ஒரு மதத்தை ஏற்பதும், துறப்பதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. மதம் மாறினால் தான் தன்னுடைய காதலையோ - அன்பையோ நிரூபணம் செய்ய முடியுமென்றால், அப்படியொரு மானங்கெட்ட தனத்தை, எந்தவொரு அயோக்கியத்தனமான கடவுள் சொல்லிருந்தாலும் அந்த கடவுளை செருப்பாலேயே அடிக்கலாம். நிச்சயமாக கடவுள் அப்படி சொல்லிருக்க முடியாது; ஏனெனில் கடவுளின் தூதுவனாக காட்டிக்கொண்டவனும், நானே கடவுளென்று சொல்லிக்கொண்டவனும் செய்த திருட்டுத்தனம் தான் இது. மற்றபடி பிறப்பிலேயே அறியப்படும் மதத்திலேயே இருப்பதா? அந்த மதத்தை விட்டு வெளியேறி வேறொரு மதத்தில் இணைவதா? மதமே எனக்கு தேவையில்லையென முற்றிலும் மதமற்றவராக வாழ்வதா? என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட நபர் தானே ஒழிய, எந்தவொரு மத அமைப்புகளும் இதை கட்டுப்படுத்த கூடாது; கட்டுப்படுத்தவும் முடியாது.
இமலாதித்தவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இமலாதித்தவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
29 நவம்பர் 2017
01 நவம்பர் 2017
28 ஜூன் 2017
இமலாதித்தவியல்
"எதற்கெடுத்தாலும் எல்லா இடங்களிலும் தன்னை மிகைப்படுத்தி கொள்கின்ற அனைத்துமே, தன்னை விரைவாகவே அழித்து கொள்ளும்; தன்னிருப்பை, தன்னுழைப்பை வெளிக்காட்டுவதற்காக மட்டுமென சொல்லிக்கொண்டாலும், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகின்ற புகழ் என்ற போதைக்கு, நிச்சயம் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் வல்லமை உண்டு. தனக்கான தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால், தன் அடையாளத்தை எல்லா இடங்களிலும் நிறுவிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் 'நான், நாங்கள், என்னுடைய, எனது, எமது, எங்கள், எங்களுடைய' என்ற எண்ணங்களே எதிர்மறை கருத்தியலை தனக்குத்தானே உருவாக்கி தன்னையே வீழ்த்தும். செயலை தொடர்ந்து, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் அநேகரோடும் இணைந்து வேடிக்கை போல, தன்னையும், தன் செயல்களையும் பார்த்து கடந்து செல்ல பழகிக்கொள்வதே, நிலைத்த வெற்றிக்கான ஒரே வழி."
- இமலாதித்தவியல்
07 நவம்பர் 2015
இமலாதித்தவியல் (ஆக - நவ 2015)
சூழ்நிலையை மட்டும் காரணம் சொல்லி தப்பித்து கொள்வதை விட, இதுநாள் வரை
நமக்கு இந்த வாழ்க்கை கற்று கொடுத்த அனுபவங்களை கொண்டு நமக்கான ஒரு
சூழ்நிலையை உருவாக்கி கொள்வதே வெற்றி பெற எளிதான ஒரே வழி!
ரத்த சொந்தங்களையெல்லாம் எதிரிகளாக்கி விட்டு உறவினர்களின் திருமண வீட்டிலோ, நெருங்கியவர்களின் துக்க வீட்டிலோ பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்லும் காலம் இது. பெத்தெடுத்த தாய் தகப்பனை கூட சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு தனக்கெல்லாம் தெரியுமென கடுஞ்சொல்லால் காயப்படுத்தி விட்டு, பொதுவெளியில் வேடம் தரித்து உலவும் உலகம் இது. இந்த போலிகள் சூழ் வாழ்வில் உண்மையை எளிதாக உணரவே முடியாது. பொய்யாக வாழ்வது தான் எளிது.
தனித்து இருப்பதற்கும், தனிமையாய் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனித்திருத்தல் நம்மை உலகறிய வைக்கும்;தனிமை நம்மையே உணர வைக்கும்!
இருக்கும் வரையிலும் அதன் அருமை புரியாமல், இழந்த பின்னால் வருந்த வைக்கும் எல்லா விசயங்களுக்கு பின்னாலும் ஈகோ மட்டுமே ஒளிந்திருக்கிறது!
தான் அடைந்த அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறக்காமல் மனதினுள் சேமித்து வைத்தவர்களுக்கு, வாழ்க்கையின் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட பின்னாலும் தலைக்கணமும், புகழ்போதையும் வருவதேயில்லை!
எண்ணங்களுக்கு தான் எத்தனை வலிமை? எதையும் தன் வசப்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அதை தீவிரமாக நம்புங்கள். இந்த உலகமே உங்கள் வசமாகும்!
மிகப்பெரிய அளவிலான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை பதில் கொடுக்க தோன்றினால், 'அமைதி' தான் ஆகச்சிறந்த பதில். கூடவே, அன்றாட வேலையை தொடர்ச்சியாக செய்து இயல்பாகவே இருப்பதும் தான்.
வெளிப்படை தன்மையில்லாத உண்மைகளும், தனக்கான முன்னுரிமை கொடுக்காத புறக்கணிப்புகளும், இருவர் பயணிக்கும் அன்பின் பாதையை ஒருநாள் பழுதாக்க கூடும்!

15 மார்ச் 2015
இமலாதித்தவியல்
001
இந்த உலகத்துல பணமும் பலமும் இருந்தா போதும்; எதையும் சாதிச்சிக்கலாம். பணமிருந்தால் கூலிக்கு பலம் கிடைக்கும். பலமிருந்தால் கூலியே பணம் தான்!
002
இங்க எல்லாருமே புகழுக்கு அடிமை. நீ எவனை ஏமாத்தணும்னு நினைச்சாலும், மொதல்ல உனக்கு புகழ தெரிஞ்சிருக்கணும்!
003
எதை கொடுக்கிறோம்ங்கிறது முக்கியமில்ல. ஆனால் அதை தகுதியானவங்க கிட்ட கொடுக்கணும். அதுல தான் சுவாரஸ்யமே இருக்கு!

07 மார்ச் 2015
இமலாதித்தவியல்!
”உங்களை யாரும் அவமானப்படுத்திட கூடாது என விரும்பினால், யாருக்குமே முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுங்கள்!”
- இமலாதித்தவியல்
- இமலாதித்தவியல்
03 மார்ச் 2014
பழகிக்கொள்!
முன்பே
கண்டுகளித்த கனவை நோக்கி நகரும் நாடோடிகள் நாம். உறக்கமும் - இறப்பும்
வேறுவேறென்று நம்பிக்கொண்டிருக்கும் அதிமேதாவிகள் நாம். காலம் என்பதை
உண்மையென கருதி நேரத்தை கணக்கிட்டு நாளை நோக்கி காலம் கழிக்கும் ஒவ்வொரு
நொடியும் என்றைக்கோ தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு விதியெனும் பெயரும்
உண்டு. இங்கே எதுவும் புதிதல்ல; எதுவும் பெரிதல்ல. ஒன்றுமே இல்லாத
ஒன்றிலிருந்து உருவாகி, மீண்டும் ஒன்றுமே இல்லாமல் தொலையும் மாயை தானே இந்த
சின்னஞ்சிறு வாழ்க்கை. அதை புரியாதவரையில் இங்குள்ள அனைத்தும் சுமையாகவே
இருக்கும். குறைந்தபட்சம் அதுவரை வாழ பழகிக்கொள்!
- ஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா
- ஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா
25 பிப்ரவரி 2014
இமலாதித்தவியல்
புறக்கணிப்புகள்
பெரும்பாலும் புரட்சியைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், பெரும்பாலான
புறக்கணிப்புகள் சரிவர புரிதல் கொள்ளப்படாததாலேயே மெளனித்து கிடக்கின்றன.
மெளனம் எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடையளித்தாலும், அந்த மெளனத்தின்
பதிலைத்தான் யாருமிங்கே சரிவர புரிதல் கொள்வதில்லை. ஏனெனில், புதிதாய்
உருவாகும் புரட்சியே அதுவரையிலும் மெளனமாகத்தான் கிடக்கின்றன. மெளனிப்பதே
ஒருவித கலையாகினாலும், முதலில் மெளனம் கலை; அப்போதுதான் புரட்சி பிறக்கும்;
பிறகு புறக்கணிப்புகளும் கலையப்படும்.
- இமலாதித்தவியல்
- இமலாதித்தவியல்
01 பிப்ரவரி 2014
இமலாதித்தவியல் - முன்னேற்றம்
எதார்த்தம்
என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி நாம் நகரவே
முடியாது. கூட்டமாக இருக்கும் போது, எல்லாமும் நமக்கு சாதகமானது போலத்தான்
தெரியும். தனித்து நின்று சுயத்தை உணரும்போதுதான், நம்முடைய பலவீனமும் -
பலமும் தெரியும். அந்த நிதர்சனத்தை உணரும் தருவாயில், நாம் பல வாய்ப்புகளை
நழுவ விட்டிருப்போம் என்பதும் புரியவரும். எதுவாகினும் தனி மனித
முன்னேற்றமில்லாமல், சமுதாய முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை. எனவே, கடந்தகால
மாயையிலேயே நிகழ்காலத்திலும் வாழாமல், எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வும்
நமக்கு வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறையும், நம்மை நினைத்து
கொஞ்சமாவது பெருமிதப்படும். எனவே, முதலில் நீ முன்னேறு; அதன் பிறகு
ஒட்டுமொத்த சமுதாயத்தையே முன்னேற்றலாம்.
- இமலாதித்தவியல்
- இமலாதித்தவியல்
25 ஜனவரி 2014
இமலாதித்தவியல்
01.
வெளிப்படையாகவே பேசிப்பாருங்கள், நட்பு வட்டம் குறைலாம். ஆனால், குறைந்த பின்னால் உள்ள கூட்டம் நீடித்து நிலைத்திருக்கும். புகழ்வதால் மட்டுமே நட்பை வலுப்படுத்த முடியாது. விமர்சனங்களை நேரடியாக சொல்லி பழகும் போதுதான், பழக்க வழக்கமும் இன்னும் பலமாகும். எண்ணிக்கை முக்கியமல்ல; நம்பிக்கைத்தான் மூலதனம் நட்பில்!
02.
வெறும் மெளனமோ அல்லது வெற்று கூச்சலோ, எதுவாகினும் கண்டிப்பாக எதையும் செய்துவிடாது. வீர வேக விவேகம் கூடிய சரியான முன்னெடுப்பு வேண்டும். அப்போதுதான் வெற்றி நம் வசமாகும்!

07 ஜூன் 2011
இமலாதித்தவியல்!
☼ என்னுள் உருவான சில கருத்துகள் உங்களது கருத்துகளோடு ஒத்துபோகாமல் இருக்கலாம். என்ன செய்ய, உங்களுக்கு ஒத்துபோகாது என்பதால் என்னுள்ளான கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதென்கிறது மூளையின் வழியாக மனது...!
☼ நான் நானாகவே இருக்க முயலும் நேரமெல்லாம் நீ ஏன் நீயாய் இல்லாமல்
என்னை நீயாக்க முற்படுகிறாய்...?
☼ காலம் கைகூடும் வரை காத்திருப்போம்...நமது வலியை அவர்களுக்குள் திணித்துவிட...!
☼ உன்னை புகழும் இதழ்களுக்கு தெரிந்திருக்க "வாய்"ப்பில்லை;
நீ என்றாவது ஒருநாள் அவைகளுக்கு அடிமை ஆகிவிடு"வாய்" என்பது...!☼ எழுத்தின் வழியே, தான் சொல்வது எல்லாமே சரியாகத்தான் இருக்கிறதென்று நினைப்பதுவும், மற்றவர்களை விட தனக்கு மட்டுமே எல்லாமே தெரிந்திருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்பதும் கூட மூடத்தனமே...!
☼ பெண்களின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக பெரும்பாலான ஆண்கள், என்னன்னமோ (!@#$%^&*) செய்கிறார்கள். # முடியல
இந்த விசயத்தில் மட்டும் நான் சிறுபான்மையானவனாகவே இருக்க முயல்கிறேன்...!
☼ பல கோடிகளை ஊழல் செய்து கொள்ளை அடித்ததை செய்தியை வெளியிட்டதற்காக, இன்னும் பல கோடிகளை நஷ்ட ஈடாக கேட்பவன் கேடி* தானே...?
☼ ஒரு வெற்றியாளன் பின்னால் பெண்கள் இருப்பார்களா ? இல்லையா ? என்பது தெரியாது; ஆனால், நிச்சயமாக, அவன் பின்னால் தான் நிச்சயம் ஒரு கூட்டம் இருக்க முடியும்,அது ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி. இன்னும் சொல்லபோனால், தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பது கூட வெற்றி தான்...!
☼ எல்லோரது பேச்சையும் கேட்பதும், யார் பேச்சையுமே கேட்காமல் இருப்பதும் கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம்...!
☼ நீயும் இன்று, மீண்ட என்னை, மீண்டுமிங்கே, விளையாட்டு பொருளாக்கி, விளையாடி பார்க்கிறாயோ இறைவா...?
☼ மனதின் வலி ஒரு சிலருக்கு, யாருக்காகவோ போடப்படும் தூண்டிலாக தெரியலாம்...! ஆனால் இங்கே அந்த மனதுதான் மீன் என்பது யாருக்கு தெரியும்...?
☼ நான் உன்னை மறந்து விட நீ உதவி செய்யலாம்.ஆனால் உன் நினைவுகளை மறந்து விட யாராலுமே எனக்கு உதவி செய்ய முடியாதே...! என்ன செய்ய...?
☼ நம்பிக்கை மட்டும் வாழ்க்கை யல்ல...எதை/யாரை/எப்போது நம்புவது என்பதுதான் வாழ்க்கை...!
☼ ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்றை திருத்தியமைக்க எல்லோராலும் முடிவதில்லை... அப்படி திருத்தினாலும், தீர்மானிக்க பட்ட அந்தவொரு இறுதி முடிவை யாராலுமே மாற்ற முடிய வில்லை...! இதுதான் விதியோ...?
☼ ஒவ்வொரு முடிவுக்குள்ளும் ஏதோவொரு ஆரம்பம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தெரிந்த பின்னும்... என் முடிவு எங்கேயென்று என்னால் முடிவு செய்ய முடியவில்லையே ...! நான் வந்த ஆரம்பத்தை ஆராய்ந்து பார்த்தாலும் அறிந்திட முடியவில்லையே...! வரப்போகிற ஆரம்பத்தையும் கூட கணிக்க முடியவில்லையே என் இறைவா...! ஏன் இறைவா...? ஆரம்பம் எது...? முடிவு எது...? ஆரம்பம் எங்கேயென்று ஆராயும் நான் அதன் முடிவை அறியும் முன்னரே எனக்கொரு முடிவை கொடுத்துவிடுவாயோ...? இல்லை உன் முடிவை என்னிடம் விரைவிலேயே சொல்லிவிடுவாயோ...?
☼ சேவை செய்ய கொஞ்சம் பணமும்,நல்ல மனமும் மட்டுமே போதுமானது...! சேவை செய்ய தலைவன்,தொண்டன் யென்ற பாகுபாடு தேவையில்லை.மேலும், உதவி செய்ய பதவி என்பதே தேவை இல்லாத ஒன்று...! அப்பறம் பதவி வந்த பிறகு, உதவி செய்வதை மறந்து தன் பதவியை தக்க வைக்கவே பல பேரு உதவியை நாட வேண்டி வரும்...!
☼ வியப்பான உண்மை என்னவென்றால் எல்லா நட்பும் ஏதோ ஒரு தேவைக்காக உருவாக வில்லை.அப்படி தேவைக்காகவே உருவாவதற்கு நட்பு என்று அர்த்தம் கொள்வதும் சரியில்லை.மாறாக தேவை முடிந்தும் எவ்வித தேவையே இல்லாமல் தொடருவதுதான் நட்பாய் இருக்க முடியும்...!
☼ எட்டப்பன் பலபேரு இருக்கும் வரை...ஈழம் எட்டாக் கனியாகத்தான் இருக்கும்...!
☼ நீ என்றிலிருந்து உனக்கான சுய விளம்பரங்களை உன்னாலும்,உன் நட்பு வட்டங்கள் மூலமாகவும் தேட ஆரம்பிக்கிறியோ அன்றிலிருந்து உன்(புகழ்,பெருமை, நட்பு) அழிவுக்கான நாளும் தீர்மானிக்கப் படுகிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்...!
☼ விதியை மதியால் வெல்ல முடியாது. சாமர்த்தியம் இருந்தால் போராடி மட்டுமே பார்க்க முடியும்.வெல்வதற்கு விதி என்பது ஒரு போட்டி அல்ல.அது ஏற்கனவே எனக்காகவே பிரத்யோகமாக அமைக்கப்பட்ட ஒருவித பயணம்.ஒருசில பகுதியில் கரடு முரடாகவும்,வேறு சில பகுதியில் ரம்மியமாகவும் இருந்தி ருக்கிறது.பயணத்தின் போது இடைஞ்சலான சமயங்களில் மாற்று பாதையை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த மதி உதவுகிறது. ஆனால், பயணத்தையோ அந்த பயணத்தின் முடிவையோ இந்த மதியினால் முற்று முழுதாக மாற்ற முடியவில்லை என்பதை நான் பல முறை உணர்ந் திருக்கிறேன். எல்லாம் விதி வசம்...!
☼ விதி என்றவொன்று என்னோடு எப்படி யெல்லாம் விளையாடி விட்டு போகிறது ...! இறைவா...! நீயும் இதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறாயா...? உன்னையே விதி ஆட்டிவிக்கும் போது மிக சாமானியனான என்னால் மட்டும் எப்படி விதியோடு விளையாடி வென்று விட முடியும் என்று எண்ணி விட்டாயோ...?
☼ இறைவா...! எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதே இன்பம் என்பதை நான் அறிந்திருந்தாலும் ... எதையுமே எதிர்பார்க்காமல் வாழ முடியாது என்பதையும் நீயெனக்கு அறிய வைத்திருக்கிறாயே ...! :( அப்படியெனில் எப்போதும் துன்பத்தோடு தான் வாழவேண்டுமா...?ஏன் இறைவா...?
☼ அன்றைய காலத்து வரலாற்று பெருமை தேவையா இல்லையா என்பதை விவாதம் செய்வதை விட, நீ என்ன செய்து நாளைய சந்ததியினருக்கு இன்றைய காலக்கட்டத்தை வரலாற்று பெருமையாக மாற்றப் போகிறாய் யென்று தினமும் என்னையே நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேன்...!
☼ இங்கே பலருக்கு வீரம் என்பது அடி உதை மட்டும் தான். அதுமட்டுமே அவர்களது எண்ணத்தில் ஊறி போய் இருக்கிறது.ஒன்றின் அழிவு மட்டுமே இன்னொன்றின் வீரம் என்பது தான் அவர்களின் வரையறை.மேலும், ஒன்று அழியும் நிலையில் மற்றொன்று உருவெடுக்கும் என்பதை அறிய மறந்து விடுகிறார்கள்...!
☼ வீரத்தையோ, வீரம் சார்ந்த அடையாளத்தையோ மேலும் வீரத்தை மையப்படுத்திய வேறு நிகழ்வையோ தனிப்பட்ட எந்தவொரு இனக்குழுவும் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.வீரம் எல்லோருக்கும் பொதுவான ஒரு குணாதிசயம்.வீரம் என்பது ஒரு பொதுசொத்து;அதை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது...!
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)