Posts

Showing posts from October, 2015

கோவன் கைதை கண்டிப்போம்!

Image
தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அள…

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் ச…

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனிதர் குல மாணிக்கத்தை, மறவர் குல மாணிக்கம் என்றீர். பொதுவுடைமை சித்தாந்தவாதியை, பெண் பித்தர்களோடு ஒப்பீடு செய்தீர். விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் என்றவரை, கையில் அரிவாள் கொடுத்தீர். பெண்களின் கூந்தல் மீது கால் வைக்கமாட்டேனென்று சொன்னவரை, கால் மேல் கால் போட்டு எடிட் செய்தீர். உடல் முழுக்க திருநீர் சந்தனத்தோடு மாலை அணிவித்து இருந்தவருக்கு, கிலோ கணக்கில் தங்க சங்கிலிகளை கொடுத்தீர். ஆங்கிலேயன் அஞ்சி வாய்பூட்டு சட்டம் போட்டதை, உங்கள் வாயாலே அசிங்க படுத்தினீர். சாதி வேறுபாடின்றி தன் சொத்தான 32 கிராமங்களையே பகிர்ந்த ஈகியை, தன் வாழ்நாளில் பெண் வாசமின்றி வாழ்ந்த யோகியை, உங்கள் செயல்களாலேயே பாவி ஆக்கினீர். அந்நியரிடமிருந்து நாட்டை காக்க இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பியவரின் படத்தை வைத்து, தமிழர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கினீர். உலக அரசியல் பேசியவரை, உள்ளூர் சாதி அரசியலுக்கு பயன்படுத்தினீர். தேசியத்தலைவனை, உங்க அரசியல் போதைக்காக சாதி தலைவனாக்கினீர். இன்னமும் என்ன செய்ய காத்திருக்கிறீர்?! உங்க அரசியல் அரிப்புக்கு தேவரை சொறியாதீர்.

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்…

நாம் தமிழரே மாற்று!

Image
நாம் தமிழர் கட்சியிடமிருந்து அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் முதன்மையானது, சுவரொட்டி, பதாகைகளில் தான். யாருக்காக, எந்த நிகழ்வுக்காக பதாகை-சுவரொட்டி வைக்கிறோமென்ற செய்தியே வெளித்தெரியாமல், தலைமையை துதி பாடி, தலைமையின் பெயரும் படமும் மட்டுமே பெரிதாக இருக்கும். அவர் அழைக்கிறார், இவர் அழைக்கிறாரென இருக்குமே தவிர, யார் விழாவிற்கு, எந்த நிகழ்விற்கு என்பதே தெரியாமல் போய்விடும்.

முதலில், ஒரு தலைவனை ரொம்பவே மெனக்கெட்டு பெரிய பிம்பமாய் நிலை நிறுத்துகிறார்கள். பிறகு தங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவனென்ற வெறும் பிம்பத்தோடு அருகே நின்று படம் பிடித்து படம் காட்டுகிறார்கள்.

இந்த விதத்தில் நாம் தமிழரே மாற்று.

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோ…

அதிமுகவும் - ஆட்சித்தலைவரும்!

Image
"ஆட்சித்தலைவர்" என்ற உடன் அதையும் கட்சிப்பதவின்னு நினைச்சிட்டாய்ங்க போல... கலெக்டரையும் கட்சிக்காரனுக்கும் திறமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.
சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்.,
நாகப்பட்டினம் ஆட்சியர்.

ராஜராஜசோழன் பற்றி தி தமிழ் ஹிந்து!

ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது பெரும் தவறு.
- தி தமிழ் இந்து.

ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளைத் தஞ்சையில் ஆண்டுதோறும் தமிழக அரசே நடத்திவருகிறது. அவ்விழாவில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவிதை பாடி, பட்டிமன்றம் நடத்தி, பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சில வருடங்களாக ராஜராஜ சோழன் அரசின் ஆதரவை மட்டுமின்றி மக்களின் ஆதரவையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.

மாநகரின் சுவர்களில் மட்டுமல்லாது, பிரதான சாலைகளிலிருந்து விலகிக் கிடக்கும் கிராமங்களிலும்கூட ராஜராஜனின் பிறந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அவ்வாறு அழைப்பு விடுப்ப வர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி சாதிய அடிப்படையில் இயங்கும் அமைப்புகள்தான்.

விபரீத நோக்கம்

இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூழலில் வறுமைக்கோட்டைத் தொட்டும் தாண்டியும் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகள், தங்களை உற்சாகப்படுத்திக்கொ…

ஆளும் வர்க்கத்தை தட்டிக்கேட்போம்!

Image
அதிகாரத்துல இருக்கிறவனெல்லாம், சாவு வீட்டுக்கு போனாலும் பிணத்துக்கு முன்னாடி நின்னு போஸ்தான் கொடுக்குறாய்ங்க; கல்யாண வீட்டு போனாலும் மாப்பிள்ளையை ஓரமா தள்ளிட்டு பொண்ணு பக்கத்துல போஸ்தான் கொடுக்குறாய்ங்க. அதையெல்லாம் விமர்சனம் பண்ணினா, தன்னோட பதவியை பயன்படுத்தி தனிநபர் தாக்குதல் செய்றாய்ங்க.
அதற்கு ஓர் உதாரணம் திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர் நினைவிடத்தில்... "144 தடையையும் போட்டுக்கிறீங்க, போட்டோவுக்கு போஸூம் கொடுத்துக்குறீங்க?!" என்ற இந்த ஒற்றைக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லை என்பதுதான்.
இக்கேள்வியை துணிச்சலாக கேட்ட காரைக்குடி மாமன்னர் மருதுபாண்டியர் நலச்சங்க செயலாளரான சகோதரர். செந்தில் சேர்வைக்கு எம் நன்றியும் - வாழ்த்துகளும்!

மருதுபாண்டியருக்காக குரல் கொடுத்த தருண்விஜய் எம்.பி!

Image
தமிழரல்லாத உத்ரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. தருண் விஜய் அவர்கள் சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றிய கோரிக்கையை நினைத்து, இத்தனை வருடங்களாக வாயே திறக்காத தமிழ்நாட்டு மாநிலங்களவை - மக்களவை உறுப்பினரெல்லாம் இனி வெட்கி தலை குனிய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழனத்தின் சார்பாக நன்றி மாண்புமிகு. தருண் விஜய்க்கு!

வேதாரண்ய கோவில் குடமுழுக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) பெரிய கோவிலானது ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் மறைக்காட்டு மணாளர், இறைவி யாழைப்பழித்த மொழியாள். இக்கோவிலை அகத்தியர், விசுவாமித்திரர், வசிஷ்டர், கெளதமர், ராமர், முசுகுந்த சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் வழிபட்டு உள்ளனர்.

அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்த தலம். இராவணனை கொன்ற பாவம் போக்க வழிபாடு நடத்திய தலம். ஒருமுறை கோவிலுள் அணையும் நிலையிலிருந்த விளக்கு திரியை தூண்டிவிட்ட புண்ணிய பலனால், மறுபிறவியில் அகம்படி குலத்தோன்றல் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுக்க காரணமாக இருந்த தலம்.

திருவிளையாடல் புராணத்தை உருவாக்கிய பரஞ்சோதி முனிவர் அவதரித்த தலம். மரகதலிங்கமுள்ள சப்த விடங்க தலங்களில் இதுவும் ஒன்று. மேலும் நான்கு வேதங்களும் உருவான தலம் என்பதால் தான் வேதபுரீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.

இப்படியான பலப்பெருமைகளை பெற்ற எங்கள் திருமறைக்காடு (வேதாரண்யம்) பழம்பெரும் பெரியகோவில் குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை காலை 9.05 முதல் 9.50 க்குள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை நாகப்பட்டினம் முழுதும் உள்ளூர் விடுமுறை! அருக…

இலட்சிய நடிகருக்கு, முதலாம் ஆண்டு நினைவேந்தல்

Image
மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2015) முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!

உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருத…

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?

உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.

எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் ம…

மருது பாண்டியர் நினைவேந்தல்!

உலக வரலாற்றில் சாதி மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்டோரை தங்களது மன்னனுக்காக தூக்கிலிடப்பட்ட ரத்த சரித்திரம் 1801ம் ஆண்டு அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழ் மண்ணில் அரசாண்ட அனைத்து சிற்றரசர்களையும் சாதி மத வேற்றுமையின்றி தமிழ் இனக்குழுக்களையெல்லாம் ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கு எதிராக, "வீரசங்கம்"என்ற பேரமைப்பு மூலம் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தமிழ்தேசியத்தின் முன்னோடி!

‪#‎மருதுபாண்டியர்‬

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக, திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோவில் வாசலிலும் "ஜம்புத்தீவு" போர் பிரகடனத்தை அறிவித்த முதல் சுதந்திர போரின் மாவீர்களின் வீரம் விதைக்கப்பட்ட நாள் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னோடியாக, "கொரில்லா போர்யுக்தி முறை"யை கையாண்டு வெற்றி கண்ட மாமன்னர்களின் மரணம் முத்தமிட்ட நாள், அக்டோபர் 24.

‪#‎மருதுபாண்டியர்‬

சிவகங்கை சமஸ்தானத்தை 1780 முதல் 1801 வரை ஆட்சி செலுத்தி தமிழ்தேசிய மாமன்னர்களான வெள்ளை மருது - சின்ன மருது இரு மருதரசர்களையும் சூழ்ச்சியின் வலைபின்னி கரடி கருத்த…

நாகையில்...

Image
( நாகை புதிய பேருந்து நிலையமுள்ள அவுரித்திடலில் வைக்கப்பட்ட பதாகை)


மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலுக்காக, நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகையில் 30 × 10 அடி அளவிலான பதாகையை வைத்தோம்.
இடம்: நாகப்பட்டினம் - புதிய பேருந்து நிலையம், அவரித்திடல்.

ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்!

லேப்டாப், டெக்ஸ்டாப், டேப்லெட், ஆண்ட்ராய்ட் - விண்டோஸ் மொபைல் என அனைத்து கீபோர்ட் மற்றும் கீபேட் லேஅவுட்கள் மூலமாக இணயத்தில் புரட்சி செய்யும் அனைத்து உறவுகளுக்கும் எம் இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்!

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு...

கமல் - ரஜினிக்கு மாற்றாக தெளிவாக, "நடிகர் சங்கம்ன்னு இருந்தாலே போதும்!"ன்னு சொன்ன கவுண்டமணியும், "தன்னை யாரோ அடிச்சிட்டாங்க!"ன்னு 'கோ' பட அஜ்மல் மாதிரி மீடியாவுக்கு முன்பாக நடித்த விஷாலுக்கு மாற்றாக, "எந்த அசம்பாவிதமும் நடக்கல"ன்னு நேர்மையாக சொன்ன அதே அணியின் கருணாஸூம், திரையின் முன்பு காமெடியன்களாக தோன்றினாலும், திரைக்கு வெளியே பண்பட்ட பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

'தேவர் மகன்' நாசர், 'சண்டக்கோழி' விஷால், 'பருத்தி வீரன்' கார்த்தி, 'பசும்பொன்' பொன் வண்ணன் என திரையில் தேவர்களாக நடித்தவர்களோடு, கருணாஸ் யென்ற தேவரும் பஞ்ச பாண்டவர்கள் அணி சார்பாக வெற்றி!

நடிகர் சங்கத்தேர்தலில் உள்ள அரசியல்!

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரை கூட மாற்ற வக்கில்லாதவர்கள், விஷாலை தெலுங்கு ரெட்டியாரென சொல்வது சுத்த அயோக்கியத்தனம். விஷால் அணியினரான பாண்டவர் அணியில் உள்ள மற்ற நால்வரில் நாசர் - தமிழ் இசுலாமியர், கருணாஸ் - அகமுடைய தேவர், பொன் வண்ணன் - கொங்கு செட்டியார், கார்த்தி - கொங்கு வெள்ளாளர் என அனைவருமே தமிழர்கள் தானே?

சரத்குமார், ஏற்கனவே நாடார் கட்சிக்கு தலைவர். அவர் மனைவி ராதிகா கூட வீரவேசமாக 'என் கணவர் தமிழரென' உசுப்பேற்றி பேட்டி கொடுத்திருப்பதை காண முடிகிறது. ஆனால் ராதிகாவின் மற்ற இரு முன்னாள் கணவர்களும் தமிழரா என்பது ஊருக்கே தெரியும். மூன்றாவது கணவருக்காக தமிழச்சி வேடம் போடும் இந்த ராதிகா, சிங்கள-தெலுங்கு கலப்பு தானே? மேலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவியும் தெலுங்கு நாயக்கர் தானே? இரண்டு அணியிலும் தமிழ் + தெலுங்கு கூட்டணி இருக்கத்தானே செய்கிறது? அப்பறமும் ஏன் இந்த கூச்சல்?
தமிழ் நாடாரான சரத்குமாருக்கு முன்பாக இத்தனை ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கரான விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக ஏற்று கொண்ட தமிழ்தேசிய வாதிகளுக்கு, விஷால் மட்டும் ஏன் …

அக்டோபர் 24ம் தேதியே மருதுபாண்டியர்களின் நினைவேந்தல்!

மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவேந்தல் நிகழ்வை அக்டோபர் 24ம் தேதியையும் முன்னிலை படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும், வெறும் உணர்ச்சி பூர்வ வாசகங்களை மட்டும் பயன்படுத்தாமல், அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கூட்டணியான வீரசங்கம் பற்றியும் பதாகை வாயிலாக பரப்புங்கள். தமிழரின் பாரம்பரிய போர் மரபான வளரி வீச்சு பற்றியும், ஜம்புதீவு பிரகடனம் பற்றியும் பதிவிடுங்கள். கொரில்லா போர்முறையை முதன்முதலாக பயன்படுத்திய போர் தந்திர நுட்பங்களையும், 1780 முதல் 1801 வரையிலான தங்களது ஆட்சிக்காலத்தில் மத வேறுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் செய்த திருப்பணிகளை பற்றியும் வெளியுலகிற்கு சொல்லுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

குடியையே கெடுத்து, குடியை தடுத்து!

Image
குடியை வைத்து குடியையே கெடுப்பதும், அந்த குடியை தடுக்க விருதையும் கொடுப்பதும் தான், நாடுபோற்றும் நான்கு ஆண்டு சாதனை!

மன்னர் பரம்பரையென்ற மாயைக்குள் தமிழ் சாதிகள்!

தன்னை பெற்றெடுத்த தாய் தகப்பனை பெற்றெடுத்த தாய் வழி பாட்டன் உறவை கூட முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளாத சமூகத்திடம் வரலாறு பற்றிய அறிவை எதிர்பார்ப்பது கடினமான விசயம்.
குறிப்பிடதக்க சில சாதிகளை சார்ந்தவனோ, குறிப்பிட்ட சில பட்ட பெயர்களை உடையவனோ ஒருசில பகுதிகளை உள்ளடக்கிய சிற்றரசை ஆண்ட மன்னனாக இருந்திருக்கலாம். ஆனால், அதே சாதியில் வறுமையில் வாடியவர்கள், அந்த மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே வாழ்ந்திருக்க கூடும். இன்றைய காலக்கட்டத்தில், ஒரே பட்டமானது ஏழெட்டு சாதிகளுக்கு மேலாக இருப்பதை பார்க்கிறோம்.
கேட்டால் மன்னர் பரம்பரை, மயிரு பரம்பரைன்னு உளற ஆரம்பிச்சிடுவாய்ங்க... முடிந்தால், சொந்த சாதி சனத்துக்கு, இரத்த சொந்தங்களான பங்காளி குடும்பத்தில் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தும் யாருக்காவது பொருளாதார உதவி செய்து மேலோக்கி வளர தோள் கொடுக்க முன் வரணும். அதெல்லாம் விட்டுட்டு, ஆண்ட பரம்பரைன்னு வெற்று கூச்சல் எதுக்கு? எவனாக இருந்தாலும், பிசி, எம்பிசி, எஸ்சின்னு எதாவதொரு கோட்டாவுல தானே அரசாங்கத்திடம் கையேந்தி வாழ்க்கையை நடத்துறீங்க. அப்பறம் என்ன டேஷ்க்கு அரச பரம்பரையென்ற அலப்பறையெல்லாம்... த்த…

வாழ்த்துகள் இளையதளபதி விஜய்!

ஏறக்குறைய அனைத்து அஜித் ரசிகர்களும், தங்களால் முடிந்த அளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக வன்மத்தை வார்த்தைகளால் விமர்சனம் என்ற பெயரில் எழுதமுடியுமோ, அந்தளவுக்கு எழுதி விட்டார்கள். விஜய் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. ஆனால் ஒருவன் எப்போது தடுமாறி கீழே விழுவான்?என காத்திருந்து மேலேறி மிதிக்கும் கேவலமான செயல்களை வெறும் லைக்குக்காகவும், தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவும் முயற்சிப்பதுதான், 'நடிகனின் ரசிகனல்ல; நல்ல மனிதனின் ரசிக'னென சொல்லிக்கொள்ளும் நபர்களின் செயலா?

ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றால் அது இயக்குனரின் திறமையென புகழும் அறிவுஜீவிகள், ஒருவேளை ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அது நடிகனை மட்டும் குறை கூறுவது எந்தவகையிலும் சரியென படவில்லை. பல அவமானங்களையும், பலரது விமர்சனங்களையும் தாண்டித்தான் இந்த உயரிய உட்ச நிலையை விஜய் அடைந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மீண்டும், தொடர்ச்சியாக மெகாஹிட் திரைப்படங்களை கொடுக்க, ரசிகனாக என் வாழ்த்துகள், இளைய தளபதி!

- இரா.ச.இமலாதித்தன்.

வரலாறு எனும் மாயை!

வரலாறு என்ற பெயரில் தங்களது பெயர்களின் மீதுள்ள இழிவை அழித்தொழிக்க புதுப்புது கதைகளை மேலோட்டமாக சொல்லி ஒருசில இனக்குழுக்கள் ஏதேதோ எழுதிக்கொண்டு பொய்யான பரப்புரை மாறிமாறி செய்து வருகிறது. அதையெல்லாம், தன் வரலாறு என்னவென்றே முழுமையாக தெரியாத ஒரு கூட்டம், தன் வரலாறும் களவு போகிறது என்பதை தெரியாமலே ஆமாமென தலையாட்டி கொண்டிருக்கிறது; தன் தலைக்குள் உள்ள அறிவை கொஞ்சம் கூட வரலாற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யாமலேயே!