கடலூரும் - ஆர்.கே.நகரும்!

ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல. தமிழகத்தின் தலைநகரிலேயே பல பகுதிகளில் இடுப்புக்கும் மேலே மழை நீர் தேங்கி நிற்கிறது. கடலூர் போன்ற கடலோர வெளி மாவட்டங்கள், மழையால் சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் மீட்பு பணி செய்து, தான் வரும் வழியெங்கும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி இரைத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக மற்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரெல்லாம் வடிந்து விடுமா என்ன? ஆர்.கே.நகர் ஒரு தொகுதியால் மீண்டுமொரு முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம். மற்ற மாவட்ட தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாக சரி செய்தால் தான் மீண்டும் முதல்வராக முடியும். ஏனெனில், ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல!

அடுத்த மாதமே கடலூரில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும். நாளைக்கே அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு, வார்டு வாரியாக அங்கு அனுப்பப்படும்.
திராவிடம், தீரா விடம்!

- இரா.ச.இமலாதித்தன்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment