26 ஆகஸ்ட் 2022

நடுநிலைவாதி எனும் திராவிட சொம்புகள்!

நடுநிலைவாதி போல காட்டிக்கொள்ளும் திராவிட சொம்புகள், இந்த வாரம் நடந்த கூத்துகளை பேசவே இல்லை. அவற்றுள் சில...

1. ”நிலமே இல்லாதவர்கள் கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு போராட்டம் செய்கிறார்கள்” என எ.வ.வேலு விவசாயிகளை காட்டமாக பேசியது. தேர்தல் நேரங்களில் விவசாய நிலங்களிலுள்ள வயல்களில் கான்கிரிட் சாலை அமைத்து பச்சைத்துண்டு சகிதமாக இந்நாள் முதல்வர் போட்டோஷூட் செய்தார். விவசாயி போல பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், சென்னை மேயரை வா, போ என ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பிறகு மேயர் பிரியா அவர்களாலேயே கட்சியில் மூத்தவர், உரிமையில் பேசினார் என அறிக்கை விடப்பட்டது. இதே மூத்தவர் முதல்வரின் மகனை அல்ல, அவரது பேரனை கூட வா,போ என பொதுவெளியில் ஒருமையில் பேச முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

3. காவல்துறை சார்பில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு 15 கொலைகள் மட்டுமே அதிகம். அதுவே அதிமுக ஆட்சி காலம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி அந்த கொலைகளை விட இவை குறைவு என சொல்லப்பட்டது. 36 மணிநேரத்தி 15 கொலைகள் என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் 12 கொலைகள் தான் நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கையானது. பார்ப்பதற்கு அப்படியே அரசியல் கட்சியின் அறிக்கை போல இருந்தது என விமர்சனம் எழுந்தது.

4. திமுகவை விமர்சிப்பவர்கள் தன்மானம், இனமானம் இல்லாதவர்கள் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார். ஒரு கட்சியை விமர்சித்தாலே அவர்களுக்கு தன்மானம் இல்லையென சொல்வதை பற்றி பலரும் கேள்வியெழுப்பினர். பதிலில்லை. சங்கி, தொம்பி என திசைதிருப்பப்பட்டது தான் மிச்சம்.

5. ”கருணாநிதியின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திமுகவின் கொடி” என முதல்வர் சொன்னார். அப்படியெனில் திமுகவை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரையின் பங்களிப்பு திமுகவில் இல்லையா? என பலரும் கேள்யெழுப்பி வருகின்றனர்.

இது மாதிரி பல நிகழ்வுகள் நடந்தாலும் பொத்திக்கொண்டு கடக்கின்றனர் திமுக சொம்புகள். பார்க்க பரிதபமாக இருக்கிறது. திமுக அல்லாத பிற கட்சிகள் செய்தால் பொத்துக்கொண்டு வருகின்ற அறச்சீற்றத்தை திமுக செய்தால் தங்களுக்குள்ளாகவே பொத்திக்கொள்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்