இயக்குனர் சிகரத்தின் இழப்புபத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது, பிலிம்பேர் விருது என பல தரபட்ட விருதுகளை பெற்ற இயக்குனர் திரு கே.பாலச்சந்தர் திருவாரூரிலுள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பதில் டெல்டா பகுதியை சார்ந்தவன் என்ற முறையில் என்னைப்போன்ற பலருக்கும் பெருமைக்குரிய விசயம். உலக வரலாற்றிலேயே மேடை நாடகம் - வெள்ளித்திரை - சின்னத்திரை என மூன்று வித பரிமாணங்களிலும் கால் பதித்து வெற்றி கண்ட ஒரே படைப்பாளி திரு கே. பாலச்சந்தர் மட்டுமே. மேலும், உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உள்பட மேஜர் சுந்தரராஜன், சார்லி, எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், நாசர், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சரத்பாபு என பல்வேறு கேரக்டர் ஆர்டிஸ்ட்களை அறிமுகப்படுத்திய பெருமையும் திரு கே.பாலச்சந்தரையே சாரும். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சமூகத்தில் பெருமளவு அதிர்வுகளை உருவாக்கக்கூடிய திரைக்கதைகளை உருவாக்கி சினிமாத்துறையில் தனக்கான ஒரு தனித்துவத்தை கடைசிவரையிலும் கையாண்டு வந்தார். அப்படிப்பட்ட இயக்குனர் சிகரத்தின் மரணமானது கலையுலகுக்கு மாபெரும் இழப்பை கொடுத்திருந்தாலும், வயது மூப்பு காரணமான ஏற்படும் இறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு என்பதால் அவரது ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment