03 டிசம்பர் 2014

வைகோ எனும் வைராக்கியமான அரசியல்வாதி!


கருணாநிதிக்கு அரசியலில் துரோகம் செய்திருக்கட்டும்; பிறப்பால் தெலுங்கராக இருக்கட்டும். வாக்கர் என்றும், நடிகனென்றும், ராசியில்லாத ஆளென்றும் இந்த மாதிரியான பல விமர்சனங்களை திரு. வைகோ மீது வைத்தாலும், அவர் மாதிரியான ஒரு நேர்மையான போராட்ட குணமுள்ள, பதவி - பணம் ஆசையற்ற, கொள்கைக்காக சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக தமிழ் - தமிழர் சார்ந்த பிரச்சனையில் யார் வந்தாலும் வராவிட்டாலும் முதல் எதிர்ப்பை பதிவு செய்து போராடும் குணமுள்ள ஒரு தலைவரை என் சமகாலத்தில் திரு வைகோவை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை.

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அரசியல் தலைவர்களில் திரு வைகோவும் ஒருவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரான வைகோவை தமிழகத்தை விட அண்டை மாநிலங்களும், அண்டை நாடும் தான் தங்களின் எதிரியாக பாவிக்கின்றது. ஆனால் இங்கே என்னவென்றால், அவரை அவதூறாக பேசி சிற்றின்பம் அடைகிறார்கள்.

“உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் உன் இனத்தின் எதிரி குலைநடுங்குகிரானோ அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன்.”

உயிரோட இருக்கும் போது யாரையும் மதிக்க மாட்டாய்ங்க. இறந்த பின்னால் காலம் முழுவதும் நீலிக்கண்ணீர் வடிப்பாய்ங்க. இந்த தமிழனை எவனாலும் புரிஞ்சிக்கவே முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக