26 நவம்பர் 2018

சிங்கார பூமியிலே - போத்திராஜாவின் இசையில் பாடல் வெளியீடு.

"சிங்கார பூமியிலே... சிவகங்கை சீமையிலே" எனத் தொடங்கும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் புகழ் பாடும் 'சிங்கிள் ஆடியோ' வருகின்ற அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்பாடல், வரிசையூர் மணி அவர்களின் பாடல் வரிகளிலும், தம்பி மதுரை போத்திராஜாவின் இசையமைப்பிலும் - குரலிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 'தாய்மாமன் வாரானடி' பாடல் மூலம் அடையாளப்பட்ட போத்திராஜாவின் இம்முயற்சிக்கும் துணையிருப்போம். அன்புத்தம்பி போத்திராஜாவின் இசையிலும், குரலிலும் உருவான 'சிங்கார சீமையிலே' பாடல்!

https://youtu.be/zFh9d63cFlk

08 நவம்பர் 2018

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வின் அத்துமீறல்!



தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். தமிழரல்லாதவர்களை தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களாக திணிக்கவே இம்முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழில் கேள்வித்தாளை அமைப்பதற்கான நபர்கள் இல்லையென்று காரணம் சொல்லிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டு அரசின் ஊழியர்களாக வரலாமென திருத்தம் செய்தனர்.

இப்போது குரூப் 2 தேர்வுகள் போன்றவற்றிலும் தமிழ் மொழி வழியிலான கேள்விகள் இல்லையென்றால், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் எளிதாக தமிழக அரசாங்க பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள். PSTM என்ற தமிழ்மொழி வழியிலான பள்ளிப்படிப்பை படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இங்கிருக்கிறது. அதை இல்லாதொழிக்கவும், தாய்மொழி, மாநில மொழிகளின் அடிப்படையிலான இடப்பகிர்வை பறித்து கொள்ளவுமே இம்மாதிரியான அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.


பொருளாதார அடிப்படையில் இடைநிலை/கீழ்நிலை குடும்பத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக உருவெடுத்து, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் எத்தனையோ லட்சம் பேருக்கான கடைசி நம்பிக்கை இந்த டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகள் தான். இந்த தேர்வுகளுக்காக, தனியார் வேலைகளை துறந்து, வாடகைக்கு தனியறை எடுத்தும், கோவில்களில் தங்கியும், கூட்டாக படித்து மாத கணக்கில் அல்லும் பகலும் தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். அந்த எளியோரின் கனவெல்லாம் அரசு வேலை மட்டுமே. அதற்கு பின்னால் தான், அவர்களது வாழ்க்கையே தொடங்கவிருக்கிறது. அந்த கனவில் மண்ணையள்ளி போடும் கயவர்களை கண்டிக்க இளையோர் ஒன்று கூட வேண்டும்.

இட ஒதுக்கீடு / அரசு ஊக்கதொகை / கல்லூரி சேர்க்கை உள்பட, எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் அகமுடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும் ஒரே ஆயுதம், அரசு வேலை தான். குறிப்பாக பெரும்பான்மையானோரில் தமிழ்வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையே அதிகம்; அதிலும் இப்படியான குளறுபடி. அனைவரும் தங்களது பக்கத்தில், இச்செயலை எதிர்த்து பதிவு செய்து கண்டியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#TNPSC#TNPSCExam

07 நவம்பர் 2018

வடக்கத்தியர்களின் தீபாவளி அரசியல்!


செளகார்பேட்டை போன்ற வடமாநிலத்தவர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடக்கத்தியர்கள், இன்று தொடர்ச்சியாக மணிக்கணிக்கில் வெடிகளை வெடித்து வருகின்றனர். இது சுற்றுச்சூழல் மாசு இல்லையா? நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக, நேற்று ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிந்த காவல்துறை, இன்று வடக்கத்தியர்கள் மீது வழக்கு பதியாதது ஏன்? இன்று மகாவீரரின் நினைவுநாள் என்பதால், ஈரோடு சென்னையென தமிழகத்தில் வடக்கத்தியர்கள் ஆளுமை செலுத்தும் பகுதிகளெல்லாம் இறைச்சி விற்க அரசு தடையை விதித்தது ஏன்? பொதுவாகவே அமாவாசையில் பெரும்பாலானோர் அசைவம் சமைப்பதில்லை என்பதே எதார்த்தம்.


வடக்கத்திய வணிகர்கள் சைவர்களென்றால், அவர்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கலாமே தவிர, இங்குள்ள தமிழர்கள் யாருமே இன்றைக்கு அசைவம் சாப்பிடக்கூடாதென்பது அயோக்கியத்தனமான அரசியல் இல்லையா? இதுபோன்ற வந்தேறிகளின் உள்ளரசியலை எதிர்ப்பவர்களையெல்லாம், இன/மொழி வெறியர்களாக இங்குள்ளவர்களே சித்தரிக்கின்றனர் என்பதும் வேதனையான விசயம். இனி காலத்தின் தேவை இம்மண்ணுக்கான, இம்மக்களுக்கான தமிழ்தேசிய அரசியலே.

- இரா.ச. இமலாதித்தன்

06 நவம்பர் 2018

சர்கார் - திராவிட அரசியலின் முகமூடி அவிழ்ப்பு!



சூப்பர் ஸ்டார் விஜயின் 'சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க குறியீடுகளே நிரம்பிருக்கின்றன; அனைத்துமே அரசியல் குறியீடுகள். கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின் ஆணிவேரை அசைத்து பார்த்திருக்கிறது இந்த படம். திராவிட அரசியலில் நடந்த / நடக்கின்ற, நாம் கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்ற அத்தனை அவலங்களையும், இந்தப்படம் பேசி இருக்கிறது.

பழ.கருப்பையா பாத்திரம் அப்படியே கருணாநிதியை நினைவுபடுத்துகிறது. ராதாரவியின் பாத்திரம் மூன்றுபேரை ஒத்திருக்கிறது; ராதாவியை 'ரெண்டு' என அடையாளப்படுத்தப்படுவதிலும் குறியீடு இருக்கிறது. அந்த இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அன்பழகன் - துரைமுருகன் - ஸ்டாலின். இந்த மூவரில் குறிப்பாக ஸ்டாலினையும் துரைமுருகனையும், ராதாரவியின் செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. தாய் கழகத்துடன் இணைப்பு விழா என்பது போன்ற அரசியல் நிகழ்வில் மின்னொளி விளக்கில் பழ.கருப்பையாவின் உருவம் அப்படியே கருணாநிதியை போலவே இருக்கும்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமியின் பாத்திரம், மூன்றுபேரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது; ஒன்று, கனிமொழி; இரண்டு, ஜெயலலிதா; மூன்று, சசிகலா. அடுத்து, பழ.கருப்பையாவும், ராதாரவியும் வரலட்சுமியை 'பாப்பா' என்றே எல்லா இடங்களிலும் அழைப்பதும், விஜய் கூட ஓரிடத்தில் 'பாப்பா' என நேரடியாக சொல்வதும், வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கோமளவல்லி' என்று இருப்பதும், அப்படியே ஜெயலலிதாவையே நினைவூட்டுகிறது. மேலும் அந்த வரலட்சுமியின் கதாபாத்திரம் மூவரை உள்ளடக்கிய கலவையான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அம்மூவரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அந்த பாத்திரம் வெளிக்காட்டுகிறது.

படத்தின் டைட்டிலில் சூரியனோடு சிங்கம் இருக்கின்ற கொடியை கொண்ட அரசுக்கும், புலிக்கொடியை கொண்ட அரசுக்கும் போர் நடந்து, இறுதியாக புலிக்கொடி வெல்வதாக காட்டிருக்கின்றனர். மேலும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமிப்பது போலவும் ஒரு காட்சி கட்டப்பட்டிருக்கும். பிறகு, நேதாஜியும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜானகி தேவரும் இராணுவ உடையோடு படை வீரர்களுக்கு இடையே நடந்து வரும் காட்சி காட்டப்படும்; அதனை தொடர்ந்து காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் என பட்டியல் நீளும். கடைசியாக ஒரு கருடன் பறந்து வந்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டுக்குள் புகுவதை போன்றதொரு காட்சியும் அமைத்து இருப்பார்கள். கூடவே புலிக்கொடி பெரிதாக காட்டப்படும்.

இந்த புலிக்கொடிக்கு பின்புலமாக மூன்று வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன; முதலாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற) சோழர்கள் தெற்காசியாவையே புலிக்கொடியோடு ஆண்டனர். அதற்குப் பிறகான நேதாஜியின் புலிக்கொடியும், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கூட்டாட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது. மூன்றாவதாக, புலிக்கொடி அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் மீண்டும் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது; உலக வரலாற்றில்ல் ஒரு போராளி இயக்கம் முப்படைகளை வைத்திருந்த பெருமைமிகு சாதனையையும் தமிழீழ புலிக்கொடி உருவாக்கி கொடுத்தது.



சுந்தர் ராமசாமியாக வரும் விஜய் தன்னை மீனவனாகவே பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தனது பூர்வீகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவக் குடும்பம் என்பதாகவும், தன்னுடைய அப்பா சிங்கள ராணுவத்தால் கடலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிருப்பார். தொடர்ச்சியாக பக்கத்து நாட்டு இராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்கிறது என்பதையும் பேசிருப்பார்.

மெர்சலில் பல இடங்களில் வருவது போல தன்னிரு கைகளை குறுக்கு வெட்டாக வைத்து கருட முத்திரையை சர்க்காரிலும் அரசியல் மேடையில் க்ளோசப் காட்சியாக விஜய் காட்டியிருப்பார். மேலும் நான்கைந்து காட்சிகளில் இரண்டு கைகளையும் விரித்து சிறகுகள் போல ஒரு குறியீட்டை காட்டியிருப்பார்.

கருணாநிதி, அண்ணாதுரை, அண்ணா அறிவாலயம், அண்ணா சிலை, மதிமுக கட்சிக்கொடி, ஸ்டாலின், துரைமுருகன், சூரிய சிங்கக் கொடி, புலிக்கொடி, கிழக்கிந்திய கம்பெனி, கருடன், ஜெயலலிதா, கனிமொழி, சவுக்கு சங்கர், மெரினா சமாதி, அ.இ. என தொடங்குகின்ற கட்சிப்பெயர், அப்போலோ மருத்துவமனை வீடியோ காட்சிகள், ஒரு தலைவரின் மரணத்தை வைத்து செய்யப்படுகின்ற அரசியல், இப்படியான அனைத்து தரப்பட்ட திராவிட அரசியலின் இன்னொரு முகத்தை பல குறியீடுகளோடு இந்த சர்க்கார் சொல்லிருக்கிறது.

கோமலவள்ளி என்ற பெயருக்கு பதிலாக வேறொரு பெயரை வைத்திருந்தால், திமுக, அமமுக போல அதிமுகவும் நேரடியாக சர்காரை எதிர்த்திருக்க மாட்டார்கள். கோமலவள்ளி தான் ஜெயலலிதா என நம்பும் இவர்களுக்கு மாசிலாமணியாக வரும் பழ.கருப்பையா யார்? ஐம்பத்தைந்து வருட அரசியல், மூன்றாம் தலைமுறை அரசியல், தலைவர் முகமே ஒரு பிராண்ட், என்பதெல்லாம் தமிழக அரசியலில் யாரை குறிக்கிறது? பெயரளவில் மட்டும் கோமலவள்ளியாக வரும் வரலட்சுமியின் நடை, உடை, பேச்சு, உடல்மொழி இவையெல்லாம் யாரை குறிக்கிறது? தலைவர் தலைவரென சொல்லும் 'ரெண்டு' ராதாரவியின் உடல்மொழி யாரை முன்னிறுத்துகிறது? இவையெல்லாம் யாருக்குமே தெரியவில்லையா? இல்லை; தெரிந்தும் தெரியாததது போலவே இருக்கின்றீர்களா?

விஜயின் அரசியல் வருகையை பற்றியெல்லாம் இன்றைக்கு தலைப்பு செய்திகளாக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனது முதல் அரசியல் நகர்வை 2011ம் ஆண்டே நாகப்பட்டினத்தில் தான் விஜய் தொடங்கினார். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினைக்காக அவரது முதல் அரசியல் கூட்டம் நாகையில் தான் நடந்தது. இந்த கண்டன கூட்டமானது, பெரிய கட்சியின் அரசியல் மாநாடு போல மாறிப்போனது. அன்று கூடிய கூட்டத்தையும், நிரம்பிருந்த வாகன நெரிசலையும் அவ்வளவு எளிதாக இங்குள்ள எந்த அரசியல்வாதியாலும் மறந்துவிட முடியாது. அன்றைய கூட்டத்தில், "தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி, கொன்று கொண்டிருந்தால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னால் அவரது படங்களெல்லாம் இலங்கையில் திரையிட முடியாத அளவுக்கு கூட பிரச்சினை உருவானது.

இந்த படத்திலும் சாட்டை முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் சேகரித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரே கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது விஜய் சொல்லுவார் "இந்த இன்னிங்சில் முக்கியமான ஓவரின் பெரிய சிக்ஸர் நீங்கள்தான்" என்று... இதை அந்த அரசியல் கண்ட பொதுக்கூட்டத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

டைட்டில் காட்சியில் ஈ.வெ.'ராமசாமி'யின் படத்தை காட்டியும், கதாநாயகனுக்கு சுந்தர் 'ராமசாமி' என்ற பெயரை வைத்திருந்தும், அந்த ஈவேராவின் அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய 50 ஆண்டுகால திராவிட அரசியலின் மற்றொரு முகத்தை கிழித்திருக்கும் துணிச்சலுக்கு பாராட்டுகள்!மற்றபடி இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள ஓட்டரசியலை யார் தான் பேசுவது? என்ற பூனைக்கு மணி கட்டிருக்கின்றனர். அன்று விஜய் சொன்னது போல, உண்மையாவே அரசியலில் மெர்சல் செய்திருக்கின்றனர். உள்ளூர் அரசியலுக்குள்ளும் உலகரசியலின் பங்கு இருப்பதை புரிந்து கொண்டவர்களுக்கு சர்க்காரின் தேவையும் புரியக்கூடும். ரசிகனாக, தமிழனாக, வாக்காளனாக, இந்த சர்க்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்




ஆய்வு நோக்கில் தீபாவளி திருவிழா!


 தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் யார்? அவரை கொன்றது கிருஷ்ணனா? எங்கே, எப்போது, எப்படி கொன்றார்? அப்படியெனில், தீபாவளி என்பது வைணவ பண்டிகையா? அந்த நரகாசுரன், மக்களையெல்லாம் கொடுமை செய்த கொடூர அசுரனா? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன; கேள்விகள் மட்டுமே இருக்கின்றன; உண்மையான பதில்கள், உண்மையாகவே யாரிடமும் இல்லை. பெரும்பாலும் வெறும் யூகங்களே.

நாடெங்கும் பொதுவாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி என்ற ஆரிய பெருவிழாவை பெரும்பான்மையானோர் கொண்டாடி வருகின்றனர். என்ன காரணம்? எதனால் இந்த பண்டிகை வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம்? என்பதை பற்றிய தெளிவெல்லாம் அவர்களிடம் துளியுமில்லை. ஆரிய பார்ப்பனர்களின் புனைவு புராணங்கள் என்ன சொல்லி இருக்கிறதோ அதை அப்படியே நம்பும் கூட்டமாகி மாறிப்போனவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது.

இந்த நரகாசுரன் யார் என்பதைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமெனில், அவர் தான் ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர். இவர் காலத்தில் தான் ஜைனம் நாடெங்கிலும் தழைத்தோங்கியது. இம்மாதிரியான ஐப்பசி மறைநிலவு நாளில் தான் மரணமடைகிறார். அவரது மார்க்கத்தை பின்பற்றியவர்களெல்லாம் ஆண்டு தோறும் அவர் இறந்த நாளன்று, தீப ஒளி விளக்குகள் வைத்து வழிபட்டனர். மகாவீரரின் மறைவிற்கு பிறகு ஜைனம் வீழ்ச்சியடைய சைவம் வைணவம் உள்ளிட்ட ஹிந்து மதம் கோலோச்ச தொடங்கியது.

அந்த காலகட்டத்தில் ஜைனத்திலிருந்து ஹிந்துவாக மடை மாற்றப்பட்டவர்கள், மகாவீரரின் இறந்த நாளை ஆண்டுதோறும் கடைபிடித்து வந்தனர். அதை தனக்கு சாதகமாக்கி கொள்ள அந்த நாள்தான் தீபாவளி திருநாள் என்றும், அந்த மகாவீரரின் இழப்பை தான் நரகாசுரன் வதமென்றும் சொல்லி வைணவ கிருஷ்ணரை முன்னிலைப்படுத்தினர். பீகார் மாநிலத்து பண்டிகையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, ஒட்டுமொத்த நாட்டின் பண்டிகையாக்கிய பெருமை ஆரிய புராணக்கதைகளுக்கே சேரும்.

பீகாரை சேர்ந்த ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரரின் இறப்பினால் ஹிந்து மதம் வளர்ச்சியடைந்தது; அதனால் அந்த மகாவீரரை நரகாசுரன் என சொல்லி ஆரியர்கள் விழா எடுப்பதில் கூட நியாயம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள பகுத்தறிவு பேசும் திராவிடவாதிகள் போட்டி விழாவென சொல்லி ஆரியர்களுக்கு போட்டியாக இந்த நரகாசுரன் விழாவை கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் என்பவர் எங்கு வாழ்ந்தார்? எங்கே ஆட்சி செய்தார்? யாரோடு போர் புரிந்தார்? என்பது போன்ற அடிப்படை சான்று ஒன்றுகூட கிடையாது. மேலும் அந்த நரகாசுரன் யார் என்பதற்கான சான்றும் கிடையாது. அந்த போலி புராணத்தின் கற்பனை பாத்திரப்பெயருக்கு மாவீரர் /மாமன்னர் / பெரும்பாட்டன் என்ற முன்னொட்டுகள் கொடுத்து விழா எடுப்பது தான் பகுத்தறிவா? இதுதான் மாற்று புரட்சியா? இதுபோன்ற விசயங்களில் ஆரியம், திராவிடம், தமிழ்தேசியம் என அனைத்து அரசியலும் ஒரே நேர் கோட்டில் நிற்பது ஏன்?

(தொடரும்...)

ஏற்கனவே சென்ற பதிவில் சொன்னது போலவே வட இந்தியாவெங்கும் நவம்பர் ஏழாம் தேதி தான் தீபாவளி பண்டிகை ஆகும்; ஆனால் தென்னிந்தியா முழுவதும் நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், முன்பெல்லாம் ஒட்டுமொத்த நாடெங்கும் அம்மாவாசையும் தீபாவளியும் ஒரே நாளில் வந்து கொண்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் மட்டும் இதில் வேறுபாடு தெரிகிறது. இப்போதெல்லாம் தீபாவளிக்கு அடுத்த நாள்தான் தென்னிந்தியாவிற்கு அமாவாசை வருகிறது; வட இந்திய நாட்காடியிடன் படி இந்த மாதம் கார்த்திகை; நமக்கோ ஐப்பசி மாதம்.

பொதுவாக ஓர் ஆண்டுக்கான நாட்களை கணக்கிட வேண்டுமெனில், நிலவின் அடிப்படையில் கணிப்பதே சரியானதாக இருக்கும். ஆண்டின் எல்லா நாட்களிலும் சூரியன் எப்போதுமே உதித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதை வைத்து ஓராண்டின் நாட்களை கணக்கிட முடியாது. ஆனால், ஓராண்டிற்கு எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? என்பதை நிலவின் அடிப்படையிலேயே துல்லியமாக கணிக்க முடியும். மறைநிலவு, முழுநிலவு (அமாவாசை / பவுர்ணமி) என்பதை வைத்துதான் பனிரெண்டு மாதங்களிலும் முழுநிலவு/மறைநிலவு நிறைவேறுவதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் ஓராண்டிற்கு 360 நாட்கள் வரலாம்; அதில் ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ குறைவானதாகவோ இருக்கலாமே தவிர 99% 360 நாட்கள் என்பது சரியானதாகவே இருக்கும்.

நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டியின் படி, ஓராண்டிற்கு 365 நாட்கள்; அதிலும் நான்கு வருடத்திற்கு ஒரு முறையாக லீப் ஆண்டு என சொல்லி 366 நாட்கள் வருகிறது. குழப்பமான ஆங்கில நாட்காட்டியின் படி கணக்கிடப்படுகிற 366 நாட்கள் என்பதையும், 365 நாட்கள் என்பதையும், ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு மாதம் என்பது சராசரியாக 30 நாட்களே இருக்க வேண்டும்; அதுதான் சரியானதாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாம் பின்பற்றும் ஆங்கில நாட்காட்டி முறையே குழப்பமானது தான்.

மேலும் இந்த தீபாவளி விசயத்தில், இன்று நவம்பர் 6ம் தேதியை சிறிய தீபாவளி என்றும், நவம்பர் 7ஆம் தேதியை (கார்த்திகை அமாவாசை) வடஹிந்தியர்கள் பெருந்தீபாவளியாகவும் கொண்டாடிகின்றனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திற்கு நவம்பர் ஆறாம் தேதியே தீபாவளி வந்துவிடுகிறது; குறிப்பாக அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வந்துவிடுகிறது. இங்குதான் குழப்பமே மற்றபடி இந்த தீபாவளி என்பது மகாவீரரின் நினைவு நாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒருவேளை, மகாவீரருக்கு முன்பு இங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதாக சான்று இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்; அப்படி இருப்பதாக தெரியவில்லை. தீபாவளி என்பது அறுவடைத் திருநாள் என்றும், ராஜேந்திரனின் போர் வெற்றித்திருநாள் என்றும், இங்கு சொல்லப்படும் எதுவுமே சான்றுகள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

தமிழ்நாட்காட்டியென நம்பப்படும் ஐப்பசி மாத அமாவாசையில் தான், ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கராரன மகாவீரர் உயிர்நீத்தார்; அதன் நினைவாகவே ஆண்டுதோறும் இந்த அமாவாசை நாளில் விளக்கேற்றி அசைவம் தவிர்த்து இந்த தீபாவளி பண்டிகையை பெரும்பான்மையானோர் கொண்டாடுகின்றனர். மேலும் ஜைன நாட்காட்டி படி, ஜைனர்களுக்கு மகாவீரரின் நினைவு நாளான அமாவாசையிலிருந்து அடுத்த நாளே அவர்களது ஜைன புத்தாண்டும் தொடங்குகிறது.

மேலும் மகாவீரர் இறந்த பின்னாட்களில், ஜைனம் ஒடுக்கப்பட்டு மீண்டும் வைதீக ஹிந்து மதம் தலையெடுக்கும் போது ஜைனத்திலிருந்து வைதீக ஹிந்து மதத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் இந்த தீபாவளியை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தனர். அதுபோல ஜைனம் தழைத்தோங்கிய காலத்தில் வைதீக ஹிந்து மதத்திற்கு மகாவீரர் பெரும் தலைவலியாக இருந்திருக்கிறார்; எனவே அவரது மரணத்தை ஒட்டுமொத்த வைதீக ஹிந்துக்களுமே பெருவிழாவாக எடுத்து கொண்டாடி இருக்கலாம். அதன் நீட்சியே நரகாசுரன் என்ற புராண கட்டுக்கதை.

- இரா.ச. இமலாதித்தன்

பி.கு: இந்த பதிவுக்கு கீழே நிறைய படங்களை இணைத்திருக்கிறேன். இந்த பதிவுக்கு பின்புல தொடர்பான செய்திகளை இந்த படங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

#ஜைனம் #தீபாவளி #மகாவீரர் #நாட்காட்டி #அசைவம்


 



























05 நவம்பர் 2018

குயிலி - கற்பனை பாத்திரம்!



குயிலி என்பதே கற்பனை பாத்திரம். ஜீவபாரதி எழுதிய புனைவு இலக்கியத்தில் வாசகர்களின் ரசனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரமே குயிலி. முப்பது ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட குயிலி பாத்திரத்திற்கு பல்வேறு (மறவர்/சக்கிலியர்/பறையர்) சாதி முத்திரையை குத்தி, கடைசியாக இருபத்தெட்டு லட்சத்தில் நினைவு சின்னமும் தமிழக அரசாங்கம் ஏற்படுத்தி விட்டது; இது முற்றிலும் தவறான முன்னுதாரணம். இவற்றையெல்லாம் நெஞ்சுறுதியோடும் ஆதாரத்தோடும் 'ஒப்பனைகளின் கூத்து' வாயிலாக விளக்கியுள்ள குருசாமி மயில் வாகனன் அவர்களின் நேர்மைக்கும், உழைப்பிற்கும், வரலாற்று தேடலுக்கும், நன்றியும் - வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்

01 நவம்பர் 2018

தமிழ்த்தேசிய நாட்காட்டி!



காமராஜர் - வேலுப்பிள்ளை பிரபாகரன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுவாக நேதாஜி - பசும்பொன் தேவர் காம்பினேசனை தான் அதிகம் பார்த்திருப்போம். காரணம், ஐ.என்.ஏ., பார்வார்ட் ப்ளாக் கட்சி. மேலும் நேதாஜி வழியில் பயணித்த பசும்பொன் தேவருக்கும் - காமராஜருக்கும் இடையிலான அரசியல் பகைக்கு பலிக்கடா ஆனவரே இமானுவேல் சேகரன். இதன் பின்புலத்திலேயே, பசும்பொன் தேவரோடு மட்டுமில்லாது பிற்காலத்தில் நேதாஜியோடும் நேரெதிர் திசையில் பயணித்தவர் காமராஜர். இப்படியாக நேதாஜிக்கும், காமராஜருக்கும் கருத்தொற்றுமையே இல்லாத போது, இந்த நாம் தமிழரின் 2019ம் ஆண்டு நாட்காட்டி எந்த வகையில் இம்மூவரையும் இணைத்திருக்கிறது?



தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்கள் இடம்பெற்ற நாம் தமிழரின் தமிழ்த்தேசிய நாள்காட்டி. வரவேற்கிறோம்!