Posts

Showing posts from January, 2017

அமெரிக்கர் எனும் வந்தேறிகள்!

அமெரிக்கா என்ற வந்தேறிகளின் நாட்டில் அகதிகளாக யாரும் வரக்கூடாதென்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஈரான், ஈராக் போன்ற இசுலாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயரவே கூடாதென சொல்லிருப்பது முட்டாள்தனமானது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் சிவப்பிந்தியர்கள் என்ற ஆதித்தமிழர்களே ஆகும். இந்த சிவப்பிந்தியர்களின் உடலமைப்பு, கலாச்சாரம், பண்பாட்டு கூறுகள், இசை, விளையாட்டு, வீரம் போன்ற பாரம்பரிய அம்சங்கள் அனைத்தும் தமிழர்களை ஒத்தே அமைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்களான அவர்களை கொன்றொழித்து, வந்தேறிகள் ஆக்கிரமித்த அமெரிக்காவை விட்டு டொனால்ட் ட்ரம்ப் போன்றோர் தான் வெளியேற வேண்டும். ஏனெனில், ட்ரம்பின் தந்தையே வந்தேறி தான்.

புறக்கணிக்கப்பட்ட தமிழர்களின் குடியரசு நாள், ஜனவரி 26?

Image
'சிலம்பு செல்வர்' ம.பொ.சி அவர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி. தமிழகம் முழுக்க இக்கொடியை பறக்கவிட வேண்டுமென்ற அவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது. காலம் கனியும் போது, இனி இந்த தமிழர்கொடி எம் தமிழ் மண்ணில் பறக்கும். இது போல, இப்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி ஏதாவது இருக்கிறதா? பெரும்பான்மையான தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொடி இருக்கிறதா? திராவிட நாடென சொல்லும் ஆந்திரா/கர்நாடாகாவுக்கு கூட தனிக்கொடி இருக்கிறது; அவர்களின் போராட்டக்களங்களில், கட்சிக்கொடிகளை தவிர்த்து விட்டு, இந்த கொடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். நாம் ஏன் இன்னமும் கருப்பு கொடியை மட்டும் தூக்கி கொண்டிருக்க வேண்டும்? மங்களகரமாக மண்ணியல் சார்ந்த வண்ணங்களோடு ஒரு கொடியை உருவாக்கலாமே?!

குடிமக்களின் உணர்வுகளையும், அவர்களது பண்பாட்டு கூறுகளையும் மதிக்காமல், ஒரு மொழி, ஓர் இனம் என்ற ஏகாதிபத்தியத்தை திணிக்கும் ஹிந்திய கொள்கைக்கு, குடியரசு நாள் ஒரு கேடா? வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இம்மண்ணின் பெருமைக்குரிய அடையாளம். அதையெல்லாம் மறந்து, எங்களது கலாச்சாரத்தின் கருவறையை சீர்குலைக்கும் ஹிந்தியத்தி…

ஜல்லிக்கட்டுக்கு பின்புலமுள்ள ஓட்டு அரசியல்!

Image
பீட்டா ஒழிகவென போராட்டம் செய்வதை விட, ஹிந்திய உச்சநீதிமன்றமும், தமிழர்களை அடிமையென நினைத்து தடியடி நடத்தும் காவல்துறையும் ஒழிகவென போரட்டம் செய்தால் தான் இனி விடிவு பிறக்கும். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பிஜேபி / காங்கிரஸ் காரர்களெல்லாம் உணர்வுள்ளவர்களாக இருக்கும் போது, இங்குள்ள உணர்வற்ற, ஒன்றுக்கும் வக்கற்ற அரசியல்வாதிகளால் தான் இப்படியானது தமிழர் நிலைமை. காளை மாடுகள் வளர்ப்பவர்களை மிரட்டி சிறை பிடிக்கும் காவல்துறையை முதலில் சிறை பிடிக்க வேண்டும். சட்டமும் காவலும் யாருக்காக? மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களுக்கு எதிராக செயல்படுவது, பீட்டா போன்ற தேவடியாத்தனம் செய்யும் அமைப்புகள் மட்டுமல்ல; ஹிந்திய நாட்டின் உச்சநீதிமன்றமும், காக்கி சட்டை அணிந்த அடியாட்கள் அமைப்புகளும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்கு தான் என்பதை ஹிந்திய ஆட்சியாளர்களுக்கு எப்போது புரிய வைக்க போகிறோம்? வரலாற்ற மானங்கெட்ட வந்தேறிகளின் கட்டுப்பாட்டில் அரசியல் இருப்பதால் தானே, நாம் இந்தளவுக்கு நவீனமுறையில் அடிமைப்பட்டு கிடக்கிறோம். தடையை மட்டுமல்ல; எதிரிகளின் மண்டையையும் உடைக்காத வ…

பீட்டா மட்டுமா எதிரி?

Image
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில அரசை நிர்வகிக்கும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரிக்கின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக உள்பட அனைத்து தமிழக கட்சிகளும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றன. இப்போது யார் தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான பதிலிலுள்ள உள்ளரசியலே நமக்கெல்லாம் தெரியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

எல்லாரும் பீட்டாவை குறி வைத்து எதிர்ப்பரசியல் செய்கிறார்கள். பீட்டா என்ற ஃபீப் அமைப்பை நிரந்தரமாக தடை செய்வது தான் சரி என்றாலும் கூட, இவற்றிற்கெல்லாம் பீட்டா மட்டுமா காரணமாக இருக்க முடியும்? நிச்சயமாக இல்லை; இதுவொரு கூட்டு சதி; அந்நிய மற்றும் ஹிந்திய களவாணிகளால் அரங்கேற்றப்படும் தமிழினவழிப்புக்கான கூட்டு சதி. இந்த பீட்டா என்கிற பெயரில் உள்ளரசியல் செய்பவர்களின் பின்னணியை தேடிப்பார்த்தாலே ஓரளவுக்கு உண்மை புரிந்து கொள்ளலாம். அதுபோலவே ஹிந்தியாவிற்குள் விலங்குகள் நல ஆர்வலர்களின் அமைப்புகளின் தலைமை யாரென கவனியுங்கள். மேலும் சில உண்மைகள் புரிய வரும்.

நம்மை வைத்து அரசியல் செய்யும் அமைப்பிற்கெல்லாம் இங்குள்ள யாரையும் பகைத்து கொள்ளாத…

ரசிகனின் பார்வையில் பைரவா!

Image
திரையில் எம்ஜிஆர், ரஜினி ஃபார்மலா தான் எனக்கு பிடிக்கும். அதே பாணியில் சமகாலத்தில் கமர்சியல் எண்டர்டெயினராக தன்னை வெளிப்படுத்தும் இளையதளபதி விஜயைத்தான் எனக்கு பிடிக்கும்; இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையெல்லாம் விட இளைய தளபதி என்ற அடையாளமே போதுமென்று விஜயே ஒரு மேடையில் சொல்லிருக்கிறார்; ஆனாலும் அவரை சூப்பர் ஸ்டார் விஜயாகவே பார்க்க விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆர் மலையாளி, ரஜினி கன்னட மராத்தியர் என்ற விமர்சனம் அப்போதிலிருந்தே இங்கு உண்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழன், திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு மிக அருகிலோர் உச்சபட்ச நிலையை தொட்டிருப்பதால், விஜயை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமும் எனக்குண்டு. என்னுடைய இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பவெறுப்பு சம்பந்தபட்டது. அதைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட போவதில்லை.

இப்போது பைரவா பற்றி சிலவற்றை எழுதலாமென்று நினைக்கிறேன். முதலில், எனக்கு பைரவா ரொம்பவே பிடித்திருக்கிறது. துப்பாக்கி + கத்தி + தெறி என்ற கடைசி விஜய் ஹிட்லிஸ்ட் படங்களின் பட்டியலில் இந்த படமும் சேருமென்றே நினைக்கிறேன். க…

ஹிந்திய நாட்டிற்குள் அழித்தொழிக்கப்படும் தமிழ் பண்பாடு!

தமிழர்களின் தேசியத்திருவிழாவான பொங்கல் திருநாளை, கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து ஹிந்திய அரசு நீக்கியுள்ளது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி. இதற்கு மேலுமா அவமானப்படுத்த வேண்டும்? ஏற்கனவே பல அடிகளை கொடுத்தீங்க. நாங்க என்ன திருப்பி அடித்தாமோ என்ன? எங்களையே ஏன் ஜி அடிக்கிறீங்க? நாங்க ஜெயலலிதா செருப்புக்கு மாற்றாக, தீபாவின் செருப்பா? சசிகலாவின் செருப்பா? என பரபரப்பாக தேடிக்கிட்டு இருக்கும் போது, நீங்க வேற ஏன் ஜி இப்படி பண்றீங்க?

மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள்; அதில் பி.ஜே.பி.தான் பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒருமித்து குரல்கொடுக்கும் போது, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்குவதாக அறிவித்து இம்முறையும் மக்களை மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், 100 பேருக்கும் மேலான தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி காரணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்தா புயலால் தமிழக தலைநகரமே பாதிக்கப்பட்டு வறட்சி/புயல் நிவாரணம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகத்திற்க…

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக ஜோதிடத்தின் நம்பிக்கையாளனாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட தோன்றுகிறது. தையோ, சித்திரையோ, அதுவொரு தேசிய இனத்தின் புத்தாண்டாக மட்டுமே அமைகிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட சமகால சூழலில், இயேசுவின் பிறப்பை மையப்படுத்திய ஆங்கில நாட்காட்டியின் ஜனவரி ஒன்றாம் தேதியையும் இங்கு யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை என்பதே எதார்த்தம். மேலும், உலகின் அனைத்துதரப்பட்ட மக்களின் தொடர்புமொழியாகவும், இரண்டாம் அலுவல் மொழியாகவும் மாறிப்போன ஆங்கில புத்தாண்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

பச்சையப்பா கல்லூரியில் 1921ம் ஆண்டு எங்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த மறைமலை அடிகளாரின் தலைமையிலான திரு.வி.க. உள்ளிட்ட குழுவினரின் ஆய்வுமுடிவின் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை உறுதி செய்தனர். அவர்களது ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகவே வள்ளுவர் பிறந்தார் என்பதை வைத்து தனித்துவ நாட்காட்டியும் உருவாக்கப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக தமிழக அரசு கி.பி.1972ம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, அரசிதழிலும் வெளியிட்டு தமிழக அரச…