திராவிடமெனும் தீரா விடம்!உயிர்பலி கூடாது!ன்னு சொன்ன வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் ஹிந்து மதம் தான். ஆனால், ஹிந்து மதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பின்னோக்கி சொல்லும் திராவிட கழக கொழுந்துகள், மாட்டை அறுக்கும் போராட்டத்தை தமிழ் புத்தாண்டான்று அரங்கேற்ற ஆயத்தமாகியுள்ளது. பகுத்தறிவு என்பது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். ”நான் சொல்றதையும் அப்படியே நம்பாத. அது உன் அறிவுக்கும் சரின்னு பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்!”ன்னு திராவிடர் கழகத்தை உருவாக்கிய ஈ.வெ.ரா.வே சொல்லியிருக்கிறார். ஆனால் வீரமணி போன்றோர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது மாதிரியான புரட்சி(?)களையெல்லாம் ஓட்டாக்கி, எந்த கட்சிக்காவது தந்துவிட கணக்கு போடுகிறார். தப்பு கணக்கு என்றைக்கும் பலிக்க போவதில்லை.

திராவிட கழகத்திற்கு உண்மையாகவே ஹிந்துத்துவ ஆதிக்க பொது புத்தியை எதிர்க்க வேண்டுமென்ற கொள்கை இருந்தால், நேருக்கு நேராக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு சவால் விடுத்து பாரிய அளவில் போராட்டம் நடத்தலாம். ஆனால், ’தமிழ் பெண்களின் கழுத்திலுள்ள தாலியை அறுப்பேன்’ என போராட்டம் செய்வதை விட கேவலமான செயல் வேறேதுமில்லை. உண்மையாகவே கி.வீரமணிக்கு பகுத்தறிவு இருந்தால், பெண்களின் மாராப்புக்குள் ஒளிந்து கிடக்கும் தாலியை அறுப்பதை விட, பெண்களின் கண்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்து அடிமை போல ஆணாதிக்க மனோபாவத்தில் நடத்தும் இசுலாமியர்களின் பர்தாவை அகற்றும் போராட்டத்தை அல்லவா நடத்திருக்க வேண்டும்? திராணி இருந்தால் இது போன்ற பெண்ணடிமை தனத்தை எதிர்த்த ஈ.வெ.ரா.வின் கொள்கையை செயலில் காட்டலாம். மாறாக, காலம் காலமாக பண்பாட்டு காலச்சாரத்தின் அடையாளமாக இருக்கும், பசுக்களையும், தாலிகளையும் அறுத்துதான் பகுத்தறிவை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை திராவிடர் கழகமும் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. எல்லாவற்றும் எதிர்வினை உண்டு. அதிலும் குறிப்பாக அரசியலாக்கப்படும் எல்லா வினைகளுக்கும், கண்டிப்பாக எதிர்வினைகளும் மோசமாகவே இருக்கும் என்பது வரலாறு. பார்க்கலாம், திராவிட கழகத்தின் எதிர்காலத்தை???

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment