Posts

Showing posts from October, 2014

தேசியம் என்பது வடக்குக்கு மட்டும் தானா?

இந்தியாவின் இரும்பு மனிதரென வர்ணிக்கப்படும் திரு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட சொல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தெய்வத்திருமனார் - தென்னாட்டு சிங்கம் - தென்னாட்டு திலகர் - தென்னாட்டு போஸ் என்று பலவாறாக வர்ணிக்கப்படும் தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த தேதியான அக்டோபர் 30ம் தேதியை தேசியமயக்கமாட்ட நாளாக அறிவிக்க தயக்கம் ஏன்? ஒருவேளை பசும்பொன் தேவரவர்கள் தமிழகத்தில் பிறக்காமல், குஜராத்தில் பிறந்திருந்தால் மோடியின் கடைக்கண் பார்வை பட்டிருக்குமோ என்னவோ?

வாயரசுக்கும் வல்லரசுக்கும் வித்தியாசம் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

இதுக்கு பேரு கூட காப்பிகேட் தான்!

Image

நாகப்பட்டினத்தில் தேவர்சிலை தேவர் சமுதாயக்கூடம் திறப்புவிழா

Image
எங்க நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்து அருகிலேயே தேவர் சமுதாயக்கூடமும், கூடவே பசும்பொன் தேவர் சிலையும் நேற்றைய (அக்டோபர் 30, 2014) தேவர்ஜெயந்தி அன்று திறந்தாச்சு! சமுதாயக்கூடமும் - தேவர்பெருமகானரின் சிலையும் அமைய முழு முயற்சி எடுத்த திமுக நகர செயலாளர் திரு. போலீஸ் பன்னீர் அண்ணன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பெரியோர்களுக்கும் என் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

Image
தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இ…

அக்டோபர் 30, 2014 - ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்!

இந்த அக்டோபர் 30, 2014க்கு தான் எத்தனை வரலாற்று குறிப்புகள்?

01. முதல் முறையாக தமிழரொருவர் முதலமைச்சராக இருந்து, அரசு விழாவான தேவர்ஜெயந்திக்கு அரசு சார்பில் பசும்பொன்னில் மரியாதை.

02. காங்கிரஸில் இருந்து தமிழக தலைவர் ஞானதேசிகன் விலகல்.

03. இலங்கை - மலையக மண் சரிவு விபத்தில் 350 பேர் பலி.

04. இலங்கை நீதிமன்றத்தால் ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு.

05. மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்கும் கருணாநிதி.

06. நீதிமன்ற உத்தரவால் வீட்டிலிருந்த படியே பசும்பொன் தேவர் நிழற்படத்துக்கு செல்வி ஜெயலலிதா மலர் தூவி மரியாதை.

07. திரு. சுப்ரமணிய சுவாமி மீதான செல்வி ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை.

08. வைகுண்டராஜனின் நியூஸ் 7 தமிழ் என்ற செய்தி சேனல் அதிகாரபூர்வமாக தொடக்கம்.

இந்த எல்லா செய்திகளும் தனித்தனி செய்தி போல காணப்பட்டாலும், பின்புலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

- இரா.ச.இமலாதித்தன்.

தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

சுதந்திர போராட்ட வீரரும் - ஆன்மிக வாதியும் - பொதுவுடைமை சித்தாந்தத்துடன் கூடிய தேசியத்தலைவருமான, தெய்வத்திருமகனார் பெருந்தமிழர் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை என்ற ஆன்மீக விழாவிற்கு, தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கும் அதே தமிழ் சாதியை சேர்ந்த சக தமிழரான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர் செல்வத்தின் பசும்பொன் வருகை என்பது, தமிழ் வரலாற்றில் முதல் முறையாகவும் - மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைய போகின்றது. இந்த (அக்டோபர் 30, 2014 என்ற) வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில், அனைத்து தமிழர்களுக்கும் அடியேனின் 'தேவர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையிலிருந்து,
தமிழனாய்...
இரா.ச.இமலாதித்தன்.

சூரசம்ஹாரத்திற்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்பு!

Image
இன்னைக்கு எம்பெருமான் முருகனின் சூர சம்ஹாரம்! அதைப்பற்றி எனக்கு தோன்றிய சிறு ஆய்வு. நாகப்பட்டினமும் கடல் நகரம். திருச்செந்தூரும் கடல் நகரம். மேலும், முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே பிரசித்தி பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இந்த விசயத்தை மையமாக வைத்தே இந்த பதிவு அமைய உள்ளது. மாற்று கருத்துகள் இருந்தால் கூறவும்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்யும் நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சிக்கல் கோவிலுக்கு அருகேயே அரை மைல் தொலைவில் பொரவச்சேரி என்ற பொருள்வைத்தச்சேரி இருக்கு. அங்கு தான் எம்பெருமான் முருகனின் கல்லினால் ஆன மூலவர் சிலையும் இருக்கு. ஆனால், சிக்கல் கோவிலுனுள் ஐம்பொன்னினால் ஆன உற்சவர் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த உற்சவருக்கும் சூரசம்ஹார நாளில் வேர்வை வியர்க்கும் என்பது காலம் காலமாக நடந்து வரும் அதிசய நிகழ்வு. சிக்கல் - பொரவச்சேரி இது இரண்டு ஊர்களுமே கடலுக்கு அருகே இல்லை. மேலும், நாகப்பட்டினதில் கூட ஆறுமுகனுக்காக தனி ஆலயமாக குமரன் கோவில் நகரத்தின் மைய பகுதியில் இருக்கின்றது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மு…

சாதி அரசியலிலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா!

Image
அக்டோபர் மாசம் வந்தாலே, ”கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்துல வர இந்த சீன் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. பதவிக்காகவும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தான், சாதிக்கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்களுக்கு பயன்படுகிறார்கள். அந்த இழவுக்காக என்னா பில்டப் கொடுக்குறாய்ங்க? இதுனால தொண்டர்களுக்கும் விளம்பரம், தலைவருக்கும் விளம்பரம்! மற்றபடி ஒட்டுமொத்த சமுதயாத்துக்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்க போறதில்லை.

மருதுபாண்டியர்களை புறக்கணிக்கும் சீமான்!

Image
இந்த நாம் தமிழர் கட்சி காரய்ங்க, நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் ஃப்ளக்ஸ் அடிச்சு சொன்னாய்ங்க. ஆனால், தமிழ் தேசியத்தின் முன்னோடியான மாமன்னர் மருதுபாண்டியருக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட நடத்துன மாதிரியே தெரியல. இதுதான் தமிழ் தேசிய மாற்று அரசியலா? தீபாவளியே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே நிரூபணம் செய்ய முடியாத நரகாசுரனுக்கு வீரவணக்கம் சொல்வீங்க. ஆனால், 500க்கும் மேற்பட்ட அனைத்து சாதி/மத மக்களும் மன்னர்களுக்காக தங்களுயிரையே தந்த அக்டோபர் 24ம் தேதியை வசதியாக மறந்து விடுவீர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க, 200 வருடங்களுக்கு முன்பான காலத்திலேயே ’வீரசங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியரை மறந்து விட்டதா நாம் தமிழர் கட்சி? தமிழீழ விடுதலைப்புலிகளின் கொரில்லா போர்முறையை, 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தி காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை புறக்கணித்ததன் உள்நோக்கம் தான் என்ன?

அக்டோபர் 24க்கு பின்னாலுள்ள குழப்பங்கள்!

தமிழ் தேசியம் காத்த மாமன்னர் மருதுபாண்டியரின் 213வது நினைவேந்தல் நாளை அனுசரித்து கொண்டிருக்கும் அனைவரும் காளையார்கோவில் நினைவிடத்திற்கும், திருப்பத்தூர் நினைவிடத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.

01. காளையார்கோவிலில் யாருடைய உடல் உள்ளது?

02. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்ட பிறகு தலைகள் துண்டிக்கப்பட்டனவா?

03. காளையார்கோவிலில் உடலே இல்லையா?

04. காளையார்கோவிலில் வெறும் தலை மட்டும் தான் உள்ளதா?

05. காளையார்கோவிலில் ஆசாரியின் உடல் என சிலர் சொல்வதின் உண்மை என்ன?

06. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்கள் யாருடையது?

07. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்களில் தலைகள் இருந்ததா?

08. அக்டோபர் 24க்கும் அக்டோபர் 27க்கும் உள்ள தொடர்பு என்ன?

09. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 24ம் தேதியை தானே நாம் அனுசரிக்க வேண்டும்?

10. அக்டோபர் 27ம் தேதியை அனுசரிப்பதன் உள் அரசியல் என்ன?

இந்த பத்து கேள்விகளுக்கும் சரியான விடை தெரியாமல் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து மட்டும் என்ன பயன்?

- இரா.ச.இமலாதித்தன்

பாலுக்கும் பால் ஊத்தியாச்சு!

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏற்றியுள்ள தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் டீக்கடை காரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக இருமுறை டீ குடிக்கும் குடிமகனான அடியேனின் நன்றி!

டீக்கடைக்காரனாகவே வாழ்க்கையை ஓட்டியிருந்தால் இந்நேரம் பால் விலை உயர்வுக்கு ஆளும் வர்க்கத்தை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருப்பார் திரு. ஓ.பி.எஸ். அவர் நேரம், பரணி தரணியை ஆண்டு கொண்டிருக்கின்றது. பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கிடைக்காமல் பாக்கெட் பாலை நம்பி வாழும் தமிழ் சமூகத்திற்கு, இந்த பால் விலை உயர்வு பெரும்சுமையாக இருக்கும். கண்டிப்பாக இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

நடுத்தர எளிய மக்களின் ஒரு வேளை உணவாகவே இருந்து வரும் இந்த டீ/காபியின் மூலப்பொருளான பால் விலையை 24 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு ஏறத்தாழ 50% விலையேற்றத்தால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். போற போக்கை பார்த்தால் சாவுக்கு கூட மூன்றாம்நாள் பால் தெளிக்க மாட்டாங்க போலிருக்கு. அந்த நிலை ஏற்படும் முன்னரே மக்கள் விரோத அரசுக்கும் தேர்தலில் பால் ஊத்திடுவாய்ங்கன்னு நினைக்கிறேன். ஏன்ன…

எஸ்.எஸ்.ஆர் என்ற லட்சியம்!

Image
மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2014 மரணத்தை தழுவியுள்ளார். மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

மருதுபாண்டியர் நினைவேந்தல்!

Image
எதிரிகளின் வஞ்சகத்தாலும், துரோகிகளின் சூழ்ச்சியாலும், தங்களது மன்னனை காட்டிக்கொடுக்க மனமில்லாத சாதி/மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட சிவகங்கை சீமை மக்களும் ஒரே நாளில் தாய்த்தமிழ் மண்ணுக்காக தன்னுயிரை கொடுத்த நாளான, அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213ம் ஆண்டு நினைவேந்தல்!

வீர வணக்கம்!

(படம்:  01.பெரிய மருது, 02.காளையார்கோவில் கோபுரத்தை கொழுத்திய அதிமுகவினர், வட்டமிட்ட உள்படத்தில் மருதுவின் உருவம்)

ஒரு சமூகத்தின் தலைக்கு மேலே கத்தி!

"ஐயாயிரம் கோடி கடன் வாங்கினவன், பணத்தை கட்ட முடியலைன்னு மீடியா முன்னாடி கையை விரிக்கிறானே தவிர தற்கொலை பண்ணிக்கல. அந்த கடனை கொடுத்த பேங்க் காரனும் தற்கொலை பண்ணிக்கல. ஆனால், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாத விவசாயி அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறான்” - இது கத்தி படத்தில் திரு.விஜய் பேசும் வசனம். அச்சு அசலாக இந்த வசனத்தை ரொம்ப நாளுக்கு முன்னாடியே திரு.சீமான் பல மேடைகளில் பேசி இருக்கார். ஆனால் கத்தி படத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரு ஏ.ஆர்.முருகதாஸ் பேருதான் வருது. எனக்கென்னமோ பல வசனங்களை திரு. சீமான் தான் எழுதி கொடுத்திருப்பாருன்னு தோணுது. அதுனால தான் லைக்கா பிரச்சனையில கத்திக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கலை போல.

”மக்களின் முதல்வர்" என்பதை போன மாசத்துல இருந்து கேள்வி பட்டிருப்பீங்க. ஆனால் "மக்களின் சூப்பர் ஸ்டார்" என்பதை இனிமே எப்போதும் கேட்பீங்கன்னு நினைக்கிறேன். எங்க ஊரு நாகப்பட்டினம் தியேட்டர் வாசல் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகளில் இப்படித்தான் இருந்துச்சு.
மக்களின் சூப்பர் ஸ்டார் விஜய் நடிக்கும் கத்தி!

கோலா கோலா என எல்லாரும் …

கத்தி - விமர்சனம்

கத்தி, சமூக விழிப்புணர்வு படம். விவசாயத்தையும் - கிராமத்தையும் மையப்படுத்திய கதைக்களத்தில், முதல் பாதி மனதை கவரும் கமர்சியல் என்றாலும், இரண்டாம் பாதி மனதை சுடும் சோசியல். இது திரு.விஜய் படமாகவும், திரு.முருகதாஸ் படமாகவும் இருக்க இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றது. மேலும், துப்பாக்கி - தேசியத்தின் மீதான சாடல் என்று சொன்னால், கத்தி - தமிழகத்தின் சாடல் என்றே சொல்லலாம். படத்தின் பல இடங்களில் சோசியல் பஞ்ச் இருக்கு. கூடவே, எங்க ஊரு நாகப்பட்டினத்தையும் டெல்டாவையும் சொல்லி, மிக முக்கியமாக மீத்தேன் பிரச்சனையை சுட்டிக்காட்டி திரு.விஜய் பேட்டி கொடுக்கும் காட்சி நச்.

வெறும் தண்ணி தானே? அப்படின்னு நிருபர் கேட்கும் போது, 2ஜிங்கிறது வெறும் காத்து தான். அதுல பல லட்சம் கோடி ஊழல் பண்ணலைன்னா? பதில் கேள்வி கேட்பாரு திரு.விஜய். அது போலவே ஐயாயிரம் கோடி ஊழல்ன்னு அழுத்தம் திருத்தமாக எல்லா தரப்பு அரசியல் ஊழலையும் காட்டமாக பதிவு செய்திருக்கின்றது இந்த கத்தி.

மேலும், நீயா நானா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லுவையும், கூடவே செய்தி சேனல் - பத்திரிகைகளின் ஊடக விபச்சாரத்தையும…

தீபஒளி வாழ்த்துகள்!

தீபாவளியை கொண்டாட வேண்டாம் ! - சீமான்.

அண்ணன் சீமான் அவர்களே,

தீபாவளி வேண்டாம்ன்னு சொன்னீங்க மகிழ்ச்சி. அப்படியே உங்க மதப் பண்டிகையான கிருஸ்துமஸ் உள்ளிட்ட ரம்ஜான் - மெஹரம், பக்ரீத் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டாம்ன்னு சொல்றதுக்கு உங்களுக்கு வக்கு இருக்கா? அது இல்லைன்னா மூடிக்கிட்டு உங்க வீட்டு கிச்சன்லேயே களமாட வேண்டியது தானே? அப்பறம் என்ன மசிருக்குண்ணே எங்க காலுல வந்து விழுறீங்க?

தீயத்தன்மை யாருக்குள் இருந்தாலும் அது அசுரகுணம்; அவன் அசுரன் தான். அதில் தமிழன் - ஆரியன் என்ற வேறுபாடில்லை என்பது என் யூகம். ஆகையால் ஆரிய அசுரர்களின் இருள் நிறைந்த எண்ணமெல்லாம் இந்த தீப ஒளியால் ஒழியட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தமிழனின் தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழுணர்வால் பாதிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

லைக்கா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எந்த தமிழ் அமைப்புக்காவுது, பாரத ரத்னா விருதை ராஜபக்சேவிற்கு கொடுக்க சொல்லிருக்கும் சுப்ரமணியசுவாமியை எதிர்க்க திராணி இருக்கா? அப்படி எந்தவொரு அறிக்கையும் வந்தமாதிரி தெரியலை. பணம் போட்டு படத்தை வெளியிடுறவனை மிரட்டினால் அடி பணிவான்; நமக்கும் இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறெந்த சமூக அக்கறையும் இருந்த மாதிரி தெரியவில்லை. தமிழகமெங்கும் சிங்களவர்களின் நிறுவனங்கள் எக்கசக்கமாய் இருக்கின்றது. அதை எதிர்த்து மூட வக்கில்லை. இந்த லட்சணத்துல அம்மாவிற்கு நன்றின்னு வெட்கமே இல்லாமல், அறிக்கை விட்டு சமாதானம் ஆகுறதுக்கு பேரு தான் இவர்களின் தமிழுணர்வு. 

அதெப்படி, லைக்கா என்ற பெயர் இல்லாமல் படம் வெளி வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? எப்படி பார்த்தாலும், அந்த படத்தோட தயாரிப்பாளர் லைக்காவும் - ஐங்கரனும் தானே? அந்த படத்தின் லாப நஷ்டமும் இந்த இரு நிறுவனத்துக்கும் தானே? அப்பறம் எப்படிடா வெட்கமே இல்லாமல் நன்றின்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க? இனிமே தமிழ் தமிழுனர்வுன்னு எந்த போராட்டத்தை கையில் எடுக்காமல், நவ துவாரங்களையும்…

தேவனும் தொட்டி மீனும்!

தேவர் சாதியினரை பழமைவாதி எனவும், தொட்டி மீன்கள் என்றும் சிலர் இங்கே சொல்வதை அறிய முடிகின்றது. எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று மற்றவர்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென அவர்க…

தேவர்மகன்களின் சுயரூபம்?!

Image
“காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு… யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது” - வினவு

http://www.vinavu.com/2014/10/16/vimaladevi-honour-killing-mugilan-cartoon/
சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர் என்று அறியப்பட்டவர்களுக்கு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். மேலும், இந்த திரு.பாரதிராஜா - திரு.கமலஹாசன் - திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன்.

ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையை…

பறையோசை தமிழனின் இசை!

பறை இசை மற்றும் தப்பாட்டம் போன்றவை சாதீய ஒடுக்குமுறையின் விளைவாக தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரால் செய்யப்பட்டவை. அவைகள் அந்த ஒடுக்குமுறையை மறு உறுதி செய்வதாக இருப்பதால் அவை தடை செய்யப்படவேண்டும்.

- திரு. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (பி.பி.சி. தமிழ்)


எவ்வளவு முட்டாள் தனமான கோரிக்கை இது? பறையோசை என்பது தமிழனின் அடையாளம். அந்த ஒலிக்குள் தானே தமிழர் வாழ்வியல் சார்ந்த நல்லது - கெட்டது ஒளிந்துருக்கின்றது. பக்தியையும், மகிழ்ச்சியையும், செய்தியையும், பிறருக்கு பரப்பும் ஓர் இசை ஊடகமாக இருந்து வந்த பறையோசையை தடை செய்ய சொல்வது அயோக்கிய தனமானது. மேலும், ஒரு மனிதனின் இறப்பில் தானே, பிறப்பை விட சடங்கு சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. அங்கே பறையோசை தானே முதன்மையானதாக கருதப்படுகிறது. சராசரி தமிழனின் வாழ்வியலோடு தொடர்புடைய பறையோசையை, அடிமை முத்திரை போல நினைத்து, அதை தடை செய்ய சொல்லும் எண்ணத்தை திரு. ரவிக்குமார் இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

சாதி தேவையில்லை, ஆனால் சாதிக்கொரு முதல்வர் தேவை!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் சுழற்சி முறையில் (கவுண்டர், வன்னியர், தலித் என) ஒவ்வொரு சாதி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படலாம். - செய்தி.


இந்த முடிவு உண்மையெனில் அது முட்டாள் தனமானது என்பதை செல்வி ஜெயலலிதா பின்னாட்களில் புரிந்து கொள்வார். ஓ.பி.எஸ் முக்குலத்து சமுதாயம் என்றாலும், தனிப்பட்ட முறையில் சாதிக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் பரமக்குடி சுந்தர்ராஜன் - பள்ளர் சாதி என்பதால், அமைச்சராக இருக்கும் போதே பல விசயங்களை தன்னுடைய சாதிக்கு செய்கிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றது. முக்கியமாக, ஓபிஎஸ் உள்ளிட்ட ஒருசில பேர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்களே அதிமுகவில் இல்லை. மூன்றாம் கட்ட தலைவராக இருக்கும் ஒருவரை, சாதியை காரணம் காட்டி முதல்வர் ஆக்கினால் ஆட்சி ஏளனமாக்கப்படும். குறிப்பிட்டவர்களின் ஆட்சிக்காலத்தில் சாதிய முத்திரை குத்தப்படவும் வாய்ப்பிருக்கின்றது. உட்கட்சிக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ வளரும். உள்ளடி வேலைகளால் ஆட்சிக்கு களங்கமும் விளையும். எனவே, இப்போது உள்ள நிலையில் ஓபிஎஸ்சை அனைவரும் ஏற்று கொண்டு விட்டார்கள். அதனால் அவரே மீத…

நாகையின் நாயகர்கள்!

கண்ணகி, காரைக்கால் அம்மையார், கம்பன் மட்டுமல்ல, இந்த இமலாதித்தனும் பிறந்த ஊருதாங்க நம்ம நாகப்பட்டினம்!

நாகப்பட்டினத்தில் பிறந்த கம்பனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? இல்லையா?ன்னு தெரியல. இவரை தவிர நாகப்பட்டினத்தில் பிறந்த காரைக்கால் அம்மையாருக்கும், கண்ணகிக்கும் கல்யாணம் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தான் ஒரு மிகப்பெரிய வரலாறே உருவானது. ஒன்று மாங்கனியால்! இன்னொன்று சிலம்பினால்! இன்று இருவருமே வள்ளுவர் சொன்னது போல தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டனர். இதை எதுக்கு சொல்றேன்னா, நாங்களும் நாக்கு தமிழ் மணக்கும் நாகப்பட்டினத்து காரன் தான்... எங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா நாங்களும் தெய்வம் தான்!

”எப்போ கல்யாணம்? எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க? சீக்கரமா மெரேஜ் ட்ரீட் கொடுங்க.”ன்னு ஒருநாளைக்கு ரெண்டு பேராவது சுழற்சி முறையில் இப்படி கேட்குறதுனாலேயே, இனி நித்தியானந்தா மாதிரி ஆய்டலாம்ன்னு இருக்கேன்.

சீடர்கள்* தொடர்புக்கு:-

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சா இமலாதித்தனந்தா
ஆதித்த பாலபீடம்
ஆதித்தனந்தபுரம்
நாகப்பட்டினம்.

( *பெண்களுக்கு முன்னுரிமை )

- இரா.ச.இமல…

கல்யாணம் சீக்கிரம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்: பகுதி -1

01. சாயுங்காலம் ஆறு மணிக்கு சேவக்கோழி மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சிடணும்.

02. பலவருட உயிர் நண்பன்கிட்ட போன்ல பேசும் போது கூட வெயிட்டிங் கால் வராத மாதிரி எச்சரிக்கையா இருக்கணும்.

03. சம்பளம் போடுற ஏடிஎம் கார்டோடு பின் நம்பரையும் ஒரு மாசத்துக்குள்ள மறந்துட வேண்டிருக்கும்.

04. இந்த மாதிரி ஃபேஸ்புக்ல ரொம்ப நேரம் வெட்டியா மொக்கை போட முடியாது.

05. ஈமெயில், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் பொதுவுடைமையாக்கப்படும்.

06. நம்ம நல்ல சம்பளத்துல வேலை பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கு மச்சான் முறையில் உள்ள அரியரே கிளியர் பண்ணாத படிப்பாளிக்கு நல்ல சம்பளத்துல வேலை வாங்கி கொடுத்திடணும்.

07. பெத்தெடுத்த அம்மா-அப்பாவையெல்லாம் சண்டைக்காரன் மாதிரி பகையாளியாக்க தயாரா இருக்கணும்.

08. காய்கறி கட் பண்ண தெரிஞ்சா மட்டும் போதாது, ருசியா சமைக்க தெரியணும், கூடவே சமையல் பாத்திரமும் கழுவ தெரிஞ்சிருக்கணும்.

09. வாரத்துக்கு ரெண்டு நாளு பொண்டாட்டி துணிமணியெல்லாம் துவைச்சு கொடுத்துடணும்.

10. பொண்டாட்டியோட ஒன்னுவிட்ட சித்தப்பனோட பெரியப்பன் பேத்திக்கு வேலைநாளுல கல்யாணம் வச்சாலும் ரெண்டு நாளு முன்ன…

என்கவுன்டர் - யார் தந்த தைரியம்?

இன்று இரவு 8 மணிக்கு தந்தி டிவியின் 'ஆய்த எழுத்து' நிகழ்ச்சியில் 'என்கவுன்டர் கொலைகள்' பற்றிய நேரலை விவாதம் ஒளிபரப்பாகவுள்ளது. 2012ம் ஆண்டு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தினத்தில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு பலி தீர்க்கும் விதமாக, வெள்ளைத்துரையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 'பிரபு - பாரதி - குமார்' உள்ளிட்ட அப்பாவிகளின் வரிசையில், இப்போது காளிதாசின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான சையது முகமது பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

கிட்டத்தட்ட எட்டு கோடி பேருள்ள தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு சில ஆயிரம் காவலர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. அந்த சில ஆயிரம் காவலர்களுக்கு, சம்பளம் மட்டுமில்லாமல் போட்டிருக்கும் காக்கி யூனிஃபார்ம் - ஷூ வரைக்கும் மக்கள் பணம் தான். போதாகுறைக்கு லாரி வந்தால் பிச்சைக்காரன் மாதிரி கையை நீட்டி லஞ்சம் வாங்கி வயிறு வளர்க்கும் தொப்பையும் மக்கள் பணம் தான். இப்படி மக்கள் பணத்திலேயே வாழ்க்கையை நடத்தி, மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பினால், விசாரணைக்கு அழைச்சிட்டு போய் கொலை செய்யும் தை…

தீபாவளிக்கு ரிலீஸ்? கத்தி!

’தமிழக வாழ்வுரிமை கட்சி’ என்ற பெயரில் லெட்டர்பேடு அமைப்பு வைத்திருக்கும் திரு தி.வேல்முருகனெல்லாம், ’கத்தி’ திரைப்படம் வெளியே வந்தால், ”திரையை கிழிப்போம்!, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!” என்றெல்லாம் வீராப்பு காட்டுற மாதிரியான நிலை தமிழ்நாட்டுக்கு வந்துடுச்சேன்னு நினைக்கும் போதுதான் காமெடி கலந்த கவலை வருது. எதார்த்தம் என்னன்னு பார்த்தால், 200 ரூபாய் கொடுத்து முதல்நாள் படம் பார்க்க வருகின்ற சாமானிய ரசிகன் முன்னாடி, ’திரையை கிழிப்பேன்!ன்’னு சொன்னாலேயே, அவன் இவிய்ங்க முகரக்கட்டையெல்லாம் கிழிச்சிட மாட்டானா? 200 ரூபாய்க்காக 5 வருட ஆட்சியையே அரசியல்வாதிக்கிட்ட தரும் சாமானியனிடம் வெற்று சவடால் விடும் ஆசாமிகளெல்லாம் இப்படி தியேட்டர் வாசலில் கிழிபட்டால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

- இரா.ச.இமலாதித்தன்

கல்யாணம் என்னும் கடல் தேடி!

ஒரு பைசாவுக்கு ப்ரோயசனம் இல்லாம ஊர்ல உரண்ட இழுத்து, பஞ்சாயத்தை கூட்டி வீட்டுக்கு செலவை வச்சிக்கிட்டு திரிஞ்ச பயலுகயெல்லாம், பொண்டாட்டி புள்ளைங்களோட பைக்ல ட்ரிபிள்ஸ் போய்கிட்டே "அண்ணே எப்போ கல்யாணம்?"ன்னு நக்கலா கேட்டுகுறாய்ங்க. பின்னாடி உள்ள அவன் பொண்டாட்டி யாருன்னு பார்த்தா, பக்கத்து ஊர்ல மூக்கு ஒழுகிக்கிட்டு கிடந்த வண்டு சிண்டா இருக்குது. இவன் இப்படி கேட்ட உடனே அது கூட நம்மள பார்த்து நக்கலா சிரிக்குது. முருகா! என்னடா இது உன் பக்தனுக்கு வந்த சோதனை?

கொஞ்ச நேரம் ஓவர்டைம் ஒர்க் பண்ணினாலேயே, "உங்களுக்கு என்ன ஜி குடும்பமா? குட்டியா? நைட் ஃபுல்லா இங்கயே கிடக்கலாம். நாங்களாம் அப்படியா? இருட்டுறதுக்குள்ள வீட்டுல போய் அடைஞ்சிடணும்"ன்னு நக்கல் பண்றாய்ங்க! என்னய்யா இது, கல்யாணம் ஆனாத்தான் குடும்பமா? கல்யாணமாகாத எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குய்யா... முருகா! இதுக்கெல்லாம் காரணம் நீ தான்.

 - இரா.ச.இமலாதித்தன்

ஆணாதிக்கமா?

# இந்தியாவுல கருத்துரிமை கூடவா இந்த ஆம்பளைங்களுக்கு கிடையாது? ஜேசுதாஸ் சொன்னதுல ஒரு தப்புமில்ல. கண்டவனுக்கும் கண்டதெல்லாம் தெரியிற மாதிரி கண்டமாதிரி ட்ரஸ் போடுவீங்க; அதை கண்டுக்காமலே இருக்கணுமாக்கும். அப்பறமா கண்டவனும் கண்ட இடத்துல கைய வச்சிட்டான், கால வச்சிட்டான்னு சொல்லி புலம்பும் போதும் அதை கண்டுக்கிறதும் இந்த ஆம்பிளங்கதாம்மா!

# லெக்கின்ஸ் போட்ட பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வெளியே வர புருசனெல்லாம் அம்மணமாவே கூட வரலாம். மானங்கெட்டவய்ங்க!

# ஏம்மா மகளிரணிகளே, நீங்க என்ன கருமத்தை வேணும்ன்னாலும் ஃபேஷன் என்ற மோகத்தில் உடுத்திக்கொள்ளுங்கள். மேலும், உடுத்துவதும் - உடுத்தாமல் இருப்பதும் கூட உங்க தனிப்பட்ட விருப்பம் தான். அதில் யாரும் தலையிட வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், கையை புடிச்சிட்டான், கற்பழிச்சிட்டான், ஈவ்டீசிங் பண்ணிட்டான்னு இனிமே மகளிர்காவல் நிலையத்துல கம்ப்ளெயிண்ட் கொடுக்காம மட்டும் இருங்க; அது போதும்.

மு..க. - ஜெ. - ஓ.பி..எஸ்.

# அனைத்திந்திய அ.தி.மு.கட்சி முதல் நேற்று தொடங்கிய லெட்டர்பேடு கட்சி வரைக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு (ஆதாயத்திற்காக) ஆதரவாக இன்னைக்கு தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்காய்ங்க. இவிய்ங்க எவ்ளோதான் பண்ணினாலும், தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக திரு மு.கருணாநிதியின் மூனு மணி நேர உண்ணாவிரத ரெக்கார்டை எந்த கொம்பனாலயும் உடைக்கவே முடியாது.

# இந்த ’மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தையெல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடியே புதுச்சேரியில திரு.என்.ரெங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போதே பார்த்தாச்சு. புதுசா ஏதாவது சொல்லிருக்கலாம்.

# இறைவா, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்; நண்பர்களை நீ பார்த்து கொள்! - இது ரஜினியோட பஞ்ச் டயலாக். இப்போது செல்வி. ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துகிறது. சொந்த கட்சி காரய்ங்களே ஆர்வ கோளாறுல கவுத்து விட்டுருவாய்ங்க போலிருக்கு.

# தகுதி இல்லாதவரிடம் மிகப்பெரிய பதவி வந்தால், அந்த பதவியின் தகுதியும் ஏளனமாக்கப்படும் என்பதற்கு ஓ.பி.எஸ். உதாரணமாகிவிட கூடாது. மேலும், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அதிமுக தலைமைக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும…

அதிமுகவும் - தேவர் குருபூஜையும்!

Image
சென்ற வருடம், தேவர் ஜெயந்திக்கு 144 தடை போட்டாங்க; தீடீரென்று ஒருநாள், "மண்-பெண்-பொன்" மீது பற்றற்ற பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் சாத்தினாங்க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறவும் - வெற்றி பெற்ற பின்னும், இசுலாமியரான திரு.அன்வர்ராஜா இருமுறை பசும்பொன்னுக்கு வந்து பிராத்தனையும் செய்து விட்டு போனார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்காக பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பாக சிறப்பு பூஜை கூட பண்றாங்க. ஆனால், போன வருடம் தடை போட்ட போது நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த பெண்களெல்லாம் அக்டோபர் 30ம் தேதியன்று பசும்பொன் சன்னதியில் ஒப்பாரி வைத்து "தேவர் கூலி கொடுப்பாரு!"ன்னு இது மாதிரி நிறையா சாபங்களை செல்வி ஜெயலலிதாவிற்குகொடுத்தார்கள். அது இப்போது இன்னமும் சப்தமாக என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்றது. வினை விதைத்தால் வினையைத்தானே அறுக்க வேண்டும்? அதுதான் விதி!

- இரா.ச.இமலாதித்தன்

ஜீவா - நேர்மையான படம்!

'ஜீவா' படத்தை இன்னைக்கு தான் பார்த்தேன். படம் சூப்பர். இத்தனை வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பார்பனியத்தை தோலுரித்து காட்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மிகச்சிறந்த கதாசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். காதலும் - நட்பும் - கிரிக்கெட்டும் - கூடவே ஆழமான கருத்தையும் கதையோடு இணைத்திருக்கும் விதம் அருமை. வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போவது இந்தியாவில் மட்டும் தான்! என்பதை க்ளைமேக்ஸ் வசனத்தில் பஞ்ச் வைத்திருக்கின்றார். படத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பின் தலைவராக வரும் பார்த்தசாரதியை பார்க்கும் போது இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றார். மேலும் பார்த்தசாரதி & சகாக்கள் அனைவரும் நெற்றியில் நாமத்தோடு காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும், ’உங்க ஆளுக’ என பார்பனரை குறிவைத்து சொல்லும் வசனங்களிலும், ஸ்ரீராம்-சேஷபாலன் என பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் சில விசயத்தை நமக்கு புரிய வைத்திருக்கின்றார் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு ஐ.பி.எல் மீதும், ஐ.பி.எல்.லுக்கு முன்னோடியான ஐ.சி.எல்.லை உருவாக்கிய கபில்தேவ…

நேதாஜியின் ஆயுதமும்! காந்தியின் சுதந்திரமும்!

Image
ஆயுதத்தின் மீது நம்பிக்கையில்லாத மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் அன்னைக்கு, இந்த ஆயுத பூஜை வந்திருப்பது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கு. அர்ஜீனன் உள்பட பாண்டவர்கள் அனைவரும் காட்டில் வசிக்கும் கடைசி ஒரு வருடகாலம் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்து விட்டு, ஒரு வருடம் கழித்து இந்த புரட்டாசி மாதத்தில் திரும்ப எடுத்து பூஜை செய்த நாளை ஆயுதபூஜையாகவும், அதனை தொடர்ந்து போரில் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகவும் நாம் கொண்டாடி வருகின்றோம்.

ஆனால், காந்தியோ 1939ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தியும் நேதாஜியிடம் தோல்வியடைந்தார். இதனால், சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிள…