திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஆகஸ்ட் 2022

நடுநிலைவாதி எனும் திராவிட சொம்புகள்!

நடுநிலைவாதி போல காட்டிக்கொள்ளும் திராவிட சொம்புகள், இந்த வாரம் நடந்த கூத்துகளை பேசவே இல்லை. அவற்றுள் சில...

1. ”நிலமே இல்லாதவர்கள் கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு போராட்டம் செய்கிறார்கள்” என எ.வ.வேலு விவசாயிகளை காட்டமாக பேசியது. தேர்தல் நேரங்களில் விவசாய நிலங்களிலுள்ள வயல்களில் கான்கிரிட் சாலை அமைத்து பச்சைத்துண்டு சகிதமாக இந்நாள் முதல்வர் போட்டோஷூட் செய்தார். விவசாயி போல பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், சென்னை மேயரை வா, போ என ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பிறகு மேயர் பிரியா அவர்களாலேயே கட்சியில் மூத்தவர், உரிமையில் பேசினார் என அறிக்கை விடப்பட்டது. இதே மூத்தவர் முதல்வரின் மகனை அல்ல, அவரது பேரனை கூட வா,போ என பொதுவெளியில் ஒருமையில் பேச முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

3. காவல்துறை சார்பில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு 15 கொலைகள் மட்டுமே அதிகம். அதுவே அதிமுக ஆட்சி காலம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி அந்த கொலைகளை விட இவை குறைவு என சொல்லப்பட்டது. 36 மணிநேரத்தி 15 கொலைகள் என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் 12 கொலைகள் தான் நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கையானது. பார்ப்பதற்கு அப்படியே அரசியல் கட்சியின் அறிக்கை போல இருந்தது என விமர்சனம் எழுந்தது.

4. திமுகவை விமர்சிப்பவர்கள் தன்மானம், இனமானம் இல்லாதவர்கள் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார். ஒரு கட்சியை விமர்சித்தாலே அவர்களுக்கு தன்மானம் இல்லையென சொல்வதை பற்றி பலரும் கேள்வியெழுப்பினர். பதிலில்லை. சங்கி, தொம்பி என திசைதிருப்பப்பட்டது தான் மிச்சம்.

5. ”கருணாநிதியின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது தான் திமுகவின் கொடி” என முதல்வர் சொன்னார். அப்படியெனில் திமுகவை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரையின் பங்களிப்பு திமுகவில் இல்லையா? என பலரும் கேள்யெழுப்பி வருகின்றனர்.

இது மாதிரி பல நிகழ்வுகள் நடந்தாலும் பொத்திக்கொண்டு கடக்கின்றனர் திமுக சொம்புகள். பார்க்க பரிதபமாக இருக்கிறது. திமுக அல்லாத பிற கட்சிகள் செய்தால் பொத்துக்கொண்டு வருகின்ற அறச்சீற்றத்தை திமுக செய்தால் தங்களுக்குள்ளாகவே பொத்திக்கொள்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்

06 நவம்பர் 2018

சர்கார் - திராவிட அரசியலின் முகமூடி அவிழ்ப்பு!



சூப்பர் ஸ்டார் விஜயின் 'சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க குறியீடுகளே நிரம்பிருக்கின்றன; அனைத்துமே அரசியல் குறியீடுகள். கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின் ஆணிவேரை அசைத்து பார்த்திருக்கிறது இந்த படம். திராவிட அரசியலில் நடந்த / நடக்கின்ற, நாம் கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்ற அத்தனை அவலங்களையும், இந்தப்படம் பேசி இருக்கிறது.

பழ.கருப்பையா பாத்திரம் அப்படியே கருணாநிதியை நினைவுபடுத்துகிறது. ராதாரவியின் பாத்திரம் மூன்றுபேரை ஒத்திருக்கிறது; ராதாவியை 'ரெண்டு' என அடையாளப்படுத்தப்படுவதிலும் குறியீடு இருக்கிறது. அந்த இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அன்பழகன் - துரைமுருகன் - ஸ்டாலின். இந்த மூவரில் குறிப்பாக ஸ்டாலினையும் துரைமுருகனையும், ராதாரவியின் செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. தாய் கழகத்துடன் இணைப்பு விழா என்பது போன்ற அரசியல் நிகழ்வில் மின்னொளி விளக்கில் பழ.கருப்பையாவின் உருவம் அப்படியே கருணாநிதியை போலவே இருக்கும்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமியின் பாத்திரம், மூன்றுபேரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது; ஒன்று, கனிமொழி; இரண்டு, ஜெயலலிதா; மூன்று, சசிகலா. அடுத்து, பழ.கருப்பையாவும், ராதாரவியும் வரலட்சுமியை 'பாப்பா' என்றே எல்லா இடங்களிலும் அழைப்பதும், விஜய் கூட ஓரிடத்தில் 'பாப்பா' என நேரடியாக சொல்வதும், வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கோமளவல்லி' என்று இருப்பதும், அப்படியே ஜெயலலிதாவையே நினைவூட்டுகிறது. மேலும் அந்த வரலட்சுமியின் கதாபாத்திரம் மூவரை உள்ளடக்கிய கலவையான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அம்மூவரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அந்த பாத்திரம் வெளிக்காட்டுகிறது.

படத்தின் டைட்டிலில் சூரியனோடு சிங்கம் இருக்கின்ற கொடியை கொண்ட அரசுக்கும், புலிக்கொடியை கொண்ட அரசுக்கும் போர் நடந்து, இறுதியாக புலிக்கொடி வெல்வதாக காட்டிருக்கின்றனர். மேலும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமிப்பது போலவும் ஒரு காட்சி கட்டப்பட்டிருக்கும். பிறகு, நேதாஜியும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜானகி தேவரும் இராணுவ உடையோடு படை வீரர்களுக்கு இடையே நடந்து வரும் காட்சி காட்டப்படும்; அதனை தொடர்ந்து காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் என பட்டியல் நீளும். கடைசியாக ஒரு கருடன் பறந்து வந்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டுக்குள் புகுவதை போன்றதொரு காட்சியும் அமைத்து இருப்பார்கள். கூடவே புலிக்கொடி பெரிதாக காட்டப்படும்.

இந்த புலிக்கொடிக்கு பின்புலமாக மூன்று வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன; முதலாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற) சோழர்கள் தெற்காசியாவையே புலிக்கொடியோடு ஆண்டனர். அதற்குப் பிறகான நேதாஜியின் புலிக்கொடியும், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கூட்டாட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது. மூன்றாவதாக, புலிக்கொடி அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் மீண்டும் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது; உலக வரலாற்றில்ல் ஒரு போராளி இயக்கம் முப்படைகளை வைத்திருந்த பெருமைமிகு சாதனையையும் தமிழீழ புலிக்கொடி உருவாக்கி கொடுத்தது.



சுந்தர் ராமசாமியாக வரும் விஜய் தன்னை மீனவனாகவே பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தனது பூர்வீகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவக் குடும்பம் என்பதாகவும், தன்னுடைய அப்பா சிங்கள ராணுவத்தால் கடலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிருப்பார். தொடர்ச்சியாக பக்கத்து நாட்டு இராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்கிறது என்பதையும் பேசிருப்பார்.

மெர்சலில் பல இடங்களில் வருவது போல தன்னிரு கைகளை குறுக்கு வெட்டாக வைத்து கருட முத்திரையை சர்க்காரிலும் அரசியல் மேடையில் க்ளோசப் காட்சியாக விஜய் காட்டியிருப்பார். மேலும் நான்கைந்து காட்சிகளில் இரண்டு கைகளையும் விரித்து சிறகுகள் போல ஒரு குறியீட்டை காட்டியிருப்பார்.

கருணாநிதி, அண்ணாதுரை, அண்ணா அறிவாலயம், அண்ணா சிலை, மதிமுக கட்சிக்கொடி, ஸ்டாலின், துரைமுருகன், சூரிய சிங்கக் கொடி, புலிக்கொடி, கிழக்கிந்திய கம்பெனி, கருடன், ஜெயலலிதா, கனிமொழி, சவுக்கு சங்கர், மெரினா சமாதி, அ.இ. என தொடங்குகின்ற கட்சிப்பெயர், அப்போலோ மருத்துவமனை வீடியோ காட்சிகள், ஒரு தலைவரின் மரணத்தை வைத்து செய்யப்படுகின்ற அரசியல், இப்படியான அனைத்து தரப்பட்ட திராவிட அரசியலின் இன்னொரு முகத்தை பல குறியீடுகளோடு இந்த சர்க்கார் சொல்லிருக்கிறது.

கோமலவள்ளி என்ற பெயருக்கு பதிலாக வேறொரு பெயரை வைத்திருந்தால், திமுக, அமமுக போல அதிமுகவும் நேரடியாக சர்காரை எதிர்த்திருக்க மாட்டார்கள். கோமலவள்ளி தான் ஜெயலலிதா என நம்பும் இவர்களுக்கு மாசிலாமணியாக வரும் பழ.கருப்பையா யார்? ஐம்பத்தைந்து வருட அரசியல், மூன்றாம் தலைமுறை அரசியல், தலைவர் முகமே ஒரு பிராண்ட், என்பதெல்லாம் தமிழக அரசியலில் யாரை குறிக்கிறது? பெயரளவில் மட்டும் கோமலவள்ளியாக வரும் வரலட்சுமியின் நடை, உடை, பேச்சு, உடல்மொழி இவையெல்லாம் யாரை குறிக்கிறது? தலைவர் தலைவரென சொல்லும் 'ரெண்டு' ராதாரவியின் உடல்மொழி யாரை முன்னிறுத்துகிறது? இவையெல்லாம் யாருக்குமே தெரியவில்லையா? இல்லை; தெரிந்தும் தெரியாததது போலவே இருக்கின்றீர்களா?

விஜயின் அரசியல் வருகையை பற்றியெல்லாம் இன்றைக்கு தலைப்பு செய்திகளாக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனது முதல் அரசியல் நகர்வை 2011ம் ஆண்டே நாகப்பட்டினத்தில் தான் விஜய் தொடங்கினார். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினைக்காக அவரது முதல் அரசியல் கூட்டம் நாகையில் தான் நடந்தது. இந்த கண்டன கூட்டமானது, பெரிய கட்சியின் அரசியல் மாநாடு போல மாறிப்போனது. அன்று கூடிய கூட்டத்தையும், நிரம்பிருந்த வாகன நெரிசலையும் அவ்வளவு எளிதாக இங்குள்ள எந்த அரசியல்வாதியாலும் மறந்துவிட முடியாது. அன்றைய கூட்டத்தில், "தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி, கொன்று கொண்டிருந்தால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னால் அவரது படங்களெல்லாம் இலங்கையில் திரையிட முடியாத அளவுக்கு கூட பிரச்சினை உருவானது.

இந்த படத்திலும் சாட்டை முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் சேகரித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரே கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது விஜய் சொல்லுவார் "இந்த இன்னிங்சில் முக்கியமான ஓவரின் பெரிய சிக்ஸர் நீங்கள்தான்" என்று... இதை அந்த அரசியல் கண்ட பொதுக்கூட்டத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

டைட்டில் காட்சியில் ஈ.வெ.'ராமசாமி'யின் படத்தை காட்டியும், கதாநாயகனுக்கு சுந்தர் 'ராமசாமி' என்ற பெயரை வைத்திருந்தும், அந்த ஈவேராவின் அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய 50 ஆண்டுகால திராவிட அரசியலின் மற்றொரு முகத்தை கிழித்திருக்கும் துணிச்சலுக்கு பாராட்டுகள்!மற்றபடி இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள ஓட்டரசியலை யார் தான் பேசுவது? என்ற பூனைக்கு மணி கட்டிருக்கின்றனர். அன்று விஜய் சொன்னது போல, உண்மையாவே அரசியலில் மெர்சல் செய்திருக்கின்றனர். உள்ளூர் அரசியலுக்குள்ளும் உலகரசியலின் பங்கு இருப்பதை புரிந்து கொண்டவர்களுக்கு சர்க்காரின் தேவையும் புரியக்கூடும். ரசிகனாக, தமிழனாக, வாக்காளனாக, இந்த சர்க்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்




01 ஜனவரி 2018

தமிழ்நாட்டை தமிழன் ஆளக்கூடாது!

Image may contain: 1 person, smiling

இதையே நாங்க சொன்னால், கண்டவனுக்கு பிறந்தவனெல்லாம் தமிழனை கன்னடனோ - தெலுங்கனோ - மலையாளியோ - மரட்டியனோ தான் ஆள வேண்டுமென அவனின் காலை நக்குவார்கள். ஆன்மீக அரசியலென்ற வேதம் சொல்லி ஆளத்துடிக்கும் பூதங்களின் கனவை கலைத்து, ஆண்மையான அரசியலை - ஆளுமையான அரசியலை நாம் தமிழராக எழுந்து செய்ய வேண்டும். "நல்லவன் வாழ்வதும், வல்லவன் ஆள்வதும் தான்!" காலம் நமக்கும் உணர்த்தும் உண்மை. காலம் நம் பக்கம் சிறகுகளை விரித்து காத்துக் கொண்டிருக்கிறது; இம்மண்ணை நாமே ஆள்வோம்!

05 ஜூன் 2017

பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.

'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?

கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.

இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!

எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்.
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)


18 மார்ச் 2017

மதம் எனும் வெறி!


பகுத்தறிவு என்ற கொள்கைக்காக கடவுளே இல்லையென்று யார் பேசினாலும் எதிர்ப்பு மட்டுமே வரும். ஆனால் ஓர் இசுலாமியன் அதே கடவுள் மறுப்பை பேசினால் கொலையே விழும். இதுதான் அமைதி மார்க்கமா? இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வணங்கும் அனைத்து கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் அனைவரும் விமர்சிக்கலாம்; அந்த கடவுளெல்லாம் இல்லவே இல்லையென வாய்கிழியவும் பேசலாம்; ஆனால் இதுபோல் பலரது நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும் கூட பெரும்பான்மையாக உள்ளவர்கள், வாய் உள்பட அனைத்தையும் மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். அதையே ஓர் இசுலாமியன், கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவெளியில் பேசினால், அவர் சார்ந்த மதவெறியர்களாலேயே வெட்டிக் கொல்லப்படுவார். அதை எதிர்த்து எந்த மாட்டுக்கறி கும்பலோ, தாலியறுக்கும் கழகமோ, பிரியாணி பிரியர்களோ வாய் திறக்க மாட்டார்கள். காரணம், சிறுபான்மை அரசியல்; போலி நடுநிலைவாத அரசியல். த்தூ... இசுலாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும். பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அவர் சார்ந்த அமைப்பு உறுதுணையாக இருக்கட்டும்.

12 மார்ச் 2017

அரசியல் கூத்து!




போராளிகளுக்கான அரசியல் எது?


மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்டுகால ஹிந்தியத்தின் புறக்கணிப்புகளுக்கு ஆளான இம்மண்ணில், வேறெந்த ஹிந்திய தேசியமும் அவ்வளவு எளிதாக தலையெடுக்க முடியாது.

ஆர்.கே.நகர் அரசியல்:

லெட்டர் பேடு சாதி சங்கங்களெல்லாம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு செழிப்பாகத்தான் இருப்பார்கள். போஸ்டர், பேட்டி, அறிக்கையென பணத்தை வாங்கிக்கொண்டு கண்ட இடங்களில்லாம் பல்லிளிப்பார்கள். அநேகமாக, அதிமுகவிலுள்ள சசி அணியின் வேட்பாளரான தினகரனுக்கு தான், பல லெட்டர் பேடு அமைப்புகள் ஆதரவு கொடுக்க கூடும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் தான், புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.

07 ஏப்ரல் 2016

விழித்தெழு தமிழா!



திராவிடம் என்றும், தமிழ் என்றும் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் இந்த நான்கு கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரே ஒற்றுமை 'தெலுங்கர்/வடுகர்' என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும்?!

தமிழா! உன் 'தலைவியின் /தலைவனின்' தாய்மொழி தமிழா?

28 மார்ச் 2016

இந்த வார அரசியல்!

# சுழலுமா?

'பம்பரம் டிவி' என்ற இணையதள தொலைக்காட்சியை மதிமுக சார்பில் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த சின்னம் மிஞ்சாவிட்டால் கூட டிவியாவது மிஞ்சுமென நினைக்கிறேன்.

# திராவிட வடுகம்!

விஜயகாந்த் மனைவியின் தம்பி என்ற ஒரேவொரு தகுதி மட்டுமேயுள்ள எல்.கே.சுதீஷ் போன்றவர்களை கூட, விஜயகாந்த் முதல்வரானால், துணை முதல்வர் யார்? அமைச்சர்கள் பதவி யாருக்கு? என பேச வைத்திருக்கும் வைகோவின் திறமை போற்றுதலுக்குரியது!


# இசையின் இறைத்தூதர்!

கோடிக்கணக்கான இந்த தேசத்து மக்களின் விருதுகளை வாங்கிய இசைஞானிக்கு, தேசிய விருது என்பது ஒரு சிறிய அங்கீகாரம் மட்டுமே!



# தேர்தலும் சாதியும்‬!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தருகிறோமென சொல்லும் அரசியல் கட்சிகளையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்யும் ரவுடிகளுக்கு துணை போகும் சட்டத்தையும்- காவல்துறையையும் கண்டுதான், இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் கலக்கத்தில் இருக்கின்றனர். தேர்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேர்கின்றன. ஆனால் சட்டத்தாலும் ரவுடிசத்தாலும் நவீனமாய் மிரட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியென சொல்லிக்கொள்ளும் எந்த கட்சிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கானது 1% கூட கிடைப்பதில்லை. மாறாக, அட்டவணை சாதி மக்களின் வாக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் வாக்கும் 95% திராவிட கட்சிகளுக்கே போய் சேர்கின்றன.

# ஊழலுக்கு பின்னால் ஒளியும் சாதிக்காரன்!

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் மகேந்திர பூபதியை இடை நீக்கம் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?! முதலில், நீதித்துறைக்குள் ஒரு சில மாற்றம் வரணும். முக்கியமான ஊழல் கொலை கொள்ளை போன்ற வழக்குகளின் நீதிமன்ற வாதங்களையும், தீர்ப்புகளையும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப செய்ய வழிவகை வேண்டும். கிராமப்புறங்களில் சட்டம் படிக்காத ஆளுங்க கூட பஞ்சாயத்து பேசும்போது 'நீதி' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க. இங்கே நீதிமன்றத்தில் 'காசு' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க போல! த்தூ...


#  ஏர்டெல் என்ற ஏமாற்றுக்காரன்!
யாருமற்ற பனி மலையிலும், பாறைகள் நிறைந்த வெட்ட வெளிகளிலும், ஹிந்தியாவெங்கும் ஏர்டெல் 4ஜி நெட்வொர்க் கிடைப்பதாக தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாகப்பட்டினத்திற்கு உட்பட்ட செம்பியன்மாதேவி, வடுகச்சேரி, தேவூர், வெண்மணி, திருக்குவளையென எங்களது வயல்வெளியுள்ள வண்டலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள ஊரெங்கும் சுற்றி கொண்டிருந்தேன். ஒழுங்காக 2ஜி நெட்வொர்க் கூட கிடைக்கவில்லை. அதை சரி பண்ணவே வக்கில்லை; இந்த லட்சணத்துல 4ஜி...

# மக்களுக்காக பாலிமர்!

நக்கீரன், ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போல, நேரில் பார்க்காத ஒரு விசயத்தை பக்கம் அமர்ந்து பார்த்தது போல திரைக்கதை அமைத்து ஐநூறு கோடி, ஆயிரம் கோடியென விஜயகாந்த் பற்றி ஊடகங்களில் உளறிய வைகோவை, அதே ஊடகம் 'ஆயிரத்து ஐநூறு கோடிக்கு அதிமுகவிடம் நீங்கள் விலை போனதாக சொல்கிறார்களே' என ஐயம் எழுப்பியது நூற்றுக்கு நூறு வீதம் சரி. எதிர்வினையென்றால் இப்படி தான் இருக்குமென வைகோவுக்கு புரிய வைத்த பாலிமர் தொலைகாட்சியின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துகள்!

# சாதிய தலைமைகள்!

ஜெயலலிதாவிடமும், கருணாநிதியிடமும் மாறி மாறி இரு அணியாக பிரிந்து தன் சாதி மக்களின் தொகையை கணக்கில் காட்டி சாதியையே அடகு வைக்கிற சாதி அமைப்பின் தலைவர்களெல்லாம், இந்த 2016 தேர்தலில் ஒரேயடியாக ஜெயலலிதாவிடம் மட்டும் சரணாகதி அடைந்து விட்டனர்.
'வாழும் வேலுநாச்சியாரே!'ன்னு ஜெயலலிதாவுக்கு போஸ்டர் அடிச்சு, கீழே, 'வாழும் முத்துராமலிங்கத்தேவர்', 'அடுத்த பசும்பொன் தேவர்', 'தேவரின் வாரிசு', 'தேவரின பாதுகாவலர்'... இப்படியாக தங்களுக்கு தாங்களே தேர்தல் வரையிலும் விளம்பரப்படுத்தி கொள்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு, அடுத்து அக்டோபரில் ஆழ் உறக்கத்தை களைவார்கள்.
வீர வசனம் பேசி மீசை முறுக்கிக்கொண்டு போஸ்டர்ல போஸ் கொடுக்கிறவங்களையும் கூட, கையை கட்டி வாய்மூடி பேச வைக்கும் வல்லமையுள்ள ஜெயலலிதாவின் திறமை ஆச்சர்யபட தக்க ஒன்றுதான்!

- இரா.ச.இமலாதித்தன்

12 மார்ச் 2016

திராவிட சறுக்கல்!

-01 -

'பாளையம்' அமைத்து கொடுத்த தெலுங்கு நாயக்க விசுவாசத்தின் நீட்சிதான், இன்றைய திராவிட பாசம்! மீசையை முறுக்கி கொண்டு காலில் விழும் வேசம். த்தூ!

-02-
குறைந்த பட்சம் 'ஐ' என்பதை 'அய்' என்றோ, 'ஒள' என்பதை 'அவ்' என்றோ பயன்படுத்தாமல் இருப்போமே?!
ஐயா என்பதே சரி; அய்யா என்ற பதம் தவறு. அதுபோல ஒளவையார் என்பதே சரி; அவ்வையார் என்ற பதம் தவறு.

(ஐயனார், ஐயா, ஐக்கியம், ஐந்து...)

01 மார்ச் 2016

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

29 பிப்ரவரி 2016

தமிழன் தொலைத்த ஆதி விளையாட்டு!

உலகின் மூத்த இனமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் கபாடியும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஹிந்தியர்களின் விளையாட்டாக உலகிற்கு அறியப்படுகிறது. தற்போது சில வாரங்களாக நடைபெற்று வரும் 'ப்ரோ கபாடி' என்ற லீக் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் ஹிந்தியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அநேகமாக பாஸ்கர் என்ற பயிற்சியாளரை தவிர மற்ற அணிகளின் பயிற்சியாளர்களோ, வீரர்களோ தமிழரே இல்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் கபாடி என்பது ஹிந்தியத்தின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது நம் தமிழ்நாட்டு திராவிடர்கள் அந்த விளையாட்டை எதிர்ப்பார்கள்.

எப்படி, 'ஆசீவகம்' என்ற நம் ஆதி வழிபாட்டு ஆன்மீக முறைகளையும், 'மாயோன் - சேயோன்' என்ற நம் மொழி சார்ந்த நம்மின கடவுள்களை வந்தேறிய ஆரியர்கள் கைப்பற்றி அவர்களுடைய வழிபாட்டு தெய்வமாக்கி கொண்ட போது, அதை கைப்பற்ற வக்கில்லாமல், நாத்திகம் என்ற பெயரில் தமிழர்களின் ஆதி ஆன்மீகத்தை எதிர்க்கும் திராவிடர்கள் போல, கபாடியும் நிலையும் மாறிப்போகலாம்.

இப்படியாக ஆரிய வந்தேறிகளாலும், திராவிட துரோகிகளாலும் நம்மை விட்டு நம் பாரம்பரியக்கூறுகள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு களவாடப்படுகிறது, நமக்கே தெரியாமல். இதுபோல தமிழர் இழந்ததையெல்லாம், ஒவ்வொன்றாய் மீட்டெடுப்போம்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

12 நவம்பர் 2015

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும்!

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும் ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கடவுள் அழிச்சாத சொல்ற நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த பக்கம் பார்த்தால், வர்ணாசிரம கொள்கையெல்லாம் இனி தேவையில்லை; நாமெல்லாம் ஒன்றென சொல்லி, கடவுள் கொல்றதெல்லாம் தமிழன் என்பது மாதிரியே கதை புனைகிறார்கள்.
திராவிட-ஆரிய கூத்தாடிகளுக்கு, தமிழன் என்ற ஒருவன் இல்லையென்றால் அரசியல் பிழைப்பே இருக்காது போல.

19 மார்ச் 2015

திராவிடமெனும் தீரா விடம்!



உயிர்பலி கூடாது!ன்னு சொன்ன வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் ஹிந்து மதம் தான். ஆனால், ஹிந்து மதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பின்னோக்கி சொல்லும் திராவிட கழக கொழுந்துகள், மாட்டை அறுக்கும் போராட்டத்தை தமிழ் புத்தாண்டான்று அரங்கேற்ற ஆயத்தமாகியுள்ளது. பகுத்தறிவு என்பது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். ”நான் சொல்றதையும் அப்படியே நம்பாத. அது உன் அறிவுக்கும் சரின்னு பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்!”ன்னு திராவிடர் கழகத்தை உருவாக்கிய ஈ.வெ.ரா.வே சொல்லியிருக்கிறார். ஆனால் வீரமணி போன்றோர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது மாதிரியான புரட்சி(?)களையெல்லாம் ஓட்டாக்கி, எந்த கட்சிக்காவது தந்துவிட கணக்கு போடுகிறார். தப்பு கணக்கு என்றைக்கும் பலிக்க போவதில்லை.

திராவிட கழகத்திற்கு உண்மையாகவே ஹிந்துத்துவ ஆதிக்க பொது புத்தியை எதிர்க்க வேண்டுமென்ற கொள்கை இருந்தால், நேருக்கு நேராக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு சவால் விடுத்து பாரிய அளவில் போராட்டம் நடத்தலாம். ஆனால், ’தமிழ் பெண்களின் கழுத்திலுள்ள தாலியை அறுப்பேன்’ என போராட்டம் செய்வதை விட கேவலமான செயல் வேறேதுமில்லை. உண்மையாகவே கி.வீரமணிக்கு பகுத்தறிவு இருந்தால், பெண்களின் மாராப்புக்குள் ஒளிந்து கிடக்கும் தாலியை அறுப்பதை விட, பெண்களின் கண்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்து அடிமை போல ஆணாதிக்க மனோபாவத்தில் நடத்தும் இசுலாமியர்களின் பர்தாவை அகற்றும் போராட்டத்தை அல்லவா நடத்திருக்க வேண்டும்? திராணி இருந்தால் இது போன்ற பெண்ணடிமை தனத்தை எதிர்த்த ஈ.வெ.ரா.வின் கொள்கையை செயலில் காட்டலாம். மாறாக, காலம் காலமாக பண்பாட்டு காலச்சாரத்தின் அடையாளமாக இருக்கும், பசுக்களையும், தாலிகளையும் அறுத்துதான் பகுத்தறிவை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை திராவிடர் கழகமும் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. எல்லாவற்றும் எதிர்வினை உண்டு. அதிலும் குறிப்பாக அரசியலாக்கப்படும் எல்லா வினைகளுக்கும், கண்டிப்பாக எதிர்வினைகளும் மோசமாகவே இருக்கும் என்பது வரலாறு. பார்க்கலாம், திராவிட கழகத்தின் எதிர்காலத்தை???

- இரா.ச.இமலாதித்தன்

24 பிப்ரவரி 2015

அம்மாவின் பிறந்த நாள் தெரியுமா?

தன்னை பெத்த அம்மாவோட பொறந்தாளு என்னைக்குன்னு தெரியாதவய்ங்க தான், இன்னைக்கு யாருக்கு அம்மான்னே தெரியாத ஒருத்தருக்காக ஊரு முழுக்க அம்மா தாயேன்னு ராப்பிச்சை எடுக்குற மாதிரி ப்ளக்ஸ் அடிச்சு வச்சிருக்காய்ங்க. பத்து மாசம் வயித்துல சுமந்தவள கண்டபடி அடிச்சு உதைச்சு அவளே, இவளே, நாயே, பேயேன்னு சகட்டுமேனிக்கு பேசுறவனுங்கயெல்லாம், பதவிக்காகவும், பணத்துக்காகவும், ஓசியில சம்பாரிக்கிறதுக்காகவும் வாயுல தேனுறுற மாதிரி புகழ்ந்து ப்ளக்ஸ்ல அடைமொழி கொடுத்து இருக்காய்ங்க. இவிய்ங்கல்ல முக்காவாசி பேரு பெத்த தாயை புகழ வேணாம்; குறைந்த பட்சம் மரியாதையா கூட நடத்த வக்கில்லாதவய்ங்களா தான் நெசத்துல இருக்காய்ங்க. காசுக்காக கண்டவங்க காலை நக்கும் இவிய்ங்க கிட்ட இருந்து வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்? முதுகெலும்பில்லா முட்டாள்களுக்கு திராவிடம் தான் போக்கிடம்.

05 டிசம்பர் 2014

ஆரியம் - திராவிடம் - தலித்தியம்!

கேள்வி:

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?

பதில்:


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும். தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது. ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான். ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது; தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது. ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு, ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்!

- இரா.ச.இமலாதித்தன்

10 ஜூன் 2014

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்