வேதாரண்ய கோவில் குடமுழுக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) பெரிய கோவிலானது ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் மறைக்காட்டு மணாளர், இறைவி யாழைப்பழித்த மொழியாள். இக்கோவிலை அகத்தியர், விசுவாமித்திரர், வசிஷ்டர், கெளதமர், ராமர், முசுகுந்த சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் வழிபட்டு உள்ளனர்.

அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்த தலம். இராவணனை கொன்ற பாவம் போக்க வழிபாடு நடத்திய தலம். ஒருமுறை கோவிலுள் அணையும் நிலையிலிருந்த விளக்கு திரியை தூண்டிவிட்ட புண்ணிய பலனால், மறுபிறவியில் அகம்படி குலத்தோன்றல் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுக்க காரணமாக இருந்த தலம்.

திருவிளையாடல் புராணத்தை உருவாக்கிய பரஞ்சோதி முனிவர் அவதரித்த தலம். மரகதலிங்கமுள்ள சப்த விடங்க தலங்களில் இதுவும் ஒன்று. மேலும் நான்கு வேதங்களும் உருவான தலம் என்பதால் தான் வேதபுரீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.

இப்படியான பலப்பெருமைகளை பெற்ற எங்கள் திருமறைக்காடு (வேதாரண்யம்) பழம்பெரும் பெரியகோவில் குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை காலை 9.05 முதல் 9.50 க்குள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை நாகப்பட்டினம் முழுதும் உள்ளூர் விடுமுறை! அருகிலுள்ள அனைத்து உறவுகளும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்.

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!