30 நவம்பர் 2017

அரசக்கொலை, ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!


அகமுடையாரான மதுரை தா.கிருட்டிணனையும், பார்பனரான காஞ்சிபுரம் சங்கரராமனையும் திட்டமிட்டு படுகொலை செய்த கொலைகாரர்களான மு.க.அழகிரியையும் - ஜெயந்திரரையும் பதிலுக்கு பதிலாக இந்த அரசு என்கவுண்டர் செய்து விட்டதா? ஆனால், ஆல்வின் சுதனை கொன்றதாக குற்றஞ்சாட்டி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்க காவல்துறையால் பிரபு - பாரதியை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நாள், நவம்பர் 30. இவர்களை தொடர்ந்து இதே நிகழ்விற்காக குமாரையும் என்கவுண்டர் செய்து பழிதீர்த்து கொண்டது அரசு காவல்துறை. (30.11.2012)
ஒரு கொலைக்கு இன்னும் பல கொலைகள்தான் தீர்வென்று அரசும் - காவல்துறையும் முடிவெடுத்தால், இந்த மக்களாட்சி தத்துவமே தேவையில்லை. ஆனால் அதில் ஏன் இவ்வளவு பாகுபாடு? ஆண்டுகள் ஐந்தானாலும் அகம்படியானாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
”செல்வி” ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!

29 நவம்பர் 2017

இமலாதித்தவியல்: மதம்!

ஒரு மதத்தை ஏற்பதும், துறப்பதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. மதம் மாறினால் தான் தன்னுடைய காதலையோ - அன்பையோ நிரூபணம் செய்ய முடியுமென்றால், அப்படியொரு மானங்கெட்ட தனத்தை, எந்தவொரு அயோக்கியத்தனமான கடவுள் சொல்லிருந்தாலும் அந்த கடவுளை செருப்பாலேயே அடிக்கலாம். நிச்சயமாக கடவுள் அப்படி சொல்லிருக்க முடியாது; ஏனெனில் கடவுளின் தூதுவனாக காட்டிக்கொண்டவனும், நானே கடவுளென்று சொல்லிக்கொண்டவனும் செய்த திருட்டுத்தனம் தான் இது. மற்றபடி பிறப்பிலேயே அறியப்படும் மதத்திலேயே இருப்பதா? அந்த மதத்தை விட்டு வெளியேறி வேறொரு மதத்தில் இணைவதா? மதமே எனக்கு தேவையில்லையென முற்றிலும் மதமற்றவராக வாழ்வதா? என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட நபர் தானே ஒழிய, எந்தவொரு மத அமைப்புகளும் இதை கட்டுப்படுத்த கூடாது; கட்டுப்படுத்தவும் முடியாது.

28 நவம்பர் 2017

செல்வியா ஜெயலலிதா?!

'செல்வி' ஜெ.ஜெயலலிதா ஒரு முறை சட்டமன்றத்திலேயே கூறினார்; என்னை 'அம்மா' என்று அழைப்பது தான் பிடித்திருக்கிறதென...



பொட்டு அம்மானுக்கு புகழ் வணக்கம்!

உலகின் தலைச்சிறந்த புலனாய்வுத்துறையை கட்டியமைத்த அகத்தமிழனுக்கு ஐம்பத்தைந்தாவது புகழ் வணக்கம்!

27 நவம்பர் 2017

தமிழ் மாவீரர் பெருநாள்!



தேசிய மாவீரர் நாளில், பிரபஞ்சமெங்கும் நட்சத்திரங்களாக கலந்திருந்து நம்மோடு தொடர்பிலிருக்கும் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.

ராஜராஜன் அகமுடையாரா?!

Pandi Pandi: அண்ணா, ராஜராஜசோழர் அகமுடையார் வழிதோன்றலா? கள்ளர் வழிதோன்றலா?


இரா.ச. இமலாதித்தன்: சோழர்கள் ஆண்ட பகுதிகளிலெல்லாம் உடையார் பட்டமும், தேவர் பட்டமும் கொண்ட ஒரே இனக்குழு அகமுடையாராக மட்டுமே இருக்கின்றனர். ராஜசோழனின் மெய்கீர்த்தியில் கூட, ”உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றே பெயர் வருகிறது. அப்படியெனில் ராஜராஜசோழர் யாராக இருக்க முடியும்?

ஈழத்திலும் சோழத்திலும் அகமுடையார்!




பிள்ளை பட்டமும், தேவர் பட்டமும் இயல்பாகவே தன்னகத்தே கொண்ட இனக்குழு அகமுடையார் மட்டுமே. ஈழமண்டலத்தை சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்திய போது, எம் தஞ்சை மண்ணிலிருந்து படைத்தளபதிகளாகவும், நிர்வாக பொறுப்பாளர்களாகவும் அகமுடையார்களே அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள்.
அதன் நீட்சியாக இலங்கை அரசு இணையதளத்தில் அகமுடையார் பற்றிய குறிப்பு: (http://www.e-thaksalawa.moe.gov.lk/…/139-hired-soldiers-aga…)

26 நவம்பர் 2017

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரனின் வம்சாவழி பட்டியல்!



#பிரபாகரவியல்

ஐயக்கதேவர் வழிவந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்!




சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர் – வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோழப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.
இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.
தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.
தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.
நன்றி: ஈழ இணையதளங்கள்
(இந்த கட்டுரை தொடர்பான விரிவான பகுதிகளை படிக்க கீழே ஒருசில இணையதள லிங் கொடுக்கப்பட்டுள்ளது)

http://eelavarkural.blogspot.in/2010/01/blog-post_14.html?view=classic
http://www.vvtuk.com/archives/15520
https://varnakulattans.weebly.com/veluppillai-appah.html
http://valvainilam.blogspot.in/2013/01/3.html
https://velupillaiprabhakaran.wordpress.com/2010/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8/

பிரபாகரனும் - மருதுபாண்டியரும்!


அண்ணன் வே.பிரபாகரன் ஜாதகம்!

தமிழின தேசியத்தலைவர் மேதகு அண்ணன் வே.பிரபாகரனின் ராசி / நட்சத்திரம்: விருச்சிகம் / கேட்டை. அவரது தாத்தாவின் பெயர்: திருவேங்கடம் பிள்ளை. அடியேனுக்கும், அதே விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்; அதுபோல, என்னுடைய (தாய் வழி) தாத்தாவின் பெயரும் திருவேங்கடம் பிள்ளை! இப்படியான சின்னஞ்சிறு ஒப்பீட்டில் கூட பெருமைப்பட வைத்திருக்கும் ஆளுமைமிகு அண்ணனின் சமகாலத்தில் வாழ்ந்தேன் என்பது கூட வருங்காலங்களின் வரலாற்று பெருமையாகக்கூடும்.
(கீழே அண்ணனின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது)

தமிழினத்தின் தலைவன்!



ஓர் உயரிய கொள்கைக்காக ஒரு தலைவன் போராடினான் என்பதை விட, எத்தனை பேரை போராட வைத்தான் என்பதில்தான் அந்த போராட்டத்தின் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில் என் அண்ணன் மேதகு. வேலுப்பிள்ளை பிராபகரன் தான், சமகால வரலாற்றில் யாருக்கும் நிகரற்ற தலைவன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
நீ இருக்கிறாயா? இல்லையா? என்று ஆராய விரும்பவில்லை; தலைவனாகவோ - இறைவனாகவோ தமிழர்கள் அனைவரும் உன்னை போற்றிக்கொண்டே இருப்போம். உன் மீதான நம்பிக்கையில் நாங்கள் என்றும் உன்னோடும் - உணர்வோடும் - தமிழோடும் - புலிக்கொடியோடும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
எங்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

25 நவம்பர் 2017

2.o








மெர்சலில் அட்லி சொல்லிருக்கும் குறியீடுகளுக்கு போட்டியாக, 2.O இசை வெளியீட்டு விழா மேடையில் அக்‌ஷய்குமார் சம்பந்தபட்ட இந்த படங்களில் தான் எத்தனை குறியீடுகளை வைத்திருக்கிறார் ஷங்கர்?
i ஐ Eye!

17 நவம்பர் 2017

வாய்மேட்டின் வரலாறான சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!





”தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!” என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்து மதுரையை அடுத்த திருநகரில் 6.8.1962 ஆம் நாள் ”தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்!” என்னும் நோக்கத்தையும் முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார்.
தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ Yes sir என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இவரே. இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை.
மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். "தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்" என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். ”அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர்!” என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய 'சங்க இலக்கியம்' வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு 'குறள்நெறி' என்னும் இதழையும், Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். விருதுநகரில் இருந்தபோது ’இலக்கியம்’ (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது ’திராவிடக்கூட்டரசு’ போன்ற இதழ்களையும் நடத்தினார்
பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும் பெருமாள்.
இத்தகைய பெருமைக்குரிய சி.இலக்குவனாரின் நூல்கள் பட்டியல்கள்:-
எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933) மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
அம்மூவனார் (ஆராய்ச்சி)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956) வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
கருமவீரர் காமராசர் (வரலாறு)
அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
Tholkappiyam in English with Critical Studies
Tamil Language (1959)
The Making of Tamil Grammar
Brief Study of Tamil words
சோழநாட்டிலுள்ள நாகை மாவட்டத்தின் திருமறைக்காட்டிற்கு அருகேயுள்ள வாய்மைமேட்டில் மு.சிங்காரவேலத்தேவருக்கும் - அ.இரத்தினம் அம்மையாருக்கும் பிறப்பெடுத்த பெருந்தமிழர் முனைவர் சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!
#இலக்குவனார் #அகமுடையார் #Agamudayar
(நன்றி: அகமுடையார் அரண்)

15 நவம்பர் 2017

எங்கள் இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!



சோழ நாட்டின் அகமுடையார் குலத்தில் பிறப்பெடுத்த வெங்கடாச்சலத்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட 'பொதுவுடைமை சித்தாந்தத்தின் பெருந்தலைவன்' வாட்டக்குடி இரணியனுக்கு 97வது புகழ் வணக்கம்!

12 நவம்பர் 2017

இரகசிய இயக்களின் இயங்கியல்!


மாமன்னர்கள்!


அறம் சிறக்க வாழ்த்துகள்!

அறம் இன்னும் பார்க்கவில்லை; பார்த்தவர்களெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை கோபி நயினார் என்ற ஓர் அறியப்படாத படைப்பாளியான மீஞ்சூர் கோபியை, பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ’மெட்ராஸ்’ படத்தின் கதையானது, அவருடைய ‘கருப்பர் நகரம்’ என்பதின் கதை தான் என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பா.ரஞ்சித்தின் முதற்படமான அட்டைக்கத்தியில் கோபி நயினாரின் பல காட்சிகள் திருடப்பட்டிருந்தன என்பதும், இந்த கோபியின் கதை விவாதத்தில் இருந்தவர் தான் பா.ரஞ்சித் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதுபோல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’கத்தி’ படத்தின் கதையும் இவருடையது தான் என்பது இன்று அறம் உரைத்திருக்கிறது இப்படம். எதிர்மறை விமர்சனங்களால், பல்வேறு தரப்பட்டவர்களாலும் குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த பா.ரஞ்சித் போன்றவர்களாலும் விமர்சிக்கப்பட்ட கோபி நயினார், அறம் மூலம் மீண்டெழுந்து வந்திருப்பது பெருமகிழ்ச்சி. இத்தனை தோல்விகளிலும், அவமானங்களிலும் இருந்து மீண்டெழுந்த மீஞ்சூர் கோபி என்ற கோபி நயினாரின் வெற்றியானது போற்றுதலுக்குரியது. இதற்கு காரணமாக இருந்து, இவர் மீது நம்பிக்கை வைத்து படம் உருவாக காரணமாக இருந்த நயன்தாராவுக்கு கோபி நன்றிக்கடன்பட்டவராகிறார். அறம் என்றும் வெல்லும் என்பது இந்த அறம் உணர்த்திருக்கிறது. வாழ்த்துகள்!
(பி.கு: இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சவுக்கு கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம், https://www.savukkuonline.com/12697/ )
#Aramm


கேரள நயன்தாரா தோழராக தெரிந்த உமக்கு, மீஞ்சூர் கோபி ஏன் குருவாகவோ / அண்ணனாகவோ தெரியல? #ஒன்றுசேர்களவாடுபடமெடு 

11 நவம்பர் 2017

குறும்பட லஷ்மி!




லக்ஷ்மிகள் எப்போது தன்னிலை மறந்து, தன்வசம் ஆவார்களென கதிர்களும் காத்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த வாய்ப்பை உருவாக்கியது கதிர்களோ, லக்ஷ்மிகளோ அல்ல; லக்ஷ்மிகளின் கணவன்களே!
காலம் தோறும் நமக்கென வகுத்து கொண்ட வாழ்வியல் என்பது வேறாகவும், எதார்த்த வாழ்க்கை முறை என்பது வேறாகவும் தான், அன்று முதல் இன்று வரை இங்கே இருந்து கொண்டிருக்கிறது. ’வாய்ப்பு கிடைக்கும் வரை அனைவருமே இங்கு யோக்கியர்கள் தான்’ என்பதால், இந்த லக்ஷ்மியும் அதிகம் விமர்சிக்கப்படலாம். ஏனெனில் உண்மையின் பக்கமும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.

10 நவம்பர் 2017

மாற வேண்டியது நானல்ல, நீங்கள் தான்!


#விஜய் #சீமான் #தமிழ்தேசியம் #அகமுடையார் #வரலாறு#வாணாதிராயர் #சேரர் #மாவலி #மருது #பாண்டியர்#ராஜராஜசோழன் #சோழம் #ஆன்மீகம் #இசை #அரசியல்#சோதிடம் #சித்தரியல் #இளையராஜா #குலதெயவம்#நாகப்பட்டினம் #திருமறைக்காடு #ஊர்ப்பெருமை #குலப்பெருமைஇப்படியாக எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத பல விருப்பங்களும் அதன் மீதான ஆழமான பார்வையும் எனக்குண்டு. உங்கள் விருப்பத்திற்கேற்ப என்னை திருத்த முயலாதீர்கள்; நான் யாரையும் திருத்த முயற்சிப்பதில்லை; திருத்துவதற்காக இங்கே வரவுமில்லை. இங்கே எனக்கு உடன்பாடுள்ள பதிவுகளை விட, பிடிக்காத பதிவுகளே என் கண்ணில் அதிகம் தென்பட்ட போதிலும், அதை வெகு எளிதாக கடந்து செல்கிறேனே தவிர, யாரிடமும் அறிவுரை கூறுவதில்லை. புரிதலுக்கு நன்றி!

08 நவம்பர் 2017

பண மதிப்பிழப்பில் விஜய்!



பண மதிப்பிழப்பை பற்றி என்னவென்றே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு மோடிக்கு முட்டுக்கொடுத்த ரஜினி - கமல் உள்பட சக நடிகர்களுக்கு மத்தியில், தனித்துவத்தோடு ஊடகங்களில் எதிர்ப்பை பதிவு செய்த ’தளபதி’ விஜய் போற்றுதலுக்குரியவர்.


செந்தமிழனுக்கு அகவை வாழ்த்துகள்!





யார் தமிழன்? என்ற மாற்றோரின் ஏளனப்பேச்சையே தன் வசமாக்கி 'நாம் தமிழர்' என்ற கம்பீர அடையாளத்தோடு, சமகால தமிழ்தேசிய அரசியலில் தலைவனாய் திகழும் 'மருது சீமை'யில் பிறப்பெடுத்த எம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, 48வது அகவை திருநாள் வாழ்த்துகள்!

06 நவம்பர் 2017

கார்ட்டூன் மட்டுமல்ல; கந்து வட்டியும் கூட வன்மம் தான்!






இந்த ஒரேவொரு கார்ட்டூனுக்காக பாலா கைது செய்யப்பட்டிருக்கிறார்; இப்போது இதை ஓராயிரம் பேர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது எத்தனை பேரை கைது செய்ய போகிறது இந்த பினாமி அரசு? நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பக்கம் நிற்கிறேன். இந்த கார்ட்டூனை வெளியிட்டதே கேவலமான மனநிலையென்றால், ஒரு குடும்பத்தையே கொலையிட வைத்தவர்களின் மனநிலையும் கேவலமான, அருவருப்புதான் என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாகரீகம் அநாகரீகம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது; சிலருக்கு லெக்கின்ஸ் நாகரீகமாகவும், பலருக்கும் அநாகரீகமாகவும் தெரியும். அது போலத்தான் இந்த குறைபாடும். கார்ட்டூன் என்பதே சொல்ல வருகின்ற கருத்தை பொட்டில் அறைந்தாற் போல் சொல்வதற்காக தான். இங்கே மயிலிறகோடு தேனை தடவியெல்லாம் சொல்ல முடியாது. அந்த படத்தில் சொல்லப்பட்டது தாழ்ந்த போனதாக தெரியும் பலருக்கு , ஒரு படத்திற்காக தேடிப்போய் கைது செய்திருக்கும் தாழ்வானது தான் என்பது புரியவில்லை என்பதும் ஆச்சர்யம் தான். இங்கே லெக்கின்ஸ் என்பது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. கலச்சாரம் வரை செல்லவேண்டியதில்லை; ஏனெனில் அன்று, ஆண்களுக்கு மேல் சட்டை அணியாத கோமணமும் கலச்சாரமாக தான் இருந்திருக்கிறது. அன்றைய பெண்களுக்கு மாரப்பு மட்டுமே கலச்சாரம். இதை இதோடு தொடர்பு படுத்தி வேண்டிய அவசியமில்லை. எது நாகரீகம்? எது அநாகரீகம் என்பதை பற்றிய அளவீடு காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் மாறிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டான அதை விடுத்து, கந்து வட்டியை பேசிய அந்த கருத்துப்படம் சரியானதே. கொசு தொல்லையாக இருந்தால் அதை தடவி கொடுக்க முடியாது; அடிக்கத்தான் வேண்டும். அதை அநாகரீகம் என நினைத்து கொசுவை மட்டுமே ஓட்டிக்கொண்டிருப்பது தான் உங்களுக்கு நாகரீகம் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.


நூறு வார்த்தைகள் சொல்ல வேண்டியதை ஒரு கருத்து படம் சொல்லும்; சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன? அதுபோல, பெரும்பாலானோரின் கருத்தை படமாக்கி இருக்கும் ஒருவரை கைது செய்திருப்பது அயோக்கியத்தனம். ஆளும் வர்க்கத்தை விமர்சனம் செய்யவே கூடாது என்பது காட்டாட்சியின் எடுத்துக்காட்டாகவே அமையும். சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் வேண்டுமென்றால் குறை காண முடியும்; சொல்லிய கருத்தில் குறையே இல்லை. படைப்பாளிகளை கைது செய்தால் மட்டுமே, வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்தி விட முடியாது என்பதை காலம் உணர்த்தும்.  அமெரிக்கா பற்றிய கார்ட்டூனில் கூட அம்மணமாக்க பட்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதனால் அங்கே இதுபோன்றதொரு கைது நடக்கவில்லை.




கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கருத்து படம் அநாகரீகமாக தெரிந்தால், ஒரு கருத்து படத்திற்காக கைது செய்திருக்கும் இந்த அரசின் போக்கு பச்சை அநாகரீகம் தானே? கருத்தை கருத்தால் எதிர் கொள்ள பக்குவம் வேண்டும். வானாளவிய அதிகாரம் இருப்பதாக இவர்கள் நினைத்து கொண்டால், அந்த அதிகாரத்திமிர் உடைத்த்றியப்படும். கந்து வட்டி கொடுமையால் பல முறை மனுகொடுத்தும் கண்டு கொள்ளாமல், மெளனித்திருந்தது யார்? இந்த மெளனத்திற்கு பின்னால் பலர் இருக்கின்றனர். அதில் முதன்மையான மூவரை மட்டுமே பாலா சுட்டிக்காட்டிருக்கிறார். தீக்குளித்து கொண்ட பகுதியையே அவசரகதியில் சுவர் எழுப்பி அடைத்தது எதனால் என்பதை யோசித்தாலே புரியும்; இவர்களுக்கு கந்து வட்டி கொடுமையை விட, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நம் வாசலில் கொளுத்திக்கொள்ள கூடாது என்பது மட்டும் தான் என்ற கையாலாகத தனம் புரிய வரும். அந்த கையாலாகத தனத்தை தான் பாலா படத்தில் வரைந்திருக்கிறார் என்று பார்க்கிறேன். இந்த கைது விசயத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை ஆதரிப்பது தான் எதிர்கால நலனுக்கானதாக இருக்க கூடும்.

வடக்கத்திய ஊடகங்கள் வரைக்கும் கொண்டு சேர்த்த அரசுக்கு பாலா கடமைபட்டவராகிறார். 

- இரா.ச.இமலாதித்தன்