அரசியல் அநாதைகளாக்கப்படும் அகமுடையார்!


அதிமுக முக்குலத்தோர் கட்சியென்றும், நாமெல்லாம் முக்குலத்தோரென்றும் முட்டு கொடுத்து கொண்டிருக்கும், அகமுடையார் சாதியில் பிறந்த சில மேதாவிகளுக்கு, அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கு மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதும், அதற்கடுத்து மறவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கிருப்பதையும் பார்த்த்தாவது இனி சூடுசொரணையெல்லாம் வருமாயென தெரியவில்லை.

கள்ளர் - மறவர் - அகமுடையார் என்ற மூன்று சாதிகளில், மூன்றில் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் அகமுடையாருக்கு ஒருசில தொகுதிகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்பதையும், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் 60 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளை கூட கொடுக்க மனமில்லாமல், அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளையும் கள்ளர் - மறவருக்கு கொடுத்திருக்கும் சூழச்சியையெல்லாம் இனியாவது புரிந்து கொள்வீர்களா?

அதிமுக - முக்குலத்தோர் கட்சி இல்லை; அது கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோருக்கான கட்சி என்பதை புரிந்துகொள்ளாமல், இன்னமும் தன் சுயநலத்துக்காகவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காகவும் தன்னை முக்குலத்தோர் என சொல்லிக்கொள்ளும் அகமுடையார் சாதியை சேர்ந்த கோடாரி காம்புகளால், கெடப்போவது குலம் மட்டுமில்லை;
அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரமும் தான்! அரசியலுக்காக அகமுடையார் முதுகில் சவாரி செய்ய உருவாக்கப்பட்ட முக்குலத்தோர் என்ற பொதியை இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான்,அகமுடையார் சுமப்பது? அகமுடையாரின் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்யும் கள்ளர் - மறவரை கீழே இறக்கி விடாதவரை அகமுடையாருக்கான அடையாளம் ஒவ்வொன்றாய் அழிக்கப்பட்டே தீரும். இந்த நிலையே இனிவரும் காலங்களில் தொடர்ந்தால், அகமுடையார் அரசியல் அநாதைகள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

சூடு சொரணையுள்ள அகமுடையானே, இம்முறையாவது முதுகுத்தண்டை நிமிர்த்தி, ’முக்குலத்தோர்’ என நீ சுமக்கும் சவாரியை தகர்த்து, அதிமுகவை தோல்வியடைய செய், உன் வாக்குகளால்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment