காக தேச துரோக வழக்கெல்லாம் போட்டீங்களே! அது எத்தனையாவது படி?

முக்குலத்தோர் அரசியல்!

இத்தனை வருடங்களாக அதிமுகவை முக்குலத்தோர் கட்சி, தேவர் கட்சியென சொல்லிக்கிட்டே இருந்ததன் விளைவு, கருணாஸ் தவிர வேறெந்த முக்குலத்தோர் அமைப்புகளுக்கும் இதுவரையிலும் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக கூட்டணியில் இருந்த எந்த முக்குலத்தோர் கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் இடமில்லை என்பதற்கான மூலக்காரணமே, அதிமுகவிற்கு முக்குலத்தோர் கட்சியென்ற பிம்பத்தை உருவாக்கியதனால் தான் என்பதை இதுவரை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

மேலும், ஜெயலலிதாவின் பார்வையில், முக்குலத்தோர் அனைவருமே நம் பக்கம் இருக்கையில், தனியாக ஏன் சாதி அமைப்புகளுக்கு இடம் தர வேண்டுமென்று கூட நினைத்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அதிமுக எங்க அமைப்போட தலைவரை அவமதித்து விட்டதென சொல்லவதையெல்லாம் ஜெயலலிதா கண்டுகொள்ளவே போவதில்லை. எனவே, இருக்கின்ற சில நாட்களிலாவது நல்லதொரு முடிவை எடுத்து வெற்றிவாய்ப்புள்ள கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதுதான் விவேகமென முக்குலத்தோர் அமைப்பின் தலைவர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா?!

விழித்தெழு தமிழா!திராவிடம் என்றும், தமிழ் என்றும் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் இந்த நான்கு கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரே ஒற்றுமை 'தெலுங்கர்/வடுகர்' என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும்?!

தமிழா! உன் 'தலைவியின் /தலைவனின்' தாய்மொழி தமிழா?

முக்குலத்தோர் என்ற போர்வையில் வீழும் அகமுடையார்!

அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை கள ஆய்வு செய்தபின்னால், 60 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக அகமுடையார் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதைத்தவிர 234 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயம் செய்யும் இடங்களில் 40 தொகுதிகளில் அகமுடையார் ஒட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளையெல்லாம் 'முக்குலத்தோர் / தேவரினம்' அதிகமுள்ள தொகுதியென சொல்லிக்கொண்டு, தங்களது சாதி தொகுதிகளை மட்டும் 'கள்ளர், மறவர்' அதிகமுள்ள தொகுதிகளென சொல்லிக்கொள்ளும் ஈனப்புத்தியை என்னவென்று சொல்வது? அப்படியெனில் கள்ளர் - மறவர்களின் நோக்கம், அகமுடையார் என்ற பெயர் கூட வெளியே வரக்கூடாது என்பதுதானா?

இருகுலத்தோரின் அஜென்டா இதுதான்...

கள்ளர் - மறவர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் கூட ஒரே இடத்தில் குழுமி வாழ்வதால் பெரும்பான்மை போல ஒரு மாயையை உருவாக்கி கொள்வது; அடுத்து, உண்மையாகவே பெரும்பான்மையாக உள்ள அகமுடையார்கள் தமிழகமெங்கும் பரவலாக வாழ்வதால் அவர்கள் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்வது. அதற்காகவே அக்டோபர் 30ம் தேதியை பயன்படுத்தி கொள்வது. கடைசி வரையிலும், அரசியல் அதிகாரத்தை அகமுடையார்களுக்கு கிடைக்கவிடாமல், இருகுலத்தோரும் ஏகபோகமாய் அனுபவிப்பது.

இப்படிப்பட்ட உயரிய நோக்கங்களோடு, அகமுடையார் முதுகிலேயே பல வருடங்களாக பயணித்து பழக்கப்பட்ட இருகுலத்தோரின் பயணம், என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். அன்று அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.

வாழ்க அகமுடையார் ஒற்றுமை!

- இரா.ச. இமலாதித்தன்

அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள்!

’அகமுடையார்’ பெரும்பான்மையாக உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இந்த 60 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளை கொண்டுள்ள பெரும்சமூகமான அகமுடையாருக்கு இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. இது தவிர இன்னும் 80 தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை அகமுடையார் சமூகம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விசயம்.

1. திருவண்ணாமலை
2.ஆற்காடு
3.வேலூர்
4.திருப்பத்தூர்
5.சோளிங்கர்
6.போளூர்
7.கள்ளக்குறிச்சி (தனி)
8.ஆரணி
9.தஞ்சாவூர்
10.பட்டுக்கோட்டை
11.கும்பகோணம்
12.திருத்துறைப்பூண்டி (தனி)
13.வேதாரண்யம்
14.சிவகங்கை
15.மானாமதுரை (தனி)
16.மதுரை வடக்கு
17.மதுரை மேற்கு
18.திருமங்கலம்
19.சோழவந்தான் (தனி)
20.இராமநாதபுரம்
21.திருச்சுழி
22.சூலூர்
23.வேளச்சேரி
24.காட்பாடி
25.குடியாத்தம் (தனி)
26.செங்கம் (தனி)
27.கலசப்பாக்கம்
28.விழுப்புரம்
29.ரிஷிவந்தியம்
30.மன்னார்குடி
31.பேராவூரணி
32.திருவாரூர்
33.ஆத்தூர்
34.திருப்பத்தூர்-சிவகங்கை
35.திருப்பரங்குன்றம்
36.பெரியகுளம் (தனி)
37.போடிநாயக்கனூர்
38.திண்டுக்கல்
39.அறந்தாங்கி
40.முதுகுளத்தூர்
41.வேப்பனஹள்ளி
42.பெண்ணாகரம்
43.மேட்டூர்
44.திருப்பூர் வடக்கு
45.சிங்காநல்லூர்
46.பழநி
47.நெய்வேலி
48.திருவிடைமருதூர் (தனி)
49.பாபநாசம்
50.கந்தர்வகோட்டை (தனி)
51.காரைக்குடி
52.உசிலம்பட்டி
53.ஆண்டிபட்டி
54.கம்பம்
55.சிவகாசி
56.காஞ்சிபுரம்
57.பரமக்குடி (தனி)
58.திருவாடானை
59.வாசுதேவநல்லூர் (தனி)
60.வில்லிவாக்கம்

சசிகலாவின் சாதி ஆளுமை!


சசிகலாவின் ஆதரவால் அதிமுகவில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்!
கள்ளர்களுக்கு, சாதி உணர்வுள்ள சசிகலா இருப்பது போல, அகமுடையார்களுக்கு என யாரும் உணர்வுள்ள அரசியல் ஆளுமைகளாக இதுவரை உருவாகவில்லை. இந்த ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் சசிகலாவின் சாதி உணர்வை கண்டு ஆச்சர்யபட வேண்டியதாக இருக்கிறது.

வாழ்த்துகள்!

கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவர் கருணாஸ் அவர்களை தேவரே இல்லையென மற்ற முக்குலத்தோர் அமைப்புகளெல்லாம் அவர் அகமுடையார் என்ற ஒற்றை காரணத்தால் பொய் பரப்புரை செய்தார்கள். இன்றைய நிலையில் தெருவுக்கு தெரு முக்குலத்தோர் கட்சிகள் நாளுக்கொன்றாக உருவாகிகொண்டே தான் இருக்கிறது. அதை தவிர அ.இ.பா.பி., மூ.மு.க., அ.இ.மூ.மு.க., அ.இ.மு.பா., ப.தே.க., என பல அமைப்புகள் எப்படியும் ஆளுக்கொரு சீட் ஜெயலலிதாவிடம் கிடைக்குமென வருட கணக்கில் நம்பிக்கொண்டிருக்க, அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்த கருணாஸ், திருவாடானை தொகுதியை தனதாக்கி கொண்டுள்ளார்.

கருணாஸ் வெற்றி பெறுகிறாரோ, தோல்வியடைகிறாரோ, அதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்யவே தேவையில்லை. ஆனால், இத்தனை வருடங்களாக ’வேலுநாச்சியாரின் மறுபிறப்பே’யென ஜெயலலிதாவிற்கு துதிபாடி அம்மா அம்மாவென ஒரு தொகுதியாவது கிடைக்குமென ஆசை ஆசையாய் இருந்த அக்டோபர் மாத தலைவர்களின் கனவில் கல்லெறிந்து, தான் யாரென நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.
இப்போது கூட கருணாசை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கான காரணம் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் என்பதாலும், சிறந்த பேச்சாளர் என்பதாலும் தான். அதன் பிறகுதான் கருணாசின் சாதிய பின்புலம்.

சென்றமுறை நடிகர் சங்க தலைவராக இருந்த, சரத்குமாரின் இடத்தை தான் கருணாஸ் சமன் செய்ய போகிறார். கருணாஸ் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவரது சாதி மக்களுக்கு பெரியளவிலான எந்த பயனும் இருக்கபோவதில்லை என்றாலும் கூட, இத்தனை வருடங்களாக மல்லுக்கட்டி அதிமுகவிற்கு முட்டு கொடுத்து கொண்டிருந்த முக்குலத்தோர் தலைவர்களின் இடத்தை தனதாக்கி கொண்ட கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அரசியல் அநாதைகளாக்கப்படும் அகமுடையார்!


அதிமுக முக்குலத்தோர் கட்சியென்றும், நாமெல்லாம் முக்குலத்தோரென்றும் முட்டு கொடுத்து கொண்டிருக்கும், அகமுடையார் சாதியில் பிறந்த சில மேதாவிகளுக்கு, அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கு மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதும், அதற்கடுத்து மறவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கிருப்பதையும் பார்த்த்தாவது இனி சூடுசொரணையெல்லாம் வருமாயென தெரியவில்லை.

கள்ளர் - மறவர் - அகமுடையார் என்ற மூன்று சாதிகளில், மூன்றில் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் அகமுடையாருக்கு ஒருசில தொகுதிகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்பதையும், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் 60 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளை கூட கொடுக்க மனமில்லாமல், அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையும் கள்ளர் - மறவருக்கு கொடுத்திருக்கும் சூழச்சியையெல்லாம் இனியாவது புரிந்து கொள்வீர்களா?

அதிமுக - முக்குலத்தோர் கட்சி இல்லை; அது கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோருக்கான கட்சி என்பதை புரிந்துகொள்ளாமல், இன்னமும் தன் சுயநலத்துக்காகவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காகவும் தன்னை முக்குலத்தோர் என சொல்லிக்கொள்ளும் அகமுடையார் சாதியை சேர்ந்த கோடாரி காம்புகளால், கெடப்போவது குலம் மட்டுமில்லை;
அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரமும் தான்! அரசியலுக்காக அகமுடையார் முதுகில் சவாரி செய்ய உருவாக்கப்பட்ட முக்குலத்தோர் என்ற பொதியை இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான்,அகமுடையார் சுமப்பது? அகமுடையாரின் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்யும் கள்ளர் - மறவரை கீழே இறக்கி விடாதவரை அகமுடையாருக்கான அடையாளம் ஒவ்வொன்றாய் அழிக்கப்பட்டே தீரும். இந்த நிலையே இனிவரும் காலங்களில் தொடர்ந்தால், அகமுடையார் அரசியல் அநாதைகள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

சூடு சொரணையுள்ள அகமுடையானே, இம்முறையாவது முதுகுத்தண்டை நிமிர்த்தி, ’முக்குலத்தோர்’ என நீ சுமக்கும் சவாரியை தகர்த்து, அதிமுகவை தோல்வியடைய செய், உன் வாக்குகளால்!

- இரா.ச.இமலாதித்தன்

பரதவர்களும் அகமுடையார்களும்!வரலாற்றின் ஆரம்ப புள்ளியிலிருந்து உற்று கவனிக்க தொடங்கினால், பரதவர்களோடு தான் அகமுடையார்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
பரதவர் குலத்தை சேர்ந்த முனைவர் அரு.பரமசிவம் அவர்களின் 'எஞ்சி நிலைத்த வழக்காறுகள்' என்ற பரதவர் ஆய்வு வரலாற்று நூலில், பெரும்பாலான பக்கங்களை அகமுடையார் பற்றிய செய்திகளே அடங்கிருக்கின்றன.

பட்டங்கள் பல உண்டு; ஆனாலும் நாம் அகமுடையார்!