18 ஜனவரி 2017

ஜல்லிக்கட்டுக்கு பின்புலமுள்ள ஓட்டு அரசியல்!



பீட்டா ஒழிகவென போராட்டம் செய்வதை விட, ஹிந்திய உச்சநீதிமன்றமும், தமிழர்களை அடிமையென நினைத்து தடியடி நடத்தும் காவல்துறையும் ஒழிகவென போரட்டம் செய்தால் தான் இனி விடிவு பிறக்கும். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பிஜேபி / காங்கிரஸ் காரர்களெல்லாம் உணர்வுள்ளவர்களாக இருக்கும் போது, இங்குள்ள உணர்வற்ற, ஒன்றுக்கும் வக்கற்ற அரசியல்வாதிகளால் தான் இப்படியானது தமிழர் நிலைமை. காளை மாடுகள் வளர்ப்பவர்களை மிரட்டி சிறை பிடிக்கும் காவல்துறையை முதலில் சிறை பிடிக்க வேண்டும். சட்டமும் காவலும் யாருக்காக? மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களுக்கு எதிராக செயல்படுவது, பீட்டா போன்ற தேவடியாத்தனம் செய்யும் அமைப்புகள் மட்டுமல்ல; ஹிந்திய நாட்டின் உச்சநீதிமன்றமும், காக்கி சட்டை அணிந்த அடியாட்கள் அமைப்புகளும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்கு தான் என்பதை ஹிந்திய ஆட்சியாளர்களுக்கு எப்போது புரிய வைக்க போகிறோம்? வரலாற்ற மானங்கெட்ட வந்தேறிகளின் கட்டுப்பாட்டில் அரசியல் இருப்பதால் தானே, நாம் இந்தளவுக்கு நவீனமுறையில் அடிமைப்பட்டு கிடக்கிறோம். தடையை மட்டுமல்ல; எதிரிகளின் மண்டையையும் உடைக்காத வரை நம்மால் எதையும் மாற்ற முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத திராவிட மாநிலங்களான கேரளா, கர்நாடாகா, ஆந்திரா ஆட்சியையெல்லாம் கலைத்து விட்டார்களா என்ன? என்ற கேள்வியை (சோ கால்டு) தமிழர் ஆட்சி நடத்தும் ஓ.பி.எஸ். என்ற தமிழரிடம் யாராவது சுட்டிக்காட்டுங்கள். தன் சொந்த மாவட்டங்களெல்லாம் கலவர களங்களாகவும், கலச்சாரா விழாவே கருப்புநாளாக மாறிவிட்டதை கூட அறியாமல், கலைவாணர் அரங்கில் பாடல்களை பாடிக்கொண்டிருந்த மாநில முதல்வரை நினைக்கையில் ரொம்பவே பெருமையாக இருக்கிறது.

அடங்க மறு; அத்து மீறு;
திமிரி எழு; திருப்பி அடி!

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் பின்பற்றிய மருதுபாண்டியர்களின் கொரில்லா யுக்தியுடன் கூடிய நேதாஜியின் தீவிரவாத வழியில் இனி பயணித்தால் மட்டுமே, மிச்சமிருக்கும் தமிழர்களின் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும்.

ஐரோப்பிய, அரபு நாடுகள் உள்பட உலக நாடுகளிலெல்லாம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் புரட்சி வெடித்ததையும், அதனால் பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்ததையும் கடந்த சில வருடங்களாக கவனித்து வந்திருந்த ஹிந்திய அதிகார வர்க்கம், அந்த மாதிரியான எழுச்சியெல்லாம் ஹிந்திய கூட்டாட்சிக்குள் வர வாய்ப்பில்லையென்று இறுமாப்போடு நினைத்திருக்க கூடும். ஆனால், இன்று மாட்டுக்காக, தமிழ்நாட்டில் பெரும் புரட்சி வெடித்திருக்கிறது. ”பொங்கல் முடிஞ்சிருச்சு; அதுனால அடுத்த பொழப்பை பார்க்க தமிழனெல்லாம் போய்டுவாங்க!”ன்னு ஹிந்திய அதிகார மையத்தை சேர்ந்தவர்களெல்லாம் நினைத்து கொண்டிருந்த வேளையில், இந்த மாதிரியான ஒரு ட்விஸ்டை கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!
ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பிஜேபி அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. - மோடி

அந்த உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று சொன்னபோது, நதி நீர் இணைப்பையெல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென இதே மோடி சொன்னது மட்டும் எப்படி? தனக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய மக்களை மறந்துவிட்டு, ஒவ்வொரு நாடாக நாடோடி போல திரியும் மோடியும், மிக்சர் தின்று கொண்டு சின்னம்மா காலில் விழுந்து கிடக்கும் பன்னீர்செல்வமும் வாழ்க!

ஹிந்திய அரசியல்:

ஹிந்தியாவின் பெரும்பான்மை மதமென அறியப்படும் ஹிந்துத்வா சார்புள்ள பாஜக தேசபக்தர்களின் ஆட்சி நடக்கிறது. என்னதான் முட்டி மோதினாலும், மோடி இனி பிரதமராக ஆக முடியாது. பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றவும் முடியாது; தனித்து ஆட்சியமைக்கவும் முடியாது. கிடைத்த அரிய வாய்ப்பின் மீது, மண்ணை அள்ளி போட்டுக்கொண்டு விட்டார்கள். ஏற்கனவே செல்லாக்காசு பிரச்சனையில் சொல்லணாத்துயரத்தில் மக்களெல்லாம் இருக்கிறார்கள். அந்த கோபத்தின் வெளிப்பாட்டை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கே சின்னம்மா என ஜெயலலிதாவிற்கு மாற்றாக, சசிகலாவின் காலடியிலுள்ள செருப்பை நக்கி பிழைக்கும் தமிழர் ஆட்சி நடக்கிறது.


இதுவரைக்கும் வேண்டுமானால் நாங்கள் அரசியல் அநாதையாக இருந்திருக்கலாம். காட்சி மாறும்; ஆட்சியும் மாறும். அன்று, இப்போதைக்கு அதிகார போதையில் இருக்கும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் அனைவரும் அதிகார பதவிகளெல்லாம் இழந்தவிட்டு, எவ்வித அடையாளமுமற்று அரசியல் அநாதையாக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு தொடர்பான சில கேள்விகளும், சந்தேகங்களும்?!

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் சொல்லக்கூடாதென்ற ஹிந்திய அரசாங்கத்தின் நகர்வு என்பது தமிழர்களின் போரட்டத்தை மழுங்கடிக்கும் செயல்;

ஏன் ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராகவே இருக்குமென்பது ஹிந்திய சர்க்காருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதா? ஒருவேளை ஒரு வாரம் கழித்து உச்சநீதிமன்றம் சொல்லும் தீர்ப்பானது, ஜல்லிக்கட்டு எதிராக வந்தால், அதற்குள்ளாக தமிழர்களின் எழுச்சி சிதறடிக்கப்பட்டு விடுமென கணக்கு போடுகிறதா மோடியின் ஹிந்திய சர்க்கார்? போரட்டத்தை கைவிடும்படி ஓ.பி.எஸ். கோரிக்கை வைத்து, இளைஞர்களின் எழுச்சியை நீர்த்து போக செய்ய முயல்வது ஏன்? ஆட்சியை காப்பாற்றி கொள்ளவா?

மிருக வதை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது, ஹிந்திய சர்க்கார் தானே தவிர மாநில அரசு அல்ல; எனவே காட்சி பட்டியலில் இருக்கின்ற காளையை நீக்க வேண்டியது ஹிந்திய அரசு தான்; ஆனால், இதை தமிழக அரசிடம் கொடுத்து விட்டு தப்பிக்க பார்க்கும் மோடி சர்க்காரின் நோக்கம் தான் என்ன?

ஏற்கனவே 2009ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசின் சட்டத்தை செல்லாது என்று சொல்லி தடை போட்டது கூட இதே உச்சநீதிமன்றம் தானே? அப்படியெனில் இன்றோ/நாளையோ கொண்டு வருகின்ற அவசர சட்டத்தையும் ஹிந்திய உச்சநீதிமன்றம் தடை போடத்தானே செய்யும்?

எனவே, தமிழர்கள் போரட்டத்தை கை விட்டு விடாமல்,

01. காட்சிப்பட்டியலிலுள்ள காளையை ஹிந்திய அரசு உடனே நீக்க வேண்டும்; அதற்காக மிருகவதை சட்டத்தை திருத்தம் கொண்டு வர வேண்டும்.

02. இம்மண்ணின் பாரம்பரியத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்ட கார்ப்பரேட் கைக்கூலிகளான பீட்டா உள்ளிட்ட அமைப்புகளை உடனே ஹிந்தியாவில் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

03. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, மாநில அரசாங்கம் மட்டுமில்லாது, ஹிந்திய அரசாங்கமும் குடியரசு தலைவரின் ஒப்புதலோடு, நாடாளுமன்றத்தில் அவசர சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.

உள்ளிட்ட முதன்மையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்னும் வலுவாக போரட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மெரினா ஒன்றுகூடலுக்கு பிறகான நிகழ்வுகள்:

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் என்ற முறையில் கலந்து கொள்ளட்டும். ஆனால் அமைச்சர்கள் என்ற முறையில் எந்த கட்சிக்காரனும் எந்தவொரு ஜல்லிக்கட்டு விழாவிலும் கலந்து கொள்ள கூடாது; அங்கேயும் வந்தும் சின்னம்மா புராணம் பாடுவார்கள். ஜல்லிக்கட்டிற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து பல்வேறு வடிவங்களில் போராடும், திரு.ராஜசேகர், திரு.கார்த்திக்கேய சிவசேனாதிபதி, ஹிப்பாப் தமிழா ஆதி போன்றோர்களின் தலைமையில், அந்தெந்த ஊரை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள், ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைப்பதே சரியாக இருக்கும்.

ஆதி போன்றவர்களை கட்டுப்படுத்தியது யார்?

இது இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம். இதை, எப்படி? எங்கே? எப்போது? முடிப்பது என்பது பற்றி களத்திலுள்ள அவர்களே முடிவு செய்யட்டும். இது தொடர்பாக வேற யாரும் அவர்களுக்கு தயவுசெய்து அறிவுரை கூற வேண்டாம். இந்த போராட்டம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விட்டது. இந்த கூட்டாட்சி நாட்டிலுள்ள பல ஹிந்தியர்களுக்கு இது மறக்க முடியாத எடுத்துக்காட்டாக அமைந்தும் விட்டது. இனிமேல் இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் எப்படி முடிந்தாலும், அதனால் இளைஞர்களுக்கு எவ்வித தோல்வியும் ஏற்பட போவதில்லை. பாதையை உருவாக்கிய அவர்களே பயணத்தின் தூரத்தையும் நிர்ணயம் செய்து கொள்ளட்டும். மற்றவர்கள் மெளனமாக வேடிக்கை மட்டும் பார்த்திருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மையை நோக்கியே அமையும்.

'ஏறுதழுவுதல் எம் பண்பாட்டின் அடையாளம்; அது பழந்தமிழர் வரலாற்றின் நீட்சி' என்பதை வலியுறுத்தி, மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரின் ஆதரவோடு இன்றும் தொடர்கிறது நாகையில் சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டத்தை இயற்றக்கோரிய களப்போராட்டம்!




போராட்டக்களத்தில் ஜெர்சி மாடுகளை தடை செய்ய வேண்டுமென சொல்வதே தவறென்று ஆதி சொல்கிறார். பாரம்பரியமிக்க நாட்டுக்காளைகளை அழித்துவிட்டு, ஜெர்சி மாடுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தானே பீட்டா போன்ற இல்லுமினாட்டி அமைப்புகளின் இலக்கு; அதை தடை செய்யென சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அதை கூட குறையாக சொல்லும் ஆதியை, விமர்சிக்காமல் புகழவா முடியும்? கடைசியில் ஆதியும் சினிமாக்காரனாகி போனது, கொஞ்சம் வருத்தம் தான். ஆதியின் ஒரேவொரு பாட்டை வைத்துதான் இத்தனை பெரிய போராட்டம் உருவானதா என்ன? மார்ச் 31க்கு அப்பறம் போரட்டம் செய்து கொள்ள சொல்வதன் காரணம் என்ன? Ban Coke, Ban Pepsi, Ban Jersey Cow என தடை சொல்வதை ஏற்க முடியாதென சொல்ல இவர்கள் யார்?

செயலற்ற அரசு:

ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாதென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை ஏன் இத்தனை நாட்களாக எடுக்கவில்லை? இந்த மாதிரியான யோசனையெல்லாம், தமிழ்நாடு அரசிடம் சட்டவல்லுனர்கள் சொல்லவே இல்லையா? ஒரு சென்சிடிவான விசயத்தை பற்றிய நாடாளுமன்ற விவாதத்தின் போது, 'காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்...' என பாடி காட்டிய பாடிசோடாக்களை அரசு வழக்குரைஞராக வைத்திருந்தது யார் தவறு? மாற்றம் மக்களுக்கு வந்துவிட்டது; ஆனால் அது ஆட்சியாளர்களுக்கு தான் இன்னமும் வரவில்லை.

இளந்தமிழர்களின் வெற்றி:

மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இந்த போராட்டம் மாபெரும் வெற்றிப்பெற மற்றுமொரு காரணம் குடும்பத்தினரும், பெற்றோரும், பெண்களும் துணை நின்றதால் தான். ஒருவேளை இந்த போராட்டத்தை அமைதி வழியிலேயே முடித்திருந்தால் தமிழக மாணவர்களுக்கும் / இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் உளவியல் ரீதியாக அரசியல் போராட்டக்களத்தை முன்னெடுக்க உதவியாக இருந்திருக்கும். அரசாங்கங்கள் தவறிழைத்தால் அதை தட்டிக்கேட்கலாம்; அப்போது கண்டிப்பாக நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை விதைகள் அவர்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த விதை இப்போது விதைக்கப்பட்டால், நாளை மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அப்போது இதுமாதிரியான சாதி / மத / சிறுபான்மை / பெரும்பான்மை அரசியல் செய்து பிழைப்பை ஓட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்த அரசியல் நாய்கள், ஏவிய சூழ்ச்சியால் இன்று மாணவ போராட்டம் ஹிந்திய தேசிய ஊடகங்களால் கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும், மீண்டுமொரு போராட்டக்களம் இம்மண்ணில் வெடிக்கும், அடக்குமுறைக்கு எதிராக...




முதுகில் குத்தும் துரோகிகளே இனி, முன்னை விட எச்சரிக்கையாக இருங்கள். இளையோரும், இணையமும் இணைந்து விட்டார்கள்! முழு வெற்றியோ, அரைகுறை வெற்றியோ... ஆனால், அதை கொண்டாடக்கூட விடக்கூடாதென்ற அரச பயங்கரவாதத்தின் வெற்றியே இது!  ஹிந்திய கூட்டாட்சியில், எப்போதுமே தனிநாடு தமிழ்நாடு தான்! ஹிந்தியர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிகார மையத்திற்கு அச்சத்தையும் ஏற்படுத்திய தமிழ் காளைகளுக்கு வாழ்த்துகள்!

மக்களாட்சி எனும் கேலிக்கூத்து:

எதையாவது செய்து, ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு நாளை மிகச்சிறப்பாக கொண்டாடிவிட வேண்டுமென்பது தான் ஹிந்திய ஆட்சியாளர்களின் ஒரே எண்ணம். ஜனவரி 26, ஆகஸ்ட் 15 என்ற இந்த இரு நாட்களில் மாநில முதலமைச்சரும், மாநில ஆளுநரும் ஹிந்தியக்கூட்டாட்சியின் கொடியை ஏற்றி உரையாற்றினாலே அதுதான் மக்களாட்சி என நினைக்க வைக்கும் முட்டாள்களின் தேசம் இது.




”மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சித்தான் மக்களாட்சி!” என்பதையெல்லாம் மறந்து, அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், பீட்டாக்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் என கண்டவனுக்கெல்லாம் சேவகம் செய்வதே மக்களாட்சியென நினைக்கும் ஹிந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வக்கில்லாதவர்களே, தேசபக்தி என்ற முகமூடியில் அவதூறுகளை பரப்புகிறார்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக