23 ஜனவரி 2014

தேசத்தந்தை நேதாஜி!





தான் கொண்ட கொள்கையிலிருந்து கடைசிவரை விலகாத ஒரு தீவிரவாதி; விடுதலை வேட்கையை தன்னுள் கொண்டிருந்த ஒரு லட்சியபுருசன்; எதிரிகளை தகர்க்க யுத்தமொன்றே தீர்வாக இருக்குமென்று நம்பிய ஒரு போராளி; இரத்தத்தை கொடுத்து சுதந்திரத்தை அடையலாமென்ற நம்பிக்கையை விதைத்து களம்கண்ட ஒரு மாவீரன்; சாமானிய மக்களை பெரும்போர்படைகளாக கட்டமைத்த ஒரு மாபெரும் தலைவன்; காந்தி போன்ற சுயபுகழ் தேடியலைந்த நபர்களுக்கு மத்தியில் தன் சுயத்தை ஒருபோதும் இழக்காத எம் தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று. மேலும், நேதாஜியின் இறந்த தேதி அதிகாரபூர்வமாக யாருக்கும் இதுவரை தெரியாது. ஏனெனில், நேதாஜி இன்னும் இறக்கவில்லை; எம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நேதாஜி சொன்னது போல, உண்மையான சுதந்திரம் இன்னும் இந்தியாவிற்கு இதுவரை கிடைக்கவே இல்லையென்ற ஏக்கத்தோடு அடியேனின் தேசபக்தி தின வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

என் அண்ணன் பிரபாகரனை பிடித்து போன அனைவருக்கும் கண்டிப்பாக, என் அண்ணனுக்கு பிடித்து போன நேதாஜியும் பிடிக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தம். ஆனால், இங்கே பிரபாகரனிசம் பேசும் பலரில் குறிப்பிடதக்க ஒருசாராருக்கு மட்டும் நேதாஜியை பிடிப்பதில்லை. காரணம் என்னவெனில், அந்த ஒருசாராருக்கு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரை பிடிக்காது. அதுபோல ஸ்ரீ தேவரை பிடித்து போன சிலருக்கு, மாமன்னர் மருதுபாண்டியர்களை பிடிப்பதில்லை. ஆனால், எனக்கு மாமன்னர் மருதுபாண்டியரும், பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரும் ஒன்றுதான். அதுபோல நேதாஜியும் - பிரபாகரனும் - விவேகானந்தரும் ஒன்றுதான். இதில் எந்த பாகுபாடும் கிடையாது. அரசியலிலும் ஆன்மீகத்தில் சாதியை பார்ப்பவன் இந்த இரண்டுக்குமே லாயக்கற்றவன்னு ஸ்ரீ தேவரே சொல்லிருக்கார். அதை ஏனோ நாம் இன்னும் புரிந்து கொள்ளாமலே இருக்கின்றோம்.

ஜெய்ஹிந்த்!
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக