14 ஜனவரி 2017

பீட்டா மட்டுமா எதிரி?


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில அரசை நிர்வகிக்கும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரிக்கின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக உள்பட அனைத்து தமிழக கட்சிகளும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றன. இப்போது யார் தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான பதிலிலுள்ள உள்ளரசியலே நமக்கெல்லாம் தெரியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

எல்லாரும் பீட்டாவை குறி வைத்து எதிர்ப்பரசியல் செய்கிறார்கள். பீட்டா என்ற ஃபீப் அமைப்பை நிரந்தரமாக தடை செய்வது தான் சரி என்றாலும் கூட, இவற்றிற்கெல்லாம் பீட்டா மட்டுமா காரணமாக இருக்க முடியும்? நிச்சயமாக இல்லை; இதுவொரு கூட்டு சதி; அந்நிய மற்றும் ஹிந்திய களவாணிகளால் அரங்கேற்றப்படும் தமிழினவழிப்புக்கான கூட்டு சதி. இந்த பீட்டா என்கிற பெயரில் உள்ளரசியல் செய்பவர்களின் பின்னணியை தேடிப்பார்த்தாலே ஓரளவுக்கு உண்மை புரிந்து கொள்ளலாம். அதுபோலவே ஹிந்தியாவிற்குள் விலங்குகள் நல ஆர்வலர்களின் அமைப்புகளின் தலைமை யாரென கவனியுங்கள். மேலும் சில உண்மைகள் புரிய வரும்.

நம்மை வைத்து அரசியல் செய்யும் அமைப்பிற்கெல்லாம் இங்குள்ள யாரையும் பகைத்து கொள்ளாத ஒரு எதிரி தேவை. அப்போது தான் போரட்டங்களாலும், எதிர்ப்புகளாலும் ஹிந்தியத்திற்கு உட்பட்ட அதிகார மையங்களை பகையாளி ஆக்காமல் அரசியல் செய்து நம்மை ஏமாற்ற முடியும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு பீட்டா ஒரு பகடைக்காய். நிச்சயமாக, பீட்டா போன்ற கெடுகெட்ட அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க போவதில்லை; அதே வேளையில், அதற்கு பின்புலமாக உள்ள அந்த சூத்திரதாரி கூட்டத்தினையும் தமிழர்களான நாம் அடையாளம் கண்டு, எச்சரிக்கையாக நமக்கான அரசியலை கட்டமைப்பதே, வருங்கால இளந்தமிழ் சந்ததியினருக்கு நாம் செய்யும் ஒரே உருப்படியான செயலாகவும் இருக்க முடியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக