பாரீஸ் படுகொலைகளுக்கு பின்னாலுள்ள வல்லாதிக்கம்!

பாரீஸ் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே. மும்பை கூட முன்னோடிதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு. இந்த கொலைகளெல்லாம் யாரால்? எந்த அமைப்பால்? செய்யப்படுகின்றது என்ற ஆய்வெல்லாம் தேவையில்லை; உடனடியாகவே அவர்களாகவே பொறுப்பேற்று கொள்வார்கள். உடனே, அல்-கொய்தா, தாலிபான்கள், சிமி, இந்தியன் முஜாகிதீன், ஐஎஸ்ஐஎஸ் என படுகொலைகள் செய்த பயங்கரவாத அமைப்புகளை ஒருபக்கம் கண்டிப்பதும், மறுபக்கம் அவர்கள் போராளிகள், ஜிகாதிகள் என போற்றுவதும், இன்னொரு பக்கம் இசுலாமிய மதவெறியர்கள் என ஒட்டுமொத்த மார்க்கத்தினரையே இழிவு படுத்துவதும் தொடர்ந்து கொண்டே வருவதைத்தான் பார்க்க முடிகிறது.

எய்தவன் யாரென ஆராயாமல், அம்பை வசை பாடி என்னாக போகிறது? வில்லாளன் யாரென யூகித்து, உலகின் பொது எதிரியின் நோக்கம் எதுவென பொறுமையாக சிந்தித்து விட்டு, உணர்ச்சிவசப்படுங்கள். அப்போதுதான் அந்த உணர்வுக்கும் ஏதாவது மதிப்புண்டு. நேற்று தாலிபான்கள்; இன்று ஐஎஸ்ஐஎஸ்கள்; நாளை இன்னொரு புதிய பெயரிலான ஏதோவோர் அமைப்பு இதுபோன்ற பல படுகொலைகளை செய்து கொண்டே தான் இருக்க போகிறது; உண்மையான எதிரி யாரென உலகம் அறியாத வரை.

- இரா.ச.இமலாதித்தன்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment