அரசியலில் அகமுடையார் துரோக வரலாறு!இந்த சுவரொட்டியில் நட்சத்திர குறியீட்டுக்குள் இருக்கும் அந்த ஆறு ⁠⁠⁠எழுத்துகளுக்கு பின்னாலுள்ள அகமுடையார் துரோக வரலாறு தெரியுமா?!

”ரா - மூ - ரா - ம - வே - த“

இந்த ஆறு எழுத்துகளும் ஒவ்வொருவரின் பெயரின் முதலெழுத்துக்கள். அந்த ஆறு பேரும் தான் மதுரையின் மாவட்ட செயலாளர்கள். அகமுடையார்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, அகமுடையார்களால் அடைக்கலமும் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னாட்களில் ஒட்டுமொத்த அகமுடையார் சமுதாயத்தையே அரசியலில் ஓரங்கட்டிய நன்றி மறந்தவர்களின் முதலெழுத்து.

01.

’ரா’ - செல்லூர் ராஜூ - (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பழக்கடை பாண்டி (அகமுடையார்).

02.

’மூ’ - மூர்த்தி (கள்ளர் - அம்பலம்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- தா.கிருட்டிணன் & டி.ஆர்.பாலு (அகமுடையார்).

03.

’ரா’ - ராசன் செல்லப்பா (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- வக்கில் சுந்தரபாண்டியன் (முதல் அதிமுக மதுரை மா.செ.) அகமுடையார்.

04.

’ம’ - மணிமாறன் (சேடப்பட்டி முத்தையா மகன் - மறவர்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் (அகமுடையார்).

05.

’வே’ - வேலுச்சாமி (மறவர்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பொன்.முத்துராமலிங்கம் (அகமுடையார்).

06.

’த’ - தளபதி (நாயுடு) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பொன்.முத்துராமலிங்கம் (அகமுடையார்).
-

இந்த ஆறுபேரும் தான் தற்போது மாவட்டச் செயலாளர்கள் என்பதும், அதிலும் ஒருவர் அமைச்சர் என்பதும் குறிப்பிடதக்க விசயம். அகமுடையார்களின் தயவினால் சுகபோகமாய் பதவில் இருக்கும் இந்த ஆறுபேரும், அரசியலில் தங்களை வளர்த்தெடுத்த அகமுடையார்களை ஓரங்கட்டி வைத்துள்ளனர் என்பது தான் துரோகத்தின் உச்சம். மேலும், எண்ணிக்கையில் அகமுடையார் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அகமுடையாருக்கென ஒரு சிறு பதவி கூட கிடைத்துவிட கூடாதென்பதில் மிகவும் தெளிவாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் புரியாத அகமுடையார்களோ, அம்மாவென்றும், கலைஞரென்றும் மாற்றானை தலைமை பதவியில் வைத்து அரசியலில் ஏமாற்றுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

”அகமுடையார் ஓட்டு அந்நியருக்கு இல்லை!” என்ற நிலையை அகமுடையார்கள் எடுக்கும் வரையிலும், அரசியல் அதிகாரத்தில் அகமுடையார் ஏமாற்றப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

இனியாவது அகமுடையார் பேரினம் சிந்திக்குமா?!

- இரா.ச.இமலாதித்தன்

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!