அஜீத்தின் இரண்டாவது குழந்தை!

நடிகனோட படுக்கையறை வரைக்கும் போற புத்தி தமிழனுக்கு மாறாவே மாறாது. அஜீத் கல்யாணம் பண்ணின உடனேயே குழந்தை பெத்துக்கலன்னு ஒருமாதிரியா பேசுனாய்ங்க. இப்போ ரெண்டாவது குழந்தையை பெத்தக்கிட்ட உடனே குட்டித்தல, சின்னத்தலன்னு வேறமாதிரி பேசுறாய்ங்க. ஒரு தனிமனிதனின் குடும்பத்திற்கு சம்பந்தபட்ட குழந்தை பெத்ததையெல்லாமா ட்விட்டர் ட்ரெண்ட்ல கொண்டுவரணும்ன்னு துடிப்பாய்ங்க? குழந்தை பெத்துக்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய சாதனையா என்ன? மன்னராட்சி காலத்திற்கெல்லாம் கூட இளவரசன் பொறந்ததா ஊர் முச்சந்திக்கு வந்து ஒருமுறை தண்டோரா தான் போடுவாய்ங்க. ஆனால் இவிய்ங்க, மூச்சு முன்னூறு தடவ அந்த தாம்பத்ய சாதனையையே பேசிக்கிட்டு கிடக்குறாய்ங்க. ஓர் ஆணும், பெண்ணும் இணைந்தால் குழந்தை பிறக்கத்தான் செய்யும். அதுதான் உடலியல் சார்ந்த மரபு. அந்த காலத்துல நம்ம தாத்தா பாட்டிகயெல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளக்குட்டிகள பெத்து போடலயா? 

இதை சாதனை மாதிரி பேசுற பொதுபுத்தியை திணிப்பது ஒரு காலத்தில் ஊடகங்களின் பங்கு இருந்தது. ஆனால், இன்னைக்கு நிலைமையே வேற. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் விவாதிக்கப்படும் விசயங்களை தான், தொலைக்காட்சி / எழுத்து ஊடகங்களே முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அதை புரிஞ்சிக்காத இவிய்ங்களுக்கெல்லாம் எதை பெருசா பேசணும்? எதை விவாதப்பொருளாக மாத்தணும் என்பதை பற்றியெல்லாம் தெளிவே கிடையாது. யோசிக்காமலேயே இன்னொரு மாநிலத்து காரனை, இன்னொரு மொழி பேசுறவனையெல்லாம் தலையில் வைத்து கொண்டாட மட்டும் தான் இவிய்ங்களுக்கு நேரம் இருக்கு. நடிப்பு என்பது ஒரு கலை சார்ந்த தொழில்; அந்த தொழிலை செய்றவனையெல்லாம் காலம் காலமா தலைவனாக்கித்தானே, இன்னைக்கு தமிழ்நாட்டோட நிலைமையே தலைகீழா கிடக்கு. இனியும் அப்படி நடத்தத்தான் துடிக்கிறாய்ங்க போல.

என்னமோ போய்ங்கய்யா!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment