மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!