ஹிந்து!

-01-

ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இராவணன் புஷ்பரக விமானத்தை வைத்திருந்த பெருமைகளை பற்றி பேசிக்கிட்டு இருக்கிற இந்நேரத்துல, இராவணன் ஒரு பார்பனர்ன்னு இன்னொரு குரூப் சொல்லிக்கிட்டு கிடக்கு.

-02-

தகுதிக்கேற்ப கடவுள் பெயர் மட்டுமல்ல, கடவுளே மாறி விடுகிறது. பல புதுப்பணக்காரர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் குலசாமி!

-03-

தமிழ்நாட்டிலுள்ள வாகனங்களில் முன்னும் பின்னும் விநாயகருக்கு அடுத்தப்படியாக அதிகமாக இடம்பிடித்திருப்பது சமீபகாலமாய் சாய்பாபா தான்!

-04-

ரெண்டு பேருக்குள்ள ஏற்கனவே சண்டை இருக்குன்னு வச்சிப்போம். இந்த ரெண்டு பேருல ஒருத்தனை வேற எவனோ ஒருத்தன் அடிச்சாலும், மிச்சமிருக்க ஒருத்தன் மேல தான் அந்த பழிச்சொல் விழும். இது அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் தமிழ் சாதி மோதல்களுக்கு பின்னாலுள்ள திராவிட சூழ்ச்சிக்கும் பொருந்தும். அடுத்து, தற்போது "புதிய தலைமுறை தொலைக்காட்சி" அலுவலகத்தின் மீது வீசப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டுக்கும் பொருந்தும். இனி எவன் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு ஹிந்து அமைப்புகள் தான் பலியாடு.

-05-

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பாக, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று காரில் திரும்பியவர்களை மதுரை அருகே வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசி அப்பாவி இளைஞர்களை கொலை செய்த சாதிவெறி கும்பலை பற்றி வாயையே திறக்காமல், அதை ஆதரித்து எதிர்வினையென உசுப்பேற்றி விவாதம் நடத்தி கொண்டிருந்த சன் நியூஸ், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நியூட்டனின் மூன்றாம் விதி இனியாவது நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி.

-06-

கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கூட்டம் தான், கோயிலுக்குள் நுழைய விட மறுக்கிறது இன்னொரு கூட்டத்தை! கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது மாற்றம் வர தொடங்கியுள்ளது. மாற்றம் தான் உலகில் நிரந்தரமானது என்பதால், காத்திருப்பும் அவசியமாகிறது.

இந்த ஆறு விசயங்களும் தனித்தனியானவை. ஆனால், அனைத்தும் ஒருவித தொடர்புண்டு

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment