31 டிசம்பர் 2013

புது ஆண்டு புகுதல்

2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.

எனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவருட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்!


என்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

12 டிசம்பர் 2013

பிரபலங்களின் பிறந்த வாழ்த்துகள்!

கல்லூரி காலம் தொட்டு சுமார் 10 வருடங்களாக என் நண்பனாக இருக்கும் சிவநேசனுக்கு போன டிசம்பர் 8ம் தேதி அன்று பிறந்தநாள். போன மாதம் தான் அவனுக்கு கல்யாணம் நடைப்பெற்றது என்பதால் அவனது மனைவியான என் உடன்பிறவா தங்கைக்கும் என்னைப்பற்றி தெரியும். ஏனெனில், பெண் பார்க்க போனதிலிருந்து, மாப்பிள்ளை தோழனாக இருந்தது வரை அப்போதே எங்களின் நட்பை சிவநேசனின் மனைவியான என் உடன்பிறவா தங்கையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், அவனது பிறந்த தேதியன்று ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போனதை பற்றித்தான் இங்கே சொல்ல வருகிறேன்.

தொடர்ச்சியாக பயணத்திலும், மற்ற வேலைப்பளுக்களும் இருந்ததால் வாழ்த்துகள் சொல்லவே மறந்துட்டேன். டிசம்பர் 8ம் தேதி சாயுங்காலம் சிவநேசனை பார்க்க அவனது வீட்டுக்கு சென்றேன். புதுமண தம்பதிகளால் நல்ல உபசைப்பு எனக்கு கிடைத்தது. கொஞ்ச பேசிக்கொண்டிருக்கும் போதுதான் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னான். எனக்கு சரியா புரியல. என்ன திடீர்ன்னு கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறான்னு யோசிச்சேன். உடனேயே, அவனது மனைவி சொன்னச்சு,

அண்ணா! "உங்க பிறந்தநாளுக்கு அந்த அண்ணன் ஒரு விஷ் கூட பண்ணலயா? காலைலர்ந்து அந்த அண்ணன் விஷ் பண்ணுனாங்களா?ன்னு உங்கள பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேன்"ன்னு சொன்னுச்சு.

உடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஒருவழியா "அப்படியில்லம்மா, எங்க ஃப்ரெண்ட்ஷிப்க்குள்ள எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது..." அப்படி இப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

இதை ஏன் இங்கே சொல்றேன்ன்னா, பிரபலங்களின் பிறந்தநாளை தேடிப்பிடிச்சு, போட்டிப்போட்டுக்கொண்டு வாழ்த்துகள் சொல்வதை விட, கூட இருக்கிறவங்களோட - கூட பழகுறவங்களோட - கூட பிறந்தவங்களோட - தன்னை உருவாக்கி பெத்தவங்களோட பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்ல முதலில் பழகிக்குங்க. அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு. மற்றபடி இந்த பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்வது என்பது சில சமயம்தான் ஒத்துவரும். மீதி எல்லா நேரங்களிலும் அது வெறும் விளம்பர நோக்கில்தான் அமையும். புகழ் வெளிச்சத்தில் இருப்பவனை பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. புகழ் கிடைக்காமல் இருட்டில இருக்கிறவனை அங்கீகரிக்க இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளுமே புது உந்துதலை கொடுக்கும் ஊக்க மருந்தாக அமையும்.

எனிவே, இன்னைக்கு பிறந்த அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவென மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன். குறிப்பாக என் ப்ரெண்ட் லிஸ்டில் உள்ள என் நண்பன் திரைப்பட துணை இயக்குனர் Jai Ganeshக்கும், Ragu Ammu, Rock Jaisankar, Govan Thevan, Muthu Pandian, Rajamanickam Raja, Jai Sankar, Thirumagan Anand AP, Sugumaran Muthusamy மற்றும் எங்க சோழமண்டலத்து காரர் இரா. பாலமுருகன்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முக்கியமா, என் நண்பன் Siva Nesanக்கு Belated Wishes!

- இரா.ச.இமலாதித்தன்

09 டிசம்பர் 2013

வாழ்த்துகள்!

விஜய்டிவி ஜூனியர் சூப்பர் சிங்கரில் அறிமுகமான சோழநாட்டு பொண்ணு மன்னார்குடி அனு ஆனந்த் பாடியுள்ள "பண்ணையாரும் பத்மினியும்" படத்துல வர 'எனக்காக பொறந்தாயே' யென்ற பாட்டுதான் என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட். அந்த அனுவோட ஹஸ்கி வாய்ஸ் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். இந்த பாட்டுல மெட்சூர் ஃபிமேல் சிங்கரா அந்த புள்ள பாடியிருக்குறதான் ஹைலைட்டே!

பொண்ணுங்க குரலுக்கு வயசு வித்தியாசமே இல்ல. ஆனால் ஆம்பள பசங்களுக்குதான் குறிப்பிட்ட வயசு வரைக்கும் மெட்சூர் வாய்ஸ் வரவே மாட்டுது.

ஏய் புள்ள எட்டாங்கிளாஸ் படிக்கிற அனு, வாழ்த்துகள்!

------------------------------------------------------------------------------------------
அட்ரஸ் / ரூட் சொல்றதுல தமிழனை அடிச்சிக்க முடியாது போல. நாலஞ்சு பேரு நிக்கிற இடத்துல பைக்கை நிப்பாடி தெரியாத ஊருக்கு வழி கேட்டால், அடிச்சு பிடிச்சு போட்டிப் போட்டுக்கிட்டு சொல்றாய்ங்க.

உங்கள மாதிரியான ஆளுங்களாலதான் அடிக்கடி புயலும் - மழையும் நம்ம நாகப்பட்டினம் பக்கமே வருது. நீடுழி வாழ்க!

சாதிய ஊடகமும் எதிவிர்வினையும்!

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த கொலைகார கும்பலில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக, அரசாங்கம் சார்பில் அவசரகதியில் ஐந்து லட்சங்கள் கொடுப்பதன் உள்நோக்கம் என்ன? அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே? தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும்? குடிமக்களின் வரிப்பணமான அரசாங்க பணத்தை எடுத்து, இந்தமாதிரியான எதிர்வினைக்காக பல லட்சங்கள் செலவழிக்க காத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஐந்து லட்சங்கள் கொடுத்து உயிர் பறிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாயைத்தான் அடைக்கலாம். ஆனால், அந்த உயிரிழப்பு காரணம் எதுவென்பதை ஆராய்ந்தால்...

ஏன் அந்த உயிர் பறிக்கப்பட்டது?
எதனால் இந்த எதிர்வினை?
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது?
144 தடையால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?
அரசியல் எதிரிகளை ஒடுக்க மட்டும்தான் காவல்துறை இருக்கிறதா?

இப்படி பல கேள்விகள் எழும்.

#எதிர்வினை

 ---------------------------------------------------------------------------------------------------

அஞ்சு லட்சம் பத்தாது. அஞ்சு கோடி கொடுங்க!ன்னு உண்மை அறியும் குழுன்னு ஒரு சாதிவெறி கும்பல் கூப்பாடு போடும்ன்னு எதிர்பார்க்கிறேன்.

ஏய் யாரங்கே, மதுரைக்கு ஒரு 144 பார்சல்!

#எதிர்வினை


 
---------------------------------------------------------------------------------------------------

இன்று பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு
- செய்தி

போன வருடம் பெட்ரோல் குண்டு வீசினப்போ, உங்க சட்டம் எவன் கூட ஓடி போனுச்சு?

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஏழுக்கு ஒன்று ஈடாக முடியாது.

சற்று ஆறுதலோடும் - நிறைய நம்பிக்கையோடும் காத்திருப்பேன்...

#எதிர்வினை
 
---------------------------------------------------------------------------------------------------

சிறையில் இல்லாத நாட்கள் தவிர மற்ற வருடங்களில் நடைப்பெற்ற அனைத்து தேவர்ஜெயந்தியை தரிசிக்க பசும்பொன் வருவேன்னு வாய்கிழிய அடிக்கடி பேசும் திரு வைகோவிற்கு, 2012ல் தேவர்ஜெயந்தியின் போது பெட்ரோல் குண்டுவீசியும், கல்லால் அடித்தும், ஒளிந்திருந்து தாக்கி பசும்பொன்னுக்கு சென்ற அப்பாவி இளைஞர்களை கொன்ற தலித் பயங்காரவாதிகளை கண்டித்து வாய் உள்பட எந்தவொரு துவாரத்தையும் திறக்காத நீங்கள், இப்போது மட்டும் திறப்பதன் உள்நோக்கம் என்ன? ஒருநாள் கலிங்கப்பட்டிக்கும் இதே பாதிப்பு அவர்களால் வரலாம். அப்போது துணை நிற்க நாங்கள் மட்டும்தான் இருப்போம். ஏனெனில், பசும்பொன் தேவரை வணங்கும் அனைவருக்கும் நாங்கள் அரணாய் இருப்போம். துரோகம் செய்ய வைகோ அல்ல நாங்கள்!

--------------------------------------------------------------------------------------------------- 
நாமயெல்லாம் ஒன்றே!ன்னு சொல்லிக்கிட்டே, கூட இருக்கிறவனை அழிக்க பணத்தையும் - நேரத்தையும் செலவழித்து உள்ளடி வேலைகள் செய்யும் துரோகிகள், ஊடகத்துறையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம்.

ஏனென்றால் யாரை வீழ்த்தவும் ஊடக பலம் தேவை.


--------------------------------------------------------------------------------------------------- 
பரம எதிரிகளான தலித்தியமும் - பார்பனீயமும் ஊடகத்துறையில் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

களம் காண வலுவான ஓர் ஊடகம் நமக்கில்லை
 
 


- இரா.ச.இமலாதித்தன்

அரசியல் பதிவுகளில் சில

ஜெயாடிவியில், வட மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுன்னு மட்டும்தான் சொல்றாய்ங்களே தவிர, தப்பிதவறி கூட பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.

நல்லா வருவீங்கடே

தாமரை மலர்வது நிச்சயம், தேசியம் காப்பது அவசியம்!

--------------------------------------------------------------------------------------------------

காவி ஆண்டால் உனக்கென்ன? மோடி ஆண்டால் உனக்கென்ன? அந்நியர் பிடியில் சிக்கி தவிக்கும் இந்நாட்டை இம்மண்ணின் மைந்தன் ஆளட்டுமே!

தேசியத்தையும் - தெய்வீகத்தையும் காக்கும் தகுதியுள்ள பா.ஜ.க. தான் மத்திய சர்க்காரை ஆள வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்.

--------------------------------------------------------------------------------------------------

டெல்லி தேர்தலில் தேமுதிக மொத்தம் 493 வாக்குகள் வாங்கிருப்பதை ஜெயாடிவி உள்பட இங்குள்ளவர்களும் ஏளனம் செய்து பதிவிடுகின்றார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற திராணி இல்லாதபோதே, பிரதமர் கனவு காணும் ஜெயலலிதாவை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், அவர் டெல்லி முதல்வராக கனவு கண்டு தேர்தல் களம் காணவில்லை. மேலும், வெற்றியை தான் இழந்துள்ளார், களத்தை அல்ல!

தோற்போம் என தெரிந்த பின்பும், தனது கட்சியையும், கட்சி சின்னத்தையும், தன்னையும் டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த திரு. விஜய்காந்தின் துணிச்சலை பாராட்டுகிறேன்.


--------------------------------------------------------------------------------------------------தேசத்தந்தை நேதாஜி போன்ற உண்மையான சுதந்திர போராட்ட மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் - மரியாதையும் - கெளரவமும் வழங்க வக்கற்ற இந்திய (காங்கிரஸ்) அரசாங்கம், இன்னொரு நாட்டின் இன போராளியான நெல்சன் மண்டேலாவுக்காக ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பு யென்ற போலியான விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள திடீர் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு சேகுவேராவை தெரிந்த அளவுக்கு கூட, நேதாஜியின் உண்மையான வரலாறு தெரியாது என்பதுதான் வெட்கக்கேடு.


--------------------------------------------------------------------------------------------------

திசம்பர் 6: தலித் - இசுலாமியர் எழுச்சிநாள்! ன்னு ஊரு முழுக்க திருமாவளவன் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா? விடுதலைப்புலிகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட தேசியவிலங்கான சிறுத்தையின் பெயரை வைத்து ஈழம் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் உங்களது லட்சணம் ஊருக்கே தெரியும் போது, ஏனோ புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டும் இன்னும் தெளிவாக தெரியவில்லையே.

அங்கே ஈழத்தில் பலநூறு இந்து கோவில்களையும், கிருஸ்துவ தேவலாயங்களையும் தரைமட்டமாக இடித்தொழித்தார்களே, அந்த சிங்களவனின் எழுச்சியை அடக்க என்ன செய்தீர்கள் என்பதை சற்று சுயநினைவோடு சிந்தித்துவிட்டு, இந்த எழுச்சி என்பதை பற்றி இங்கே பேசலாமே!

- இரா.ச.இமலாதித்தன்

21 நவம்பர் 2013

மூவேந்தரும் அகமுடையாரே!


மூவேந்தர்ன்னு சொல்லிக்கொள்ளும் தகுதி, மற்ற சாதிகளை விட அகமுடையாருக்கு அதிகம் உண்டு. ஏனெனில், ஓவ்வொரு நாட்டிலும் படையமைத்து அரசாண்ட இனத்தின் வம்சவாளிகள் அந்தெந்த ஊரிலேயே பல அடையாளங்களை மறைத்தும் தொலைத்தும் வாழ்வதுதான் நியதி. அப்படிப்பார்த்தால், சோழநாடு - பாண்டிய நாடு - சேரகொங்கு நாடு என எல்லா நாட்டிலும் (ஊரு விட்டு ஊரு இடம்பெயராமல்) பூர்வக்குடியாய் - சமூகத்தில் மேல்தட்டு மக்களாய் - வீரம்செறிந்த மக்களாய் - மற்றவர்கள் மதிக்கும்படி அந்தஸ்துமிக்க பெரிய கூட்டமாய், அப்போது முதல் இந்நாள் வரை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது அகமுடையார் இனம் மட்டுமே. தெற்கு மட்டுமல்ல, வடக்கு - மேற்கு - கிழக்கு - நடு யென்று எல்லா திசையிலும் அகமுடையார் மட்டுமே பூர்வக்குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட சிந்திக்க கூடிய விசயமே...
(பிரபு - பாரதி - குமார் என்கவுண்டர் கொலையை எதிர்த்து) அகமுடையார்களுக்கு என்று தனி அமைப்பு பேரவை இருக்கிறதே அவர்கள் போராடினார்களா? யென்று முக்குலத்து உறவு ஒருவர் கேட்கிறார்.

ஓ! அப்போ அகமுடையாருக்கு அமைப்பு இருந்தால், அகமுடையார் மட்டும் தான் போரடணுமா என்ன? அப்பறம் ஏன் முக்குலத்து அமைப்புகள் எல்லாம்? செத்தவன் அகமுடையனாக இருந்தால், அகமுடையார் அமைப்பு மட்டும்தான் போராடணும்ன்னு நினைக்கிறப்பவே உங்க நோக்கம் புரியுது.
காளையார்கோவிலில் நடைப்பெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலில் நடைப்பெற்ற கசப்பான ஒரு நிகழ்வால், பிரபு - பாரதி - குமார் யென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையே என்கவுண்டர் மூலம் கொலை செய்ததை எதிர்த்து இதுவரை யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? அப்போ, உனக்கு வந்தால் மட்டும்தான் ரத்தம்... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நல்லாருக்கு உங்க நியாயம். அகமுடையார் என்னைக்குமே ஒன்றாக இணைந்துவிட கூடாதுன்னு முனைப்பில் இருக்கும் எவனுக்கும் உட்பிரிவுன்னு பேச தகுதியே கிடையாது. இந்நேரம் அகமுடையாருக்குன்னு ஒரு தனிப்பெரும் அமைப்பு இருந்திருந்தால், அந்த மூவரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடாவது கிடைத்திருக்கும். அந்த என்கவுண்டரை நடத்திய மறவரான வெள்ளைத்துரையை பற்றி பேசவிரும்பவில்லை; ஏனெனில், வெள்ளைத்துரை வெறும் அம்புதான் என்பதால். இங்க அகமுடையார் மட்டும்தான் உட்பிரிவு பார்க்கிறது போல, மாயையை உருவாக்க முயலும் எல்லோருக்குள்ளும் உட்பிரிவு பாசம் இருக்கத்தான் செய்கிறது. தேவைப்பட்டால், அதை நிரூபிக்கவும் முடியும். தேவையில்லாமல், மேலும் மேலும் எங்களை பேச வைக்க வேண்டாம். நீங்க என்ன எங்கள ஒதுக்குறது? எங்க ஊருல டெல்டா மாவட்டத்துல தேவன்னா யாருன்னு விசாரிச்சா தெரியும் அது அகமுடையார் தான்னு.

வருகின்ற 30ம் தேதி பிரபு - பாரதி கொல்லப்பட்ட தினம்
மூன்று கொலைகளைப் பற்றி மூச்சு பேச்சு இல்லாமல் முடங்கி கிடந்த கூட்டமெல்லாம், இன்றைக்கு மூன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. மூன்று மூன்றுன்னு பேசுற எவனாவது இதுவரைக்கும் அந்த கொலைகளுக்காக போராடி இருக்கானா? இல்லையே! ஏன்னா, அவனுக்கு இவன் கூட்டம் காமிக்க மட்டும்தான் தேவைப்படுறான். அந்த மூன்று கொலைகளுக்காக போராட கூட ஒருத்தன் வரமாட்றான். ஒருவேளை அப்படி அந்த மூன்று பேருக்காக சம்பந்தப்பட்ட ஒருத்தனான இவன் போராட முன்வந்தாலும் அவனை பிரிவினைவாதி யென்ற பட்டம் கொடுத்து ஒதுக்கிவிட நினைக்கிறதே ஒரு கூட்டம். அந்த மூன்று கொலைகளுக்கு எதிராக எந்த முன்முயற்சியும் எடுக்காத மற்ற இரண்டும், பிரிவினை பற்றி பேச அறுகதை அற்ற ஜெனமங்களே!


தன்னை தரக்குறைவாக பேசி கேவலப்படுத்த நினைக்கின்ற மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை விட, தன்னைப்பற்றிய உயர்வான விசயங்களை முன்வைத்து பேசுவதுதான் நம்மை பக்குவப்படுத்தும். அப்போது எதிரிகளைவிட துரோகிகளுக்கு தான் அதிகமாக கோபம் வரும்! தனித்துவமானவர்களை என்றைக்குமே தனிமைப்படுத்த முடியாது!

நான் அகமுடையார்ன்னு சொல்வதலோ, அகமுடையார் பற்றிய பதிவை பதிவதலோ, உங்களுக்குள் ஏற்படும் மனச்சங்கடங்களை பற்றி எனக்கு கவலையில்லை. மரியாதைக் குறைவான சில பதிவுகளால் அகமுடையார்களை கேவலப்படுத்த முயலும் துரோகிகளுக்கு, பதிலுக்கு பதில் கேவலமாக எழுத எனக்கு மனமில்லை. ஆனால், அகமுடையார் சார்ந்த விசயங்களையும், எனக்கு தெரிந்தவற்றையும் இங்கே நேரம் கிடைக்கும் போது பகிரலாமென்று இருக்கிறேன். அகமுடையார் பற்றிய பதிவுகளையே சகித்துக்கொள்ள முடியாதவன் முக்குலத்தோர் என்று சொல்லவே அறுகதை அற்றவன்! உட்பிரிவுன்னு ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு தனிமைப்படுத்த முயலும் சில சுயசாதிப்பிரிவு பற்றுள்ளவர்களையும் பற்றி எனக்கு கவலையில்லை.

ஏனெனில், நான் அகமுடையாராக இருப்பதால் தான், தேவனாகவும் இருக்க முடிகிறது. இதை புரிந்துகொள்ளாத குறைகுடமெல்லாம், உட்பிரிவுயென்று சொல்லிக்கொண்டு போகலாம். எதுவுமிங்கே நிரந்தரமில்லை.

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!

இன்னைக்கு பலபேரு இங்கே இணையத்தில் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரிவினைவாதியென்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். களத்திலும் சரி, இணையத்திலும் சரி நான் செயல்பாட்டில் இருந்தவன்; இருக்கின்றவன் தான். அதைப்பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவோ, மிகைப்படுத்தி பகிரவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் இன்று இதை சொல்வதால் எனக்கு யாரும் விருது கொடுக்க போவதில்லை. ஆனால், என் பங்களிப்பை பற்றி இங்கே தெளிவாக்க விரும்புகிறேன்.

மேலும் இங்கு சிலர்... போற இடங்களையெல்லாம் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டு செயல்வீரர்கள் போல காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.அவர்களை போல பெருமை பட்டுக்கொள்ள முடியாவிட்டாலும், என் பங்குக்கு இணையத்தில் இதுவரை நான் செய்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

01. இணையத்த்தை பொருத்தவரை ஆரம்பத்தில் தேவரினத்தை அடையாளப்படுத்திய ஒரே இணையம்: www.thevar.co.in என்பதே ஆகும். அப்போது அந்த இணையதளத்தில் கட்டுரை எழுதி பரமரித்தவர்களான திரு வெயிலணன், திரு. ஜெ.முத்துராமலிங்கம், திரு.முகுந்தன் உள்பட அனைவருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றபோதும், சிறியவனான எனக்கும் அவர்களுக்கு இணையான இடமளித்து என்னையும் எழுதவும் - அந்த இணைய தளத்தை பராமரிக்கவும் முழுசுதந்திரம் அளித்தனர். அப்போது முதல் இணைய செயல்பாட்டில் இருக்கின்றவன்.

02. இப்போதுள்ள ஃபேஸ்புக் - ட்விட்டர் போன்ற சமூகதளங்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்குட் - கூகிள் பஸ் என்ற சமூக வலைதளங்களில் தேவரினம் சார்பாகவும், தேவரினத்திற்கு எதிரான ஆர்குட் கம்யூனிட்டிகளில் நடக்கும் விவாதங்களிலும் இரவு பகல் பாராமல் விவாதம் செய்தவன். அப்போது மிகபிரபலாக இருந்த வால்பையன் - ஆல் இன் ஆல் அழகுராஜா போன்றவர்களோடு தொலைபேசியின் வாயிலாக நேரடியாக தனி ஆளாக சண்டையிட்டவன்.

03. ஆர்குட் குழுமத்தில் அப்போதே 4000க்கும் மேற்பட்ட உறவுகளை உள்டக்கிய தேவர் குழும விவாதங்களில் பங்கெடுத்தவன். அந்த குழும உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு வாக்கிலேயே உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று வணங்கி வந்த அணியில் இடம்பெற்று அதை இணையத்திலும் - யூட்யூபிலும் பகிர்ந்தவன். அப்போது இங்குள்ள பலருக்கு ராஜராஜன் யாரென்றும் தெரியாது. அவரது சமாதி எங்கிருக்கிறது என்பதும் தெரியாது.

04. பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால், www.thevar.co.in யென்ற இணையமும் அதிலுள்ள பதிவுகளும் முற்றிலுமாக இழந்தபின்னால், பேக்-அப் தேவைக்காக அனைத்து முக்கிய பதிவுகளையும் www.thevarthalam.blogspot.com வலைதளத்தில் சேகரித்து வைத்தவன். அந்த பதிவுகளே மீண்டுமொரு இணையதளத்தை உருவாக்கும்போது தேவைப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

05. அதன் பிறகு, திரு குவைத் பாண்டியன் பங்காளியின் பண உதவியோடு www.thevarthalam.com இந்த இணையதளத்தை உருவாக்க காரணமாக இருந்தவன். இன்று தேவருக்கான ஒரே இணையதளமாக இருக்கக்கூடிய தேவர்தளத்தின் பெயரை வைத்தவன். சிலர் மீதான மனக்கசப்பால் இப்போது தேவர்தளத்தின் செயல்பாட்டில் இல்லாதவன்.

06. தமிழ் விக்கிபீடியாவில் கள்ளர் - மறவர் களுக்கு தனித்தனி பக்கம் இருந்தபோதும், அகமுடையார்களுக்கு யென்று எந்த பக்கமும் அதுவரை இருக்கவே இல்லை என்ற ஆதங்கத்தோடு தனியாக http://ta.wikipedia.org/wiki/அகமுடையார் யென்ற பக்கத்தை உருவாக்கியவன். இன்றைக்கு அகமுடையாருக்கு என்று ஒரு பக்கம் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவன் என்ற ஒற்றை சந்தோசமே எனக்கு போதும். ஏனெனில், அப்போதும் கள்ளருக்கும் - மறவருக்கும் தனித்தனி விக்கிப்பீடியா பக்கம் இருந்தது. ஆனால், அகமுடையாருக்கு யென்று ஒருபக்கத்தை உருவாக்க கூட மற்ற யாருக்கும் மனமில்லை.

07.. ஃபேஸ்புக்கில் Thevar-Mukkulathor யென்ற பக்கத்தை முதலில் உருவாக்கியவன். இதை தவிர இன்றும் ஃபேஸ்புக்கில் பல உறுப்பினர்களை கொண்ட பல ஃபேஸ்புக் ஃபேஜ்களான முகநூல் பக்கங்களை உருவாக்கி அதை செயல்பாட்டிலும் வைத்திருப்பவன்.

08. தேவர் ஜெயந்தி தடையை உடைப்போம் , திராவிடத்தை ஒழிப்போம் என்ற ஃபேஸ்புக் ஃபேஜ்களை உருவாக்கியவன். அந்த பக்கங்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல், அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பல உறவுகளை அட்மினாக நியமித்தி அதிக உயிரோட்டத்துடன் தடைப்பற்றிய செய்திகளை பகிர காரணமாக இருந்தவன்.

09. இதைத்தவிர www.nochchi.com யென்ற இணையத்தை உருவாக்கி, அதை தலித் அல்லாத தமிழ்சமுதாயத்திற்கான பொதுதளமாக பாவிக்க முயற்சி எடுத்து சில கட்டுரைகளை எழுதியவன்.

10. இணையத்தில் நுழைந்த நாள் முதல் வினவு - கீற்று உள்ளிட்ட பல தலித் சார்புள்ள இணையதளங்களில், தேவரினத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கண்டனத்தையும், தேவரினம் சார்பான என்னாலான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பவன்.

11. இதைத்தவிர களப்பணியை விவரித்து சொல்ல விரும்பவில்லை. திருக்காட்டுப்பள்ளியில் - ஒன்பத்துவேலி கிராமத்தில் எரிக்கப்பட்ட தேவரின (கள்ளர்) வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொல்லப்போனவன். தடைப்போட பட்ட இந்த தேவர்ஜெயந்தியை பசும்பொன்னில் கொண்டாட நினைத்து ஸ்ரீதேவரை வணங்கி வந்தவன். என் உணர்வின் அடிப்படையில் அங்கே பசும்பொன்னில் களமாடிய செய்திகளை மற்றவர்கள் போல போட்டோ எடுத்து போட்டு பெருமைத்தேடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எனது உணர்வை என்னோடு பசும்பொன்னுக்கு வந்திருந்த முரளிநடராஜன், கணேசமூர்த்தி, ஜாக் துரைப்பாண்டியன் போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

12. பொதுவில் சொல்ல முடியாத இன்னும் பல விசயங்களை இணையத்திலும், வெளியிலும் களப்பணி ஆற்றிய என்னை, சிலர் திரைமறைவு வேலைகள் செய்து உட்பிரிவுவாதி யென்று பட்டம் கொடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு உள்ளாக இணையத்தில் செயல்படும் பலர் போராளியாக உருவெடுத்துவிட்டதால், அவர்களுக்கு இந்த இமலாதித்தன் ஏளனமாக தெரியலாம். உட்பிரிவு பாசத்தோடு தனித்தனியாக குருப்பாக பேசி முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் அனைவரை பற்றியும் எனக்கு தெரியும். அவர்களால், நான் உட்பிரிவுவாதி என்று அவதூறு பரப்பப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களை போன்ற இரட்டைவேடம் போடும் விலாங்கு மீன்களுக்காக என்றும் என் சுயத்தை இழக்கமாட்டேன்.

நான் முதலில் அகமுடையார். அதன்பிறகு தேவர். ஏனெனில், நான் அகமுடையாராக இருக்க முடிவாதலேயே தேவராகவும் இருக்க முடிகிறது.

- இரா.ச.இமலாதித்தன்.

19 நவம்பர் 2013

அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல!

ஒரு வாரமாக உட்பிரிவு உட்பிரிவுன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க. என்னிலிருந்தே இதைப்பற்றிய ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உட்பிரிவு என்பது இல்லவே இல்லை. இந்த உட்பிரிவு என்ற சொல்லாடலை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. மேலும், இந்த உட்பிரிவு என்ற சொல்லுக்கான அர்த்தம் நூறு சதவீதம் பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஒவ்வொரு இனக்குழுக்களுக்கென்று தனித்தனியான ஒரு பாரம்பரியமும் - அடையாளங்களும் - சடங்கு முறைகளும் இருந்தபோதிலும், போர்க்குடி என்ற ஒற்றை அடையாளமே இம்மூவரையும் இணைக்க மூலக்காரணமாக இருக்கிறது.

முதலில் அகமுடையார் என்ற பற்று எனக்கு இருக்கும் பட்சத்தில் தான், அடுத்து முக்குலத்தோர் என்ற வட்டத்திற்குள்ளாகவே என்னால் வர முடியும். மேலும், தன் சுயசாதி மீதான பற்று இல்லாத ஒருவனால், மூன்று சாதிகளின் கூட்டுக்குள் எப்படி நுழைய முடியும்? ஏனெனில் சுயத்தை இழந்து இன்னொன்றை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. மேலும், தன் சுயத்தை இழந்து, இன்னொரு அடையாளத்தை பெறுவது ஒரு நிரந்தரமான அடையாளத்தை தரப்போவதில்லை. இம்மாதரியான பாரம்பரிய அடையாளங்களை இழப்பதும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடக் கூடியதும் இல்லை. அப்படி நடக்க இன்னும் காலம் பிடிக்கலாம். அதுவரையிலும், தன் சுயத்தை இழக்காமல், ஒன்றிணைந்து செயல்படலாம். இதுவேதான் மற்ற இரு பிரிவுகளுக்கும் பொருந்தும்.

தன்னை உயர்த்தி பிடித்து, மற்ற இருவரும் எங்களுக்கு கீழேதானென்றும், நாங்கள் மற்ற இருவரையும் விட சிறந்தவர்களென்றும் சொல்வதும் தான் முதல் பிரச்சனையை உருவாக்குகிறது. நான் என்னதான் தேவன் தேவன்னு பேசினாலும், பலபேருக்கு நான் எப்போதுமே அகமுடையானாக மட்டுமே தெரிகிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் முதலில் அகமுடையானாக பற்றோடு இருக்க முடிந்தால்தான், அடுத்து முக்குலத்தவனாகவும் மாறமுடியும் என்பது என் தீர்க்கமான முடிவு.

இங்கே பலர் ஒருதாய் பிள்ளையென்று ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். அதைப்போன்ற கற்பனை கதைகளுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில், முக்குலம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம்; அதிலும் கூட்டு குடும்பமாகவே வாழலாம். அப்போதும் கூட, முதலில் எனக்கு என்னுடைய தந்தை தான் முக்கியம். அதன் பிறகுதான் சித்தப்பா - பெரியப்பா எல்லோரும் வருவார்கள். அப்படிப்பட்ட ஒற்றுமையே இப்போதைய தேவையாக இருக்கிறது. உள்ளொன்று வைத்து புறவொன்று வைத்து செயல்படும் போலியான ஒற்றுமையை விட இப்படி வெளிப்படையாக ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்படுவதுதான் நலமாக இருக்கக்கூடும். எனவே நான் முதலில் அகமுடையான். அதன் பிறகே மற்ற இத்யாதிகள் எல்லாம்.

இதை இங்கே பொதுவில் சொல்வதால், நான் பிரிவினைவாதி ஆக்கப்படலாம். மனதுக்குள்ளாக வைத்து மறைமுகமாக திரைமறைவு வேலைகளை செய்யும் கூட்டத்தை விட, அகத்தில் உள்ளதை அப்படியே புறத்திலும் செயல்வடிவம் காட்டுவதால் எனக்குள் எந்தவித குற்றணர்ச்சியும் எப்போதும் இருக்க போவதில்லை.

மற்றப்படி உங்களது புறக்கணிப்புகளும் - வசைச்சொற்களும் எனக்கு புதிதல்ல. புரிதலுக்கு நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2013

இனி தேவரின அரசியல் எப்படி இருக்க வேண்டும்?



இன்றைக்கு நம்மினத்தவர்கள் பலரை நாம் மிகக்கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரே காரணம் வேறொரு சாதியோடு கூட்டணி வைத்ததால்தான் என்பது மற்ற எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் என் கேள்வி,

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தடை மற்றும் ஸ்ரீ தேவர்ஜெயந்தி தடை, முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுசுவர் இடிப்பு, போலி என்கவுண்டர் துப்பாக்கிச்சூட்டில் பிரபு - பாரதி - குமார்  கொலை, திருநெல்வேலியில் மாமன்னர் பூலித்தேவன் நினைவேந்தலுக்கு தடை, திருநெல்வேலி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்பட பல மாவட்டங்களுக்கு 144 தடை, இதையெல்லாம் செய்வது யார்?

இந்த திராவிட அரசியல் தானே தமிழனையும், தமிழனென்ற அடையாளத்தையும் மறைமுகமாக அழித்து வருகின்றது. சாதி என்றோ தலைவன் என்றோ - எந்தவிதத்திலும் தமிழன் ஒன்றுபட்டுவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும் ஒவ்வொன்றாக சிதைப்பது இந்த இல்லாத திராவிடத்தின் கேவலமான அரசியல் தானே? அந்த தீரா விடமான திராவிடத்தை அழிக்கவும், நம் பண்பாட்டு அடையாளத்தை காக்கவும், எந்த தேவரின அமைப்பு அரசியலில்  நேரடியாக களம் காண முயற்சி எடுத்துள்ளது?

நம் தேவரின அமைப்புகள், இல்லாத திராவிடம் என்ற மாயையை நம்பி, அந்நியர்கள் ஆளுமை நிரம்பிய திராவிட கட்சிகளான திமுகவிடமும் - அதிமுகவிடமும் தேர்தல் சமயத்தில் தஞ்சம் புகுந்தன என்பது கடந்தகால வரலாறு மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது. அப்படிப்பட்ட திராவிட கட்சிகளிடம் ஓரிரு தொகுதிகளுக்காக தானே, நம் தேவரின அமைப்புகள், நம்முடைய எண்ணிக்கையை காரணம் காட்டி, நம்மையும்  -  நம் வாக்கினையும் - நம் மானத்தினையும் அடகு வைத்திருந்தன.

பெரும்பான்மையான சமூகமாக தேவரினம் இருந்த போதும், ஓரிரு தொகுதிகளுக்காக இன்னமும் திராவிட மயக்கத்தில் இருக்கும் தேவரின அமைப்புகள், தைரியமாக தனித்து தேவரின அரசியல் செய்ய களம் காணவில்லையே ஏன்? தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் - 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எல்லா தொகுதிகளிலும் தனித்து நிற்பது என்பது விழலுக்கு இறைத்து நீர்போல வீண் தான். எனவே, காலமறிந்து - களமறிந்து நிச்சயமாக வெற்றிவாகை சூடக்கூடிய தேவரினத்தவர்கள் அதிகம்வாழும் தொகுதியை தேர்ந்தெடுத்து, தேவரின அமைப்புகள் தேர்தலை சந்திக்கலாமே?

ஏற்கனவே, தேவரின அமைப்புகள் தனித்து நின்று தோல்வியை சந்தித்திருக்கலாம். அது பெரியவிசயமல்லவே. தோல்வியே சந்திக்காமல் அரசியல் நடத்த அனைத்து தேவரின தலைவர்களும், ஸ்ரீ பசும்பொன் முத்துராமலித்தேவர் கிடையாது என்பதுதானே எதார்த்தம். பெயரளவில் மட்டும் அடைமொழியாக "வாழும் தேவர்" யென்று சொல்லி பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர, ஒருபோதும் தேவரைப்போல யாரும் ஆகிவிட முடியாது. ஏனெனில், பசும்பொன் ஸ்ரீ தேவருக்கு நிகர் தேவர் மட்டுமே; வேறு யாரும் இதுவரை தோன்றவும் இல்லை, இனி தோன்றப்போவதுமில்லை.

தேர்தலில் தோல்வியை சந்திப்பதால் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை இன்னும் பக்குவடுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் தளர்ச்சியை ஏற்படுத்திவிட கூடாது. தன்னைத்தானே "ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒரே தலைவர்" யென்று பிரகனபடுத்தி கொள்வதில் உள்ள கவனம், தேர்தல் சமயத்திலும் இருக்க வேண்டுமல்லவா?

ஒருவேளை தனியாக அரசியலில் களம் முடியாத பட்சத்தில், வழக்கம்போல அக்டோபர் மாதம் மட்டும் மாமன்னர் மருது பாண்டியர் நினைவேந்தலுக்கும், தேவர் ஜெயந்திக்கும் சிறப்பாக எதையாவது செய்துவிட்டு மற்ற 11 மாதங்களும் ஓய்வெடுத்து விடலாமே. அப்படியும் செய்ய முன்வரவில்லை. அப்பறம் ஏன் தேர்தல் சமயத்தில் மட்டும் ஜெயலலிதாவையோ - கருணாநியையோ சந்திக்க மெனக்கெட்டு கொண்டிருக்கிறீர்கள்?

திராணி இருந்தால், உங்களது சொந்த ஊரை உள்ளடக்கிய ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று வெற்றி பெற முயற்சிக்கலாமே? இல்லையெனில் தேவரின மக்கள் அதிகமாக வாழும் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து, அங்கே தனித்து நின்று வெற்றியடையலாமே? என்னதான், திராவிட கட்சிகளிடம் கைக்கட்டி நின்றாலும், ஓரிரு தொகுதியைத்தானே ஒதுக்க போகிறார்கள். மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை தேவரின மக்களின் கட்சி எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திராவிடம் என்ன நிர்ணயிப்பது? பெரும்பான்மையான ஓட்டுவங்கியை கொண்டுள்ள தேவரினமக்களின் அரசியலை, தேவரின அமைப்புகள் கையில் எடுக்க ஆளுமை இல்லாதவரை திராவிடத்தின் காலில் விழுந்தே கிடக்கவேண்டும் என்பதே நியதி.

தமிழ் சாதிகள் எப்போதுமே ஒன்றுபட்டு விட கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கும் திராவிடத்தை முதலில் வேரறுக்க வேண்டும். தமிழ் சாதிகள் ஒன்றுபட்டு விட்டால், திராவிடம் என்ற மாயை செல்லாக்காசாகி விடும் என்பது திராவிட கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், திராவிடத்தை எதிர்ப்போரை, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் தற்காலிகமாக ஆதரிக்கலாம். பிறகு தேவரின அரசியலில் நம்மை வலுப்படுத்திக்கொண்டு, இரு எதிரிகளோடும் நேரடியாக மோதிப்பார்க்கும் விதமாக, தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். எது வசதி என்பது தேவரின அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, நமக்குள்ளாகவே சண்டையிட்டு முட்டிமோதி கிடப்பது ஒட்டுமொத்த தேவரினத்தின் ஒற்றுமைக்கு களங்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் எந்தவித பெருமையையும் தந்துவிடாது.

ஏனென்றால், எதிரிகளை விட துரோகிகளாலே வீழ்த்தப்பட்ட இனம் தேவரினம் என்பதற்கு எடுத்துக்காட்டே ஸ்ரீ பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவரும் - மாமன்னர் மருது பாண்டியர்களும் தான் என்பது நமக்கு தெரிந்த வரலாறு. எனவே, கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு அரசியல் செய்வோம்! அரசையும் அதிகாரத்தை கைப்பற்றுவோம்!

- இரா.ச.இமலாதித்தன்

தேவருக்கு முதுகளத்தூர் முடிவல்ல!

மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார்.

“இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்; நாளைக்குப் பொதுப் பேச்சுவார்த்தை என்று கூட்டி அதில் யார் யார் அக்கறையும் ஆர்வமும் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாரும் கையொப்பம் இடுவோம்; அறிக்கை கொடுப்போம்” என்பதே தேவரின் நிலைப்பாடாக இருந்தது.

அன்று நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் ஆவணமும் வழக்குமன்றத்தில் தேவர் அளித்த வாக்குமூலமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உண்மைகளும் நடந்த நிகழ்ச்சிகளும் இவ்வாறு இருக்க, நூல் மதிப்புரையில் ஆசிரியர், “மறவர்கள் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டார்” என்று எப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. நூலாசிரியருக்குச் சார்பு நிலை இருக்கலாம்; சார்புநிலை இருப்பதால் தானே ஒரு நூலை எழுதுகிறார். ஆனால், மதிப்பீடு செய்கிறவருக்கு ஏன் சார்புநிலை? அல்லது ஏன் கவனமின்மை?

முதுகுளத்தூர் கலவரம் பற்றி, ஒருசார்பான நூல்களும் கருத்துகளுமே வந்துகொண்டிருக்கின்றன. இவை உண்மையை வெளிக்கொணரும் முயற்சியாக இல்லை. முதுகுளத்தூர் கலவரம் குறித்து எழுதும் போதெல்லாம் தேவரை விமர்சித்து, சாதித் தலைவர் என்று சாயம்பூசி, தவறான அடையாளங்களைக் காட்டுவதால் கலவரத்தின் சரியான பின்னணி என்ன என்பது கண்டுணரப்படாமலே போய்விடுகிறது.

இது சாதிக் கலவரம் அல்ல; தேவரின் அரசியல் புகழை, வெற்றிகளை மாசுபடுத்த உருவாக்கப்பட்ட “அரசியல் கலவரம்” என்று ஆராய்ந்து எழுதினால், அது, தோழர் இமானுவேல் சேகரனின் படுகொலையை நியாயப்படுத்துவதாக ஆகிவிடாது. தோழர் சேகரனின் படுகொலை படுமோசமான நிகழ்வு; ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கரம். வரலாற்றை ஆராய்கிறவர்கள் இது ஏதோ தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்மீது முக்குலத்து மக்கள் கிளர்ந்து நடத்திய சாதிக்கலவரம் என்று மட்டுமே அணுகிப் பார்க்கும்போது பல உண்மைகள் மறைந்துவிடுகின்றன;

பல கேள்விகளுக்கு விடையும் கிடைப்பதாக இல்லை. காஷ்மீர் பிரச்சினை, நேதாஜி மரணம், காமன்வெல்த் வலையில் இந்தியா சிக்கிக்கொண்டிருப்பது போன்றவை குறித்தும், அமெரிக்க, ஆங்கில ஏகாதிபத்தியங்களின் ‘செல்லப்பிள்ளை’யாகவே பண்டித நேரு நடந்துகொள்கிறாரே என்றும் தேவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்திய பேருரைகள் ஆளும் காங்கிரஸ்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தின. நேருவின் விசுவாசிகளுக்கு, விசுவாசமாக இருந்தால் பதவிகளில் தொடரலாம் என்று ஆசைப்படுகிறவர்களுக்குத் தேவரின் அனல் பேச்சுகள் உவப்பாயில்லை. தேவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்க்கும்போது அவரை நாடாளுமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்க முடியாது என்று உணர்ந்த அன்றைய ஆளும் காங்கிரஸ், வேறு ஒரு மாற்று வழி பற்றி யோசித்தது. அதுதான் சாதிச்சாயம் பூசப்பட்ட, தேவரை அதில் வம்புக்கு இழுத்த ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற அவல நாடகம்.

தாழ்த்தப்பட்ட தோழர்கள், பெருமக்கள் பல விஷயங்களைப் பரிசீலித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்னதான் காங்கிரஸ் பேரியக்கம் சோஷலிஸம், சமத்துவம் பேசினாலும் அது அடிப்படையில் ஒரு முதலாளித்துவ இயக்கமே. பல நேரங்களில் அண்ணல் காந்தியடிகளையே மறுதலித்த இயக்கம்; பெருந்தலைவர் காமராஜர் பதவியிலிருந்து விலகியபோது, அந்த இடத்தில், எல்லா வகையிலும் மாண்புகள் நிறைந்த, எளிமையின் ஏந்தலாக வாழ்ந்து காட்டிய கக்கன்ஜியை வைத்து அழகுபார்க்க நினைக்காத இயக்கம். பாமர மக்களுடன் தொடர்பு இல்லாதவரும் வெறும் ‘கோப்புகளு’டன் மட்டுமே தொடர்புகொண்டிருந்தவருமான பெரியவர் பக்தவச்சலத்தை உட்கார வைத்த இயக்கம்; அதனாலேயே மீள முடியாத பெரிய சரிவை ஏற்படுத்திக்கொண்ட இயக்கம்.

மதுரை விமான நிலையத்துக்கும் மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்துக்கும் தேவரின் பெயர் வைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தவுடன், அதற்குப் போட்டியாகத் தோழர் சேகரனின் பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கைவிடுவது மேலும் மேலும் பிளவைத்தான் உருவாக்கும். யாரோ சில அரசியல் புதுக்கட்சிப் பிரமுகர்களின் ஆர்ப்பாட்ட, அவசர அறிக்கைகளுக்குள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல், சார்புநிலைப்படாமல், நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும். நடுநிலைச் சிந்தனைதான் நாட்டின் நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும். தாய்நாடுதான் நமக்குப் பெரிது; ‘தலைவர்கள்’ அதற்குப் பின்னர்தான்!

நன்றி: மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை & காலச்சுவடு

25 அக்டோபர் 2013

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்!


(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)
1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை
இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

நன்றி:  ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

24 அக்டோபர் 2013

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?




உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!


எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!
 

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.
  

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!
  
   - இரா.ச.இமலாதித்தன்

05 அக்டோபர் 2013

முற்போக்குவாதி வள்ளலார்!





" நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே."

 - திருவருட்பிரகாச வள்ளலார்

 எனக்கு வள்ளலார் பற்றி நினைக்கும் போது நினைவில் வருவது அவர் ஆரம்பித்த சுத்த சன்மார்க்க சங்கம் தான். மேலும், வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் காலம் தொட்டு இன்றுவரை வடலூரில் கருவறையில் அணையா தீபமும், சமையலறையில் அணையா அடுப்பும் உயிர்ப்புடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். என் குடும்பத்தினரும், அம்மா வழி உறவுகளும் தீவிர சன்மார்க்க வாதிகள். அசைவம் (புலால்) உண்ண மாட்டார்கள். 

"ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்"
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"

வள்ளாலரை நினைக்கும்போது இந்த இரண்டும்தான் சட்டென்று நினைவில் வரும். வள்ளலார் தனது பெயரை அவர் பிறந்த ஊரான சிதம்பரம் என்பதை சேர்த்து சிதம்பரம் இராமலிங்கம் யென்றுதான் கையொப்பமிடுவார். அவர் முதலில் எம்பெருமான் முருக பக்தனாகவும், பிறகு ஈசன் சிவனை வணங்கி சிவனடியாராகவும் விளங்கினார்.

அவரை பின்பற்றும் சன்மார்க்க வாதிகள் அனைவருமே, "அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை" யென்ற இருவரிகளை உச்சரிக்காமல் இருக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்ட மகான் வள்ளலார் அவதரித்த தினம் (புரட்டாசி19) இன்று!

அடியேனும் அவர் அவதரித்த புண்ணிய புரட்டாசி மாதத்தில்தான் பிறந்தேன் என்பதில் மகிழ்ச்சியே...

- இரா.ச.இமலாதித்தன்

06 ஏப்ரல் 2013

குற்றப்பரம்பரைச் சட்டம்





பெருங்காமநல்லூர் 

இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த ""பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.

ஜாலியன் வாலாபாக்:
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் "ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை இரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.

பத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.

குற்றப்பரம்பரைச் சட்டம்:

ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தித் தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை இராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,

01) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

02) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.

03) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

04) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.

05) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

06) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.

07) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

மக்களின் எதிர்ப்பலை:

"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

01) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.

02) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.

03) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.

04) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.

எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
மதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். ""சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.

02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். "ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.
 03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.

சட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.

 ""நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா? அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா?'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

 ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.

"சட்ட அமலாக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.

முன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் "ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், "ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

கள்ளர் சீரமைப்பு:

பெருங்காமநல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.

ஒப்பிடலாம்:

ஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.

வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.

கட்டுரையாளர்:  என்.எஸ். பொன்னையா, வழக்குரைஞர், தினமணி, 2013.

16 மார்ச் 2013

என் பார்வையில் பரதேசி



பாடல் வெளியீட்டிலிருந்தே அவத்த பையா பாட்டுதான் எனக்கு ரொம்பவே பிடிக்குமென்பதால், முதல் பாதியிலேயே அந்தபாடல் நெஞ்சை வருடிச் சென்றது. அதே போல மதமாற்றம் செய்யும் தமிழ் கிருஸ்துவ மருத்துவ கிழவனின் ஏசப்பா பாடலும் காட்சிகளின் ஊடாக பார்க்கும் போது பிடித்து போனது.

கதைக்களம் பின்பாதி முழுக்க முழுக்க அடிமைகளின் வாழ்க்கையை சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தது. முதல்பாதி கிராமியச்சாயலுடன் கூடிய பழமைவாதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்திருந்தது. அதர்வாவின் ஆத்தாவாக படைக்கப்பட்டிருந்த அந்த கிழவியின் நடிப்பும், எதார்த்தமும், வீரியமும், பேச்சுவழக்கும் ரொம்பவே என்னை கவர்ந்தது.

நாயகனும், நாயகியும் ஒரு பஞ்சாயத்து காட்சியில் சைகை மூலமாகவே பேசிகொள்வார்கள். பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு.. வெகுளித்தனமான நாயகனுக்கும், விவரமறிந்த நாயகிக்கும் காதல் மலர்ந்து மணம் முடிக்கும் முன்னரே, கருவும் உருவாக,.. வீட்டிலிருந்து தனிமைப்படுத்த பட, நாயகனின் ஆத்தா அடைக்கலம் கொடுக்கிறாள். இதற்கிடையில் ஊரின் வறுமையால் பஞ்சம் பிழைக்க ஒரு கங்காணியின் ஆசை வார்த்தைகளால் அதர்வா உள்பட கிராமத்தின் பெரும்பாலான ஆண்களும், சிறுவர்களும், மணம் முடித்தவர்கள் ஜோடியாகவும் தேயிலை தோட்டத்திற்கு ஒன்றரை மாதம் நடையாய் நடந்தே கடக்கின்றனர். போகும் வழியில் ஒருவனின் உடலை விட்டு உயிர் பிரிகிறது. அவனை விட்டு, மற்ற அனைவரும் கடந்து செல்கிறார்கள். அவனது மனைவியையும் இழுத்து செல்கிறார்கள். அவனது கைமட்டும் இறுதி தருவாயில் மேலே எழும்புகிறது. தூரத்தில் மற்றவர்கள் களைப்போடு கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் இடைவேளை.. இனி அடிமைகளின் வாழ்வியல்முறைதான் என்பதை யூகிக்கமுடிகிறது.

தேயிலை தோட்டத்திற்குள் வந்துவிட்டனர். தனித்தனியாக கூரை வேய்ந்த வீடுகள் ஆளுக்கொன்றாய் கட்டாயமாக பகிர்ந்தளிக்கபடுகிறது. அதற்கப்பறமான காட்சிகளை நான் எழுத்துகளின் வாயிலாக விளக்க விரும்பவில்லை. அங்குதான் பாலா நிற்கிறார்.
பாடலும், பிண்ணனி இசையென ஜி.வி.பிரகாஷ்குமார் அசத்தி இருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து, ஒவ்வொரு பாடலிலும் வைரவரிகளினால் இந்தவயதிலும் நம்மை கட்டிப்போடுகின்றார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது. செழியனின் ஒளிப்பதிவு இருளிலும் – வெளிச்சத்திலும் உண்மையை மட்டுமே பிரதிபலித்திருக்கிறது. படம் நெடுகிலும், உதவி இயக்குனர்களின் அயாரத உழைப்பும், துணை நடிகர்களின் பங்களிப்பும் அப்பட்டமாக நம் கண்முன் தெரிகிறது. ஒவ்வொரு சின்னஞ்சிறிய வசனத்தில் கூட பாலா இன்னும் நம்மை கதைக்குள் உள்ளிழுத்து நம் நாடியை பிடித்து பார்க்கிறார்.

படத்தின் முதல் காட்சியில் தொடர்ச்சியாக அந்த குக்கிராமத்தின் அநேக வீடுகளையும் மக்களையும் காட்டும்விதம் அருமை. அதேபோலவே தேயிலை தோட்ட அடிமைகளுக்கான வீடுகளை காட்டுகின்ற காட்சியமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன. போலி வைத்தியர் – போலி சாமியார் – தேயிலை தோட்டத்தை வடிவமைக்கும் வெள்ளைக்கார கிழவன் – அவனுக்கு மாமா வேலை செய்யும் எடுபுடி எஜமானான கங்காணி. இப்படியான கிராமத்து ஆட்களை ஊருராக சென்று அடிமையாக்கும் கங்காணியும், அவனுக்கு எடுப்புகளும், அடியாட்களும் என பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் கதையின் மாந்தர்களாகவே.

அப்போது நடந்த (இப்போது வரை நடந்து கொண்டிருக்கும்) கிருஸ்துவ மத மாற்றத்தை கடுமையாகவே சாடி இருக்கிறார் பாலா. எப்படியெல்லாம் மதமாற்றம் அந்தகாலத்தில் செய்திருக்க முடியும் என்பதை பாமரனும் உணரும் வகையில் பல காட்சியமைப்புகளும், வசனங்களும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.

படம் முடிந்ததும் சட்டென்று நினைக்கு வந்தது, ஈழமண்ணில் நடந்தேறிய பயங்கரங்களும், ஒடுக்குமுறைகளும் தான். முள்வேலி முகாம்களின் சித்ரவதையை பரதேசியின் மூலம் சிறிய அளவிலானும் உணர முடிந்தது.

பரதேசியின் கதைக் களத்தையும், தனி ஈழம் என்ற தேசத்தின் விடுதலை கனவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருந்தது. தேயிலை தோட்டத்தை நான் இலங்கை போலவும், சொந்த மண்ணிலேயே அகதிகளான எம்தமிழின உறவுகளை, கொத்தடிமைகளாகவும் ஒப்பீடு செய்ய முடிந்தது. வெள்ளைக்காரனை சர்வதேச வல்லாதிக்க நாடுகளோடு சேர்த்துணர முடிந்தது. என்னைபொறுத்தவரையில், பரதேசியிலும் ஈழத்தின் சுவடுகள் தெரிந்தது.
பரதேசி - எல்லோருக்குமான விடுதலையை அடிமைகளின் வாயிலாக சுட்டிக்காட்டுகிற படம். என் மனசை ரொம்பவே பாதிச்சது. படம் நல்லாருக்கு. எல்லோரும் பாருங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போங்க, உங்க மனசு படம் முடிந்தபின்னும் சிலமணிநேரம் உள்ளுக்குள் ஏதோவொன்றை கண்டிப்பாக பண்ணும். அண்ணன் இயக்குனர் பாலாவை இந்தபடத்தின் மூலமாக இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன். கிரேட்
வெறும் டீ தானேன்னு நினைக்காமல், அந்த டீக்கு பின்னால் உள்ள தேயிலை தோட்டத்தின் வரலாற்றையும் கூட, கதைக்களமாக மாற்ற முடியும்ன்னு நிரூபிக்கிறவன் தான் உண்மையான கலைஞன்...  நீர் கலைஞன்யா!