பெண்மையை மதிப்போம்!

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலரும் இணையத்தில் வெளிப்படையாகவே தங்களது கருத்துகளை முன் வைக்கிறார்கள். குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் வலுவான கருத்துக்களை கூட வெகு இலகுவாக பலரிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சில பிரபல ஆண் எழுத்தாளர்கள் சொல்லும் கருத்துக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட, பெண் பதிவர்களுக்கு எளிமையாகவே உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. ஏனெனில் பெரும்பாலான ஆண்களின் ஆதரவும் இங்கே முதன்மையாக்கப்படுகிறது. அது எதிர் பாலினத்தின் மீதான கவர்ச்சியாக மட்டுமே பார்க்காமல், சமுதாய வளர்ச்சியாகவும் நாம் பார்க்கலாம். மாறாக, தங்களது கருத்துகளை வெளிப்படையாகவும் - தைரியமாகவும் - கொஞ்சம் கிண்டல் நையாண்டி கலந்து சொல்லும் பெண்களை தவறாக நினைப்பதும், மற்றவர்கள் மத்தியில் அப்பெண்களை தவறாக சித்தரிக்க முயல்வதும் மோசமான முன்னுதாரணமாகிவிடும். மேலும் அது நல்ல ஆண்மகனுக்கும் அழகுமல்ல. ஏனெனில், நாம் பெண்களை மதிக்கும் சமூகம். கடவுள் முதற்கொண்டு மண் - நீர் - நாடு என எல்லாவற்றையும் பெண்ணை முன்னிலைப்படுத்தி தாய்மையை போற்றக்கூடிய இனம் இது. இப்படியெல்லாம் புகழ்வதாலேயே, பெண்கள் போடும் பதிவுக்கு மட்டும் லைக்கிட்டு, கவர்ச்சிகரமான கமெண்ட் செய்து அந்த பெண்ணோடு சாட் பண்ண நினைக்கும் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment