டெல்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெல்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2021

எதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஊரடங்கு?



 அன்பிற்கினிய டெல்டா பகுதி வாழ் மக்களே!


தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமே இல்லை. மயிலாடுதுறையையும் நாகப்பட்டினம் மாவட்ட கணக்கிலேயே இதுவரை காட்டி வருகின்றனர். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி இந்த இரு மாவட்டங்களையும் சேர்த்து பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை - 482 பேர். அப்படியெனில் சராசரியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் 240 பேர் என ஒரு கணக்கிற்கு கொள்ளலாம். கொஞ்சம் ஏற்றமிறக்கம் இருந்தாலும், இவ்விரு மாவட்டங்களின் தினசரி பாதிப்பு 250 பேர் என வைத்து கொள்வோம். அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 272 பேர். அப்படியெனில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சராசரி பாதிப்பு 250 பேர் தான் வருகின்றது.
அப்படியே இதே கணக்கீடோடு சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, 1094 பேர் என அரசு கணக்கு காட்டிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மேல் தினசரி பாதிப்புள்ளாகும் சென்னைக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் பொழுது நான்கில் ஒரு பங்கான தலா 250 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கேள்வி கேட்க கூட ஆளில்லை என்பதால், அரசாங்கம் என்ன சொன்னாலும் தலையாட்டும் மந்தை புத்தி கொண்ட மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடச்சொன்ன மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டரசோ, இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் என்ன மாதிரியான கணக்கீடுகளென்றே தெரியவில்லை. எல்லாம் ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!
- இரா.ச. இமலாதித்தன்

04 மே 2019

டெல்டா பகுதியை சேர்ந்தோர் கவனத்திற்கு,







குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற எச்சை ஊடகங்களால் தான் ஒட்டுமொத்த குழப்பங்களும் தொடர்கின்றன. 'அதர்ம யுத்தம்' என்ற தலைப்பில் ருத்ரன் என்ற பெயரில் இரண்டு தொடர்கள் வந்திருக்கின்றன. 26.04.2019, 30.04.2019 என்ற இரு மின்னிதழிலும் யாரைப்பற்றி சொல்கிறேனென சொல்லாமலேயே தரம்தாழ்ந்த வார்த்தைகளால் நாலாந்தர கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

"தமிழகத்தில் கிரிமினல் தனத்திற்காக நேர்ந்து விடப்பட்ட மண்டலம் டெல்டா மண்டலமாம். டெல்டா பகுதிகளில் கொத்து கொத்தாக கூலிப்படைகள் திரிகின்றார்களாம். ஒருமையில் அவன் இவனென சொல்லப்பட்டிருக்கிறது. எவனுக்கும் அப்பன், ஆத்தா வைத்த பெயர் மட்டும் வழக்கத்தில் இருக்காதாம்." இப்படியாக பல அவதூறுகளை நிரப்பிருக்கிறது அந்த தொடர் கட்டுரை. (ரிப்போர்டர் கட்டுரை லிங் கீழே கமெண்டில் உள்ளது)

மானங்கெட்ட தனமான எழுத்து நடை; காசுக்கு மாரடிக்கும் வன்மம் நிறைந்த வசவுகள்; கூலிப்படையை விட ஊடகத்தை வைத்து வேசித்தனம் செய்யும் வார்த்தை ஜாலங்கள். நீங்களெல்லாம் திருந்தவே வாய்ப்பில்லையா? ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகளை தடை செய்ய வாய்ப்பே இல்லையா? எதிரணியிடம் பணம் வாங்கி அவதூறாக மற்றொரு அணியை எழுதுவது. இன்னொரு பக்கம், மிரட்டி பேரம் பேசி பணம் சம்பாரிப்பது. இவைதான் இம்மாதிரியான ஊடகங்களின் முழுநேர தொழிலாக இருக்கிறது. வலுவான கண்டனக்குரல் எழுப்பி, இம்மாதிரியான கடும்போக்கை தடை செய்வோம்.

- இரா.ச. இமலாதித்தன்

15 நவம்பர் 2017

எங்கள் இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!



சோழ நாட்டின் அகமுடையார் குலத்தில் பிறப்பெடுத்த வெங்கடாச்சலத்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட 'பொதுவுடைமை சித்தாந்தத்தின் பெருந்தலைவன்' வாட்டக்குடி இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!

08 செப்டம்பர் 2015

ஆண்ட பரம்பரையென்ற போலியான புகழ் தேவையில்லை!



டெல்டாவில் எந்தவொரு சாதி அரசியலும் தலை தூக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு வடசேரி நிகழ்வும் ஓர் உதாரணம். அது கள்ளரோ, அகமுடையரோ, பள்ளரோ, பறையரோ, வன்னியரோ, முத்தரையரோ, வெள்ளாளரோ யாருமிங்கே சாதியரசியலில் களம் கண்டு இங்கு வெல்லவே முடியாது. துயரம் என்னவெனில், வடசேரியை சேர்ந்த அகமுடையார் இளைஞர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதுதான்.

விவேகமில்லாத வீரமும், வீரமில்லாத விவேகமும் எதற்கும் உதவாது. என்னைக்கோ ஒருத்தன் அவனது குடும்பம் மட்டும் மன்னராக இருந்ததால் அவன் என் சாதியென்ற வரலாற்று சான்றுகளை வைத்து கொண்டு, அரசாண்ட பரம்பரை என்ற பீற்றல்களால் இனியொரு மயிரும் ஆகப்போவதில்லை.

அன்றைய காலக்கட்டத்தில், அரசாட்சியை காப்பாற்றி கொள்ள சாதிவேறுபாடின்றி அனைவரோடும் மண உறவு கொண்டனர். அதனால் இங்கே கல்ப்பில்லாத ஒரே சாதியை சார்ந்த மன்னர் வழிவந்த சுத்த இரத்தமுள்ள ஆண்ட சாதி எதுவுமில்லை. முடிந்தால் அறிவால் இந்த அரசை ஆளுங்கள், அரச பதவியோடு. இந்த வருட இறுதிக்குள் தமிழகரசு தேர்வாணையத்தின் மூன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று, அனைவரும் அரச பதவியை வகிக்க விவசாயி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

20 ஆகஸ்ட் 2015

பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

"கலப்பை புடிச்சாலும் பகை அழிப்போம் நாங்க; கத்தி புடிச்சாலும் பயிர் வளர்ப்போம் நாங்க!" யென்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்து டெல்டா தேவர்களுக்கு பொருந்தும்.

வடக்கில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோடு நிறுத்திருக்கலாம். விவசாய பூமியின் நெற்களஞ்சியமான டெல்டாவிலும், தேவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாழும் வடசேரியில் கொடியேத்துறேன் என்று சொல்லிக்கொண்டு சாதிய மோதலை உருவாக்க நினைத்து, கடைசியில மன்னார்குடி எல்லைக்கே வரமால் அறந்தாங்கியோடு அலறியடித்து ஓடி ஓளிந்தது ஏன்? ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பாக பரவாக்கோட்டையில் தமக்கு நடந்த மரணபயம் திரும்பவும் ஞாபகம் வந்துடுச்சா? என்ன சதி திட்டம் தீட்டினாலும், அன்று முதல் இன்று வரை இனி எப்போதுமே டெல்டாவில் சாதிய மோதல் வர வாய்ப்பேயில்லை. இங்கு மண்ணும் மக்களும் மனதார பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். தேர்தலுக்காக சாதியை சொல்லி ஏற்றத்தாழ்வை விதைக்க வேண்டாம். பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

- இரா.ச.இமலாதித்தன்

28 நவம்பர் 2014

வாசனுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே உள்ள பழைய பெயரை கட்சிக்கு வைத்தாலும் கூட சோழ நாட்டிலிருந்து ஒருவர், மாநில கட்சிக்கு தலைமை வகிப்பது சோழநாட்டானாக எனக்கு பெருமையே. மாநில கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்கும் திரு. ஜி.கே.வாசனுக்கும், மேலும் சோழ நாட்டிலிருந்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு மாநிலத்துணை தலைவராக பதவி வகிக்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும் தமிழக வாக்களனாக என் வாழ்த்துகள்!

ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய பக்கங்களில் பின்னி பெடலெடுக்க பதினோறு பேர் கொண்ட ஒரு குழுவை ஜி.கே.வாசன் ஏற்கனவே நியமிச்சிட்டாருன்னு நினைக்கிறேன். முகநூல் உள்ளிட்ட இணையபக்க நண்பர்களுக்கும் நன்றின்னு மாநாட்டு மேடையிலேயே சொல்கிறார். டெல்டா காரய்ங்களான்னா வெவரம் தான்!

G.K.Vasan GK Vasan Tamil Maanila Congress

தி.மு.க. தலைவரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையின் திரு மு.கருணாநிதி, த.மா.க. முன்னாள் தலைவரான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தின் திரு ஜி.கே.மூப்பனார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பனோடையின் திரு கருப்பு மு.முருகானந்தம் உள்ளிட்ட இம்மூன்று தலைவர்களுக்கு பிறகு டெல்டாவிலிருந்து உருவெடுத்திருக்கும் அடுத்த மாநில தலைவரான திரு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்