கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 நவம்பர் 2015

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம்!




இதைத்தான் எதிர்பார்க்கிறோம் ஒவ்வொரு முறையும். முன்னாள் முதல்வராக, நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் பொது இடங்களில் தலைமையின் காலைத்தேடி முதுகு குனிந்தே பார்த்த நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். தரையில் அமர்ந்திருந்தாலும் கம்பீரமாய், முதுகெலும்போடு, தமிழனாய் நிமிர்ந்த இந்த ஒரு படம் போதும்.

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம் என்ற நம்பிக்கை விதையை, சாமானியன் மத்தியிலும் ஆழமாய் விதைத்த, மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கையிலும் தேநீர் கோப்பை, கடலூர் வெள்ள நிவாரண பணிகளின் போது!

- இரா.ச.இமலாதித்தன்

18 நவம்பர் 2015

அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!

ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம் கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

16 நவம்பர் 2015

கடலூரும் - ஆர்.கே.நகரும்!

ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல. தமிழகத்தின் தலைநகரிலேயே பல பகுதிகளில் இடுப்புக்கும் மேலே மழை நீர் தேங்கி நிற்கிறது. கடலூர் போன்ற கடலோர வெளி மாவட்டங்கள், மழையால் சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் மீட்பு பணி செய்து, தான் வரும் வழியெங்கும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி இரைத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக மற்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரெல்லாம் வடிந்து விடுமா என்ன? ஆர்.கே.நகர் ஒரு தொகுதியால் மீண்டுமொரு முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம். மற்ற மாவட்ட தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாக சரி செய்தால் தான் மீண்டும் முதல்வராக முடியும். ஏனெனில், ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல!

அடுத்த மாதமே கடலூரில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும். நாளைக்கே அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு, வார்டு வாரியாக அங்கு அனுப்பப்படும்.
திராவிடம், தீரா விடம்!

- இரா.ச.இமலாதித்தன்.

15 நவம்பர் 2015

பாரீஸ் முதல் கடலூர் வரை!

நாம் எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும்? எதைப்பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்? எதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை கூட ஊடகங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான், 'சப்போர்ட் பாரீஸ்' என்ற தற்காலிக ப்ரோஃபைல் மாற்றம்.

முள்ளிவாய்க்காலில் பல லட்சம் உயிர்கள் கொலை செய்யபட்ட போது, அது அடுத்த நாட்டு பிரச்சனை. ஆனால், பாரீஸ் மட்டும் பக்கத்து வீட்டு பிரச்சனை. டெல்லி கற்பழிப்புக்காகவும், ஆந்திர வெள்ளத்திற்காகவும் நிதியுதவி - போராட்டம். ஆனால், தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளோ, கடலூர் மழை வெள்ளத்தால் வீடிழந்த மக்களோ, இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களோ, வேற்றுகிர வாசிகளாக போய் விடுகின்றனர், புரட்சி பேசும் போராளிகளுக்கு.
த்தூ...