மக்களாட்சி அரசியல்!

பிப்ரவரி 24ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜெயலலிதாவிற்காக வைக்கப்பட்ட ப்ளக்ஸானது, மார்ச்1ம் தேதி பிறந்தாள் கொண்டாடும் ஸ்டாலினுக்காக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ்க்கு போட்டியாகவே ஒரு வாரமாகியும் இன்னும் கழற்றப்படாமலே இருக்கின்றது. இது ஆளுங்கட்சி அரசியல்.

இதனாலேயே டெல்டா பகுதிகளுக்குட்பட்ட கிராமம்/நகரம் என்ற பாகுபாடின்றி எல்லா ஊர்களிலும், எதிரும் புதிருமாக ஜெயலலிதா - ஸ்டாலின் ப்ளக்ஸ்கள் மட்டுமே தென்படுகின்றன. இது தமிழக அரசியல்
இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து பெரும்பாலான ப்ளக்ஸ்கள், தன் தலைவன்/தலைவிக்காக கடன் வாங்கி பெருமைக்கு ப்ளக்ஸ் அடித்தவனின் ஓட்டை விழுந்த குடிசைகளை போர்த்தி கொண்டிருக்கும். இது எதார்த்த அரசியல்.

இந்த எதார்த்தத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல், இருநூறு ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய்க்கும் உடலை விற்கும் விபச்சாரி போல, ஓட்டை விற்கும் வாக்களன் இருக்கும் வரை மக்களாட்சி அரசியலிலும் குடிமக்களாகிய நாம் அடிமைகள் தான்.

Comments

Popular posts from this blog

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!