15 மார்ச் 2015

தமிழும் மோடியும்!

உலகெங்கும் "தமிழர்கள்" என்ற அடையாளத்தை மொழியால் அடையாளப்படுத்தி கொண்டிருக்கும், ஈழ மண்ணின் பழம்பெருநகரமான ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் நூலகம் இருந்த யாழ்பாணத்தில் ஹிந்தியில் பேசிய மோடி, இலன்கையின் சிங்கள நாடாளுமன்றத்தில் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசினார்? ஹிந்திக்காரய்ங்க யாழ்பாணத்துலயா பானிபூரி விக்கிறாய்ங்க? தமிழன் கிட்ட ஓட்டு கேட்க சிங்கள இனவெறியனான மகிந்த ராஜபக்சாவே எழுதி வைத்து தமிழில் பேசினான். குறைந்தபட்சம், சிங்களவனிடம் பேசியது போலவே, தமிழனிடமும் உலகின் பொது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலேயே பேசி இருக்கலாமே. இதை கேட்டால், மோடியின் தாய்மொழியே குஜராத்தி தானே? அவர் தன் தாய்நாட்டின் மொழியாக தானே ஹிந்தியை பேசினார்ன்னு யாராவது வக்கனையா ஜால்ரா அடிப்பாங்க. ஹிந்தி மட்டும் தான் இந்தியாவின் தேசிய மொழியா என்ன? தமிழும் தான் அதில் அடக்கம். உலகில் பலருக்கும் வெவ்வேறு மொழிகள் தாய் மொழியாக இருக்கலாம். ஆனால், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் தகப்பன் மொழி. மோடியோ, காவியோ எந்த கும்பலும் சமகிருதத்தை வைத்து தமிழை அழித்து விட முடியாது. ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரை மட்டமாக்கிய பெளத்த சிங்கள பயங்கரவாதிகளிடம், விடுதலைபுலிகளை பயங்கரவாதிகளென சொல்லி, அவர்களை அழித்ததை பற்றியெல்லாம் பெருமையாக பேசி வந்திருக்கலாம். இந்த தமிழ்நாட்டிலும் அப்படியொரு பயங்கரவாதம் ஏற்படாது என்பதற்கு யார் உத்திரவாதம் தருவார்கள்? எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக