26 நவம்பர் 2017

ஐயக்கதேவர் வழிவந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்!




சோழர் காலத்தில் இலங்கையின் வடக்கே ஐந்து பெரும் தளபதிகள் நிர்வாகத்தை நடாத்தினார்கள். ஒருவர் ஐயக்கதேவர் – வல்வை, பொலிகண்டி, தொண்டைமானாறு பகுதிக்கும், வீரமாணிக்கதேவர் மயிலிட்டி பகுதிக்கும், சமரபாகுதேவர் உடுப்பிட்டி, வல்வெட்டி பகுதிகளையும், வெள்ளிவண்டிதேவர் துன்னாலைப் பகுதியையும், மாயாண்டிபாகுதேவர் கற்கோவளம் குறிச்சியையும் பாதுகாக்க சோழப் பேரரசனால் அனுப்பப்பட்டனர்.
இந்த ஐவரில் ஐயக்கதேவர் வம்சத்தில் வந்தவரே வேலுப்பிள்ளையும் அவர் மகன் பிரபாகரனுமாகும். ஐயக்கதேவர் பின் கரியதேவர் – காராளர் – ஐயன் – வேலர் – ஐயம்பெருமாள் – வேலாயுதர் – திருமேனியர் – வெங்கடாசலம் – குழந்தைவேற்பிள்ளை – வேலுப்பிள்ளை – திருவேங்கடம் – வேலுப்பிள்ளை – பிரபாகரன் என்பதே இந்த வம்சத்தின் படிமுறையான வளர்ச்சியாகும்.
தமிழகத்தில் இருந்து வந்து சோழர் காலத்தில் வல்வையில் குடியேறிய போர்த் தளபதிகள் குடும்பமாக இவர்கள் இருந்தார்கள். இதனால் போர்க்குணம், விடுதலை போன்றன இவர்களின் இயல்பாக இருந்தது. வேலுப்பிள்ளை எல்லாளனுக்கு விளக்கு வைத்ததும், பிரபாகரன் பிறந்ததும் தற்செயலான நிகழ்வல்ல. தமிழ் ஈழ மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றின் தொடர்ச்சியே அது.
தஞ்சைப் பெருங்கோயில்களைக் கட்டிய சோழர்கள் போலவே சிவாலயங்களை கட்டுவதும் இவர்களுடைய குடும்ப இயல்பாக இருந்தது. திருமேனியர் வெங்கடாசலம் பிள்ளை அவர்களே வல்வை சிவன்கோயிலைக் கட்டினார். அவருடைய சகோதரர் குழந்தைவேற்பிள்ளை அவர்களே கொழும்பு செக்கடித் தெருவில் உள்ள கதிரேசன் கோயிலைக் கட்டினார். சோழர்கால வரலாற்றையும், பொன்னியின் செல்வன் போன்ற கல்கியின் வரலாற்று நாவல்களையும் உன்னிப்பாகப் படித்தால் வேலுப்பிள்ளை குடும்பத்தின் வாழ்வியல் நெறியை எளிதாக விளங்க முடியும்.
நன்றி: ஈழ இணையதளங்கள்
(இந்த கட்டுரை தொடர்பான விரிவான பகுதிகளை படிக்க கீழே ஒருசில இணையதள லிங் கொடுக்கப்பட்டுள்ளது)

http://eelavarkural.blogspot.in/2010/01/blog-post_14.html?view=classic
http://www.vvtuk.com/archives/15520
https://varnakulattans.weebly.com/veluppillai-appah.html
http://valvainilam.blogspot.in/2013/01/3.html
https://velupillaiprabhakaran.wordpress.com/2010/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக