17 நவம்பர் 2017

வாய்மேட்டின் வரலாறான சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!





”தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!” என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்து மதுரையை அடுத்த திருநகரில் 6.8.1962 ஆம் நாள் ”தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்!” என்னும் நோக்கத்தையும் முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார்.
தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ Yes sir என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இவரே. இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை.
மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். "தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்" என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். ”அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர்!” என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய 'சங்க இலக்கியம்' வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு 'குறள்நெறி' என்னும் இதழையும், Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். விருதுநகரில் இருந்தபோது ’இலக்கியம்’ (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது ’திராவிடக்கூட்டரசு’ போன்ற இதழ்களையும் நடத்தினார்
பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும் பெருமாள்.
இத்தகைய பெருமைக்குரிய சி.இலக்குவனாரின் நூல்கள் பட்டியல்கள்:-
எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933) மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
அம்மூவனார் (ஆராய்ச்சி)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956) வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
கருமவீரர் காமராசர் (வரலாறு)
அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
Tholkappiyam in English with Critical Studies
Tamil Language (1959)
The Making of Tamil Grammar
Brief Study of Tamil words
சோழநாட்டிலுள்ள நாகை மாவட்டத்தின் திருமறைக்காட்டிற்கு அருகேயுள்ள வாய்மைமேட்டில் மு.சிங்காரவேலத்தேவருக்கும் - அ.இரத்தினம் அம்மையாருக்கும் பிறப்பெடுத்த பெருந்தமிழர் முனைவர் சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!
#இலக்குவனார் #அகமுடையார் #Agamudayar
(நன்றி: அகமுடையார் அரண்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக