தேவர் ஜெயந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவர் ஜெயந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 அக்டோபர் 2015

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் சொல்லுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பசும்பொன் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனிதர் குல மாணிக்கத்தை, மறவர் குல மாணிக்கம் என்றீர். பொதுவுடைமை சித்தாந்தவாதியை, பெண் பித்தர்களோடு ஒப்பீடு செய்தீர். விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் என்றவரை, கையில் அரிவாள் கொடுத்தீர். பெண்களின் கூந்தல் மீது கால் வைக்கமாட்டேனென்று சொன்னவரை, கால் மேல் கால் போட்டு எடிட் செய்தீர். உடல் முழுக்க திருநீர் சந்தனத்தோடு மாலை அணிவித்து இருந்தவருக்கு, கிலோ கணக்கில் தங்க சங்கிலிகளை கொடுத்தீர். ஆங்கிலேயன் அஞ்சி வாய்பூட்டு சட்டம் போட்டதை, உங்கள் வாயாலே அசிங்க படுத்தினீர். சாதி வேறுபாடின்றி தன் சொத்தான 32 கிராமங்களையே பகிர்ந்த ஈகியை, தன் வாழ்நாளில் பெண் வாசமின்றி வாழ்ந்த யோகியை, உங்கள் செயல்களாலேயே பாவி ஆக்கினீர். அந்நியரிடமிருந்து நாட்டை காக்க இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பியவரின் படத்தை வைத்து, தமிழர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கினீர். உலக அரசியல் பேசியவரை, உள்ளூர் சாதி அரசியலுக்கு பயன்படுத்தினீர். தேசியத்தலைவனை, உங்க அரசியல் போதைக்காக சாதி தலைவனாக்கினீர். இன்னமும் என்ன செய்ய காத்திருக்கிறீர்?! உங்க அரசியல் அரிப்புக்கு தேவரை சொறியாதீர்.

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

29 அக்டோபர் 2014

தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

சுதந்திர போராட்ட வீரரும் - ஆன்மிக வாதியும் - பொதுவுடைமை சித்தாந்தத்துடன் கூடிய தேசியத்தலைவருமான, தெய்வத்திருமகனார் பெருந்தமிழர் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை என்ற ஆன்மீக விழாவிற்கு, தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கும் அதே தமிழ் சாதியை சேர்ந்த சக தமிழரான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர் செல்வத்தின் பசும்பொன் வருகை என்பது, தமிழ் வரலாற்றில் முதல் முறையாகவும் - மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைய போகின்றது. இந்த (அக்டோபர் 30, 2014 என்ற) வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில், அனைத்து தமிழர்களுக்கும் அடியேனின் 'தேவர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையிலிருந்து,
தமிழனாய்...
இரா.ச.இமலாதித்தன்.