இயக்குனர் சிகரத்தின் இழப்புபத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது, பிலிம்பேர் விருது என பல தரபட்ட விருதுகளை பெற்ற இயக்குனர் திரு கே.பாலச்சந்தர் திருவாரூரிலுள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பதில் டெல்டா பகுதியை சார்ந்தவன் என்ற முறையில் என்னைப்போன்ற பலருக்கும் பெருமைக்குரிய விசயம். உலக வரலாற்றிலேயே மேடை நாடகம் - வெள்ளித்திரை - சின்னத்திரை என மூன்று வித பரிமாணங்களிலும் கால் பதித்து வெற்றி கண்ட ஒரே படைப்பாளி திரு கே. பாலச்சந்தர் மட்டுமே. மேலும், உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உள்பட மேஜர் சுந்தரராஜன், சார்லி, எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், நாசர், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சரத்பாபு என பல்வேறு கேரக்டர் ஆர்டிஸ்ட்களை அறிமுகப்படுத்திய பெருமையும் திரு கே.பாலச்சந்தரையே சாரும். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சமூகத்தில் பெருமளவு அதிர்வுகளை உருவாக்கக்கூடிய திரைக்கதைகளை உருவாக்கி சினிமாத்துறையில் தனக்கான ஒரு தனித்துவத்தை கடைசிவரையிலும் கையாண்டு வந்தார். அப்படிப்பட்ட இயக்குனர் சிகரத்தின் மரணமானது கலையுலகுக்கு மாபெரும் இழப்பை கொடுத்திருந்தாலும், வயது மூப்பு காரணமான ஏற்படும் இறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு என்பதால் அவரது ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

சாதிப்பெயரை நீக்கினால் சாதி ஒழிந்து விடுமா?


 கடந்த ஞாயிறு (21.12.2014)அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய இரு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

001. ’தேசியம் காத்த செம்மல்’ - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

A. பசும்பொன் முத்துராமலிங்கர்
B. காந்தியடிகள்
C. திருப்பூர் குமரன்
D. வீரபாண்டிய கட்டபொம்மன்

002. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” - என எடுத்துரைத்தவர்

A. சுபாஷ் சந்திர போஸ்
B. பசும்பொன் முத்துராமலிங்கர்
C. வீரபாண்டிய கட்டபொம்மன்
D. வேலுத்தம்பி

இந்த இரு கேள்விகளுக்கும் விடையானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது தான். ஆனால் அவரது முழு பெயரையே சுருக்கி பசும்பொன் முத்துராமலிங்கர் என குறிப்பிட பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கீழே பதிவிட்டுள்ளேன்.

01. இராமலிங்கம் பிள்ளை
02. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
03. எஸ். வையாபுரிப்பிள்ளை
04. அ. சிதம்பரநாத செட்டியார்
05. வேங்கட ராஜூலு ரெட்டியார்
06. வைத்தியநாத சர்மா
07. வெ.சாமிநாத சர்மா
08. சி.வை. தாமோதரம் பிள்ளை
09. வேதநாயகம் பிள்ளை
10. வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
12. ஆளுடைய பிள்ளை
13. வ.வே.சு. ஐயர்

இந்த பெயர்களிலுள்ள் பிள்ளை, செட்டியார், ரெட்டியார், ஐயர் என்பதெல்லாம் சாதிப்பெயர் இல்லையா? அதையெல்லாம் அனுமதித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ’தேவர்’ என்ற பெயரை மட்டும் புறக்கணித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? சட்டமோ விதியோ அது அனைவருக்கும் பொதுவானதாக தானே இருக்க வேண்டும்? அப்பறம் ஏன் ஒரு சாரருக்கு மட்டும் எதிரானதாக இருக்கின்றது? ஒரு தேசிய தலைவரின் பெயரை சுருக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மேலும், அதே வினாத்தாளில் நேரு, படேல், போஸ் என்ற பெயர்களை கொண்ட தேசியத்தலைவர்களின் துணைப்பெயர்களான சாதி / பட்டப்பெயர்களை நீக்காமல் விட்டது ஏன்? தேவர் பற்றாளர்கள் இதற்கெல்லாம் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்க முடியாதா? தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இதைப்பற்றி விளக்கம் கேட்க முடியாதா? குறைந்தபட்சம் TNPSC அலுவலகத்தையாவது இதற்கான காரணத்தை கேட்டு கண்டனத்தை பதிவு செய்யலாமே? அதை விட்டுவிட்டு இணையத்தில் ”தேவன்டா” என்ற வெற்றுக்கூச்சல்களால் என்ன சாதிக்க போகிறோம்? களத்திற்கு போராட வராதவரை, இன்று பசும்பொன் பெருமகனாரின் பெயரை சுருக்கியவர்கள் நாளை எதை வேண்டுமானாலும் துணிச்சலாக செய்வார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேள்வி கேட்க துணிவும் உணர்வும் உள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.

Phone: +91- 44 - 25300300

மின்னஞ்சல் மூலமாகவும் கேள்வி கேட்க விருப்பமிருந்தால் coetnpsc.tn@nic.in , contacttnpsc@gmail.com இந்த இரு மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். வெறும் தேவன்டா என சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள் இந்த பதிவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்லலாம். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

சிமென்ட் சிக்கல்!

நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது இனி எட்டாக்கனியே :(

சனி பகவானே வருக!

இரண்டரை வருடங்களுக்கு முன்பாகவே ஏழரையை ஆரம்பித்த போதிலும், இன்று முதல் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு விருச்சிக ராசிக்குள் முழுமையாக கால் பதித்திருக்கும் சனி பகவானை வருக வருகயென வரவேற்கிறோம்!

- விருச்சிகராசி விழுதுகள்

ரஜினியும் சாதியில் ஷத்ரியனாம்!

ஆரியம் - திராவிடம் - தலித்தியம்!

கேள்வி:

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?

பதில்:


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும். தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது. ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான். ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது; தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது. ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு, ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்!

- இரா.ச.இமலாதித்தன்

தென் தமிழகத்தில் நடந்தேறும் தொடர்ச்சியான படுகொலைகளுக்கு தீர்வு என்ன?

01. அஜீத் பட டீசருக்கான அதிக லைக்குகளால் மகிழ்ச்சி.

02. ஈ.வெ.ரா. விசயத்தில் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு.

03. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கு கொள்ளும் முதல் சட்டபேரவை என்பதால் பெருமிதம்.

04. மு.கருணாநிதிக்கு இருக்கை தரவில்லை என்ற கோபம்

இப்படியாக தேவரின இளைஞர்கள் அரசியல்-சினிமா என ஈர்க்கப்பட்டு கிடக்கும் வேளையில், நேற்று(05.12.2014) 20 வயதுடைய எம்.முத்துராஜா என்ற தேவர் சாதியை சேர்ந்த ஓர் இளைஞனை 20 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், கோடாறியால் தலை, உடல் என கோராமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. காரணம் என்னவெனில் 2012ம் ஆண்டின் நடைபெற்ற தேவர் ஜெயந்தி அன்று தேவரின இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கொலை செய்தவனை, விசாரணைக்கு அழைத்து வரும்போது பழிக்கு பழியாக கொலை செய்தனர். அந்த பழிக்கு பழியான கொலை நடந்த அதே நாளில், யாராவது ஒரு தேவர் சாதியை சேர்ந்த ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்ற குரூர நோக்கத்தோடு நேற்று இந்த படுகொலை நடந்தேறியுள்ளது.


இதே மாதிரி தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டால் லட்ச கணக்கில் உடனடியாக நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையென அரசாங்கம் உடனடியாக பட்டுவாடா செய்யும். கூடவே, வினவு போன்ற நக்சல்பாரி இணையங்களும், நடுநிலைவாதியென்ற முகமூடிகளுடன் உலவும் எழுத்தாளர்களும், பக்கம் பக்கமாக கண்டனங்களை தொடர்ச்சியாக பதிவு செய்வார்கள். செய்தி சேனல்களும் ஃப்ளாஷ், ஸ்க்ரோலிங் என லைவ் ரிப்போர்ட்டை கொலை களத்திலிருந்து போட்டிப்போட்டு கொடுக்கும். மேலும், உண்மை அறியும் குழு, மனித உரிமைகள் அமைப்பு, தலித் சாதி அமைப்புகள், தேசிய தலித் வாரியம் என பலரும் களத்தில் சாதிவெறியென கூச்சலிட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

ஆனால், வழக்கம் போல விபச்சார ஊடகங்கள் மெளனித்திருக்க, சமூக ஊடகங்களில் தேவர் சாதி இளைஞர்கள் மட்டும் உணர்ச்சி பொங்க பதிவிட்டு பகிர்வார்கள் என்பது இந்த சம்பவத்தின் பின்னாலும் உணர முடிகின்றது. ஆனால் முக்குலத்து சாதி அமைப்புகள் ஒவ்வொரு ஊருக்கும் தெருவுக்கு தெரு இருந்தாலும், அக்டோபர் மாதம் மட்டும் வாடகைக்கு வண்டி பிடித்து பசும்பொன் வந்து போவது தான் அவர்களின் கொள்கை என்பதால், இந்த சம்பத்தின் பின்பும் எந்தவொரு பெரிய சாதி அமைப்பும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. இதுவும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்பதால் எந்தவித சலனமும் தேவர் சாதி அமைப்புகள் மீது எழவில்லை.


தென் தமிழகத்தில் பழிக்கு பழி, கொலைக்கு கொலை என தொடர்ச்சியாக அரங்கேறினால், பல அப்பாவி இளைஞர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதை யாராலுமே தடுக்க முடியாது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாராவது ஒருவரால் கொலைக்கு சம்பந்தபட்டவர்கள் பழி தீர்க்கப்பட்டு கொண்டே இருப்பர்கள். இதற்கான நிரந்தர தீர்வை திராவிட தலைமை கொண்ட எந்த அரசாங்கமும் நிச்ச்யமாக எடுக்காது. ஏனெனில் இதை வைத்து தானே, அவர்களால் தென்னகத்தில் அரசியல் செய்ய முடியும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் - பார்வார்ட் ப்ளாக் மோதலானது கட்சிகளை தாண்டி, இன்று தேவர் - பள்ளர் மோதலாக சாதிவெறியாக உருமாறி நிற்கின்றது. எனவே இந்த சாதிய மோதலுக்கான நிரந்தர தீர்வை தேவர் மற்றும் பள்ளர் சாதியை சேர்ந்த இளைஞர்களால் மட்டும் தான் எட்ட முடியும். மற்றபடி எல்லா சாதி அரசியல் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தான் தேட முயல்வார்களே தவிர, நிரந்தர தீர்வை நிச்சயம் எடுகக் விட மாட்டார்கள். இதை வருங்கால இளைய தலைமுறையினர் புரிதல் கொண்டால் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே கொலை செய்யப்படும் அப்பாவிகளை இனியாவது காப்பாற்ற முடியும். ஜெய்ஹிந்த்

- இரா.ச.இமலாதித்தன்

நாம் தமிழரின் சாதி ஒழிப்பு!நீதியரசரான கிருஷ்ணய்யரை பெயருக்கு பின்னால் அய்யர்ன்னு சேர்த்து சொல்றதை தப்புன்னு சொல்லல. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்கி முத்துராமலிங்கனார்ன்னு சொல்லும்போது தான் உங்க சாதி ஒழிப்பு கொள்கையில் காறி துப்ப தோணுது. அட த்தூ!

தந்தி டிவியின் அதிமுக ஆதரவு!

அ.தி.மு.க.வுக்கு வக்காலத்து வாங்கி ஊடகம் நடத்த கூடாது! - ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., தி.மு.க.
தந்திடிவி விவாதத்தில் ரெஙக்ராஜ் பாண்டேவிடம் ஜெ.அன்பழகன் பின்னி பெடலெடுக்கிறார்.
J Anbazhagan Mla

பொதுவாக நேர்காணல், விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் Rangaraj Pandeyவை எனக்கு பிடிக்கும். ஆனால் Thanthi TVயின் அ.தி.மு.க. ஆதரவு கொள்கைக்காக ரெங்கராஜ் பாண்டேவும் சுயமிழந்து தடம் மாறுகிறாரே என்ற வருத்தமும் என்னுள் உண்டு. எந்த சார்புமின்றி நடுநிலையின் பக்கம் மாறுங்க பாஸூ!

பங்காளிகளுக்காக!

பங்காளி பங்காளின்னு உயிரையே கொடுக்கிற மாதிரி பாசத்தை பொழியிற பாதி பேரு தன்னோட கல்யாணதுக்கு கூட அழைப்பு கொடுக்க மாட்டாய்ங்க. அப்பறம் என்ன மயிருக்கு இவிய்ங்கள நான் நம்பணும்? ஆர்குட் முதல் ஃபேஸ்புக் வரை பல பேரை பல வருசமா பார்த்து கடந்தாச்சு.

ஒரு பங்காளி என்ன பண்ணினாருன்னா, நாகை டவுன்ல உள்ள என் வீட்டையெல்லாம் வசதியாக கடந்து 20 மைல்களுக்கு அப்பாலுள்ள, ஓர் அரசியல் தலைவருக்கு தன்னுடைய கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுத்தாரு. பிறகு எனக்கு போன்ல கூப்பிட்டு கல்யாணத்து அழைப்பு கொடுத்தாரு. அவர் கல்யாணத்துக்கு நான் போகல. ஏன் போகலைன்னு சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல. நாகையில உள்ள எளியவனான என வீட்டுக்கு நேர்ல வந்து பத்திரிகை கொடுத்தால் தனக்கு அவமானம் என நினைத்த அவர், என் ஏரியாவை கடந்து டவுனுக்கு வெளியே உள்ள அரசியல் தலைவருக்கு நேரில் சென்று பூ பழமெல்லாம் கொடுத்து பத்திரிகை வைத்து வந்தார். அந்த பங்காளிக்கு, காசு பணம் பேரு புகழெல்லாம் வரும் போகும் என்பதும், உண்மையான நட்பு எல்லாரிடமும் வருவதில்லை என்பதும் தெரியாமல் போய்டுச்சேன்னு நினைச்சேன்; சிரிச்சேன்.

இலவச அறிவுரை:

ஃபேஸ்புக் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற மொத்த பேருல வெறும் 10%க்கும் குறைவான ஆளுங்க கிட்ட மட்டும் தான் நம்ம வாழ்க்கையில நடக்குற நல்லது கெட்டதுக்கு உரிமையோட கூப்பிட முடியுமும். மத்ததெல்லாம் சும்மா அண்ணே, தம்பி, பங்காளி, சகோ, ப்ரோ, ஜி, பாஸுன்னு வாயால வடை சுடுற கேஸ் தான். அதுனால சோசியல் நெட்வொர்க் பழக்க வழக்களை வச்சு நட்பின் தரத்தையும், உறவின் தரத்தையும் எடை போட கூடாது.

- இரா.ச.இமலாதித்தன்

வைகோ எனும் வைராக்கியமான அரசியல்வாதி!


கருணாநிதிக்கு அரசியலில் துரோகம் செய்திருக்கட்டும்; பிறப்பால் தெலுங்கராக இருக்கட்டும். வாக்கர் என்றும், நடிகனென்றும், ராசியில்லாத ஆளென்றும் இந்த மாதிரியான பல விமர்சனங்களை திரு. வைகோ மீது வைத்தாலும், அவர் மாதிரியான ஒரு நேர்மையான போராட்ட குணமுள்ள, பதவி - பணம் ஆசையற்ற, கொள்கைக்காக சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக தமிழ் - தமிழர் சார்ந்த பிரச்சனையில் யார் வந்தாலும் வராவிட்டாலும் முதல் எதிர்ப்பை பதிவு செய்து போராடும் குணமுள்ள ஒரு தலைவரை என் சமகாலத்தில் திரு வைகோவை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை.

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அரசியல் தலைவர்களில் திரு வைகோவும் ஒருவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரான வைகோவை தமிழகத்தை விட அண்டை மாநிலங்களும், அண்டை நாடும் தான் தங்களின் எதிரியாக பாவிக்கின்றது. ஆனால் இங்கே என்னவென்றால், அவரை அவதூறாக பேசி சிற்றின்பம் அடைகிறார்கள்.

“உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் உன் இனத்தின் எதிரி குலைநடுங்குகிரானோ அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன்.”

உயிரோட இருக்கும் போது யாரையும் மதிக்க மாட்டாய்ங்க. இறந்த பின்னால் காலம் முழுவதும் நீலிக்கண்ணீர் வடிப்பாய்ங்க. இந்த தமிழனை எவனாலும் புரிஞ்சிக்கவே முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

ஈ.வெ.ரா. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?

எப்போதோ ஈ.வெ.ரா.வை அவதூறாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா மீது இரு பிரிவுகளில் இப்போது வழக்கு போட்டிருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வைகோ பற்றி பேசியதற்கான எதிர்வினையா இதுவென தெரியவில்லை. ஆனால் இதிலுள்ள ஒற்றுமை என்னவெனில் ஈ.வெ.ரா.வும், வைகோவும் நாயக்கர் சாதியை சார்ந்தவர்கள் என்பது தான். மேலும், திராவிடர் கழகம் என்ற பெயரில் ஊர் ஊராக மேடை போட்டு சகட்டு மேனிக்கு இவனே, அவனேன்னு ஹிந்து மத கடவுளையே (மட்டும்) இழிவு படுத்தும் போது அப்போதெல்லாம் யாரும் இவர்கள் மீது வழக்கு கொடுத்த மாதிரி தெரியவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழனை முட்டாள், அயோக்கியன், தகுதியற்றவன் எனவும் பேச்சிலும் - எழுத்திலும் விசத்தன்மையான அவதூறுகளை தெளித்த ஈ.வெ.ரா. ஒன்னும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே. இந்த ஈ.வெ.ரா விசயத்தில் ஹெச்.ராஜா மீது தவறேதுமில்லை. அப்படி அவர் மீது தவறென்றால் காலம் காலமாக ஹிந்து மத கடவுள்களை மட்டும் ஒருமையில் பேசி வரும் ஈ.வெ.ரா.வை பின்பற்றும் அனைத்து திராவிடர் கழகங்களையெல்லாம் தமிழகத்திலிருந்து ஹிந்து மத உணர்வாளர்கள் தான் காலி செய்ய வைக்க வேண்டும்.