பின்நவீனத்துவ கருத்துகள்!

ரொம்பநாள் கழித்து இன்றுதான் பார்த்தேன். அவள் பார்த்தாதாக தெரியவில்லை. நான் பார்த்தது கூட அவளுக்கு தெரிந்திருக்காது. அதுபோலத்தான் அவளும் என்னை பார்த்திருக்க கூடும். பார்வை மட்டும் என்ன செய்துவிட போகிறது? நேருக்கு நேராகவே பார்த்திருந்திருக்கலாம். அப்போது எனக்கும் புரியவில்லை; அவளுக்கும் இது புரிந்திருக்காது. புரிந்திருந்தால் தான், நேருக்கு நேராகவே பார்த்திருப்பாளே. நம்ம சாதித்திமிரை நம்மிடமே காட்டுகிறாளே யென்று யோசித்து கொண்டே, அந்த திமிர்பிடித்தவளை பார்க்க கூடாதென்று பிடிவாதமாக அதே திமிரோடு நாம இருந்தாலும் கூட, பிடிக்கத்தான் செய்கிறது அவளை!

#ஃபீலிங்

பிரபலம் என்பதாலேயே ஒரு சிலரை அன்பிரண்ட் பண்ணாமலே என் ஃப்ரெண்ட் லிஸ்டில் வைத்திருக்கின்றேன். மீதமுள்ள பிரபலங்கள் தானாகவே அன்பிரண்ட் செய்து விட்டு சென்றுவிட்டார்கள். உண்மை என்னவெனில் இங்கே யாரும் பிரபலமில்லை என்பதை ஒருசிலர் தான் உணர்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பிரபலமானது கூட அவர்களுக்கு தெரியவில்லை அல்லது அதை பொருட்படுத்தவில்லை என்பது கூட அதற்கு அர்த்தமிருக்கலாம். ஆனால், பிரபலமாகுவதும் நிர்மூலமாவதும் அவரவர் செயல்களிலேயே இருக்கிறது. அதனால் தான் எப்போதுமே பிரபலமானவர்கள் ஏக மனதாக அனைவரின் ஆதரவோடும் நிலைத்த புகழோடும் இருக்க முடிவதில்லை. இங்கே யாரும் பிரபலமில்லை என்பது கூட எதார்த்தமாக இருக்கலாம். ஆனால், அதை புரிய வைப்பதும் புரிந்து கொள்வதும்தான் சிரமமாகவே இருக்கிறது.

புரியலைல்ல... ? பிரபலம்ன்னாலே ப்ராப்ளம் தான்...

#பிரபலம்


- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment