08 நவம்பர் 2015

நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துக்குள் வரிசையாக குடையோடு பயணிகள் பயணிக்கும் அவல நிலைதான், நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

கைக்குழந்தைகளோடும், தீபாவளி சாமான்களோடும், முதியோர்களும், பெண்களும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்மில்லை. பேருந்தின் எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தை பற்றி நடத்துனரிடம் கேட்டால், விரக்தியில் பேருந்து பணிமனை அலுவலர்கள் தான் காரணமென பல விசயங்களை சொன்னார்.

தொ.மு.ச., அ.தொ.ச., என தொழிற்சங்க தேர்தலுக்கும், பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நான்கில் ஒரு பங்கையாவது பேருந்துகளின் பழுதை சரி செய்ய கொடுத்தால், வாங்கும் சம்பளத்திற்கு ஓரளவு தொழிற்தர்மமாவது இருக்கும்.

நாகை பேருந்து நிலையமே பெரிய குட்டை போல, சாக்கடையும் சகதியுமாக மழைத்தண்ணீரில் மிதக்கிறது. இலக்கு வைத்து குடிக்க வைக்கும் அரசாங்கத்தின் சட்டமன்ற அலுவலகமும் நாகை பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் இருக்கிறது என்பதும், அதுதான் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் அலுவலகம் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

மேலும், நாகூர் - வேளாங்கண்ணி என ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்ட பயணிகள் எல்லாம் காறி துப்புறாங்க; நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையில், பலரது நாக்கில் உமிழும் எச்சிலும் மிதந்து கொண்டிருக்கிறது, நாடு தூற்றும் நான்காண்டு வேதனையை சொல்லி...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக