இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 நவம்பர் 2014

இணைய பிரபலம் என்ற அற்பத்தனம்!

மனசுல உள்ளதை மறைக்காமல் நேர்மையான பதிவை தரும் பதிவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் மிக குறைவு. தனிப்பட்ட செயல்பாட்டுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் பதிவிடும் நபர்களின் போலி பிம்பம் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். மனசுல ஒன்னு; செயல்ல ஒன்னு; பேச்சுல ஒன்னு; எழுத்துல ஒன்னு; இப்படி பல முகங்களில் முகமூடியிட்டு போலியாக பதிவிடும் நபர்களே இங்கே அதிகம். இதுல ஏன் பிரபலம் என்ற பிதற்றல்? இங்கே வழங்கப்படும் லைக்குகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கடன் கூட வாங்க முடியாது. இது தான் எதார்த்தம். அதை விட்டுவிட்டு பிரபலம் - லைக் போன்ற அற்பதனத்துக்காக அக்கப்போர் தேவையில்லாதது. பிரபலமான பதிவர்கள், அந்த பிரபலத்தை பயன்படுத்தி திரைத்துறையிலோ - எழுத்துத்துறையிலோ, டிவி/பத்திரிகை போன்றதோர் ஊடகத்திலோ தனக்கானதொரு முத்திரையை பதித்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த லைக்குகளெல்லாம் வெறும் போலி பெருமை பட்டியலில் தான் சேரும். ஒரு பிரபலமான பதிவர் ஓரிரு மாதம் பதிவிடாமல் இருந்துவிட்டால், அதன் பிறகு அந்த பிரபல பதிவரை சீண்ட கூட ஆளிருக்காது. இதை சொல்வதனால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற இயலாநிலையில் நானில்லை. எதார்த்தம் இது தான்.

- இரா.ச.இமலாதித்தன்

13 மே 2014

இணைய போராளிகளுக்கிடையில் ஈழம்!

ஈழத்தமிழர்களுக்காக ஃபேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் புரட்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதும் பலர், ஈழம் சார்ந்த எந்தவொரு போராட்டக்களங்களிலும் நேரடியாக கலந்து கொள்ளதவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் எதார்த்தம். இவர்களின் உணர்வு சற்றும் குறைவானதில்லை என்றாலும் கூட, அந்த உணர்வை மற்றவர்களுக்கு திணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, இவர்கள் லாவகமாக ஓய்வெடுத்து கொள்கின்றனர்.

வெறும் எழுத்துகளால் மட்டுமே ஒரு இனத்தின் லட்சியம் வெற்றி பெறுவதில்லை; அதன் நீட்சியாக அனைவரும் களத்திற்க்கு வரும்போதுதான் அந்த போராட்டம் முழுமையடைந்து, வெற்றிக்கான வழிகளும் விரிவடைகின்றது.

தாங்கள் அறிவுஜீவிகள் என்ற அளவீடோடு இணையத்தில் மட்டுமே பக்கம் பக்கமாய் எழுதி செல்வது, சிலரது அன்றைய நாளின் உணர்வை மட்டுமே தட்டியெழுப்புமே தவிர வேறெதையும் செய்துவிடாது. அடுத்த நாள் அனைவரது கவனமும் அடுத்த வேறொரு பதிவை நோக்கி நகரும். போராட்டக்களத்தின் வடிவம் எதுவாகினும் அது தொடர்ச்சியாக செல்லக்கூடிய மாதிரியான நீண்டகால வடிவமைப்பை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் முழுமையாகவும், விரைவாகவும் வெற்றிப்பெறும் என்பதே எதார்த்தம். எனவே, எழுத்துகளால் மட்டுமே புரட்சி செய்யாமல், கொஞ்சம் களத்திற்கும் வர முயற்சி செய்யுங்கள். இங்கே சொல்லப்பட்ட அனைத்து விமர்சனத்திற்க்கும் யாரும் அப்பாற்பட்டவர் கிடையாது நான் உள்பட.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

06 பிப்ரவரி 2014




2009ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு முன்னாடியே பலகாலங்கள் ஆர்குட் - கூகிள் குரூப்ஸ் - கூகிள் பஸ் - ப்ளாக்கர் யென்று இணையத்தில் செயல்பட்டிருந்தாலும், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிதான் எனக்கு ஃபேஸ்புக் அறிமுகம் ஆனது. அப்போது மூலமான என் பதிவுகளும் இங்கே ஆரம்பமானது. இணையம் மூலமாக எத்தனையோ நபர்களை கடந்த ஏழெட்டு வருடங்களில் கடந்து வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆர்குட்டில் பல உறவுகள் கிடைத்தார்கள். அதன் பிறகு கூகிள் குழுமம் மூலமாக பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் பிறகு ஃபேஸ்புக் மூலமாகத்தான் அதிகமான உறவுகளும் நண்பர்களும் அறிமுகமானார்கள். ஃபேஸ்புக்கில் கடந்த ஐந்து வருடமாக செயல்பட்டிருந்தாலும் இன்னமும் பல புதிய நபர்களை கடந்து கொண்டே வந்திருக்கின்றேன். என்னை இன்னமும் புதியவனாகவே அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் எம்பெருமான் முருகா நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

28 ஜனவரி 2014

பெண்மையை மதிப்போம்!

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலரும் இணையத்தில் வெளிப்படையாகவே தங்களது கருத்துகளை முன் வைக்கிறார்கள். குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் வலுவான கருத்துக்களை கூட வெகு இலகுவாக பலரிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சில பிரபல ஆண் எழுத்தாளர்கள் சொல்லும் கருத்துக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட, பெண் பதிவர்களுக்கு எளிமையாகவே உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. ஏனெனில் பெரும்பாலான ஆண்களின் ஆதரவும் இங்கே முதன்மையாக்கப்படுகிறது. அது எதிர் பாலினத்தின் மீதான கவர்ச்சியாக மட்டுமே பார்க்காமல், சமுதாய வளர்ச்சியாகவும் நாம் பார்க்கலாம். மாறாக, தங்களது கருத்துகளை வெளிப்படையாகவும் - தைரியமாகவும் - கொஞ்சம் கிண்டல் நையாண்டி கலந்து சொல்லும் பெண்களை தவறாக நினைப்பதும், மற்றவர்கள் மத்தியில் அப்பெண்களை தவறாக சித்தரிக்க முயல்வதும் மோசமான முன்னுதாரணமாகிவிடும். மேலும் அது நல்ல ஆண்மகனுக்கும் அழகுமல்ல. ஏனெனில், நாம் பெண்களை மதிக்கும் சமூகம். கடவுள் முதற்கொண்டு மண் - நீர் - நாடு என எல்லாவற்றையும் பெண்ணை முன்னிலைப்படுத்தி தாய்மையை போற்றக்கூடிய இனம் இது. இப்படியெல்லாம் புகழ்வதாலேயே, பெண்கள் போடும் பதிவுக்கு மட்டும் லைக்கிட்டு, கவர்ச்சிகரமான கமெண்ட் செய்து அந்த பெண்ணோடு சாட் பண்ண நினைக்கும் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

19 டிசம்பர் 2012

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!


இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் தனது ஒற்றுமையை வலுபடுத்த வேண்டும்.
இருக்க இடம் கொடுத்து, உழைக்க நிலம் கொடுத்து, பல நூற்றாண்டுகளாக தேவரினைத்தை சார்ந்த முன்னோர், ‘பள்ளர்’ இனத்தின் மக்கள் மீது வைத்துள்ள பாசமும், பரிவும் அன்று போல என்றும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,  சாதியின் அடிப்படையிலான ஒதிக்கீட்டால் அரசு வேலை,  நல்ல வருமானம், பணம் கிடைத்த உடன், அவர்களுக்கு புகழ் யென்ற போதையும், மனனர் பரம்பரை யென்ற வரலாறும் தேவைப்படுகிறது. புகழுக்காக பொய்யாக திரித்து எழுதி தினம் தினம் ஒரு புதுப்புது வரலாறை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள்.
இப்போது உண்மையான வரலாற்றுக்கு சொந்தமானவர்களை சாதிவெறியர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மேலும், அதை தாண்டி சாதீய மோதலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். முக்குலத்தை சார்ந்த முன்னோர்கள், ‘பள்ளர்’ இன மக்கள் மீது வைத்திருந்த அந்த பரிவும், பாசமும், இன்னுமும் தேவரினத்தவர்களால் கிடைத்த போதும், தேவரின தலைவரைகளையும், தேவரின மக்களையும் அவர்கள் இழிவுபடுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக ‘பள்ளர்’ இனத்து இளைஞர்களை தவறாக வழிகாட்டி,  சில சுயநல அரசியல்வாதிகளால் இந்த கூற்று இப்போது இணையத்தின் வாயிலாக அரங்கேறி கொண்டிருக்கிறது.
வாழ்க அவர்களது எண்ணம்!
பல்லாயிர கணக்கான மக்களின் மனதில் தெய்வமாக, தேவர் திருமகனார் வீற்றிருக்க, இந்த மாதிரியான செய்கைகள் அந்த மக்களின் மீதான அருவெறுப்பையே ஏற்ப்பட வைக்கிறது. இந்த மாதிரியான  இழிவான செயல்களை எல்லாம், தெய்வமாகி போன தேவர் கண்டுக் கொண்டிருக்கிறார். அவர்களது அழிவை அவர்களாகவே தீர்மானித்து கொள்கிறார்கள். அணைய போகிற விளக்கு பிரகசாமாய் எரியும். அதுபோலவே இதுவும்!
இந்த மாதிரியான ‘தலித்’ என்ற முகமூடியில் திரியும், “தேவேந்திரர் குல” ‘பள்ளர்’ இனத்து சாதிவெறியர்களை தட்டிக்கேட்க தைரியமில்லாதவர்கள் எல்லாம், ‘தலித் அரசியல்’ பற்றி வாய்க்கிழிய பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் இப்போதைக்கு தேவரின மக்களின் முதல் எதிரி. இவர்கள் தான் ‘களை’ எடுக்கப்பட வேண்டிய ஆட்கள்! இவர்களின் தூண்டுதலால்தான் அந்த ‘தலித்’ முகமூடி கொண்ட சாதிவெறியர்கள் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொடுத்த கடனை கேட்டால் கூட  வன்கொடுமை சட்டம் போடும் காலமிது.
அந்த வன்கொடுமை சட்டம் என்ற ஒன்றை வைத்து கேவலமான தொரு பிழைப்பு நடத்துகிறார்கள். வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட இன மக்களும் ஒன்றாக களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வீழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை தலை நிமிர்த்த ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும். இது தான் இப்போதைய காத்தின் கட்டாயம். இதை புரிந்து கொள்ளாதவரை ஏற்றம் யாருக்கும் இருக்க போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம். புரிந்து கொள்வோம்; புரிய வைப்போம்.
 
# தேவர்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.
சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1894
 

10 செப்டம்பர் 2009

இணைய பயன்பாட்டாளர்கள் பற்றிய பார்வை..!


இன்றைய காலக்கட்டங்களில் 'இணையம்' என்ற ஒற்றைக்கருவி, உலகையே ஆட்டுவிக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. புரட்சி என்பது களத்தில் நின்று கலகம் செய்வதென்ற மையத்திற்கே அடித்தளமாக, இப்போது இணையமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .இப்படிப்பட்ட இணையமென்ற மாபெரும் சக்தியை, மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு உதாரணங்கள் தேவையில்லையென்றே கருதுகிறோம்.இணையத்தைப்பற்றிய எல்லா விடயங்களும் நாம் அறிந்தததே!

இணையவாதிகளான நாம், இணையமென்ற கடவுளின் தூதர்களாகவே செயல்பட வேண்டிய அவசியத்தை விவரிப்பதே, இந்த பதிவின் சாரம்சம் என்பதை தெரிவித்துக்கொண்டு தொடர்கிறோம்.

நாம் வழமையாக இணைய செயல்பாடுகள், குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே இருந்து வருகிறது.இப்போது இன்னும் விரிவாகி, சமூக பொதுதளங்களான பேஸ்புக், கூகிள் பஸ், ட்விட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம். அதுவும் மிக விரைவான/ விரிவான கருத்து பரிமாற்றங்களால் நொடிக்குநொடியிலான பலதரப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன.

கருத்து பரிமாற்றம் என்பது நாம் அனுபவித்துணர்ந்த செயல்களின் வழிமுறைகளையும், அதன் நிறை-குறைகளையும், அதன் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இணைய பொதுவெளிகளில் வைத்தால் அது போற்றுதலுக்குரியது. தமக்கு நேர்ந்த இன்பதுன்ப நிகழ்வுகளை சமாளித்து, அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை மற்ற தோழமைகளுக்கும் பகிர்தலே,கருத்து தெளிதல்களுக்கு வித்திடும்.ஆனால், பெரும்பாலான இணையவாதிகளின் பார்வையில், பகிர்தல் என்பதை வேறொரு கோணத்திலேயே அணுகப்படுகிறது என்பதையே நாம் அவதானித்து வந்திருக்கிறோம்.

"ஒவ்வொரு தனிநபரின் ஒழுக்கமே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒழுக்கம்" என்பதையே, 'கழுகு' பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த இணையத்தின் ஊடாகவே, நாமெல்லாம் இன்று நண்பர்களாக, சகோதர சகோதரிகளாக இணைந்துள்ளோம். பெரும்பான்மையாக, முகம் பார்க்காமல் எழுத்தோடு நட்பு பாராட்டி பின்பு குரலோடு உறவாடி, அதன் அடுத்தகட்டமாய் நேரடியாக சந்தித்து ஒரு நட்பின் இணக்கத்தை வளர்த்துக்கொண்டு வருகிறோம்.இப்படிப்பட்ட நட்பினை தந்த இணையத்தை, இன்று பலரும் தன் சுயதம்பட்டங்களை மட்டுமே எழுத்துகளாக்கி இம்சை தருவது, தேவையா என்பதே நமது கேள்வி

இந்த சுயதம்பட்டங்களை பொதுவெளியில் பரிமாற்றங்களாக பகிரப்படும்போது, இணையத்தில் இயங்கும் ஆண்-பெண், இளையோர்-மூத்தோர் என்ற பாகுபாடின்றி பலதரபட்டவர்களுக்கும் இது சென்றடைகிறது. சுயதம்பட்டங்கள் மட்டுமின்றி தான் சார்ந்த கருத்துசார்புகளை புகழ்ந்து எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனக்கு எதிர்சார்பு கொள்கையுடைய தனி நபர்களைக்கூட மத/சாதீய ரீதியில் தாக்கி, இழிவான முறையில் எழுதும் இணையவாதிகளை, இணையவெளியில் காணும்போது வருத்தமாய் இருக்கிறது.பொதுவாக இணையங்களில் ஏற்படும் விவாதங்களில் மையக்கரு குறுப்பிடத்தக்க சிலவற்றை சார்ந்ததாவே இருக்கும்.

இனம்/மதம்/சாதீய ரீதியில் ஏற்படும் விவாதங்கள், ஆத்திக - நாத்திக முரண்பாடுகள், அரசியல் கொள்கைகளில் எதிரெதிர் அரசியல் சார்புநிலை கொண்டவர்களின் மோதல்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகத்தின் கதாநாயகர்கள், நாயகிகளின் விமர்சனங்களென இதுபோன்ற இன்ன சில விவாதங்களே அதிகம் இடம்பெற்று வருவதையே நாம் கண்டுவருகிறோம்.

 ஒரு காலத்தில் நல்ல விடயங்களையும் நல்ல பண்புகளையும் பொது வெளியில் பகிர்வது அந்த தனிப்பட்ட மனிதரை நல்லவராக அடையாளம் காட்டும் ஆனால் சம காலத்தில் நான் எதார்த்தமாய் இருக்கிறேன் பேர்வழி என்று தனிப்பட்ட தங்களின் அந்தரங்கங்களையும், இன்ன பிற சமுதாயத்தால் தீங்கு என்று நாம் நினைக்கும் பல விடயங்களை பகிங்கரமாகவே பொது வெளியில் மனிதர்கள் பகிர்வதும் அதனை ஆமோதிப்பது போல மனிதர்கள் இவர்க்ளைச் சுற்றி வலம் வருவதும் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும்...!

யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒரு செயலை பொதுவெளியில் பகிங்கரப்படுத்தப்படுவதாலேயே அது நல்ல செயல் ஆகிவிடுமா? சிந்திக்க வேண்டும் தோழமைகளே....! ஏனென்றால் வளரும் சமுதாயம் இது ஒரு போன்ற கவர்ச்சிகளைக் கண்டு இதை ஒரு நாகரீகமாக கருதத் தொடங்கினால்...?  சற்றே நம் வீட்டுப் பிள்ளைகளை இந்த இடத்தில் வைத்து எண்ணிப் பாருங்கள்...!

கிராமத்து டீக்கடைகளிலும், சிறுநகரத்து சலூன்கடைகளிலும் நடைபெறும் வெற்று வாதங்களாகவே, பெரும்பாலான இணைய விவாதங்கள் அமைகின்றன.மேலும் இம்மாதிரியான விவாதங்களில், தான் சொன்ன கருத்தில் கொஞ்சமும் உண்மை இல்லையென்றாலும் கூட, தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போன்ற கடைசிவரை விதண்டாவதாமாய் பேசிக்கொண்டு, முடியாதபட்சத்தில் தனிநபர்களை குறிவைத்து (சாதி/மதம்/இன ரீதியிலான) வசைசொற்களால் அர்ச்சனை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அடுத்தவர்களை காயப்படுத்தாத தன்னைசார்ந்த எந்தவொரு நிகழ்வுகளை பொதுவெளியில் பகிர்வது சரியானதே. நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டேன், நான்கு சவரனில் வளையல் வாங்கினேன் என்பது கூட இடம்பொருள் ஏவலுக்கு தகுந்தற்போல, சிறுதகவலேனும் கிடைக்கும் என மனதை சமாதானப்படுத்திக்கொள்ளலாம். மாறாக மதத்தை தாக்குவது, சிலரது நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பது என்பது மட்டுமே தவறு. இதே வாய்ப்பு எதிராளிக்கும் உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுவதால்தான் சண்டையே வருகிறது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பதுகூட மற்றவர்களின் மனங்களை காயப்படுத்தாமல் இருக்கவேண்டும்

நாம் பகிரும் கருத்துக்கள் அடுத்த மனிதரை ஊக்கப்படுத்துவதாய், புதிய செய்திகளைப் பகிர்வதாய், நகைச்சுவையூட்டி சிரிக்கச் செய்வதாய் இருக்க வேண்டும் மாறாக தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலையும் ஊட்டுவதாய் இருக்கக் கூடாது. நண்பர்களுக்குள்ளான பிரைவேட் ஆப்சனில் யாருக்கு என்ன பிரியமோ அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை.. ஆனால் பொதுவெளியில் நாகரீகத்தை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென சொல்ல எங்களுக்கு உரிமையில்லையென்றாலும், இதுமாதிரியெல்லாம் இணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை, அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து பகிர்வது எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த கட்டுரையின் வாயிலாக, உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்து பார்க்க, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதை எங்களது பணியாக கருதுவதால் இங்கே பகிர்கிறோம்.

மேற்சொன்ன பதிவின் சாராம்சமான, "தனி நபரை தாக்கும் வகையிலோ யாரையும் ஏளனம் செய்யும் வகையிலோ, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன் படுத்தியோ, எனது சொந்த அன்றாட நடவடிக்கைகளை வெளியே கூறி தம்பட்டம் அடித்தோ, சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் எந்தவித கருத்துக்களையும் இணையமென்ற பொதுவெளியில் பகிரமட்டோம்" என்பதை இங்கே உறுதிமொழியாய் எடுத்துக்கொண்டு, மனநிறைவோடு இப்பதிவை நிறைவு செய்கின்றோம்.