அடையாளமின்றி வாழ்வது வீண்!

சாதியை மறந்து தமிழர்ன்னு இணைய சொல்றீங்க; ஏன் தலைய சுத்தி காதை தொடுறீங்க. நேரடியா உயிரினம்ன்னு எல்லோரும் ஒன்னா இணைஞ்சிடலாமே, குரங்கு - புலி - சிங்கம் - நரின்னு பாகுபாடு இல்லாமல்...

முதலில் சாதியை விடுன்னு சொல்லுவாய்ங்க. அடுத்து மதத்தை விடு; அதுவும் நம்மள பிரிக்குதுன்னு சொல்லுவாய்ங்க. அப்பறம், இந்தியன்ன்னு இருப்போம்ன்னு சொல்லுவாய்ங்க. அதுக்கு பிறகு, மொழியை விடு; உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுற ஆங்கிலத்தை முன்னிறுத்துவோம்ன்னு சொல்லுவாய்ங்க. அதுக்கப்பறமா, மனிதம் முன்னிறுத்தி, மனிதனாக மட்டும் வாழ்வோம்ன்னு சொல்வாய்ங்க. அதற்கு பிறகு, மனிதன் - விலங்கு - பறவைன்னு பாகுபாடு இப்போவும் இருக்கு. அதுனால, உயிரினமாக மட்டும் வாழ்வோம்ன்னு சொல்வாய்ங்க. கடைசியா, ஒவ்வொரு அடையாளத்தையும் தொலைத்து விட்டு, அமீபாவாய் அகதியாக்கப்படுவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment